Tuesday, April 09, 2019

ஊழல் பண்ணாத ஒரே கட்சி திமுக தான்

================

1  அழகிரியை பின்னுக்குத் தள்ளி, குறுக்கு வழியில் தலைவரானவர் ஸ்டாலின்.-வனத்துறை அமைச்சர் சீனிவாசன்: # நம்ம ஓபிஎஸ்   ஈபிஎஸ் எல்லாம் நேர் வழியில் முதல்வர் ஆனாங்களா:?


===============


ஜெயலலிதாவிற்கு, மோடியை பிடிக்காது. மோடியா, லேடியா பார்ப்போம் என்றார்.விஜயகாந்த்தை கூட பிடிக்காது. வன்முறையின் மறுபெயர், பா.ம.க., என, ஜெயலலிதா கூறினார்.- ஸ்டாலின்:   # ஜெயலலிதாவுக்குப்பிடித்த கட்சி திமுக தான் பிடித்த தலைவர் ஸ்டாலின் தான் அப்டினு பிரச்சாரம் பண்ணிடுவாரோ?


================


3 ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வரை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது.-   ராமதாஸ்:  # அடப்பாவமே, அப்படி ஒரு வியாதி இருக்கா? சரி திட்டிட்டுப்போகட்டும், அதிமுக வைத்திட்டுனவங்க எல்லாம் அதிமுக கூட கூட்டணீல இருக்காங்க இப்ப 


=================


4  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அது, மக்கள் கையில் தான் உள்ளது.-சிதம்பரம்  # அப்போ இவங்களை எம் பி ஆக்குனா இன்னொரு தேர்தல் வர வைக்க ஆவண செய்வாங்க, தண்டச்செலவு


===============


5  தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே, நாம் தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுவோம்.-தினகரன்  # அது கிடக்குது க்ழுத், நம்ம சின்னப்படி பரிசுப்பெட்டில குக்கர் தருவீங்களா? வேற எதுனா மோதிரம், மூக்குத்தினு ஐடியா இருக்கா?=============அ.தி.மு.க., ஆட்சியை, எந்தக் கொம்பனாலும், அசைத்து கூட பார்க்க முடியாது-    ராமதாஸ்:   . # ஊழல் ஆட்சின்னு ஆதாரங்களோட ஆளுநர் கிட்டேயே மனு குடுத்தும் அவங்க கூட வே கூட்டணி வெச்சதுல இருந்தே தெரியுது  ================

7  கட்சிப் பதவி உள்ளவர்களுக்கு, தேர்தலில் சீட்டோ, சீட் பெறுபவர்களுக்கு பதவியோ கொடுக்கக் கூடாது. ஆனால், கட்சிப் பதவிகளில் உள்ளவர்கள் தான், தேர்தலிலும் நிற்பர் என்றால், தகுதியுள்ள காங்கிரஸ்காரர்கள், தொய்வடைந்து விடுவர். அது, காங்கிரசின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.-பீட்டர் அல்போன்ஸ் # அப்போ காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்குனு நம்பறாரு?


=================


8  உலகளவில், இந்தியாவிற்கே அவமானத்தைத் தேடித் தந்தவர்கள், தி.மு.க.,வினர்.-அமைச்சர் ஜெயகுமாரின் மகன், ஜெயவர்தன்  #  பாசிடிவாவோ நெகடிவ்வாவோ உலக அளவில் இந்தியா பேரை பதிவு பண்ணி இருக்காங்க இல்ல? பாராட்டலாமே?


=============


9    40க்கு, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெல்லும்.-அ.தி.மு.க., ராஜ்யசபா - எம்.பி., நவநீத கிருஷ்ணன் # அதிமுக கூட்டணி வெல்லும்னு சொல்லுங்க, அதிமுக நிற்கறதே 20 தானே?


================


10   தஞ்சாவூரில், முதல்வர், இ.பி.எஸ்., பிரசாரத்தில், உடன் பயணித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... அவருக்கு நல்ல கூட்டம் கூடியது-=நவநீத கிருஷ்ணன் #  கூட்டத்தை கூட்டினோம்னு சொல்லுங்க, தலைக்கு எவ்ளோ கொடுத்தீங்க?


===============

11   காங்கிரசைச் சேர்ந்த, கார்த்தி சிதம்பரமும், சிதம்பரமும், பல்வேறு வழக்குகளை சந்தித்து, பிரபலம் அடைந்தவர்கள். நான் அப்படி பிரபலம் ஆகாததால், கார்த்தி சிதம்பரத்துக்கு, என்னை தெரியவில்லை. - நீங்க 2 பேருமே ட்விட்டர்ல இருக்கீங்க, நெட்டிசன்கள் உங்க 2 பேரையும் கழுவிக்கழுவி ஊத்தறாங்களே? 2 பேருக்கும் பரிச்சயம் ஆகாமயா இருக்கும் ?==============12   தே.மு.தி.க.,வை எப்படி எல்லாம், தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் அசிங்கப்படுத்தினார்! ஆனால், இன்று என்ன நடந்தது... கோடிக் கோடியாக அவர் கொள்ளை அடித்த பணம், மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும், தே.மு.தி.க.,வைத் தொட்டால், அவர்களுக்கு பயங்கர அடி தான் விழும் - பிரேமலதா # விஜயகாந்த் ஆக்டிவா இருக்கும் போதும் தொண்டர்களுக்கு அடி விழுந்ததே?


================


13  அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்பது, நிரூபிக்கப்பட்டு உள்ளது.-. பிரேமலதா 

# துரை முருகன் மாட்டுனதுல அதிமுக வை விட இவருக்குத்தான் சந்தோஷம் ஜாஸ்தி போல


================
14  கடந்த தேர்தல்களில், சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை விட, நான் அதிக வாக்குகள் வாங்கியவன்- ஹெச் ராஜா # சார்ணர் தேர்வுல 52 ஓட்டு வாங்குனதையே   கார்த்தி சிதம்பரம  இன்னும் நினைச்ட்டு இருக்கார் போல \


===================
15 கஜா' புயல் பாதிப்பில், 89 பேர் இறந்தனர். அதற்கு, ஒரு வார்த்தை கூட, பிரதமர் மோடி அனுதாபம் தெரிவிக்கவில்லை-வைகோ  # அனுதாப வாக்குகள் தேவை இல்லைனு நினைச்சாரோ என்னவோ?


வெளிநாட்லயா ரவுன்ட்ஸ்ல இருந்தா உள்நாட்ல நடக்கற நாட்டு நிலவரம் தெரியறதில்ல

===============
16 நிவாரண நிதியாக, 15 ஆயிரம் கோடி தமிழக அரசு கேட்டது. வெறும், 1,000 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது  -வைகோ 


அப்போ இனிமே நிவாரணம் க்மேட்கும்போது எவ்ளவ் தேவையோ அதை விட 15 மடங்கு அதிகமா கேட்கனும், அப்போதான் தேவையான தொகை கிடைக்கும்


-------------------------


17  ஆண்டுக்கு, மூன்று கோடி பேருக்கு வேலை என்ற மத்திய அரசு, 2,000 பேருக்கு கூட வேலை வழங்கவில்லை   -வைகோ   #  அதான் பக்கோடாக்கடை பெஸ்ட் தொழொல்னு சொல்லீட்டாங்களே?


====================


18 தங்கள் ஊழல்களால், மத்திய அரசை எதிர்த்து கேட்க, தமிழக அரசு பயப்படுகிறது-வைகோ  #  ஊழல் பண்ணாத ஒரே கட்சி திமுக தான்னு சொல்லுங்க பார்ப்போம்


==================


19   பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. அதை அழிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை.-நிர்மலா சீதாராமன் # எப்படியோ தேர்தலில் மோடி ஜெயிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வு பயன்படுது


=================


20  தமிழகத்தை, பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய கட்சிகள் திட்டமிட்டு வஞ்சித்தும், ஏமாற்றியும் வருகின்றன-   டிடிவி தினகரன்   # நீங்க ஆஅர்கே நகர்ல  டோக்கன் கொடுத்து ஏமாத்தலையா?


================

0 comments: