Saturday, April 06, 2019

பிரியமான தோழி பாகம் 2

1  

ரஃபேல்' நூல் பறிமுதலில் திடீர் திருப்பம்; நாங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் அதிகாரி பேட்டி # இப்போ காங் கட்சிக்காரங்க அம்பேல் ஆகி இருப்பாங்களே?பரபரப்பா புக் விற்கனும்னு  புரளி கிளப்பறது=================


2  

தினகரனை அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது: மதுரை ஆதீனம் தகவல் # இவரு அடிக்கடி ஜோசியர் ஆகிடறாரு================


3   

நெற்றி நிறைய விபூதியுடன் வாக்கு சேகரித்த திருமாவளவன்: கார்ட்டூன் மூலம் கிண்டல் செய்யும் பாஜக # தேர்தல் முடியும் வரை பகுத்தறிவுக்கு பாஸ்போர்ட் குடுத்து வெளிநாடு அனுப்பி வைப்பதுதானே அரசியல் அறிவு?===============

4  முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசு, எப்படி மக்களைப் பாதுகாக்கும் - உதயநிதி ஸ்டாலின்  # பாதுகாப்பு கொடுத்திருந்தா  ஜெ தானே மீ ண்டும் முதல்வர் ஆவார், ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் ஆக முடியாதே?
\

==============ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக தாய் விஜயலட்சுமி பிரச்சாரம்  # குடும்பப்பாங்கான வேட்பாளர் போல


==============

6  

தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்? தெய்வம் இருக்கிறது: துரைமுருகன் மீது பிரேமலதா விமர்சனம்  # அந்த தெய்வத்தோட பேரு மோடி?==============


7 அன்புமணி சொல்லித்தான் எனக்கு துணை முதல் வர் பதவி கிடைத்ததாக கூறுகிறார்.

அன்புமணியை அமைச்சர் ஆக்கியவர் கருணாநிதி- ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் பதில்  # என்ன , இவங்க 2 பேரும்மாத்தி மாத்தி கோல் போட்டுட்டு இருக்காங்க, அப்ப ஜனங்க பங்கே இல்லையா?================


8  

‘அவுட் கோயிங் சர் ஜி  அவர்களே’ - பிரதமர் மோடிக்கு புதிய முன்னொட்டை வழங்கிய சத்ருகன் சின்ஹா #  எப்படியோ ஜெயிலர் சின்ஹா வைப்பார்த்து இன்கமிங் ஃப்ரீனு சொல்லப்போறாரு


===============

9  

அபாயகரமான வாக்குறுதிகள், அமல்படுத்தப் பட முடியாதவை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அருண் ஜேட்லி விமர்சனம் # காங்கிரசோட வாக்குறுதிகளை மக்கள் நம்பிட்டா அது பாஜக வுக்கு அபாயகரமானது?=================


10 

சப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ் # வாக்காளர்கள் சப்பாத்திக்குள் பணம் இருக்கறதைப்பார்த்து “பூரி”ச்சுப்போய்டுவாங்க இல்ல?=================

11 மக்களவைத் தேர்தல்: ''வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம்'' - 200 இந்திய எழுத்தாளர்கள் வேண்டுகோள் # எழுத்தை ஆள்பவர்களால் நாட்டை ஆள்பவர்களுக்கு பிரச்சனை?============

12 

பாகுபலி’ பல்லால தேவனை போலாகிவிட்டார்: சந்திரபாபு நாயுடு மீது பிரதமர் மோடி விமர்சனம்  # இதுல இருந்து தெரியற நீதி மோடி தமிழகத்தை கவனிக்கறாரோ இல்லையோ தமிழ் சினிமா , தெலுங்கு சினிமாக்களை நல்லா கவனிக்கறார். சிவாஜி , பிச்சைக்காரன் ல வந்த டயலாக்கை வெச்சு பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இப்போ இது================


13  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘தலைவி' என்ற பெயரிலும், ஆ.பிரியதர்ஷன் ‘தி அயர்ன் லேடி'என்ற பெயரிலும் திரைப் படமாக இயக்கி வருகின்றனர்.# முப்பிற்வி கண்ட முதல்வர்னு எம் ஜிஆர் பெயர் எடுத்த மாதிரி இரு படங்கள் கண்ட முதல்வர்னு ஜெ பெயர் எடுப்பார் போல’’’==============
=================


14   

சசிகலா வாழ்க்கையை படமாக்குகிறார் ராம் கோபால் வர்மா #  டைட்டில் பிரியமான தோழி பாகம் 2?===============


15   இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்திவிடலாம் என்று பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாக முயற்சித்து செய்ய முடியாததை  மோடியும், அமித் ஷாவும் கடந்த 5ஆண்டுகளில் செய்துவிட்டார்கள் - அரவிந்த் கேஜ்ரிவால்  #  அப்போ பாகிஸ்தன்ல தேர்தல்ல நின்ன்னா(லும்) அங்கேயும் மோடிதான் ஜெயிப்பார்ங்கறாரா?


====================


16  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி  -சிதம்பரம்:  # அப்போ கார்த்தி சிதம்பரத்துக்கும் முன் ஜாமீன் கிடைச்சிடும்?


=================


17 வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், என் மகன் கதிர் ஆனந்த் வெற்றியைத் தடுக்க, சிலர் போடும் தப்புக் கணக்கு தான், இந்த வருமானவரித் துறை சோதனை.-  துரைமுருகன்: # அப்போ சிக்கிய 33 கோடி யாரோட கணக்கு?


==================


18  அ.தி.மு.க., ஆட்சியில், எட்டு ஆண்டுகளாக, முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இல்லை. நான் தேர்தலுக்காக சொல்லவில்லை... தப்புன்னா, தப்புன்னு சொல்வேன்.-ராமதாஸ்: # தேர்தலுக்காக சொல்லவில்லை., ஆனா கூட்டணீ வெச்சதுக்காக சொல்லித்தானே ஆகனும்?


===================


19    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 'குமரி மாவட்ட துறைமுகத் திட்டத்தைத் தடுப்பேன்' என்கிறார். இத்திட்டம் கைவிடப்பட்டால், நானோ, என் தலைமுறையோ கஷ்டப்பட போவதில்லை.-பொன்.ராதா # அரசியல்வாதிகள் எந்தக்காலத்துல கஷ்டப்பட்டு இருக்காங்க? ஓட்டுப்போட்ட ஜனங்க தானே கஷ்டப்படறாங்க?

==================


20 பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துள்ள ஸ்டாலின், முதலில் அவரை, எம்.பி., ஆக்கட்டும், பார்க்கலாம்.-தினகரன் # எம் பி ஆக்கனும்னா ஜனங்க மனசு வைக்கனும், ஸ்டாலின் எப்படி ஆக்க முடியும்>? அவராலயே முதல்வர் ஆக முடியாம கிடக்காரு

==============

0 comments: