Friday, April 19, 2019

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" ன்னு காலைலயே பக்கத்து வீட்டு ஆண்ட்டி பாட்டு போடுது ஏதும் குறியீடு இருக்குமோ?

நாங்கள் 2021 ல் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன் மட்டுமல்ல,நகைக்கடன்,க்ரெடிட்கார்டு கடன், பர்சன் லோன் என அனைத்துக்கடன்களும் தள்ளுபடி"செய்யப்படும் ,ரிசர்வ் பேங்க் கவர்னர் எனக்கு ஒண்ணு விட்ட சித்தப்பா முறைதான்.எனவே இந்த முறை எங்களை நம்பியே ஏமாறுவீர்!


===============

2 சென்னை ஏர்போர்ட் மேற்கூரை டென்டர் விடப்பட்டது நமது கழக ஆட்சியில்தான்,இதுவரை 87 முறை இடிந்து விழுந்தாலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை,ராசியான இந்த ஆட்சி மீண்டும் 2021 ல் மலர இப்போ முன்னோட்டமாக எங்களுக்கே வாக்களிப்பீர்!


===============


3 கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" ன்னு காலைலயே பக்கத்து வீட்டு ஆண்ட்டி பாட்டு போடுது ஏதும் குறியீடு இருக்குமோ?


அந்த ஆண்ட்டி"கிறிஸ்டியனா இருந்தா"அது அவங்க மத வழக்கம்.உங்களுக்கு அடிதான்.===============

4 தலைவரே!நம்ம கட்சில இருக்கற 200 ரூபா கோஷ்டிக்கும் ,300 ரூபா கோஷ்டிக்கும் என்ன வித்யாசம்?


ஆபீஸ்,கம்பெனில வேலை பாத்துக்கிட்டே திருட்டுத்தனமா நம்ம திருட்டுக்கட்சியை ஆதரிச்சு பதிவுகள் போடறவங்க 200 ரூபா கோஷ்டி.வேலை வெட்டிக்கே போகாம முழு நேரமும் இதே வேலையை செஞ்சா அது"300 ரூபா கோஷ்டி===============


5 எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய அரசுக்கு அடி பணிய மாட்டோம்,ஏன்னா ஊழலில் 50% 50% பார்ட்னர்ஷிப்,எனவே உரிமையாக தட்டிக்கேட்போம்.


=============


6 கை கொடுக்கற சாக்குல ஒருத்தன் என் மோதிரத்தை உருவிட்டு போய்ட்டான், 1 பவுன்


மேடம்,தங்க நகைகள் எனக்குப்பிடிக்காது,கவரிங் தான் போடுவேன் னு சொன்னீங்களே?

அது வந்து... அது 5 வருசம் முன் எடுத்த நிலைப்பாடு.அதை நம்பறதும் நம்பாததும் உங்க பாடு==============


7 தலைவரே!நீங்க ஆட்சிக்கு வந்தா நீட் தேர்வை ரத்து பண்ணுவீங்க ?


ஆமா

நீட் தேர்வை தமிழகம் கொண்டு வந்தது யாரு?

நாங்க தான்
கோர்ட் ல நீட் தேர்வு வேணும் னு வாதிட்ட நளினி சிதம்பரம் (ப.சிதம்பரம் மனைவி) எந்த கட்சி?
நம்ம கட்சி தான்================

8 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் விடுவோம்,அதாவது முதல் கட்டமா புல்லட் பைக் விடுவோம்,அடுத்ததா ரயில் விடுவோம். தேர்தல் முடியும் வரை எதுனா கதை விடுவோம்


============


9 ரெய்டில் சிக்கிய 33 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு லஞ்சமாக தர இருந்த பணம்தான்னு அடிச்சு விடுவாங்க ,நம்பிடாதீங்க,ஆட்சியில் இருக்கும்போதே கட்சிக்காரனுக்கே 10 பைசா குடுக்காத கஞ்சப்பிசினாரிங்களா ஆட்சி ல இல்லாதப்ப ஜனங்களுக்குப பணம் குடுக்கப்போறாங்க??


==============


10 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை மட்டுமல்ல ,சிபிஐ ,எனும் அமைப்பையே ரத்து செய்வோம்,யாரும் ரெய்டு பயம் கொள்ளத்தேவை இல்லை.அவரவர் கஷ்டப்பட்டுத்திருடிய காசை அவரவரே வைத்துக்கொள்ளலாம்,எனவே வாக்களிப்பீர்....


==============


11 இந்துக்களுக்கு எதிரி என்ற தவறான பிரச்சாரம் எங்கள் மேல் தொடுக்கப்படுகிறதுநாங்கள் எப்போதும் அப்படி அல்ல.தேர்தல் வரும் சமயங்களிலே இந்துக்கள் வீட்டுப்படி ஏறி வந்து வாக்குக்கேட்கிறோமே?அப்போ அவர்கள் மேல் எவ்ளோ அக்கறை?சிந்திப்பீர்! செயல்படுவீர்!


=============


12 ஆதாரமே விட்டு வைக்காமல் விஞ்ஞானப்பூர்வமா ஊழல் புரிவதில் phd வாங்கிய நாங்கள் ரெய்டில் சிக்குவதா?ஏப்ரல் fool பண்ணுவதற்காக விளையாண்டோம்,அவை அனைத்தும்"டம்மி நோட்டுகள்,நாங்களும் டம்மி,நம்ம கட்சியும் டம்மி,ஆக வாக்களிப்பீர்....!


================

13 உடன்பிறப்பே!ரெய்டு குறித்த செய்திகளை பரப்ப வேண்டாம்.எதுவும்"தெரியாதது"போலவே கமுக்கமாக இருந்துக்குங்க.நாம பரப்பலைன்னா ஜனங்களுக்கு எதுவும் தெரியாது.அண்ணா நாமம் வாழ்க. வருமான"வரித்துறை ஒழிக!


===============


14 Apirl fool பண்றக்குகூட பொய்பேச வரல எனக்கு😌😌


ஓஹோ,இதுவே"ஏப்ரல் fool பண்றதுக்கான அச்சாரமாத்தான்"தெரியுது================


15 தலைவரே!ஆதித்ய கரிகாலன் மேல் கொண்ட பற்றின் காரணமாகத்தான் ஆதித்யா சேனல் பேர் வெச்சிருக்காங்களா?


அட போய்யா,நம்ம தங்கச்சி பையன் பேரு ஆதித்யன்.குடும்பம் தான் அரசியல்,அரசியலில் குடும்பம்==================

16 தலைவரே!அமேதி,கேரள வையநாடு,இந்த 2 தொகுதிலயும் போட்டி இடறீங்களாமே?ஏன் உங்களுக்கே உங்க மேல நம்பிக்கை இல்லையா?


எதுக்கும் ஒரு பாதுகாப்புக்கு....

2 தொகுதிலயும் நீங்களே ஜெயிச்ட்டா ஒரு தொகுதில ரிசைன் பண்ணனும்,மீண்டும் தேர்தல் நடத்த ஆகும் செலவை நீங்க ஏத்துக்குவீங்களா?
அது வந்து......================


17 குருவே! பாவையர் கடந்து செல்கையில்

அந்தப் பக்கமே திரும்பாத
ஆண்கள்தான் பேரழகு அப்டினு சிலர் கருத்து சொல்றாங்களே?அது நிஜமா?

பாவையை ரசிக்காமல் உன் பாதையில் நீ"சென்றால் அது பாவம்.புசிப்பதற்குத்தான் கனி,ரசிப்பதற்குத்தான் கன்னி!==============


18 நேர்முகத்தேர்வில்


யூ ஆர்"செலக்டட்.உனக்கு சம்பளம் மாசம்"20,000 ரூபா

கம்மியா இருக்கே சார்

யோவ், 100 × 200 ரூபா
அடேங்கப்பா,இப்பதான் புரிஞ்சுது.தாங்க்யூ சார்================


19 1. ஹை-க்ளாஸ் னா என்ன?
டாகுமெண்ட்ஸ் தராம 1000+ கோடி
லோன் வாங்கிட்டு பேங்க் மேனேஜருக்கு 10% கமிஷன் தந்துட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போறவங்க

2. மிடில்-க்ளாஸ் னா என்ன?
10,000 ரூபா லோன் வாங்க 10 லட்சம் ருபா க்கு டாகுமெண்ட்ஸ் காட்டி காரண்ட்டி சைன் 15 பேருட்ட வாங்கித்தந்து 10 வருஷம் அலைஞ்சு லோன் வாங்குறவங்க================


20 
தலைவரே!பகுத்தறிவாளர்களான நாம வாக்கு கேட்டு ஊர் ஊரா ,தெருத்தெருவா,வீடு வீடா போறப்ப ஆரத்தி எடுத்து நெத்தில குங்குமம் வெச்சு விடறாங்க,அதை அழிச்சிடலாமா?
காரியத்தைக்கெடுத்துடாதய்யா,தேர்தல் முடியும் வரை ஆத்திகவாதியா நடிப்போம்,தேர்தல் முடிஞ்சதும் நாத்திகவாதியா நடிப்போம்,மொத்தத்துல நம்ம சுயரூபம் எவனுக்கும் தெரிஞ்சுடக்கூடாது================

0 comments: