Thursday, April 18, 2019

எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு, எட்டு பணியாரம்; முட்டு தேய சுட்டவளுக்கு மூணு பணியாரம்கற கதையா

1  நாக்கு ருசிக்காகவோ,பொண்டாட்டி மேல இருக்கற கோபத்திலோ,அல்லது சம்சாரம் சமைக்கலைன்னோ,அல்லது ஒரு பிரெஸ்டீஜூக்காகவோ,ஒரு மாறுதலுக்காகவோ ஒவ்வொரு முறை நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும்போதும் உடல் ஆரோக்யத்தை விலை"கொடுத்து கெடுத்துக்கொள்கிறீர்கள்



================




2 என்னது?நாம அனுப்பற வாட்சப் மெசேஜை அரசாங்கம் நோட் பண்ணுதா?நல்ல வேளை சொன்னீங்க




==============




3 LIEயோலா காலேஜ்




==============




4 எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு, எட்டு பணியாரம்; முட்டு தேய சுட்டவளுக்கு மூணு பணியாரம்கற கதையா டெய்லி வாண்ட்டடா பொண்ணுங்க பதிவில் குட்மார்னிங் , பதிவு அருமை தோழினு கமெண்ட் போட்டே ஃபேஸ்புக்ல ஆண்ட்டிகளை கரெக்ட் பண்ணிடறான் நெட் தமிழன்




===========



5 ட்விட்டரில் சிறந்த கீச்சாளர்களை பின்தொடர ஒரு அமைப்பு ஏற்படுத்தி அதுல நல்ல ட்வீட்டர்சை அறிமுகப்படுத்த சொல்றாங்க.இதுல நம்ம பேரை நாமளே சொல்ல கூச்சமா இருக்கும்.அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு.பேசி வெச்சுக்கிட்டு ஒருத்தரை இன்ட்ரோ பண்ணனும்.அவரு நம்மை இன்ட்ரோ பண்ணுவாரு.திமுக + காங் கூட்டணி மாதிரி...



=============




6  இலக்கியவாதிகள் ,மெத்தப்படித்த மேதாவிகள,கருத்துக்கணிப்பு ஸ்பெஷலிஸ்ட்கள்் இவங்க"கிட்ட இருக்கும் பெரிய"பலகீனமே தான் மட்டும் தான் புத்திசாலி,மத்தவங்க எல்லாம் மாங்கா மடையனுங்க என நினைப்பதுதான்,இவங்க தேர்தல் முடிவுக்குப்பின் கமுக்கமா வெளிலயே வரமாட்டாங்க



=============




7 வார இதழ்கள் கவனத்துக்கு, வலை பாயும் ட்வீட்களில் 90% திமுக கட்சிக்காரர்களின் கூடாரமா இருக்கு சமீப காலமா.ஜனங்க ஈசியா கண்டு பிடிச்சிடுவாங்க.நாம நடுநிலைமைனு காட்டீக்கனும்னா வருசத்துக்கு ஒரு தடவையாவது கட்சி சாரா பொது வாசகர்கள் படைப்புகளை பிரசுரிக்கவும்




============




8 தமிழனா இருந்தா "ஷேர்" பண்ணு னு சொல்வாங்க,நம்பி காசை விட்ராதீங்க,ரிஸ்க்தமிழனா இருந்தாலும் சரி எந்த மாநிலத்தாரா இருந்தாலும்"சரி மியூச்சுவல் பண்ட் பண்ணுங்க.பாதுகாப்பு.




==============




9 தன் மனைவியைக்கொலை செய்து வழக்கில் இருந்து தப்பித்த சசிதரூர் கேரளா வில் அடிபட்டதால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகக்காரணம் அவர் செய்த பாவம் என சிலர் பதிவு போடறாங்க,எனக்கென்னவோ அனுதாப வாக்கு வாங்க ஸ்டண்ட் என தோன்றுகிறது



================


10 பெரும்பாலான தொகுதிகளில் வாக்குஇயந்திரத்தில்் நெ 1 திருடன்"கட்சி சின்னம் மேலே 1 வது"இடத்துல இருக்காமே?நிஜமா?


==============


11 எந்த வீட்டில் யாருடைய சம்சாரம் கோபப்பட்டாலும் ,வீசி எறியப்பட்ட ரிமோட்டைத்தேடி சரி செய்து வைப்பது அப்பாவிப்புருசனாத்தான் இருக்கும்


================


12 கமலோட மநீமை க்கு கிடைக்கககூடிய வாக்குகள் ADMK வுதா?DMKவுதா?னு நிறைய பேர் குழம்பறாங்க,2 கட்சில எந்தக்கட்சி அவரை அதிகம் எதிர்க்குதுனு பாருங்க,அவங்க"கட்சி வாக்குகள்தான் பிரியப்போகுது



==============


13 சமூகவலைத்தளங்களில் பேக் ஐடிகளிடமும் ,சினிமா ஹீரோக்கள் படத்தை டிபியா வைத்திருப்பவர்களிடத்திலும் இளம்பெண்கள் ் ஏமாறுவது தொடர்கதை ஆகிவிட்டது,இனிமேலாவது பெண்கள் சொந்த டி பி வைத்திருக்கறவர்களிடம் மட்டுமே ஏமாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்


==============


14 ஆசி வழங்கும்போது வழங்குபவர் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று ஆசீர்வதிப்பதே தமிழர் மரபு.இன்று டி எல் லில் சில அரசியல் தலைவர்கள் ஆசி வாங்கும் படங்கள் கண்டேன்.ஆசி வழங்குபவர் அசால்ட்டா உட்கார்ந்திருக்கிறார்


==============

15 அதிகம் பேசாமல் ,அமைதியான சுபாவமுள்ள பெண்ணாக இருந்தாலும் எப்ப பாரு நொறுக்குத்தீனியை வாய் மென்று கொண்டே இருந்தால் அவர் வாயாடி என்றே அழைக்கப்படுவர்


=================

16 குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக்கூடாது னு நினைச்சா தண்ணி இருக்கற ஏரி,ஆறு,குளம்,கிணறு ,வாய்க்கா ,ஓடை ல குப்புற விழனும் (நீச்சல் தெரிஞ்சிருக்கனும்)


=============


17 அஸ்கா சர்க்கரை (சீனி,வெள்ளை சர்க்கரை) மிக மிக கெடுதல்.கெமிக்கலஸ் கலந்தது.அரசே தடை செய்யனும், செய்யல.ஜனங்க விழிப்புணர்வுடன் இருக்கனும்.
இனிப்புக்கு மாற்றாக பனை தயாரிப்பான இயற்கை பரிசு பனங்கற்கண்டு நாட்டு"சர்க்கரை ,(மெரூன்"கலர் சுகர் )
கொப்பத்து"வெல்லம
கருப்பட்டி ் நல்லது


===================

18 வெய்யிலின் கடுமை காரணமாக நீர் கிடைக்காமல் நீர்நீலைகளில் (புது இடம்) தண்ணீர் குடிக்கும் முன் பறவைகள் ,விலங்குகள் ஏதாவது அந்த தண்ணீரைக்குடிக்கின்றனவா?னு பாத்துட்டு குடிக்கவும்.


=================

19 மண் பானையில் சமைக்கப்பட்ட சுண்டைக்காய் குழம்புதான் குழம்புகளிலேயே மிகுந்த சுவை.சுண்டக்கா ஊறுகாயா,வத்தலா சாப்பிடும்போது கசக்கும்,ஆனா குழம்புல அவ்ளோ கசக்காது.கிட்டத்தட்ட சுண்டல் குழம்பு பார்முலா


==============

20 கிராமங்களில் பசும்பால் வாங்குவோர் கவனிக்க,அதிகாலை 3 மணிக்கு கறக்கப்படும் பால் தண்ணீர் மிக்ஸ் பண்ணி உங்க கைக்கு 6 மணிக்கு கிடைக்கும்.அதையே வாங்குங்க.மதியம் 2 மணிக்கு கறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு கிடைக்கும் பாலில் அந்த அளவுக்கு இல்லையாம்.


==============






0 comments: