Tuesday, April 16, 2019

100 சீட்டு வாங்கறதுக்கு எதுக்கு இத்தனை அடிதடி? தேர்தல் ஸ்பெஷல்

8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவிற்கு தேர்தல் செலவுவிற்கு பணம் எங்கிருந்து வருகிறது: செல்லூர் ராஜூ # 80 ஆண்டுகளுக்குத்தேவையான சொத்துக்களை 10 தலைமுறைக்கு சேர்த்து வெச்சிருக்கறவங்க கிட்ட கேட்கற கேள்வியா இது?நீங்க படிச்ச சீர்திருத்தப்பள்ளில எங்க தலைவர் கரெஸ்பாண்டன்ட்

==============


2 நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த வேட்பாளர்.. உட்காரும்படி கேட்டுக்கொண்ட ஸ்டாலின் # உட்கார்ந்திருந்த வேட்பாளரை நிற்கச்சொன்ன அன்புமணி எங்கே?நிற்கற வேட்பாளரை உட்காரச்சொன்ன ஸ்டாலின் எங்கே?னு மீம்ஸ்"போட ஒரு கூட்டம் கிளம்பி இருக்குமே?


==============


3 நடிகன் என்பதால் மக்களிடம் கண்ணால் பேசினேன் - கமல் # இவரு வாயைத்திறந்து"பேசறதே பாதிப்பேருக்கு புரியாது,கண்ணால பேசி புரிஞ்சிட்டாலும்


=============


4 பிரச்சாரத்தின்போது இளைஞரை கன்னத்தில் அறைந்த குஷ்பு...!

தவறாக நடக்க முயன்றதால் ஆவேசம்...!# திமுக+ காங் கூட்டணிக்கு பிரச்சாரம் பண்றப்பவே இந்த நிலைமை,இந்த கூட்டணி ஜெயிச்சுட்டா?


==============


5 பிரதமர் காலில் விழுந்து வாழ்த்து பெற்ற ஓபிஎஸ் மகன் # காதலில் விழுந்தவனை நம்பலாம்,காலில் விழுபவரை நம்பக்கூடாது,துரோகிகள் காலை வாரி விட சமயம் பார்த்திருப்பர்


==============


6 ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகம் பாலைவனமாகிவிடும்

− எடப்பாடி # அப்டி நடந்தா அவங்க கூட்டணிக்கட்சிக்கு லாட்டரி அடிச்ச மாதிரி,மணல் காண்ட்ராக்ட் விட்டு பொழைச்சுக்குவாங்க


==============


7 இந்து மதம்

பாஜகவிற்கு மட்டுமே
சொந்தமானதல்ல
# சன் டிவி ,கலைஞர் டிவி கள்ல இந்துக்களின் பண்டிகை தினத்தன்று "விடுமுறை தின சிறப்புத்திரைப்படம் "எப்போ போட ஆரம்பிச்சீங்களோ அப்போ ஆரம்பிச்சது இந்துமக்களின் வாக்கிழப்பு
-ஸ்டாலின்================

8 பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சந்திப்போம்; வழக்கு இப்போது வராது நீண்ட நாட்களாகும்; அப்போது பார்த்துக்கொள்வோம்

- துரைமுருகன் # தப்பு பண்ற அரசியல்வாதிகளின் பெரிய நம்பிக்கையே கேஸ் ஜவ்விழுப்பு இழுக்கும் என்பதே
=================


9 நானே போட்டியிடுவதாக அர்த்தம்.. தங்கைக்காக தழுதழுத்த ஸ்டாலின்.. கண் கலங்கிய கனிமொழி # கம்முனு இருந்தாலாவது பெண் என்பதற்காக சில நடுநிலை வாக்குகள் விழும்,இப்டி எல்லாம் டிராமா போட்டா கைவசம் இருக்கற 28% க்கும் ஆபத்தே=================


10 நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள பாதி வறுமை போய்விடும்: ரஜினிகாந்த்

# இது உண்மைன்னா நதிநீர் இணைப்பு சாத்தியமே இல்லை,அரசியல்வாதிகள் மக்களை ஏழையா வைத்திருக்கவே விரும்புவர்
==============

11 பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு

அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: பொங்கலூர் மணிகண்டன் # கூட்டணி அறிவிப்பு வந்து மாமாங்கம் ஆச்சு,இப்பதான் இவருக்கு அதிர்ச்சி வந்திருக்கு.டக்னு திமுக வில் சேருவாரு================

12 மக்களோடு மக்களாக ஷாப்பிங் செய்தார் கனிமொழி - செய்தி

இது என்ன பிரமாதம்? மக்கள் எல்லாரும் பில்லுக்கு காசு குடுத்துட்டாங்க,இவரு குடுத்தாரா?னு விசாரிங்க.ஸ்டாக் எடுத்துப்பார்த்து"ஷார்ட்டேஜ் வருதா?னு வேற பாக்கனும்================

13 பாமகவில் இருந்து விலகுகிறேன் - மா.து.தலைவர் பொங்கலூர் மணிகண்டன்

# எதிர்க்கட்சியினர் தந்த money கண்டவுடன் தான் சார்ந்த கட்சிக்கு பொங்கல் வெச்ட்டார் போல.===============


14 பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின் # 1996 ல நம்ம கட்சியை ஆதரிச்சப்ப மட்டும் ரஜினி நல்லவனுக்கு நல்லவன்,இப்ப வேற கட்சியை ஆதரிச்சா "காளி"? ஏன்னா நம்ம வாக்கு வங்கி காலி


================


15 போட்டுக்க ஒரு பேண்ட் சர்ட் கூட சிவகங்கையில் இல்லை! −கார்த்தி சிதம்பரம் # இவரு வெச்சிருக்கற காரை வித்தாலே 10 ஜவுளிக்கடைகளை விலைக்கு வாங்கலாம்,யாரு கிட்ட காது குத்தறாரு?


===============

16 பாஜகவிற்கு தென் மாநிலங்கள் குறித்து அக்கறையில்லை− ப.சிதம்பரம் # அக்கறை இல்லாமலா கேரளா வில் சபரிமலைப்பிரச்சனையை வெச்சு ஆதாயம் கண்டது,தமிழகத்தில் ஜெ மர்ம மரணம்,ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி அதிமுக வை வசப்படுத்தியது?


=================


17 புயல், சுனாமி என எது வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது : ஓ. பன்னீர்செல்வம் # அப்போலோ ஆஸ்பத்திரி போதாதா?


================


18 திமுகவினர் அமைதியாக இருந்தாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் :முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி # அதுக்கு அவங்களை லைப்ரரிதான் அனுப்பனும்,அமைதியா இருந்தாகனும்,ஆனா புக்ஸ் காணாம போய்டுமே,பரவால்லியா?


================


19 ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசுவது சரியல்ல!' - சி.பி.ஐ தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி # ஜெயிச்சாத்தானே யார் பிரதமர்ங்கற சண்டை வரும்?100 சீட்டு வாங்கறதுக்கு எதுக்கு இத்தனை அடிதடி?


==============


20 பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்கட்டும் : ரஜினி # தலைவா,அப்றம் நாம வேற ஒரு கோடி தர்றதா சொல்லி இருக்கோம்,அத வேற தரனும்,பேசாம காங் ஜெயிக்கட்டும்னு நைசா சொல்லிடுங்க,1 கோடி மிச்சம்,அவங்க வந்தா சொந்தக்கட்சி கோஷ்டிகளை இணைக்கவே நேரம் சரியா இருக்கும்

===============

0 comments: