Monday, April 29, 2019

அரசியல் அனுபவம் கலைஞர் ஜெ கேப்டன், , நையாண்டி , செய்தி கமெண்ட்

1 வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த  இந்திரா,காந்தி , 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்., வறுமையை ஒழிக்கவே இல்லை.-நிதின் கட்கரி  # அரசியல் வாதிகள் ஆட்சிக்,கு வந்தால் வறுமையை ஒழிப்போம்னு சொல்றது அவங்களோட வறூமையை, ஜனங்களோடதுனு நினைச்சா அது நம்ம  அறியாமை

==================


2  கடந்த ஐந்து ஆண்டுகளில், மோடி, மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு, அவர் காரணமாக இருந்துள்ளார்.-தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி  # ஜிஎஸ்டி , பணமதிப்பிழப்பு ?


==================


3  . இதுவரை நடந்த தேர்தல்களில், எதிர்க்கட்சிகள் மீது, வருமான வரித் துறையை கட்டவிழ்த்து, ஏவியது கிடையாது. இந்தியாவில், இதுவே முதல் முறை.-துரைமுருகன்  # அந்த தைரியத்துலதான் பணப்பட்டுவாடா நடத்த முடிவு எடுத்தீங்களா?-


எதற்கும் ஒரு ஆரம்பம்   வேணுமில்ல/?


===================4   : முதல்வர், இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரத்தில், நாகரிகமாக, அன்பாக, மக்களை கவரும் வகையில் பேசினார்.-ராஜேந்திர பாலாஜி # ஒரு சீப்பு வாழைப்பழத்துக்கு 2000 ரூபா தந்தது ஓவர் அன்புங்கோ


================


5  இந்தத் தேர்தல், கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, தொகுதி முழுவதும், மவுனப் புரட்சி நடந்துள்ளது.-பொன்.ராதா  #  40% பேர் ஓட்டுப்போடலை, சைலண்ட் மோடுல செல்  ஃபோனை வெச்ட்டா அதுக்குப்பேரு மவுனப்புரட்சியா? 


===================விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி  # எழுதுனவன் ஏட்டைக்கெடுத்தான், படிச்சவன் பாட்டைக்கெடுத்தான்கற கதை தான் பாமரர்கள் தவறாம வாக்களிச்சடறாங்க, படிச்சவங்க தான் டி வி பாத்துட்டு வீட்லயே இருந்துடறாங்க ================


‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும் சைபர் கிரைம்: போலீஸார் வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல் # ஜனங்க கிட்டே திருடுனா போலீஸ் கிட்டே புகார் தரலாம், போலீஸ் கிட்டேயே ஆட்டையைப்போட்டா யார் கிட்டே புகார் தர?


===================
8

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே பெரும் சவாலாக இருந்தது: - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு # அதையும் மீறிப்பணப்பட்டுவாடா நடந்திருக்குன்னா அரசியல்வாதிங்க எவ்ளோ டேலண்ட்?================

வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: பிரியங்கா காந்தி சாடல்  # வாக்குக்கு பணம் பட்டுவாடா பண்ணலையா?


=============


10  

வேகத்தடை’ மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார்: மேற்குவங்க கூட்டத்தில் மோடி பேச்சு #   கமல் வீட்ல கரணட் கட் பண்ணி விட்ட மாதிரி மம்தா வீட்லயும் கரண்ட் கட் பண்ணி விட்டுட்டாங்களா? ஃபேன் இல்லாம எப்படி தூங்குவாரு?
================

11  பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட நீங்கள், இந்த தேர்தலில், சரியான பதில் அளிக்க வேண்டும்.-மம்தா பானர்ஜி:   # சாரதா சிட்பண்ட்ஸ் ல பணம் போட்டவங்க, பணம் இழந்தவங்க சரியான பதில் கொடுக்கனும்னு அவங்க பிரச்சாரம் பண்ணுவாங்களோ?


================

12  தேர்தல் ஆணையத்தின் பணிகள், ஓரளவு திருப்தி அளித்தன. மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை-பொன்.ராதா  # அதென்ன ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால், விமர்சனம் பண்ணா முழுசா பண்ணீடனும்

=============


13   இந்த லோக்சபா தேர்தலில், வெற்றி பெறுவோம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன், நாங்கள் உள்ளோம்-அஹமது படேல்:  # அவ்ளோ நம்பிக்கை இருந்தும் ராகுல் ஏன் அமேதி வைய நாடுனு 2 குதிரை,ல  சவாரி பண்றாரு?

=================


14  இந்தியாவை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்-அமித் ஷா #இந்தியாவுக்கு என்ன செஞ்சோம்னு சொல்லி ஓட்டு கேளுங்க , சும்மா பாகிஸ்தான், செங்கிஸ்காண்ட்டு

===============


15  மத்திய அரசும், பிரதமர் மோடியும் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை.- அமைச்சர் ராஜ்நாத் சிங்  # எதிர்க்கட்சிகள் வீட்ல மட்டும் ரெய்டு விடறாரே? அது தொந்தரவு தானே?


=================


16  லோக்சபா தேர்தலின் போது, ம.தி.மு.க.,வை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, ஸ்டாலினுக்கு நன்றி. -வைகோ #  நீங்க 2 பேருமே ஒரே கூட்டணில எண்ட்ரி,  ஒரே கண்ட்ரி ,உங்களுக்குள்ள எதுக்கு நன்றி?

===========

17 வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதே எங்களின் கணிப்பு-வைகோ  #  வாக்காளர்களுக்கு பணம் யாரு  அதிகம் கொடுத்தாங்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரcashசமாக இருக்குமாமே?.

==================


18 மோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்.-சித்தராமையா # காங் ஆட்சிக்கு வந்தால் பணநாயகம் தழைத்தோங்கும்?


==================


19  வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா  #  ராகுல்க்கு ஒரு வையநாடு ம்ாதிரி மோடிக்கு  ஒரு ஆல்ட்டர்நேட் தொகுதி ரெடி பண்ணனும் போல 


==============


20  'கூட்டணி குறித்து பேசி, எங்கள் நேரத்தை காங்கிரஸ் வீணடித்து விட்டது' -, ஆம் ஆத்மி # விடாதீங்க, நீங்களும் எதுனா பேசி அவங்க நேரத்தை வீணடிங்க, தானிக்கு தீனி , இதுதான் லேட்டஸ்ட் பாணி


==================


0 comments: