Wednesday, April 24, 2019

மெயினை ஆஃப் பண்ணிட்டு தேர்தல் நடத்தனுமோ?

1  கடலோர கிராமங்களில், ஓட்டு சாவடிகளை கைப்பற்றி, காங்கிரசுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டளிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொன்.ராதா  # நிலைமை “கை”மீறிப்போய்டுச்சு

==============


2   இந்த தேர்தலில், ஓட்டு எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்போது, மோடி, முன்னாள் பிரதமராகி விடுவார் -காங்., மூத்த தலைவர் அஹமது படேல்: # ரொம்ப அவசரப்படறாரே?முந்திரித்தோப்பு வெச்சிருக்காரா? முந்திரிக்கொட்டைத்தனமா முந்திக்கறாரே?

=============


3   மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில், மோசடி செய்ய முடியும் என, நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே, மீண்டும் ஓட்டுச் சீட்டு முறை வேண்டும் -சந்திரபாபு நாயுடு: # அப்போ இவரு ஆந்திர முதல்வர் ஆனது கூட அப்படி மோசடி பண்ணித்தானா?


================


4  காவிரி விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர மறுக்கும், பா.ஜ., அரசு, காவிரிக்கு மாற்று, கோதாவரி என்று சொல்வதை, ஏற்றுக் கொள்ள முடியவில்லை.- பி.ஆர்.பாண்டியன் # கோதாவரி யை ஏத்துக்க முடியலைன்னு கோதா வுல் இறங்கறாரா?


=============


5  காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்-உம்மன்சாண்டி # தமிழ் நாட்ல இருக்கறவங்களாலேயே சரியா கணிக்க முடியலை, இவரு கேரளா வில் இருந்து கணிக்கறாரே?


=============== 


6    ஜெ., மறைவுக்குப் பின், உடனே முதல்வர் ஆகி விடலாம் என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கனவு கண்டார்.-எச்.ராஜா # அவரு கனவு கண்டது இவருக்கு எப்படி தெரிஞ்சது? நாம நைட் காணும் கனவு நமக்கே காலைல மறந்துடுது,இவரு அடுத்தவங்க கனவை எல்லாம் ஞாபகம் வெச்சுட்டு இருக்காரே?


ஒரு சின்ன திருத்தம், அது பகல் கனவு==============


7  அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற வலுவான கூட்டணி அமைந்துள்ளதால், முதல்வர் கனவு சிதைந்து, ஸ்டாலின் புலம்புகிறார் -எச்.ராஜா # அப்போ நம்ம “ராஜா”ங்கம்தான்?


அதுவும் துண்டுச்சீட்டைப்பார்க்காமயே சொந்தமாப்புலம்பறாராமே?

===========


தி.மு.க., கூட்டணியில், ஓட்டு வங்கி உள்ள கட்சி எதுவும் இல்லை.-எச்.ராஜா # அப்போ ஓட்டு வங்கிக்கொள்ளையர்கள் பயம் இல்லை?


அப்போ ஓட்டு வங்கி ல மினிமம் பேலன்ஸ் கூட இல்லையா?=================


9   மோடி, பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்துகிறாரோ இல்லையோ, முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மீது, துல்லிய தாக்குதல் நடத்துகிறார்.-காங்., மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி  # ப. சி மட்டுமா? அவரு குடும்பத்துல ஒரு ஆள் பாக்கி இல்லாம சம்மன் போய் இருக்காமே?


துல்லியத்தாக்கு தல்னு இவரே பாராட்றாரே?


================


10 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மோடியின் புகாரின் பேரில், விதிமுறைப்படி செயல்படாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது  $ மடில கனம் இருந்தாத்தானே வழி ல பயம்?


அதிகாரம், பதவி கண்டு பயப்படாம கடமையைச்செய்த துணிச்சலுக்கு நியாயமா மோடி அவரை பாராட்டி இருக்கனும், ஈகோ


================

11 டுவிட்டர் நிறுவனம், யோகி    ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய இரு, 'டுவிட்டர்' பதிவுகளை நீக்கியுள்ளது. அத்துடன், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், நடிகை, கோனா மித்ரா உட்பட, பா.ஜ. ஆதரவாளர்கள், 31 பேரின், 34 பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன.  -செய்தி  # ட்விட்டர் நிறுவனம் பாஜ க வுக்கு எதிரான மனப்பான்மைனு பேசிக்கறாங்க<ளே?


==============

12  உமா பாரதி, காங்., பொதுச் செயலர் பிரியங்காவை, 'திருடனின் மனைவி' என, விமர்சித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது  # பிரியங்காவின் கணவர் ஒரு திருடர்னு சொல்லி இருந்தா யாரும் கண்டுக்க மாட்டாங்க 


==============


13 ''ஓட்டு இயந்திரத்தில், கைச்சின்னத்துக்கு பதிலாக, வேறு எந்த சின்னத்திற்கான பட்டனை அழுத்தினாலும், 'கரன்ட் ஷாக்' அடிக்கும்,'' -சத்தீஸ்கர் மாநில அமைச்சர், கவாசி லக்மா # அப்போ மெயினை  ஆஃப் பண்ணிட்டு தேர்தல் நடத்தனுமோ? இல்ல இவர் வாயை ஆஃப் பண்ணனுமா?


================


14 . இந்த தேர்தல், ஒரு புதுமையான தேர்தலாக அமைய போகிறது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாத வாக்காளர்களை, இந்த தேர்தல் நிரூபிக்கப் போகிறது.-ஸ்டாலின் # அப்புறம் எதுக்கு துரை முருகன் மகன் நிக்கற தொகுதில அவ்ளோ பணம் வெச்சிருந்தாங்க ஜனங்களுக்குப்பட்டுவாடா பண்ண?


============


15 தேனியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன், தேர்தலில் நிற்கிறார். அங்கு, 1,000 ரூபாய் நோட்டு கொடுப்பதாக, ஆதாரத்துடன், வீடியோ வெளிவந்திருக்கிறது. இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-ஸ்டாலின் # நீங்க கொடுக்கும் புகாரும் செல்லாது , அந்த 1000 ரூபா நோட்டும் செல்லாது, 1000 ரூபா நோட்டு காலாவதி ஆகி மாமாங்கம் ஆகிடுச்சு


=============


'16 வருமான வரித்துறைக்கு, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே, துப்பு கிடைக்கிறது' - மத்திய அமைச்சர், சிதம்பரம்  # நம்ம காங் ஆட்சில இருந்தப்போஒ எத்தனை ஆளுங்கட்சிப்பிரமுகர்கள் வீட்டில் ஐ டி ரெய்டு நடந்தது?

அதிக அள வில் ரெய்டில் மாட்டியதே காங் கட்சில நீங்க ஒருத்தர்தான், அதுவும் மொத்தக்குடும்பமும்


================


17  சுதந்திரமாகவும், சுயாட்சியாகவும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ., வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது  - சிதம்பரம்   # இவரு ஏன் கட்டதுரையைப்பார்த்த கைப்புள்ள மாதிரி புலம்பறாரு?


=================


18  

பா.ஜ., - அ.தி.மு.க., ஆசை நிறைவேறாது: கனிமொழி # காங்கிரஸ் , திமுக ஆசை மட்டும் தான் நிறைவேறும் போல===============

19  எப்படியாவது துாத்துக்குடியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என, பா.ஜ., - அ.தி.மு.க., வின் ஆசை நிறைவேறாது,'' -, கனிமொழி  # அப்படி நிறுத்திட்டா தமிழிசை எப்படி எம் பி ஆவாரு?


================


20  ஆண்டிபட்டி அ.ம.மு.க., அலுவலகத்தில் சிக்கியது எங்கள் பணம் இல்லை' - தங்க தமிழ்செல்வன்   # நாம வழக்கமா 20 ரூபா  டோக்கன் தானே கொடுப்போம்?


===============0 comments: