Tuesday, April 30, 2019

எல்லாம் இன்பன் மயம்

1  ஏசு கிறிஸ்துவின் ஆசியோடு ஒருவர் இறந்த பிணத்துக்கு உயிர் தந்த டுபாக்கூர் வீடியோ கண்டேன்,ஏன்?அந்த ஏசு கிறிஸ்துவுக்கே உயிர் தர வேண்டியதுதானே?அல்லது பெருந்தலைவர் காமராஜர் மாதிரி நல்லவர்களுக்கு உயிர் தரலாமில்ல"?
============

2 துரைமுருகன் ராக்கிங் பர்பார்மென்ஸ், திமுக விடம் சீட்டு கேட்ட சுதீஷ் க்கு நோ "என்ட்ரி

===========

3 பிரபல பெண் இயக்குநருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் பேர்வழினு 13 ஆண் ட்வீட்டர்கள் "சாட்டையடிப்பதிவு தோழி,பெண் முன்னேற்றம் பேணி காக்கப்பட்டது "ரேஞ்சுக்கு அளந்து விட்டு ஆர்டி வாங்கிட்டு இருக்காங்க,இருய்யா வர்றேன்

============

4 மீடியாவுக்கு நடிகை கஸ்தூரி
ரம்பா வுக்கே சவால் விடும் அளவு thigh spl பேட்டி கண்டேன்.ஒரு லெக்கின்சோ ,பேண்ட்டோ அட்லீஸ்ட் ஒரு பர்முடாசோ போட்டிருக்கலாமேனு கேட்டா பெண்களுக்கு டிரஸ் போடாம இருக்கக்கூட சுதந்திரம் இல்லையா?னு பொங்குவாங்க,நமக்கு எதுக்கு வம்பு?


===============


5 வாழ்க்கைல,தொழில்ல,வியாபாரத்துல எல்லாருக்குமே ஜெயிக்க ஒரு வாய்ப்பு இயற்கை வழங்கி இருக்கு.ஓட்டப்பந்தயத்துல கலந்து வேகமா ஓடி வெற்றி அடைய முடியாதவங்க ஸ்லோ சைக்கிள் ரேஸ் ல கலந்து ஜெயிச்சிடலாம்.இலக்கு எது என தீர்மானிச்ட்டா போதும்


=================


6 ஏனோ தானோ னு பாத்திரம் துலக்கற பொண்ணுங்க கூட FB ல சாப்பாடு போஸ்ட் அப்டேட் பண்ற பழக்கம் வந்தபின் பிரமாதமா பாத்திரம் துலக்கிடறாங்க,அல்லது சாப்பாடு அப்டேட் பண்றதுக்குன்னே தனி செட் பாத்திரம் வாங்கிக்கறாங்க (சாப்பிடறது வேற செட்)===============


7 இப்போதைய சூழலில் அதிமுக சிட்டிங் எம்பிக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சீட் கிடைக்காதே? அவர்களின் அதிருப்தியை எப்படி சமாளிக்க?ரொம்ப ஈசி,2 எம் பி களுக்கு எதுனா சின்ன ஆக்சிடெண்ட் நடந்தா மத்த எம் பி க்கள் ஆளை விட்டா போதும் பாங்க


============


8 புளிசேரி கேரளாவைத்தவிர வேறு எங்கும் கிடைக்காதா?கிடைக்கும்,ஆனா பேரு வேற.மோர்க்குழம்பு=============


9 தரை உருள் நகை = விழுந்து விழுந்து சிரித்தல்வளையல் (தரைல உருட்டி விட்டா உருளும் நகை)


=============


10 பொள்ளாச்சில ஒருத்தன் 200+ பொண்ணுங்களை"கரெக்ட் பண்ணி வீடியோவை வாட்சப்ல விட்டிருக்கான்,அதுல கன்னிப்பொண்ணுங்க 34 பேரு,ஆன்ட்டிங்க 165+ பேரு.அதெப்டி புத்திசாலிப்பொண்ணுங்க இப்டி மொள்ளமாரியாப்போய் மாட்றாங்களோ?கொஞ்சம் கூட நன்றி உணர்வோ மனசாட்சியோ இல்லாம க்ளிப்பிங்க்ஸ் ரிலீஸ் பண்ணி இருக்கான் (கேள்வி அறிவு)


===============


11 ஒரு ஊருல 2 திருடனுங்க இருந்தாங்க,ஒரு திருடன் கஞ்சப்பிசுனாரி,எவ்ளோ திருடுனாலும் அவனுக்கே பத்தாது,தன் குடும்பத்துக்கு மட்டும்தான் தருவாப்டி.இன்னொரு திருடன் போலீஸ்,வக்கீல்,பொது ஜனம் னு எல்லாருக்கும் திருடுனதுல பங்கு தருவாப்டி,இப்போ மக்கள் ஆதரவு எந்த திருடனுக்கு இருக்கும்?============


12 சேலைல மோடி உருவம்,இன்ன பிற வீரர்கள் படம் பிரிண்ட் பண்ணுன சேலையை உடுத்தற பொண்ணுங்களுக்கு சங்க(ட்)டமா இருக்காது?அட்லீஸ்ட் அந்தப்பெண்களோட கணவருக்காவது ?


===============


13 நாளை மோடி தமிழ்நாடு வந்ததும் நேரா கேப்டன் வீட்டுக்குப்போய் கூட்டணி மேட்டரை முடிச்ட்டு மரியாதை நிமித்தமான சந்திப்பு அப்டிம்பாரோ?


=============


14 பற்றற்ற சாமியார்கள்னா காவி உடை அல்லது சாதா காட்டன்ல உடை உடுத்தனும்,ஆனா நம்ம ஜக்கி விலை உயர்ந்த பட்டு உடை உடுத்தி இருக்காரு,பட்டுப்பூச்சிகளைக்கொன்று உருவாக்கப்படும் பட்டு உடையை பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்காத(வர் என கருதப்படும்) துறவிகள் உடுத்தலாமா?சாமி கண்ணைக்குத்தாதா?==============

`15  எனது கணிப்பில் சிறிய மாற்றம். DMK கூட்டணி அதிகபட்சம் 5/40 என பதிவிட்டிருந்தேன். அதை 3 / 39 என திருத்தி வெளியிடலாம் என நினைக்கிறேன்.எதிர்பாராதவிதமாக கமலின் மக்கள்நீதிமய்யம் ,சீமானின் நாம் தமிழர் இரு கட்சிகளும் தலா 5% வாக்கு வாங்கும் என தெரிகிறது
================
16 ஜெ இல்லை,கட்சி ரெண்டா பிரிஞ்சதால வாக்கு பிரியும் னு மனப்பால் குடிக்கறாங்க சிலர்,ஆனா ஜனங்க 1000,2000,6000 னு வாங்கிட்டாங்க,பத்தாததுக்கு போனசா தேர்தல் சிறப்பு கவனிப்பா பணம், DMK கட்சிக்காரங்க வீட்டம்மாக்களே மாத்தி குத்தி இருப்பாங்க,ரிசல்ட் வர்ற அன்னைக்கு அதிர்ச்சி காத்திருக்கு
===============
17 கஞ்சப்பிசினாரியாக இருப்பவர்கள்

கடைசி வரை சிம்மாசனம் ஏற இயலாது


==============


18 2019 நாடாளுமன்றத்தேர்தல்ல கமலைத்திட்டியவங்க எல்லாம் 2021 சட்டமன்றத்தேர்தல்ல ரஜினியைத்திட்டப்போறாங்க..நம்ம கிட்ட இருக்கறதே 28% ,அதை ஆளாளுக்கு (கமல்,ரஜினி,சீமான்) பங்கு போட்டா எப்டி என்ற எரிச்சல் வர்றது மனித இயல்புதானே?


================


19 கடலோரக்கவிதைகள் ஜெனீபர் teacher தன் மகளுடன்"வாக்களிக்க வந்திருந்தார்,கடலோர ஹைக்கூ!


=============

20 நான்காம் கலைஞர் ரெடி#எல்லாம்

இன்பன் மயம்

================

0 comments: