Monday, April 22, 2019

காஞ்சனா 3 - சினிமா விமர்சனம்

Image result for kanchana 3

தன்னோட தாத்தா பாட்டியோட  60ம் கல்யாண விழாவுக்கு ஹீரோ தன் குடும்பத்தோட கோவை வர்றார். அந்த பங்களாவில் பேய் இருக்கு ( இந்த பேய்ங்க எல்லாமே பணக்காரங்க போல , எல்லாப்பேய்ப்படங்கள்லயும் பங்களாவில் தான் குடி இருக்கு , குடிசை வீட்ல பேய் இருந்து நான் பார்த்ததே இல்லை )

 பேயை விரட்ட அகோரி வர்றார். அவரும் அரசியல்வாதி மாதிரி பொய் சொல்றார், பேய் போய்டுச்சி போயே போச்  இட்ஸ் கான். ஆனா ராகுல் திடீர்னு 2 தொகுதில போட்டி இடறதா அறிவிச்ச மாதிரி  அகோரி அறிவிக்கறாரு 2 பேய் ஹீரோ உடம்புல புகுந்திருக்குனு ( அதெப்பிடி ஒரு உடம்புக்குள்ள 2 பேய் புகும்?னு லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது


 கடந்த 3 பாகங்களிலும் ஒரே மாதிரி கதையா இருக்கேனு இயக்குநருக்கே சந்தேகம் வந்து  எம் ராஜெஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா வில் 3 முறைப்பொண்ணுங்க விழுந்து விழுந்து ஹீரோவை லவ் பண்ணூவாங்களே அதை அப்படியே அட்லி வேலை பண்ணி கொஞ்சம் கிளாம்ர் சேத்திட்டார்


 வழக்கம் போல எல்லாப்பேய்ப்படங்கள்லயும் வர்ற மாதிரி ஃபிளாஸ்பேக்கில் பேய்க்கு ஒரு சோக செண்ட்டிமெண்ட் கதை உண்டு, அதிலும் ஹீரோவுக்கு ஒரு ஜோடி , ஆக மொத்தம் 4 ஜோடி ஆனா யாருமே மொத்தம் இல்ல ஒல்லி தான்


ஹீரோவா இயக்குநரா ராகவா லாரன்ஸ். பேய்க்காமெடி தந்தா போதும் , ஜனங்க எப்படியும் மடத்தனமா மயங்கிடுவாங்க என்ற பல்ஸ் பார்த்து திரைக்கக்தை அமைத்திருக்கிறார்.  2 பாடல்களில் சிறப்பான நடனம்ஜும் ஆடி இருக்கார்

அம்மா , அண்ணி , முறைப்பொண்ணுங்க 3 பேரு , ஷூட்டிங் ஸ்பாட்ல வேடிக்கை பார்க்க வந்த 13 பொண்ணுங்க அப்டினு ஹீரோ எல்லோர் இடுப்பிலும் ஏறி உக்காந்துக்கறார், இது ஒரு காமெடினு ஜனங்க சிரிக்கறாங்க , எல்லாம் தலை எழுத்து


Image result for oviyaஅந்த 3 முறைப்பொண்ணுங்களும் நிஜமா குடும்பப்பொண்ணுங்க தானா?னு டவுட்டா இருக்கு . ஒரே ஒரு ஜட்டி அல்லது டவுசர் ., போனாப்போகுதுனு ஒரு டாப்ஸ் அல்லது பனியன் இவ்ளோவ் தான்  காஸ்ட்யூம், அம்மா அப்பா வுக்கு முன்னாடியே இந்த 3ம்  ஹீரோ மேல விழுந்து   விழுந்து கட்டிப்புடி கிஸ் எல்லாம் பண்ணுதுங்க. பெற்றோர்களா?  புரோக்கர்களா?னு டவுட் வர்ற ,மாதீரி அவங்க பெற்றோர்களும் அதை எல்லாம் கண்டிக்காம கெக்கெக்கே பிக்கெக்கேனு சிரிக்குதுங்க 


 பிக் பாஸ் ஆதர்ச நாயகி ஓவியா  தன் பேரை 90 எம் எல் லில் கெடுத்துக்கொண்டது போலவே இதிலும் ஒரு துண்டு துக்கடா ரோலில் மலையாள ,கில் மாப்பட நாயகி மாதிரி கேவலமா வந்து போறார்

 வேதிகா  எல்லாம் எப்படி வர வேண்டிய அழகிய நடிகை , இப்படி  பிட்டுப்பட ரேஞ்சில் நடிகஞுமா?

நிக்கி டம்போலினு ஒரு புதுமுகம்  ஃபிகர் நல்லாதான் இருக்கு, நடிப்பு வருமா? வராத?னு அடுத்த படத்துல தான் பாக்கனும், இதுல இயக்குநர் இவரோட இடுப்பைத்தான் அதிகம் காட்டி இருக்கார்

படத்தொட பிளஸ் என்ன்னானு பார்த்தா  கோவை  சரளா  , ஸ்ரீமன் ,  தேவதர்ஷினி  காமெடிக்கூட்டணி   தான் இவங்க வர்ற சீன்களெல்லாம் தியேட்டர் 

சிரிப்பலையில் மூழ்குது

 ஃபிளாஸ்பேக்கில் வரும்   ஃபாரீன் ஃபிகரை கண்ணியமா காட்டியதற்குய்நன்றி


கிராஃபிக்ஸ்  மகா மட்டம்

 இசை பின்னணி இசை பரவால்ல , டான்ஸ் நல்லா பண்ணி  இருக்காங்க 

Related image
 சபாஷ்  இயக்குநர்


1   பட ரிலீஸை கரெக்டா  சோலா வா   சம்மர் லீவ்ல  வெச்ச்து

2   இதுக்கு முன்னால வந்த 3  பாகங்களை உல்டா ரீமிக்ஸ் பண்ணி ரிஸ்க் எதுவும் எடுக்காததுஇயக்குநரிடம் சில கேள்விகள்


1  பெட்ரூமில் ஹீரோவும் அவரோட அம்மாவும் ஒரே கட்டில்ல படுத்திருக்காங்க அப்போ ஒரு ஹீரோயின்  ( முறைப்பொண்ணு)  உள்ளே வந்து அதுவும் நைட் டைம்ல  வெளில வானு கூப்பிடுது. அதுக்கு அந்த பேக்கு அம்மா “ உன்னை உஷார் பண்ண தான் கூப்பிடுது போ, எஞ்சாய் அப்டிங்குது. இந்த மாதிரி கேவலமான அம்மாவை எந்த ஊர்ல பாத்தீங்க?> காமெடிதான் அப்டின்னாலும் ஒரு வரைமுறை வேணாமா?

2   அந்த 3 முறைப்பொண்ணுங்களும் வாழ்க்கைல ஆம்பளைங்களையே பார்த்ததில்லையா? அப்டி ஜொள்ளு விடுதுங்க ?


3   ஒரு கேன வில்லன் . 100 கோடி பிளாக் மணியை ஒயிட் மணி ஆக்க  ஹீரோ கிட்டே 20 % கமிஷன்னு ஆசை காட்றான், அதுக்கு பேசாம அவனே 20 லட்சம் செலவில் ஒரு டம்மி அனாதை ஆசிரமம் உருவாக்கி இருக்கலாமே?


4  வில்லன்  ஹீரோ கிட்டே 20  கோடி  டொனேஷன்  தர்றேன்  நீ பாக்கி 80 கோடி எனக்கு தந்திருங்கறான், அப்டி சொல்லாம   100 கோடி டொனேஷன்ன்னு  சொல்லி செக் தந்துட்டு  பின் அவசரமா 80 கோடி தேவைப்படுது  அதுல இருந்து  குடுங்க   ஒரு மாசத்துல தந்துடறேன்னு வாங்கி இருக்கலாமே? தண்டமா அத்தனை  கொலைகள்  வேற 


5   அகோரி பூசாரி காணிக்கை எதுவும் கடைசி வரை வாங்கவே இல்லையே? அவரென்ன 108 ஆம்புலன்ஸ் சர்வீசா?


6   ஸ்ரீமன்  தேவதர்ஷினி தம்பதி கட்டில்ல தங்களுக்கு நடுவே 16 வயசுப்பொண்ணை வெச்சுக்கிட்டே அப்டி ரொமான்ஸ் பண்றாங்களே? அது எல்லாம் சாத்தியமா? நம்மாளுங்க 2 வயசு பேபி இருந்தாலே  ஹாலுக்கு கூட்டிட்டுப்போய்டறாங்க மனைவியை
Image result for vedhika  hot
நச் வசனங்கள்


 ரெண்டெ முக்கால் மணி நேரம் ஓடற படத்துல ஒரு வசனம் கூட சொல்லிக்கற  மாதிரி இல்லை  ஒரே இச் வசனங்கள் தான்
கேரளா வில் தமிழ்ப்படம் ஹவுஸ்புல் ஆவதை ரஜினி,விஜய்,சிவகார்த்திகேயன் படங்களுக்குப்பின் பேய்ப்படத்துக்குதான் பாக்கறேன் ,காஞ்சனா 3 @ கேரளா சங்கணாச்சேரி ரம்யா ( இடைவேளை அப்ப)


Image result for nikki tamboliகாஞ்சனா 3 = காஞ்சனா பாகம் 1 60% + ஆல் இன் ஆல் அழகுராஜா 20% + காஞ்சனா 2 10% + MUNI 5% + புதுசா 5%. டெம்ப்ளேட் காட்சிகள்,ஆனா ஜனங்க ரசிக்கறாங்க.இன்னும் 3 பாகம் வருமாம் ,விகடன் மார்க் 41 , ரேட்டிங் 2.25 / 5 , ஆல் சென்ட்டர் ஹிட் ,பேமிலி ஆடியன்ஸ் அள்ளுது #Kanchana31 comments:

sachin said...

அலேக்ஸ் பாண்டியன் படத்தெ....ஆல்இன் ஆல்-னு போட்டுட்டீங்களோ!!!