Friday, April 12, 2019

ATHIRAN -சினிமா விமர்சனம் ( மலையாளம்)- சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர்

Image result for athiran posterஒரு ஒதுக்குப்புறமான மர்ம பங்களா, அதுல இருக்கற சில பேஷண்ட்கள் பற்றி ஆய்வு செய்து ரிப்போர்ட் அனுப்ப அரசாங்கத்தால் அனுப்பப்படும் சைக்கலாஜிக்கல் டாக்டர் பங்களாவுக்குள் வர்றார், அங்கே நாயகியை சந்திக்கிறார். ஆட்டிசக்குறைபாடுள்ள அவர் களறிச்சண்டையில் ஜான்சிராணி, அவர் கண் முன்னே அவரது அப்பா கொலை செய்யப்படறார், என்ன நடக்குது என்பதே மிச்ச மீதிக்கதை


நாயகனா கேரக்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆர்ட்டிஸ்ட் பகத் ஃபாசில் , ஓப்பனிங் சீன்லயே ரகசிய போலீஸ் 115 எம்ன் ஜி ஆர் கணக்கா அசத்தறார்.க்ளைமாக்ஸ் ஃபைட்டில் திடீர் என அவர் அந்நியனாய் மாறி இந்தியன் தாத்தா போல் வர்மக்கலை ஃபைட் போடும்போது அரங்கம் அதிருது. படம் முழுக்க இவர் ஆதிக்கம் தான்

நாயகியா கன்னக்கதுப்பு ஆப்பிள் சிவப்பழகி சாய் பல்லவி . இவர் படம் முழுவதும் ஒரே நைட்டியில் வருவது கிளுகிளுப்பு ( ஒரு ஆளு சமயத்துல ஒரு நைட்டிலதானே வர முடியும்? ) இவர் போடும் ஃபைட்கள் இன்னும் நல்லா படம் ஆக்கி இருக்கலாம். சண்டைக்காட்சிகளில் அவர் கண்களில் ஆக்ரோஷம் சரியா வர்லை


வில்லனா ரன் படப்புகழ் அதுல் குல்கர்னி . பெரிய அளவில் கலக்கலை. நம்ம தளபதி அட்மின் தந்த துண்டுச்சீட்டைப்பார்த்துப்படிப்பது போல இயக்குநர் சொன்னதை அப்படியே செய்யறார் , அதுக்கு இவர் எதுக்கு?


ஒளிப்பதிவு , பிஜிஎம் பர்ஃபெக்ட்


நச் வசனங்கள் - பேருக்குக்கூட ஒரு பிரமாதமான வசனம் இல்லை.

Image result for saipallavi hot
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  இது என்ன கெட்ட பழக்கம்?தியேட்டர்ல படத்தைப்போட்டுட்டு டிக்கெட் கவுண்ட்டரை ஓப்பன் பண்றது"முத ஆளா உள்ளே போனாலே படம் ஓடிட்டு இருக்கு @கேரளா கோட்டயம் தன்யா (malayalam)


2 திரைக்கதை,பாத்திர வடிவமைப்பில் ஆலோசனை− களறிச்சண்டை வீராங்கனையாக வரும் நாயகி ஆக்ரோஷமுகம் காட்டும் க்ளோசப்ஷாட்களில் வட்டக்குங்குமம் தெய்வீகத்தன்மையையே காட்டுது,ஜான்சிராணி படத்தில் காட்டியது போல் நீளப்பொட்டு,வெற்றித்திலகமா இருந்தா எடுப்பா இருந்திருக்கும் (malayalam)3 மர்ம பங்களா=அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயகி −வெளியிலிருந்து வரும் நாயகன்
1981 ல் வந்த விடியும் வரைக்காத்திரு கதையை நினைவுபடுத்தினாலும் இது வேறு கதை


Image result for saipallavi hot
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


லாஜிக் மிஸ்டேக் 1− மர்ம பங்களாவில் ரகசிய டைரி சிக்கியதும் ஒரு செட் ஜெராக்ஸ் எடுத்து வைக்கமாட்டாரா நாயகன்?அல்லது செல்போன் கேமராவில் படம் பிடித்திருக்கலாமே?டைரி மிஸ் ஆனாலும் யூஸ் ஆகுமே? (டைரியை ஆற்றில் தவறவிட்டுடறார்) (malayalam)


லாஜிக் மிஸ்டேக் 2− பங்களாவின் மர்மம் பற்றி ஆய்வு செய்ய சைகலாஜிக்கல் டாக்டர் வருகிறார் என்ற தகவல் தெரிந்தும் மடச்சாம்பிராணி வில்லன் ரகசிய பைலை ஹாலில் இருக்கற டைனிங்க் டேபிள் கீழே ஒளிச்சு வைக்கறான்,ஹீரோ கரெக்டா அதை கண்டுபிடிச்சிடறாப்டி, வில்லன் அதை எரிச்சிருக்கலாமே?

லாஜிக் மிஸ்டேக் 3− மாங்கா மடையன்களான வில்லன் க்ரூப் ஒரு வாக்குவாதத்தில் நாயகியின் கண் முன் அவரது அப்பாவை சதக்.மகளை சாட்சியா அப்டியே விட்டுட்டுப்போய்டறாங்க !


லாஜிக் மிஸ்டேக் 4− பங்களா மர்மத்தை கண்டறிய வரும் நாயகனை கரெக்ட் பண்ண வில்லனின் கீப் அவ்ளவ் பட்டவர்த்தனமாவா ட்ரை பண்ணுவாப்டி?சும்மா கோடி காண்பிச்சா பத்தாதா? நாயகனுக்கு டவுட் வந்துடாதா?னு வில்லிக்கு டவுட் வராதா?


லாஜிக் மிஸ்டேக் 5− வில்லனுக்கு பொசசிவ்னெஸ் இருக்காதா?நாயகனை கரெக்ட் பண்ண தன் ஆளை அனுப்பறாரே?இதுக்குனு வேற ஏதாவது டிக்கெட்டை அனுப்பி இருக்கலாமே? (வில்லனின் கீப்பே ஒரு டிக்கெட்தான் என்பது வேற விஷயம் )

Image result for saipallavi hot


சி.பி கமெண்ட் -
athiran (malayalam)- மெதுவான திரைக்கதை,பகத்பாசில் ,சாய்பல்லவி நடிப்பு,பிஜிஎம் குட்.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமை.ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் .யு படம்.ரேட்டிங் 3 / 50 comments: