Sunday, April 28, 2019

எக்மோர் க்கு ஜானகி எம்ஜியார்,கிண்டி க்கு ஜெ,தி நகர் மாம்பலம் ஸ்டேஷனுக்கு லதா,

1  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்படும் - பிரதமர் மோடி # நல்லவேளை ,எக்மோர் க்கு ஜானகி எம்ஜியார்,கிண்டி க்கு ஜெ,தி நகர் மாம்பலம் ஸ்டேஷனுக்கு லதா, கோடம்பாக்கம் க்கு சரோஜாதேவி பேரெல்லாம் வைக்கலை


============
2 இவங்க இஷ்டத்துக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜியார் பேர் வெச்ட்டாங்களே?அப்போ ஒரு வேளை (ஒரு பேச்சுக்கு)20 வருசம் கழிச்சு காங் ஆட்சி வந்தா போலீஸ் ஸ்டேஷனுக்கு கலைஞர் பேர் வைப்பாங்களோ?
============3 `உங்க காமெடிலாம் சூப்பருங்கன்னார் ஓ.பி.எஸ்.!'' - அ.தி.மு.க-வில் ரவிமரியா

பண்ற காமடிக்கூத்துகளை விடவா?னு கேட்டிருக்கலாம்


============


4 அத்வானி கையெடுத்துக்கும்பிட்டப்பவே கண்டுக்காதவரு அவரு,தம்பி துரை கை கொடுக்க கை நீட்டியும் கண்டுக்கலையே?தாண்டிப்போறாரு

=============


5 தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை! #
கஜா புயல்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை,நீட் தேர்வு பிரச்சனை,ஜெ மர்ம மரணம் @ அப்போலோ இந்த 4 பிரச்சனை வந்தப்ப வராதவரு தேர்தல் கிட்ட வந்ததும் 40 நாட்களில் 3 தடவை வந்தாச்


==============


6 6   தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் இளைஞர், தனது விரலையை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. # அடடா, “கை” விரல் போச்சே?


=============


7  

லக்னோவில் வெளி வேட்பாளரை நிறுத்தியதால் உ.பி காங்கிரஸார் அதிருப்தி  # அப்போ லக்னோ வில் காங்கிரசுக்கு ஜெயிக்கும் லக் நோ?


==============

8  

சமாஜ்வாதியில் போட்டியிடும் மனைவிக்காக பிரச்சாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா #  பிரச்சாரம் செஞ்சாதான் வீட்ல சோறுன்னு மிரட்டி கிருப்பாங்களோ? =============

9   மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ‘காவலாளி திருடன்’ விளம்பரத்துக்கு ம.பி. மாநில தலைமை தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்  # போலீஸ் காரங்க யாரும் காங்கிரஸ் கட்சியை இதுக்காக எதிர்க்கலையா?காவலாளி என்பது போலீஸையும் குறிக்குமே?


================


10 

திமுக, அமமுக கட்சியினர் வாக்காளருக்கு பணம் கொடுத்தனர்: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு  #  ஊரோடு ஒத்து வாழ் ஃபார்முலாதான், எல்லாரும் பணம் தர்றாங்க==============

11   வாக்களி க்கும் பூத்க்கு வெளியே 

அரசுக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தல்: ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் # எலக்‌ஷன் முடிஞ்ச பின் கூட பிரச்சாரம் பண்ணுவாங்க போல

============

12 

விசிக சின்னம் பானையை உடைத்ததால் தகராறு: ஜெயங்கொண்டம் அருகே 10 வீடுகள் சேதம், 8 பேர் காயம் - போலீஸ், அதிரடிப்படை குவிப்பு  # பிளாஸ்டிக் பானை சின்னம் குடுத்திருந்தா உடைச்சிருக்க மாட்டாங்களோ? 


=========

13 

மதுரையில் இப்படியும் தேர்தல் விழிப்புணர்வு: மை தடவிய விரலை காட்டினால் ஓட்டலில் 10% தள்ளுபடி  # ஐ டெக்ஸ் மை தடவி ஏமாத்துனா கண்டு பிடிச்சுடுவாங்களா? 


அரு”மை” ஐடியா


=============

14  

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது; 69.55% வாக்குப்பதிவு: சத்ய பிரதா சாஹு  # நாம டென்த் , பிள்ஸ் டூ ல வாங்கற மார்க்தான் 70% தாண்டலைன்னா வாக்குப்பதிவு கூட 70 தாண்டலையே?


================

0 comments: