Friday, April 26, 2019

அரசியலில் கறுப்பு ஆடு எங்கே இருக்கும்?

1  பொதுமக்களுக்கு தொந்தரவு தருகின்ற ,போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் காரணமாக இருக்கும் அனைத்து மத கடவுள் ஊர்வலங்கள்,அரசியல் கட்சி ஊர்வலங்கள் எல்லாம் அதிகாலை 5Am-6 am மட்டுமே அனுமதி தரனும்.யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கனும்


===============


2 நடிகர் சங்க கட்டிடம் கட்டுனதுக்குப்பிறகுதான் எனக்கு திருமணம் நடக்கும் னு சொன்னவருக்கு நடந்த கல்யாணத்துல யாராவது அதைக்கட்றக்கு முன்பு இதை ஏன் கட்னீங்க?னு கேட்கலையா?


============


3 பேஸ்புக் பொண்ணுங்க எல்லாரும் டப்மாஸ் பண்ற ஒரு அழகான பொண்ணை பாராட்னாங்க.பொண்ணுங்க ஒற்றுமையா பாராட்றாங்களேனு ஆச்சரியமா 4 க்ளிப்பிங்க்ஸ் பாத்தா அது"பையன். பொண்ணுங்களோட ரசனைல தீயை வைக்க


=============

4 இன்று 15/ 3/2019 உலக உறக்க தினம்.நல்ல உறக்கம் என்பது இரவு 10−காலை 5,
11pm -6 am
இதை கடைப்பிடிக்காமல் மிட்நைட் 12 வரை நெட்டிலே உலவி பின் 12 மணிக்கு சாப்பிட்டு படுத்தால் ஜீரணமும் ஆகாது,தூக்கமும் வராது

==============


5 பாட்டனி படிச்சவங்களுக்கு எப்படியோ,ஆனா உடன்பிறப்புகளுக்கு இலையுதிர் காலம் என்பது ஏப்ரலில் தொடங்குகிறது


==============


6 மார்ச் மாசம் மட்டும் ஒரு நாள் கூட லீவ் கேட்டுடாதீங்க,பைனான்சியல் இயர்எண்டிங் னு பில்டப் தர்றாங்க,என்னமோ மத்த மாசம் எல்லாம் கேட்டதும் லீவ் தந்துடற"மாதிரி


==============


7 பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு உயிர் பெற"நக்கீரன் ஒரு"முக்கியகாரணமாக இருந்ததுக்கு ஒரு ஷொட்டு,அதே சமயம் நக்கீரன் அட்டைப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு வியாபாரம் ஆக்கியதற்கு"ஒரு கொட்டு


===============


8 லாஜிக் மிஸ்டேக்"1 − நாயகிக்கு ஒரு ஜாடி நிறைய தேன் மிட்டாய் வாங்கி பைக்கில் போகும் நாயகன் பிறகு அந்த ஜாடியை பாதிக்கு பாதி மட்டுமே தேன் மிட்டாய் இருக்கு.கன்ட்டினியூட்டி மிஸ்சிங்கா?ஹீரோ கழகத்தாரா?(எதுவா இருந்தாலும் தான்தான் முதல்ல சாப்பிடனும்) #இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும் (படம் இன்னும் பாக்கல,பாத்தவங்க சொன்னது)


================


9 கேரளா−பத்தணம்திட்டா− காதலிக்க மறுத்த பெண்ணை ரோட்டிலியே பட்டப்பகலில் தீ வைத்த காணொளி கண்டேன்.இந்த மாதிரி"தருணங்களில்"மக்கள் பாதிக்கப்பட்டவருக்கு"முதல்உதவி அளிப்பதில் கவனம் செலுத்தனும்.கொலைகாரனை பிடிப்பது இரண்டாம் பட்சமே!


==============


10 வேட்பாளர் யாரு?அவர் தகுதி என்ன?இதை எல்லாம் அலசி ஆராய்ந்துதான் பொதுஜனங்கள் ஓட்டுப்போடறாங்கனு படித்த கல்வியாளர்கள் கருதுகின்றனர்.தமிழன் மனோபாவம் ஆனாஅந்த"மடம் (உ.சூ),ஆகாட்டி சந்தை"மடம் (இ.இ)


===============


11 டாஸ்மாக் அருகே அரை மணி நேரம் நின்னா இந்த ஊரே குடிகாரனுங்க சூழ் ஊரோ னு தோணும்,அதுமாதிரிதான் இணையத்தில் படித்த புத்திசாலிகள் பலரும் திமுக என்பதால் தமிழ்நாடே திமுக என்ற மாயை தோன்றுவது.இணைய உபயோகிப்பாளர் 3% மட்டுமே.அதுல 65% பேர் ஓட்டுப்போடறதில்லை


============


12 சுயம்வர நிகழ்ச்சி என்ற பெயரில் ஊரை ஏமாற்றிய நவீன போர்ஜரி புரோக்ராம் ஹீரோ ஆர்யா வுக்கு ஆயிஷா உடன் திருமணம் ஆகி விட்டது,எனவே இனி ஏமாற இருக்கும் பெண்கள் ஆர்யா விடம் ஏமாற வேண்டாம்,வேறு ஏதாவது சினிமா ஹீரோவிடம் ஏமாறவும்


================


13 RT க்காகத்தான் இப்டி எழுதறீங்களா?னு கேட்பவர்களுக்கு ஒரு"தகவல்.இணையம் உபயோகிப்பவர்களில் அரசியல்னா திமுக,சினிமா ன்னா விஜய் ரசிகர்கள்தான் அதிகம்.லாஜிக்படி இவங்களுக்கு ஆதரவா எழுதுனாதான் அதிக ஆர்டி கிடைக்கும்


===============


14 குருவே! இரக்கம் உள்ளவனின் வாழ்க்கையில் ஏற்றம் இருந்தது இல்லை...என்ற கருத்து உண்மையா?

ஆத்ம திருப்திதான் மனித வாழ்வின் மிச்சம் என்பதை புரிந்து கொண்டால் பொருளாதார முன்னேற்றம் இரண்டாம் பட்சம் என்பது தெளிவாகி விடும்


=================


15 எங்க ஊர்ல ஒரு திருடன் இருக்கான்,அவனுக்கு போலீசைக்கண்டாலே பிடிக்காது.அவன் ஊர் மக்கள்ட்ட ஒரு கொள்ளைக்காரனைக்காட்டி இவன் போலீஸ்காரரை விட நல்லவன்னு அறிமுகப்படுத்துனான்.இனம் இனத்தோட சேரும்கறது இதுதான்


===============


16 குருவே! சித்தி சீரியல் காலத்திலிருந்தே சன் டிவி 9.30 மணி ஸ்லாட் ராதிகாவுக்கு தான். இப்போ சந்திரகுமாரி 6.30 மணிக்கு மாற்றிவிட்டார்கள். என்ன பஞ்சாயத்தா இருக்கும்🤔?

சரத்குமார் கூட்டணி சேர வராம 48 தொகுதிகள்லயும் தனியா நின்னு அவரோட ஜாதி ஓட்டை பிரிப்பாரில்ல?அந்த கடுப்புதான்


=============


17 என் கவிக்கதவுகளுக்கு தாழ்ப்பாள் இல்லை
னு நெட் தமிழன் ஸ்டேட்டஸ் போட்டா புரியாத கவிதையோனு யாரும் குழம்ப வேணாம்.அவரோட வீடு வெறுமனே சாத்திதான் இருக்கு,தாழ் போடலை லு எதிர் வீட்டு ஆன்ட்டிக்கு சிக்னல் தர்றாரு னு அர்த்தமாம்


=============


18 மாலைமலர் உள்ளிட்ட சில"பத்திரிக்கைகள் டைட்டில் அட்ராக்சனுக்காக,மார்க்கெட்டிங்க்காக எடுத்துக்கொள்ளும்"டைட்டில்கள்"படு பயங்கரம்.இதுக்கு எல்லாம் சென்சார்"கிடையாதா?

புதிய வீடியோ வெளியீடு;
நள்ளிரவில் வாட்சப்பில் வந்த புதிய வீடியோ க்ளிப்ஸ்


=================

19 அரசியலில் கறுப்பு ஆடு எங்கே இருக்கும்?னு சிரமப்பட்டு தேட வேண்டியதில்லை.

சிவப்பு+கறுப்பு,
சிவப்பு+வெள்ளை+கறுப்பு
ல கறுப்பு ஒட்டிக்கிட்டு இருக்கு.குறியீடு


===========
20 ஜோதிடம் நிஜம்னா பொள்ளாச்சி யில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஜாதகத்தில் இந்த மாதிரி"ஒரு கண்டம் இருக்குனு பெற்றோர்களிடம் குடும்ப ஜோசியர் எச்சரிச்சிருப்பாங்க இல்ல?அதே மாதிரி குற்றவாளிகள் ஜாதகத்திலும் இந்த மாதிரி கொடூரமான குற்றம் புரிந்து மரணதண்டனை பெறப்போறார்னு எச்சரிச்சு இருப்பாங்க இல்ல?


=============
.

0 comments: