Saturday, April 27, 2019

திமுகவின் வெற்றி கணிப்பு

1  தகவல் அறியும் உரிமை சட்டப்படி விஜயகாந்த் உடல்நிலை"பற்றிய மெடிக்கல்"ரிப்போர்ட் பொதுமக்களுக்கு தர வேண்டும்.அவர்"சுய நினைவில் உள்ளாரா?அவரது குடும்பம்"அவருக்கு சரியான"சிகிச்சைதான்"தருகிறார்களா?என்பது சந்தேகமா இருக்கு

==============


2 பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதிகள் அனைவரும் ஆரோக்யமான மனநிலையில்தான் உள்ளனர்னு மருத்துவச்சான்றிதழ் இப்பவே வாங்கி வெச்சிடுங்க"ஆபீசர்ஸ்,நாளைக்கே அவங்க சிகப்பு"ரோஜாக்கள் கமல் பாணில தப்பிச்சிடப்போறாங்க


===============


3 வேகமா வர்ற லாரியைக்கண்டா நாம ஒதுங்கி"நிற்கற மாதிரி தான் ,நம்ம கருத்து பிடிக்காம நம்மை தாக்க வர்றவங்களையும் கண்டா விலகி நின்னுடனும்,எதிர் வாதம்"செய்து நேரத்தை ,சக்தியை வீண் ஆக்குவது"வெட்டி"வேலை


==============


4 ஒரு குற்றம் பொதுமக்களின் பார்வைக்கு வர புலனாய்வுப்பத்திரிக்கைகள் எந்த அளவு முக்கியம் என்பதை பொள்ளாச்சி சம்பவம் உணர்த்தி உள்ளது. நக்கீரன்,விகடன் பத்திரிக்கைகள் இல்லாவிடில் இந்த குற்றம் அமுக்கப்பட்டிருக்கும்.ஊமை விழிகள் படக்கதை போல தோண்டத்தோண்ட பல சம்பவங்கள் வெளிவருது


================


5 அதிமுக வில் எம்ஜியார் அல்லது"ஜெ உயிருடன்"இருந்தபோது கட்சிக்காரர்களுக்கு ஒரு"பயம் இருந்தது,ஏதாவது"தப்பு செய்தால்"பதவி போய்டும்.ஆனா இப்ப அவர்கள்"இல்லாததால் கட்சிப்பெரும்புள்ளிகளிடம் பயம் இல்லை,


==============6 நடிகர்கள் சித்தார்த் ,ஜிவிபி ஆகியோர் பொள்ளாச்சி வழக்கு பற்றி கருத்து கூறியதற்கு பலரும் அவர்களது பாய்ஸ்,த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா பட தரத்தை ஒப்பிட்டு அவர்களை தாக்குகின்றனர்.தனிமனித ஒழுக்கத்தில் நம்பியார் மக்கள் போற்றிய எம்ஜியாரை விட பல மடங்கு உயர்ந்தவர் என்பதை மறந்துவிடவேண்டாம்


==============

7 பொள்ளாச்சி குற்றவாளிகள் எந்தக்கட்சி?என்ன ஜாதி?என சம்பந்தமில்லாமல் ஆராய்ச்சி பண்ணி விவாதம் பண்றாங்க.எந்தக்கட்சியா இருந்தாலும்,எந்த மதத்தினரா இருந்தாலும் கொடூரமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!அவர்களைக்காப்பாற்ற முயல்பவர்களும் குற்றவாளிகளே!


================


8 பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றவாளியின் பெற்றோர் மகனுக்கு"ஜாமீன் மனு தர கோர்ட்"வந்தபோது பொதுமக்கள் கேள்விக்கனைகள் தொடுத்தது"மெச்சத்தக்கது,அப்போக்கூட அந்த அம்மா தன் மகன் செய்தது தவறு"என்பதை ஒத்துக்கொள்ளாமல்"அவன் மட்டுமா செய்தான்,எல்லாரும் சேர்ந்துதானே செஞ்சாங்க என மழுப்பியது கொடூரம்


================


9  தொலைதூர ரயில் பயணங்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்பவர் கவனத்துக்கு,அன்ரிசர்வ்டு ஜெனரல்கம்ப்பார்ட்மெண்ட் இஞ்சின்க்கு அருகில் உள்ள பெட்டி முதலில் full ஆகாது,கடைசி பெட்டி தான் full ஆகும்,எனவே எப்போதும் என்ஜின் பக்க பெட்டியை தேர்ந்தெடுக்கவும்


==============


10 பாலிமர் நியூஸ் சேனலில் பொள்ளாச்சி வழக்கு பற்றி கருத்து தெரிவிக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் அசால்ட்டாப்பேசறார்.பிக்பாஸ் கமல் போல கவுண்ட்டர் கொடுக்கிறார்,அங்கங்கே நக்கல் சிரிப்பு வேற.சீரியஸ்னெஸ் இல்லை.இதுல அரசியல் அழுத்தம் இல்ல,அரசியல் இல்லங்கறார்,இப்பதான் டவுட்டே வருது


================


11 சிலைகடத்தல் விவகாரத்தில் கோர்ட் தலையிட்டது போல பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கிலும் தலையிட்டு நேர்மையான போலீஸ் அதிகாரி யாரிடமாவது கேசை ஒப்படைக்க வேண்டும்,எந்த வித அரசியல் குறுக்கீடும் இருக்கக்கூடாது


================


12 பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை வாட்சப் ,FB,ட்விட்டர் மூலம் பரப்புவது சட்டப்படி தவறு,குற்றவாளிகளுடன் பெண் இருப்பது போல் கிடைத்த படம் பகிரும்போது பெண்ணின் முகத்தை"மறைத்து பின் பதிவிடலாம்


================


13 பொள்ளாச்சி குற்றவாளிகள் படங்களை மட்டும் அப்டேட்டினால் போதாது.குற்றவாளிகளின் பெற்றோர் புகைப்படங்களும் பதிவேற்றப்படவேண்டும்.வளர்ப்பு சரி இல்லை,எனவே அவர்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு.இனி உருவாகும் குற்றவாளிகளுக்கு ஒரு பயம் வரும்


================


14 பொள்ளாச்சி குற்றவாளிகள் எந்தக்கட்சிக்காரர்களாக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.கட்சிப்பேர் கெட்டுப்போய்டுமே என்று மென்று முழுங்கினால்தான் பேர் கெடும்


===============


15 பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை முதலில் HIV ஆய்வுக்கு உட்படுத்தி சோதனை செய்ய வேண்டும்,ஒருவேளை எய்ட்ஸ் நோயாளிகளாக இருந்தால் பாதிப்பின் வீரியம் இன்னும் அதிகமாக இருக்கும்


=================

16 ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கான அர்த்தம் முடிந்தவரை ஊர்மக்களுடன் ஒற்றுமையாக வாழ் என்பதே!அதற்காக அயோக்கியர்களுடன் அப்படி இருக்கத்தேவை இல்லை,உதா− இணையத்தில் நெ1 திருட்டுக்கட்சிக்காரர்கள் அதிகம் என்பதற்காக அவர்களுக்கு பயந்து இருக்க அவசியம் இல்லை


================


17 பொள்ளாச்சியைச்சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் கைதான 4 நாட்களிலேயே ஆளுங்கட்சி ஆட்கள் என்பதால் பெயில் ல வெளிவந்தது அக்கிரமம்.FIR போடும்போதே பெயிலில் வரமுடியாத செக்சன் ல கேஸ் எழுதமுடியாதா?


=============


18 திமுக நேர்காணல் போட்டோக்களில் கனிமொழி,துரைமுருகன் மகன் நேர்காணல்கள் வாரிசு அரசியல்களின் உச்சம்.சும்மா கண் துடைப்புக்காக நேர்காணல்


==============


19 திமுகவின் வெற்றி கணிப்பு
தந்திடிவி : 36/40
நியூஸ் 7 : 37/40
நியூஸ் 18. : 38/40
நக்கீரன் 40/40
புதிய தலைமுறை : 39/ 40
முரசொலி = 41/40
அடேய்,மொத்தமே 40 தான?அடிச்சு விடறதுக்கு ஒரு அளவு இருக்கு.5 வரமுடியுமா பாருங்க


==============


20 நான் சின்னப்பையனா இருந்தப்ப ஒரு பழமொழி/சொலவடை உண்டு சேலத்துல பொண்ணு கட்டாதே,கரூர் ல மாப்ளை எடுக்காதே அதை மாத்தி பொள்ளாச்சினு போடனும் போல


==============

0 comments: