Sunday, April 21, 2019

.பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் @ கேரளா, அது ஏன்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி

 1 பூமர் ,MCR ,ராம்ராஜ் ஓட்டோ ,க்ரோக்கடைல் போன்ற பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 60% வரை சப் காண்ட்ராக்ட் மூலம் வெளியே குடுத்து தைக்கப்பட்டு வாங்குபவை.எனவே கன்ஸ்யூமர்கள் தயார் நிலையில் அதை அணுகவும்.


============2 தேர்தலின் போக்கை தீர்மானிக்கப்போவது படிப்பறிவு இல்லாத பாமர மக்களின் வாக்குகளே! எழுத்தாளர்கள் சொல்லி என்ன ஆகப்போகுது? இவுங்க புக்கே விற்கறதில்லைனு இவங்களே புலம்பறாங்க
=============3 அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு கை கொடுக்கும்போது மோதிரம்,பிரேஸ்லெட்,வளையல் பத்திரம்,நம்மாளுக நைசா உருவிடுவானுக
===============
4 சதுரங்கத்தில் ஓப்பனிங்கலயே ராஜாவுக்கு செக் & மேட் வெச்ட்டா சுவராஸ்யம் இல்லாம போய்டும்.மந்திரி,சிப்பாய்னு வரிசையா போட்டுத்தாக்கிட்டு கடைசியா நிர்க்கதியா ராஜாவை அரெஸ்ட் பண்ணனும்,அதுதான் கிக் − விஸ்வநாதன் ஆனந்த் டைரியிலிருந்து
==============
5 தூத்துக்குடி தொகுதியைச்சேர்ந்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா...==============
6 சிறுகதை எழுத்தாளர்கள் கவனத்துக்கு,கதைக்கு டைட்டில் வைக்கும்போது ஏற்கனவே வந்த சினிமாப்பட டைட்டிலை வைப்பது கேட்சிங்காக இருக்கும் என நினைப்பது தவறு.கற்பனை வறட்சி என வாசகர்கள் நினைக்கலாம்.மிக எளிமையாக மக்களைக்கவர்ந்திழுக்கும் வகையில் டைட்டில் இருக்கனும்================
7 என்னைய பத்தி உங்க மனசுல இருக்குறத ஒரே வார்த்தைல பளிச்சுனு சொல்லுங்க பார்ப்போம் னு ஆளாளுக்கு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறாங்க.உங்களைப்பத்தி உங்களுக்கோ ,உங்க குடும்பத்துக்கோ தெரியாததா இங்கே இருக்கறவங்களுக்கு தெரிஞ்சிடப்போகுது?🤔==============


தாலி"கட்டுன தன்னோட சொந்த) பொண்டாட்டி கிட்ட நல்ல பேர் எடுத்த புருசனும் கிடையாது.இதோ ஒரு நாள்ல தந்துடறேன் னு அவசரமா"கடன் வாங்கிட்டுப்போனவங்க சொன்னபடி திருப்பித்தந்ததும் கிடையாது


================


9 காலணி ஆதிக்கம் தொடங்கிய காலகட்டம் பேட்டா செருப்பு புகழின் உச்சிக்கு வந்த தினம்===============


10 உப்புமாவே ஒரு கொடூரம். அதுக்கு தொட்டுக்க தயிரா?

ஆமா,தயிர் ல லெமன் ஊறுகா யைப்போட்டு கலந்து அடிச்சுப்பாருங்க.தயிர்ல லைட்டா உப்பைத்தூவிடனும்

===============


11 ஜில்லுனு ஒரு காதல் என்பது கோடை காலத்தில் ஐஸ்க்ரீமை குறிக்கும்===============

12 திமுக தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய கட்சி.தன் பலத்துக்கு நிகரான அதிமுக வை எதிர்க்காமல் 2% , 4% வாக்கு வங்கி கூட இல்லாத கட்சிகளை எதிர்த்துக்கொண்டிருப்பது ஏனோ?சிங்கம்னா புலி,சிறுத்தை ,யானை யை எதிர்க்கனும்,சும்மா எலி,முயல் னு துரத்தறது எதுக்கு?==============


13 யாரோ ஒரு திருடன் பதவி பெற உங்கள் நேரத்தை வீணடித்து கொளுத்தும் வெய்யிலில் பிரச்சாரத்துக்கு போகாதீர்கள்.பணம் சம்பாதிக்க பல வழி உண்டு

================


14 வசனகர்த்தாக்கள் ,பாடல் ஆசிரியர்கள் சில சமயங்களில் அவர்களையும் அறியாமல் மாற்றுத்திறனாளிகளை மனம் புண்படும்படி எழுதி விடுகிறார்கள்.சில உதா + மாற்றுச்சொற்கள்
குருட்டு அதிர்ஷ்டம் = விழி ஒளி இழந்த அதிர்ஷ்டம்
நொண்டிச்சாக்கு = செயல்படா கால் சாக்கு
செவிட்டுப்பயலே = செவித்திறன் குறைந்த பயலே================


15 
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும். என்பது சாத்தியமே இல்லாத சட்டப்படி வழியே இல்லாதவை.டுபாக்கூர் கட்சி,டகால்டி வாக்குறுதி


================


16 சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆக தேர்ந்தெடுக்கும் நேரம் தீபாவளி (போனஸ் வாங்கிட்டு)
அதே முதலாளிகள் ,கம்பெனி எம்.டி கள் ,தொழிலாளர்களை கழட்டி விட தேர்ந்தெடுப்பது மார்ச் 31 ( பைனான்சியல் இயர் என்டிங்)===============


17 திறமையும் அதிரஷ்டமும் சேர்ந்தா சினி பீல்டுல கமர்ஷியலா ஜெயிச்சிடலாம் எனும் கருத்தை பொய்ப்பிக்க வந்த படம் சூப்பர்டீ"லக்ஸ்"

===========


18 சென்சாரில் பொத்தாம்பொதுவா ஏ 18+ னு குடுத்துடறாங்க.ஆனா
1 கில்மா காட்சிகள் உள்ளது
2 வன்முறைக்காட்சிகள் தெறிக்குது
3 குடும்பத்துடன் பார்க்க தகுதி அற்ற படம்
னு போஸ்டர்ல மென்ஷன்"பண்ணனும் னு சட்டம் வரனும்.எத்தனை பேர் பேமிலியோட வந்து சங்கடப்படப்போறாங்களோ?


=================


19 தலைவரே!பாவம் பண்றவங்க,ஊர் சொத்தை திருடறவங்க வசதியா வாழ்றாங்களே!அது எப்டி?

வசதி இருக்கு,ஆரோக்யம் இருக்கா?அதுதான் முக்கியம் ஒரு மனுசனுக்கு===============


20 மலையாளப்பெண்கள் தமிழ்ப்பெண்கள் போல் கூந்தலில் மல்லிகைச்சரம் சூடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை(யாம்) (கேள்வி அறிவு).பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் (என்று கூறுகிறார்கள்)


==================

0 comments: