Sunday, April 28, 2019

Oru Yamandan Premakadha (2019) ( மலையாளம்) - சினிமா விமர்சனம் (காமெடி மெலோ டிராமா)மம்முட்டியின் மகன் துல்கர்க்கு என தனி ரசிகையர் கூட்டம் உண்டு. ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான படம் தான் தர்றார் என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதைக்களைவதற்காக பி & சி செண்ட்டர் ர்சிகர்களுக்கான ஃபேமிலி எண்ட்டர்டெய்ன்மெண்ட்டாக ஒரு படம் தர நினைத்திருக்கார், அது ஒர்க் அவுட் ஆச்சா?னு பார்ப்போம்


ஹீரோ ஒரு ஜாலி டைப் . வழக்கமான சினிமா ஃபார்முலாப்படி அவர் கூடவே நண்பர்கள் க்ரூபோட சுத்தறவர். அவருக்கு மேரேஜ் பண்ணி வைக்க வீட்ல நினைக்கறாங்க. ஆனா ஹீரோ தான் பார்த்ததும் தன் மனசுல ஒரு ஸ்பார்க் அடிக்கற ஃபிகரை எப்போப்பார்க்கறனோ அப்போதான் மேரேஜ்ங்கறார். இதெல்லாம் நடக்கற காரியமா? அப்டினு நண்பர்கள் கிண்டல் பண்றாங்க


ஹீரோ ஒரு பெயிண்ட்டர். லேடீஸ் ஹாஸ்டல்க்கு பெயிண்ட் அடிக்கற ஒர்க் விஷயமா அவர் நன்அர்கள் க்ரூப்போட போறார். அங்கே பல ஃபிகர்களைப்பார்க்கறார் மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் ஃபிரண்ட்ஸ் படத்துல வந்த வடிவேலு காமெடி டிராக்கை அப்டியே லைட்டா பட்டி டிங்கரிங் பண்ணி அட்டாச் பண்ணிட்டாங்க்


படம் போட்டு ரெண்டே கால் பணி நேர,ம் பழிச்சு அவருக்கு ஸ்பார்க் உண்டாக்கற ஃபிகரை சந்திக்கறார். ஆனா ஒரு ட்விஸ்ட். அது என்ன? என்பதை வெள்ளித்திரையில் காண்க


ஹீரோவா அசால்ட்டா துல்கர் வந்து போறார் . வழக்கமா இவரது காஸ்ட்யூம்ஸ் எல்லாம் பக்கா டீசண்ட்டா இருக்கும் , இதுல ஒரு படி இறங்கி தர லோக்கலா வந்து போறார் , படம் பூரா காவி வேட்டி அல்லது லுங்கி ஒரு டி சர்ட் அவ்ளோ தான் . இவரது ஹேர் ஸ்டைலை ரசிக்கவே ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்து சீட்ல ஒரு காலேஜ் கேர்ள்ஸ் கூட்டம் ஹேய் அவன் ஹெர் ஸ்டைலைப்பாருங்கடினு கடுப்பேத்திட்டே இருந்தாங்க


ஹீரோயினா சம்யுக்தாமேனன். அழகு ஃபிகர் . ஆனா அதிக வாய்ப்பில்லை , மொத்தமே 20 நிமிஷம் தான், இவருக்கு டூயட் இல்லை .பின்னடைவு


நாயகனின் நண்பர்களா வரும் 3 பேர்தான் படத்தை தூக்கி நிறுத்தறாங்க . காமெடி எல்லாம் ஓக்கே ரகம்

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காக அந்த க்ரைம் ;போர்ஷன் சேர்த்தது பெரிய பாதிப்பைத்தர்லை

பாடல்கள் இசை ஒளிப்பதிவு ஓக்கே ரகம்

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 துல்கரின் . மலையாளம் படம் சுமார்தான் எனத்தகவல்


2 படத்தோட ஓப்பனிங் ஷாங் சின்னப்பசங்களோட லூட்டி காட்டிய படங்கள் எல்லாமே வசூலில் ஒரு காட்ட காட்டியவை எ.கா அஞ்சலி ,பூfriends பட வடிவேல் பெயிண்ட் காமெடி டிராக் அப்டியே அட்லீ ஒர்க்


ஹீரோ ஒவ்வொரு சீன் ஓப்பனிங்க்லயும் ரோட்ல போற எதுனா ஒரு பொண்ணு கிட்ட "என்னம்மா?ஹேர் கட் பண்ணி விடட்டா?"னு கேட்கறாரு.இது ஒரு காமெடினு கெக்கே பிக்கேனு சிரிக்கறாங்க,நமக்குப்புரியாம எதுனா meaning இருக்குமோ?

5  2 3/4 மணி நேர லவ் ஸ்டோரி ல ஹீரோயின் இன்ட்ரோ 2 1/4 மணி நேரம் கழிச்சு. பாக்கி இருக்கற அரை மணி நேரத்துல ஹீரோஹீரோயின் சந்திக்கறது எப்போ?லவ் பண்றது எப்போ?லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  லாஜிக் மிஸ்டேக் 1 − விபத்து பண்ணிட்டே எஸ் ஆகப்பார்க்கும் கார்க்காரனை நிறுத்தி வலுக்கட்டாயமா அடிபட்ட ஆளை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு போ என சொல்பவர்கள் யாராவது ஒரு ஆள் கூட போகமாட்டாங்களா?

நச் டயலாக்ஸ்1  என் மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க் ஆகற ஒரு பெண்ணை இதுவரை நான் கண்டதில்லை ,கண்டதும் காதல்தான்இனிமே நீ வேலைக்கு வர வேண்டாம்


அய்யோ ,நான் எதுவுமே செய்யலையே?
அதான்,ஏதாவது வேலை செஞ்சாத்தானே பரவால்ல?சும்மாவே இருந்தா எப்டி?
tea கடைக்கு அழகே ரேடியோ வின் ஆகாஷ்வாணி தான்tea கடைல ஒரு ஆள் பில் 14,668 ருபாயா,?அடேங்கப்பா.எப்டி?
ஒரு சாயா 14 ருபா வடை 6 ரூபா போண்டா 6 ருபா
14668 வருதே
பழம் 8 ருபா எல்லாத்தையும் சேர்த்தா

துல்கர் நடித்த ரொமாண்டிக் காமெடி
@கேரளா கோட்டயம் அனஸ்வராசி.பி கமெண்ட்  -OruYamandanpremakadha(malayalam ) - காமெடி இருக்கு,ஆக்சன் இருக்கு ,க்ரைம் இருக்கு,பைட் இருக்கு,ஆனா கதை ஸ்ட்ராங்கா இல்ல.படம் ஜாலியாப்போகுது.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் திணிப்பு ,medium hit அடிக்கும்,ரேட்டிங் 2.25 / 50 comments: