Wednesday, April 24, 2019

பொட்டி வந்துடுச்சு

1  ஜெயலலிதாவை போன்று 7 மொழிகளில் பேசுபவர் ஹெச்.ராஜா… அமைச்சர் விஜயபாஸ்கர் அனல் பிரச்சாரம் # 7 மொழி"தெரிஞ்சுக்கிட்டதால ஜனங்களுக்கு"என்ன பிரயோஜனம்?எதுனா உளறி ஏழரையைக்கூட்றாரு===========
2 பா.ஜ.க-வுக்காக பிரசாரம் செய்வேன்; ஆனால் தமிழிசைக்கு மாட்டேன்!” -விசு # கட்சின்னா எல்லாரும் ஒரு குடும்பமா பழகனும்,ஆனா இவருதான் குடும்பம் ஒரு கதம்பம் படம் எடுத்தாருபெண்களை மதிக்கனும்,ஆனா இவருதான் பெண்மணி அவள் கண்மணி படம் எடுத்தாரு============


3 திருப்பூரை சிங்கப்பூராக உருவாக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளது. -கே.ஏ.செங்கோட்டையன்.
# ரொம்ப லேட்டுங்க நீங்க,10 வருசத்துக்கு முன்னாலயே எங்க தளபதி சிங்காரச்சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம்னு வாக்கு குடுத்துட்டாரே.அத்திக்கடவு அவினாசி திட்டம் போல 75 வருசத்துல நிறைவேற்றிடுவாரு


================


4 காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்தபோது தமிழகத்துக்காக எதுவுமே செய்யவில்லை!- எடப்பாடி

# வரலாறு தெரியாம பேசறாரு
1 ஆதாரம் விட்டு வைக்காம ஊழல் செஞ்சாங்க
2 கரண்ட் விஷயத்துல 16 மணி நேர மின்தடை ,வெச்சு செஞ்சாங்களே?=================

5 என் மகன் பல மணி நேரம் இங்கிலீஷ் பேசக்கூடியவன்- காட்பாடி துரைமுருகன்"# அடடா,அப்போ ஸ்போக்கன் இங்க்லீஷ் கோச்சிங் க்ளாஸ் எடுக்கலாமே?நல்ல வருமானம்,எதுக்கு இந்த கேவலமான அரசியல் பதவிக்கு வரனும்?


=============


6 எனக்கு வாக்களிப்பதாக நினைத்து என் மகனுக்கு வாக்களியுங்கள்!- ஓ.பி.எஸ் ?# இவர் என்னவோ 10 முறை பொதுத்தேர்தலை சந்திச்சு மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிச்ச மாதிரி பில்டப் தர்றாரு.லாட்டரி அடிச்ச மாதிரி பதவி கிடைச்சுது


==============


7 மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம் # மேடம்,விளக்கம் எல்லாம் பிரமாதம்.ஆனா ஒரு"பொண்ணு வெட்கப்படுவது தன் அழகுக்கான பாராட்டில்தான்.நீங்க எதுனா இப்ப சமாளிச்சு என்ன பண்ண==============


8 மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து
# ஆமாங்க,தோலை"உரிக்கலாம்னு பாத்தா ஆதாரம் இதுவரை"சிக்கலை


=============


9 அதிமுக ஆட்சி, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி" - அன்புமணி ராமதாஸ் || 6 மாசத்துக்கு முன்னாலதான் ஊழல் ஆட்சின்னாரு.கி.மு, கி.பி மாதிரி கூ.மு (கூட்டணிக்கு முன்) கூ.பி (கூட்டணிக்குப்பின்) னு 2 விதமா பேசறாங்க அரசியல்வாதிகள்


=============


10 : பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்-ஹைகோர்ட்
விசாரணைக்கு ஒத்துழைக்க மாறன் சகோதரர்களுக்கு ஹைகோர்ட் அறிவுரை"# நல்லவேளை,முட்டிக்கு முட்டி தட்டுங்கனு சொல்லலை,அடி வெளுத்திருப்பாங்க
===============


11 எடப்பாடி பழனிசாமி முதல்வரானது நாம் பெற்ற பேறு' - உருகிய பா.ம.க GK மணி # அதென்ன நாம் னு எங்களையும் சேத்துக்கறீங்க?நாங்கள் பெற்ற பேறு னு உங்களை மட்டும் சொல்லிக்குங்க================


12 “அழகான வேட்பாளரான தமிழச்சியை மக்களவை பிரதிநிதியாக அனுப்ப தவறிவிடாதீர்கள்!” - உதயநிதி ஸ்டாலின் # சரி",அனுப்பறோம்,ஆனா"ஒவ்வொரு"தொகுதிலயும் நம்ம கட்சி சார்பா இதே போல்"ஒரு அழகியை வேட்பாளராக்கனும்னு யாராவது கேட்டுடப்போறாங்க


============


13 அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதியில்லை- ஸ்டாலின் # போபர்ஸ்"புகழ் காங் உடன் கூட்டணி வைத்துள்ள 2ஜி புகழ் திமுக வுக்கு மட்டும தகுதி இருக்கா?


===============


14 பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு பின்னடைவு.. மனுவை நிராகரித்தது ஹைகோர்ட் # யோக்கியன் வர்றாப்டி,சொம்பை எடுத்து உள்ள வைங்க,பித்தளை சொம்பைக்கூட விடமாட்டாப்டி================


15 நரேந்திர மோடி இரும்பு மனிதர் அல்ல;
நரேந்திர மோடி கல் பிரதமர் − ஸ்டாலின் விமர்சனம் # அதாவது இளமையில் கல்,முடியலைன்னா முதுமையிலாவது கல்,கடைசி வரை கைநாட்டாவே இருந்து துண்டு சீட்டு அட்மினை நம்பி இராதே னு அர்த்தம்


===============


16 திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது
குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # மங்குனி அமைச்சர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கனுமா?


==============


17 திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன் || தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடறார் போல,ஜனங்களே!ஜாக்கிரதை==============


18 கதிர் ஆனந்த் இனி உங்கள் பிள்ளை, அவரை நான் தொகுதி மக்களுக்காக தத்து கொடுக்கிறேன்." - துரைமுருகன் | # அப்போ உங்க மகன் பேருல இருக்கற சொத்துக்கள் எல்லாம் தொகுதி மக்கள்"பிரிச்சு எடுத்துக்கலாமா?


===============


அதிமுக விற்கு சரத்குமார் திடீர் ஆதரவு
தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்த நிலையில் அதிமுக விற்கு சரத்குமார் ஆதரவு
அதிமுகவுக்கு ஆதரவு என இன்று மாலை சரத்குமார் அறிவிக்க உள்ளதாக தகவல். # பொட்டி வந்துடுச்சு மொமெண்ட்


=================


20 வைகோவால் நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும்- தேமுதிக துணைப் பொதுச் செயலாளர்
எல்.கே.சுதீஷ் # ஒரு"சீட்"கூட வராதுன்னா சொல்றாரு.சென்னை திமுக கோட்டை ஆச்சே? 3 வந்துடும்னு சொல்றாங்களே?


================

0 comments: