Sunday, April 28, 2019

uyare (2019) ( மலையாளம் ) - சினிமா விமர்சனம்(க்ரைம் த்ரில்லர்)
ஹீரோயின் பைலட் ஆகனும்னு ஆசைப்பட்டு அதுக்கான படிப்பு பயிற்சி எல்லாம் முடிச்ட்டு விதி வசத்தால ஏர் ஹோஸ்டல் ஆகறா.அவளுக்கு ஒரு பாடாவதி லவ்வர்    எப்படி ஐஸ்வர்யா ராயை சல்மான் கான் லவ் பண்றப்போ சும்மா  டார்ச்சர் பண்ணிட்டே இருந்தாரோ  ( அபிஷேக் பச்சனுக்கு முந்திய லவ்வர்)   நயன் தாராவை எப்படி  சிம்பு லவ் டார்ச்சர் பண்ணினாரோ ( விக்னேஷ் சிவன், பிரபு தேவா மற்றும் பலருக்கு முந்தின லவ்வர்) அது மாதிரி இந்த லவ்வரும் அப்படிம் டிரஸ் பண்ணாதே , இப்படி ஹேர் ஸ்டைல் வைக்காதே , அவன் கூடப்பேசாதே அப்டினு 1008 கண்டிஷன் போடறான்

 ஒரு கட்டத்துல ஹீரோயின் கடுப்பாகி லவ் பிரேக்கப்னு அனவுன்ஸ் பண்ணிடறா , காதலன் கடுப்பாகி ஹீரோயின் முகத்துல ஆசிட்  அடிச்சுடறான்


ஏர் ஹோஸ்டலுக்கு  ரிசப்ஷனிஸ்ட்க்கு அடிப்படை தகுதியே அழகான முகம் தான் , இப்படிப்பட்ட அகோரமான முகத்தை வெச்சுக்கிட்டு ஹீரோயின் என்ன முடிவு எடுத்தா? 2 வதா வந்த  இன்னொரு லவ் அப்ரோச்சை எப்படி  ஹேண்டில் பண்ணா> ?  ஆசிட் ஊத்தினவன் மேல  வழக்கு போட்டு ஜெயிச்சாளா?  என்பதை எல்லாம் தியேட்டரில் காணலாம்


இது ஒரு உண்மைச்சம்பவம் .  

'
இது வரை வந்த மலையாளப்படங்களிலேயே  இது  போல எடிட்டிங் , திரைக்கதை  நேர்த்தி, உண்மை சம்பவத்தை எந்த வித சினிமா காம்பரமைஸ் இல்லாம பிரமாதமா  கையாண்டிருக்கும் படம்   வேற  இருக்கா? டவுட்  தான்

  நாயகியா வரும் பல்லவி ( பார்வதி திருவ்வோத்) நடிப்[பு அபாரம் . பைலட் ஆக ஆசைப்படுவது . ஏர் ஹோஸ்டல் ஆனதும் அவரது பாடி லேங்க்வே ஜ், காதலனின் பொசசிவ்னெஸ், கிறுக்குத்தனங்களை சகிப்பது . [பின் பொங்குவது . கோர்ட்டில் ஜட்ஜையே எதிர்ப்பது. 2 வது காதலனை நாசூக்காக தவிர்ப்பது  என கிடைச்ச கேப்ல எல்லாம் சிக்சர் தான் ஆஹா அபாரம் பரிமளா 


நாயகியின்  டார்ச்சர் காதலனா  ஆசிஃப் அலி கச்சிதமான நடிப்பு 


2 வது காதலனா வர்ற டோவினோ   செம கண்ணியம் , நம்ம ஊர் சரத்பாபு  , கார்த்திக் மாதிரி பாந்தமான நடிப்பு 


ஒளிப்பதிவு    பின்னணி இசை  எடிட்டிங்   இயக்கம்  திரைக்கதை எல்லாமே  பக்கா நச் டயலாக்ஸ்


1  பைலட் வேலையை ஏன் செலக்ட்பண்ணீங்க மேடம்?


மத்த வேலைகளை செய்ய பூமில 1000 பேர் இருக்காங்க.வானத்துல பறக்க ,பறந்துட்டே இருக்க சிலருக்கே வாய்ப்பு (Malayalam)
2 எல்லாரும் என்னை கிண்டல் பண்ணிட்டிருந்தப்ப அவன் தான் என் கிட்ட கேலி செய்யாம பழகுனான்.ஒரு.பொண்ணுக்கு மிக தேவையான ஒண்ணு தன்னை மதிக்கும் சினேகம் (malayalam)


3
எதிரி என்னை இந்த மாதிரி பண்ணி இருந்தா விட்டிருப்பனோ என்னவோ,ஆனாபழகுனவனே பண்ணுனது கிட்டத்தட்ட துரோகம் மாதிரி

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கருத்து வேற்றுமை காரணமாக பிரிய நினைக்கிற காதலியின் மேல் ஆசிட் வீசிய காதலனின் கொடூரத்தை தாங்கி எப்டி பெண் வாழ்கிறாள் என்ற நிஜ சம்பவ கதை யான uyare (malayalam) @ கேரளா கோட்டயம் ஆஷா
===========சபாஷ் டைரக்டர்

லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1 பொதுவா ஆசிட் அடிக்கறவங்க ஸ்ப்ரே கன் மாதிரி  உபகரணம் மூலமாதான் அடிப்பாங்க அதுதான் சேஃப், இது மாதிரி குடுவை ல சும்மா அடிச்சு விடும்போது நம்ம மேலயே தெறிக்கும் அபாயம் உண்டு

2  ஹீரோவை எடுத்ததுமே முதல் சீனிலிருந்தே  வில்லன் ஆக காட்டி  இருக்க வேண்டியதில்லை, நாலஞ்சு சீன் கழிச்சு கெட்டவனா காட்டி இருக்கலாம்

3   இன்னொரு ஹீரோ அதாவது நாயகியை பிரபோஸ் பண்ற இன்னொரு லவ்வர் படத்தோட  முதல் சீனிலேயே வருவது பின்னடைவு. நாயகியின் முதல் காதலனோட அவ ஒட்டாம போக இவனும் ஒரு காரணம்னு ஆடியன்ஸ் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு 

4   கோர்ட்ல ஜட்ஜ் நாயகியின்  முகத்தில் ஆசிட் அடிச்சதைப்பார்த்த சாட்சி இருக்கா?னு கேட்கறாரு, பாதிக்கப்பட்ட பெண்ணே சாட்சி தானே? இந்த விஷயத்துல யாராவது பொய் சொல்வாங்களா? 


5  ஒரு சீன்ல கோர்ட்ல ஜட்ஜ் வாதியிடம் மைண்ட் யுவர் லாங்க்வேஜ் என்கிறார். வாழ்க்கையே பாதிக்க[ப்பட்ட ஒரு பெண் தனக்கு அநீதி இழைக்கப்படும்போது உணர்ச்சிவசப்படுவது சகஜம் தான்.ஜட்ஜ் அதை பெருந்தன்மையாக மன்னித்து விட்டிருக்கனும்


6   நாயகி 2 வ்து துணையை மறுக்கக்காரணம் சரியா சொல்லப்படலை. முதல் கோணல் முற்றும் கோணல் அப்டிங்கற லாஜிக்கோ என்னவோ? ஆனா முகம் கோரம் ஆக மாறீய பின்பும் ஒரு விஐபிம்லவ்வுகிறார் என்றால் அதை எந்தப்பொண்ணும் ஏத்துக்குவா.


7  க்ளைமாக்ஸில் அவ்ளவ் பெரிய சாகசம் செய்த நாயகியை அரசாங்கம் பாராட்டவும் இல்லை கவுரவிக்கவும் இல்லை. பயணீகள் மட்டும் கை தட்றாங்க இது என்னமோ வை கோ வுக்கு திமுக போனாப்போகுதுனு ஒரு சீட் பிச்சை போட்ட மாதிரி  இருக்கு 

Image result for uyare malayalam heroine

சி.பி கமெண்ட் -uyare (malayalam) - ஆசிட் வீச்சால் காதலனால் பாதிக்கப்பட்ட ஏர்ஹோஸ்டலின் நிஜக்கதை,ஏ சென்ட்டர் பிலிம்,பெண்களுக்கும் ,பெண்களின் ஏற்றத்தை விரும்பறவங்களுக்கும் பிடிக்கும் ,திரைக்கதை நேர்த்தி,இயக்கம் கச்சிதம் ,ரேட்டிங் 3 / 5 review

0 comments: