Thursday, April 25, 2019

ஒரு திருடனோட மனசு இன்னொரு திருடனுக்குதான் புரியும்

1     தினகரன் அணி, கமல் அணி உருவாகாமல் இருந்திருந்தால், பா.ஜ., - அ.தி.மு.க., ஆகிய இரு ஆளும் கட்சிகளுக்கு எதிரான ஓட்டுகள், தி.மு.க., அணிக்குக் கிடைக்கும். இப்போது, இந்தப் புதிய அணிகளால், ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகள், அவர்களுக்குப் போக வாய்ப்பு இருக்கிறது. இது தெரிந்தோ, தெரியாமலோ, பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது. அதையும் தாண்டி, தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்- திருமாவளவன் # பாஸ் ஆகறது சிரமம், அப்டியே பாஸ் ஆனாலும் பார்டர்ல தான் பாஸ் ஆவோம்கறதைத்தான் அப்படி சுத்தி வளைச்சுப்பேசறார்


================


2     பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும், மருத்துவர்கள் தான். நாடி பிடித்து, என்ன நோய் இருக்கிறது என, கண்டுபிடிக்கக் கூடிய மருந்துவர்கள். ஆனால், அவர்களுக்கு என்ன நோய் வந்துள்ளது என்று பார்க்க வேண்டிய கட்டாயம், நமக்கும் வந்துள்ளது  - தா.பாண்டியன்    # செலக்டிவ் அம்னீஷியா?


===============

3    ஐந்து ஆண்டுகளில், பிரதமர் மோடி, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, முரசு கொட்டுகிறார். -பிரியங்கா   # தேமுதிக கட்சிக்கு வாக்கு சேகரிக்கறாரோ?


===============


4   மோடி,  தன் சொந்த தொகுதியான, வாரணாசியில், யாருடனும், ஐந்து நிமிடங்கள் கூட செலவிடவில்லை. மக்களின் நிலையை விசாரித்ததில்லை-பிரியங்கா  # நாம டெய்லி ஆஃபீஸ்ல எல்லாருக்கும் குட்மார்னிங் சொல்வோம், ஆனா சொந்த வீட்ல இருக்கற அம்மா, அப்பா , மனைவிக்கு குட்மார்னிங் சொல்ல மாட்டோம், அந்த ஃபார்முலாதான்


===============


5    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில், வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.=ராமதாஸ்  #  பக்கோடா சுடற தொழிலுக்குப்போக வேண்டியதுதான்னு முடிவு எடுத்துட்டாங்க போல 


===================


6  :  ராகுல்,தான் பிரதமராக வந்தால், கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டப்படும் என்கிறார். காவிரியை நம்பி, தமிழகத்தில், 20 மாவட்டங்கள் உள்ளன. மேகதாது அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாகும்.-இ.பி.எஸ்., # பாலைவனம் ஆனா மணல் காண்ட்ராக்ட் எங்களுக்கே விடனும்னு திமுக காரங்க கேட்பாங்களே?


================


7  282 இடங்களுக்கு மேல் பா.ஜ. வெற்றி பெறும்: அமித்ஷா  #  2+8+2 =12 =1+2 =3    கூட்டுத்தொகை 3 வருது , நாமம் தான் ஜெயிச்சா மக்களுக்கு நாமம், தோத்தா கட்சிக்கு நாமம்


===============


எனக்கு, 7 வயதாக இருந்தபோது, இந்திரா ஏழ்மையை ஒழிப்போம் என  கூறினார். எனக்கு, 20 வயதாக இருந்த போது, ராஜிவ் கூறினார்.எனக்கு, 40 வயதாக இருந்த போது, சோனியா கூறினார். தற்போது, 54 வயதாகிறது. இப்போதும், அதையே  ராகுல் கூறுகிறார்   -

மத்திய அமைச்சர், பியுஷ் கோயல் # அடுத்ததா உங்களுக்கு 65 வயசு ஆகும்போது ராகுலின் மகனும் இதையே கூறுவார்


==============

9   எதிர்க்கட்சிகளின் வாய் ஜாலம் எடுபடாது! முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்  # தர்மயுத்தம் நடத்திய ஜெகஜாலக்கில்லாடி சொன்னா சரியாத்தான் இருக்கும்


 1000, 2000. 6000   போதும், மாயாஜாலம் நடக்கும்னு நினைக்கறார் போல 


===============


10 மக்களுக்கு என்ன செஞ்சீங்க?: பிரியங்கா கேள்வி  # பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி-னு வெச்சு செஞ்சாரே? தெரியலையா?


===============

11  மொழி பெயர்ப்பு தவறுக்கு மைக் தான் காரணம் - தங்கபாலு

# ஆடத்தெரியாத (வேற ஒரு) சில்க்கு கால்ல சுளுக்குன்னாப்டியாம்================


12 திமுகவை மதிமுகவாக நினைத்து களப்பணியாற்றுவோம்”- வைகோ
# ஓட்டுப்போடற (கொஞ்ச நஞ்ச) ஜனங்க கூட மதிமுக வை திமுக னு நினச்சு"ஒதுக்கிடப்போறாங்க,கவனம்


===============


13 ஆபாச வீடியோக்களை பகிர்ந்தால் 7 ஆண்டு சிறை | # வாட்சப் க்ரூப் அட்மின்கள் எச்சரிக்கை


==============


14 ராஜிவ் காந்தி, இந்திரா காந்தியை காப்பாற்ற முடியாத கட்சி காங்கிரஸ் - ராஜேந்திர பாலாஜி # உண்மை,அதே மாதிரி ஜெ வை காப்பாற்ற முடியாட்டிக்கூட பரவால்ல,என்னதான் நடந்தது?னு இன்று வரை ஜனங்களுக்குத்தெரியலையே?இது எவ்ளோ பெரிய கேவலம்


=================


15 தமிழகத்தில் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளோம், இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் # தமிழகத்தில் பிரம்மாண்டக்கூட்டணி நீங்க அமைச்சீங்களா?அப்போ 40 ல பாதி நீங்கதானே /உங்க கட்சி தானே நிக்கனும்?


==============


16 நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டர்களின் விருப்பப்படி தனித்து போட்டி : எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு # மேடம்,நம்ம கட்சித்தொண்டர்கள் 4 பேர் பேரு சொல்லுங்க
கணவர் மாதவன்,டிரைவர் ராஜா,என் அம்மா,அப்பா


=================


17 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - தீபா
# நோட்டா கூட போட்டி போட பாஜக,சமக ,பத்தாதுனு இந்தம்மா வேற....


==============18 யாரைக் கேட்டு ராகுல்காந்தியை கல்லூரி வளாகத்தில் பேச அனுமதி கொடுத்தீர்கள்? -கல்வி இயக்குநரகம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்.
# நீதி − ராகுல் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சி ஹிட்.அதை இவங்களால பொறுத்துக்க முடியல


============


19 தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது - வெங்கய்ய நாயுடு
# ஓப்பனிங்க் நல்லாதாங்க இருக்கு,பினிஷிங்க் சரி இல்ல,GST போட்டுடறீங்க===============


20 உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல் - ஸ்டாலின்
# ஒரு திருடனோட மனசு இன்னொரு திருடனுக்குதான் புரியும் பார்முலா மாதிரி


===============

0 comments: