Tuesday, April 23, 2019

உயிரினும் மேலான உடன்பிறப்பே! டெபாசிட் கிடைப்பதே பெரும் பாடே

ஒரு மனநல மருத்துவருக்கு மன நலம் சரி இல்லைன்னா அவர் எந்த மனநல மருத்துவரிடம் சென்று தம் மனசை சரி செய்வார்?


============

2 திமுக விலிருந்து அடிப்படை உறுப்பினர் தகுதி நீக்கம் பெற்ற ராதாரவி அதற்குக்காரணமாக இருந்த நயன் தாரா நடித்த ஐரா படம் (28/3/19) பார்ப்பாரா?மாட்டாரா?


==============


3 கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையில் கனிமொழிக்கு பலம் இருப்பது போல் தோன்றினாலும்
தனி நபர் நேர்மை யில் தமிழிசை கனிமொழியை தகுதி அடிப்படையில் முந்துகிறார்,இதை உடன்பிறப்புகளே (மனதுக்குள்) ஒப்புக்கொள்வார்கள்.பார்ப்போம்,மக்கள் தீர்ப்பை


================


4 சிவகங்கை தொகுதியில் பிக்பாஸ் புகழ் கட்டிப்பிடி வைத்திய ஸ்பெஷலிஸ்ட் சினேகன் போட்டியிடுவதால் அத்தொகுதியில் இருக்கும் பெண்கள் தங்கள் சோகங்களை வெளிப்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்


================


5 விழி ஒளி இழந்த அதிர்ஷ்டத்தால் முதல்வர் பதவி,துணை முதல்வர் பதவி கிடைத்த OPS மகன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது எதிர் வேட்பாளரின் ஜாதி குறித்து பேசி இருக்கிறார்,சட்டப்படி தவறு.தேர்தல் ஆணையம் இவரை தகுதி நீக்கம் செய்யனும்,அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்


=================


6 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் பிளாப் ஆகிடுச்சு,அப்போ ஹெச் ராஜா வும் அதே செண்ட்டிமெண்ட்படி தோற்கத்தானே போறாரு னு யாராவது மொக்கை போட ஆரம்பிச்சிருப்பாங்களே?



==========


7 பரீட்சை எழுதும்போது அடிஷனல் ஷீட் வாங்கற மாதிரி அதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை இப்ப விட்டிருக்கு.இனி ஆளாளுக்கு ஒரு பிட் சேர்க்கப்போறாங்க,நல்ல டைம் பாஸ்



================


8 பொது இடங்களில் பேசும்போதோ ,சமூக வலைத்தளங்களில் எழுதும்போதோ (டைப்) குறிப்பிட்ட ஒரு ஜாதியினரை ஜாதிப்பெயர் சொல்லி அழைப்பதே தவறு.ஆனால் மெத்தப்படித்தவர்களே ஒரு குறிப்பிட்ட ஜாதியை கேவலமான முறையில் திட்டுவது சர்வசாதாரணம் ஆகி விட்டது.பெற்றோர் வளர்ப்பு ,படிப்பித்த ஆசிரியர்கள்,சேர்க்கை மூன்றில் ஒன்று சரியில்லை


=================


9  கும்பிடு குருசாமி OPS ன் மகன் மேடையில் பேசிய வீடியோ கண்டேன்.திமிர் அதிகம் தெரியுது.தோற்கடிக்கப்பட வேண்டியவர்.இந்த லட்சணத்துல இவரு ரஜினியை வேற இமிடேட் பண்றாரு


=================


10 காங் கிரசின் பெஸ்ட் மூவ் கன்யாகுமரி.
ஒர்ஸ்ட் மூவ்
சிவகங்கை


=============


11 வாத்தியார் பிள்ளை மக்கு − பழமொழி

அரசியல்வாதி பிள்ளைங்க எல்லாமே மக்குக − புதுமொழி
( மக்கு னு சொன்னது மத்த GK விஷயத்துல,திருடறதுல,கொள்ளை அடிக்கறதுல விவரமானவங்க)


===============


12 வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகளின்"தரவரிசை (தரங்கெட்ட வரிசை)
1 திமுக
2 அதிமுக
3 காங
5 நாம் தமிழர்
4 பாமக
எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதான்
6 பாஜக


===========


13 வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது அவர்களது பெயர்களுடன் இன்ன ஜாதி என அடைப்புக்குறிக்குள் இட்டு வெளியிட்டது சட்டப்படி"தவறே!பொதுவெளியில் ஒருவர் இன்ன ஜாதி என குறிப்பிடுவது"தவறு.விண்ணப்பங்களில் இன்ன ஜாதி என குறிப்பிடுவது வேறு


=================


14 சினிமாவில் ஜெ வேடத்தில் நடிக்க கங்கணாரன்வத்தை புக் பண்ணுனதும் பலரும் நித்யாமேனன்,அஞ்சலி நல்ல சாய்ஸ்ங்கறாங்க.ஜெ.தீபாதான் பெஸ்ட் சாய்ஸ்.வெட்டியாதான் இருக்காப்டி.கால்ஷீட் ஈசியா கிடைக்கும்.என்ன காலைல எந்திரிக்கவே 10 ஆகும்,ஷூட்டிங் வர 12 ஆகிடும்,மத்தபடி முகசாயல் கச்சிதம்


================


15 சமூகவலைத்தளங்களான ட்விட்டர் ,FB ல யாரு யாரை கரெக்ட் பண்ணிட்டு இருக்கீங்கனு பயோ ல ஒரு ஹின்ட் குடுத்துட்டா நெட் தமிழன் உங்க ரூட்ல குறுக்கே வராம வேற புது ப்ராஜெக்ட் ட்ரை பண்ணுவான் (பொது நலன் கருதி)


================


16 மோடி ஆட்சி வேண்டாம்
முடியாட்சி போதும்
தாத்தா மகன் பேரன்
பரம்பரை பரப்பரையாக ஒரு குடும்பமே கொள்ளை அடிப்பதே மன்னராட்சி,முடியாட்சி
கொள்ளுப்பேரன் என


========================


17 திமுக ஆ ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதியில் 1.67 கோடி கணக்கில் வராத பணம் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..அது திமுக பணம் என பரப்பப்படும் வதந்தியை நான் நம்பவில்லை.கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தாலும் கட்சித்தொண்டனுக்கோ ,ஜனங்களுக்கோ 10 பைசா செலவு பண்ண மனம் வராத கட்சி



==============


18 இந்தத்தேர்தலில் நான் கேள்விப்பட்ட புதுத்தகவல்கள்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அழகா இருந்தா ஓட்டு போடனும்.
வேட்பாளரோட அப்பா "என் மகன் நல்லா இங்க்லீஷ் பேசுவான்" னு சொன்னா ஓட்டு போடனும்
வேற வேற.. நான் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கறேன்



===============


10 இதுவரை ராகு காலம்,இனிமே ராகுல்"காலம் னு ஒரு விளம்பரம் பார்த்தேன்.இதை் ராகுலுக்கு ராகுகாலம்னு எடுத்துக்கறதா? இனிமே என்பது எதிர்காலத்தைக்குறிக்கும்,அப்ப அவருக்கு நிகழ்காலம் இல்லைனு எடுத்துக்கறதா?


===============


11 உரிய ஆவணம் இல்லாம பணம் கொண்டு போறாங்க னு குப்பன்,சுப்பன் மாதிரி அப்பாவிங்களை டார்ச்சர் பண்ணும் தேர்தல் அதிகாரிகளே!அரசியல்வாதிகளை ,திருடனுங்களை பிடிக்கறதுதான் வீரம்.அப்பாவிகளை டார்ச்சர் பண்றதுல இல்ல


=================


12 பொள்ளாச்சி,தூத்துக்குடி இந்த 2 தொகுதிகளிலும் எந்தக்கட்சிக்கூட்டணி வெற்றி பெறுகிறதோ அதுதான் மீதி 38 லும் வெல்லும் என பலர் கணிக்கிறார்கள்.ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனை தமிழகம் முழுக்க எதிரொலிக்கும் என நான் கருதவில்லை


==================


13 நான் பகலில் தூங்கி இரவுத்தூக்க சார்ட்டேஜை மேனேஜ் பண்ணிடுவேன் என சிலர் சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.இரவுத்தூக்கத்தை ஒருபோதும் பகல் தூக்கம் சமன் செய்யாது.அதுவும் இல்லாமல் இரவில் ஒரு மணிநேரம் தூங்குவது பகலில் 2 மணி நேரம் தூங்குவதற்கு ஒப்பானது


================


14 நான் தினமும் 4 மணி நேரம்தான் தூங்கறேன்னு"பலர் பெருமையா பேஸ்புக்ல ஸ்டேட்டஸ்"போடறாங்க.குறைந்த பட்சம் 7 மணி நேர தூக்கம் ஆரோக்யமான நிலைக்கு தேவை.குறிப்பாக 10 pm - 5 am
11pm- 6 am தூக்க நேரமா இருக்கனும்
இல்லாவிட்டால் புற்று நோய் வருவதற்கு அது ஒரு காரணி ஆகிடும்


=================


15 தமிழகத்தில் பாஜக வுக்கு வாக்கு வங்கி 2% −4% என்ற அளவுதான் என்பது உண்மை.ஆனால் அதற்காக இந்தியா பூரா அப்படித்தான் என்று நினைத்துக்கொள்வது தவறு.பாஜக எதிர்ப்பு அதிகம் உள்ள மாநிலங்கள்
தமிழகம்
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
டெல்லி
குஜராத்
மட்டுமே (பாஜக வை நான் ஆதரிக்கிறேன் என்று இதற்கு அர்த்தம் அல்ல)


===============


16 திருமா வுக்கு பானை சின்னமாம்,அட பாவத்த,அட்லீஸ்ட் உதய சூரியன் சின்னத்துல போட்டி இட்டிருந்தா"கவுரவமான தோல்வியையாவது"தழுவ வாய்ப்பு இருக்கு.



==============


17 தேர்தல் கருத்துக்கணிப்பு யூகிக்கறது"ரொம்ப சுலபம்,
நக்கீரன் தேர்தல்"கருத்துக்கணிப்பு மற்றும் படித்த மேதாவிகள் பீல்டுக்கே போகாம"நெட்லயே எல்லாத்தையும்"கண்டுபிடிப்பவர்கள் என்ன ரிசல்ட் சொல்றாங்களோ"அதற்கு"நேர்மாறா இருக்கும்


=================


18 உயிரினும் மேலான உடன்பிறப்பே! டெபாசிட் கிடைப்பதே பெரும் பாடே
2014 தேர்தல் முடிவுகளின் படி....
அதிமுக. -1,79,83,168 - 44.34%
பாமக- 18,04,812. - 4.45%
பாஜக- 22,22,090. - 5.48%
தேமுதிக- 20,79,392 - 5.13%
புத- 2,62,812 - 0.65%
--------------------------------
மொத்தம்- 2,43,52,274- 60.05%
---------------------------------

திமுக- 95,75,850 - 23.61%
இதேகா- 17,51,123 - 4.32%
சிபிஐ- 2,19,866 - 0.54%
சிபிஎம்- 2,20,614 - 0.54%
விசிக- 6,06,110.- 1.49%
இயூமுலீ- 2,05,896 - 0.51%
மதிமுக- 14,17,535 - 3.50%
-------------------------------
மொத்தம்- 1,39,96,994 - 34.5%
--------------------------------

2016 தேர்தல் முடிவுகளின் படி.....
அதிமுக. -1,76,16,266 - 40.77%
பாமக- 23,00,558 - 5.32%
பாஜக- 12,28,704 - 2.84%
தேமுதிக- 10,34,384 - 2.39%
புத- 2,19,830 - 0.51%
தமாகா- 2,30,711 - 0.53%
--------------------------------
மொத்தம்- 2,26,30,453. - 52.54%
---------------------------------

திமுக- 1,36,69,116 - 31.64%
இதேகா- 27,74,075 - 6.42%
சிபிஐ- 3,40,290 - 0.79
சிபிஎம்- 3,07,303 - 0.71%
விசிக- 3,31,849 - 0.77%
இயூமுலீ- 3,13,808 - 0.73%
மதிமுக- 3,73,606 - 0.86%
கொமுதேக- 1,67,560. - 0.46%
ஐஜேகே- 36,125. - 0.08%
-------------------------------
மொத்தம்- 1,79,63,779 - 42.46%
--------------------------------

கிட்ட தட்ட 5% வாக்குகளை திமுக கூட்டணி ஸ்விங் செய்தால் மட்டுமே 1-5 தொகுதியிவாது கிட்டும்டியோவ்......
#ZeroMP_DMK_2019. தற்போதே உறுதியாகி விட்டது..



===============

19 
உடன்பிறப்புகள் என்னை திட்டும்போது வெறுமனே செந்தில்,சென்னியார்,சிபி என பெயர் சொல்லி திட்டுகிறார்கள்.இனி யார் திட்டுவதாக இருந்தாலும் என் ட்விட்டர் ஐடி மென்ஷன் பண்ணி திட்டவும்.அடி வாங்கறது நானு,கப்பு எனக்குத்தான் மொமெண்ட்



============
20 அரசுப்பள்ளி ஆசிரியர்களை தரம் பிரிக்கும்போது ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள்
சேராதவர்கள்
என இரு பிரிவுகளாகப்பிரிக்க வேண்டும்.


==============


0 comments: