Tuesday, April 30, 2019

டிக்டாக் ரசிகரா?

1    லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள், பெரும் பணத்தை, மக்களின் கையில் திணித்து, யாருக்கு ஓட்டு அளிப்பது என்பதை, மனதளவில் தீர்மானிக்க முடியாமல், திக்கு முக்காடச் செய்துள்ளன.-தமிழக, காங்., தலைவர், அழகிரி   # அப்போ எல்லாக்கட்சிகளுமே பணம் குடுத்துதுனு ஒத்துக்கறீங்க?ஏன்னா ஒரு கட்சி மட்டும் பணம் குடுத்தா ஜனங்களுக்கு ஏன் குழப்பம் வருது?


==================


 2 இதை, தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் வேடிக்கை பார்த்தது. -தமிழக, காங்., தலைவர், அழகிரி  #  அப்போ ஆங்காங்கே பணம் பிடிபட்டது , ரெய்டு வந்தது எல்லாம் தனியாரா?

===================

3  உலக அரசியலில், ஹிட்லரும், முசோலினியும் எப்படி தேர்தலை சந்தித்து, மக்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினரோ, அதே முறையை கையாண்டு, மோடி, தேர்தலை சந்தித்து வருகிறா-தமிழக, காங்., தலைவர், அழகிரிர்.# அப்போ பாசிட்டிவ்வாவோ நெகடிவ்வாவோ மோடி உலக அளவில் ஃபேமஸ்னு சொல்றீங்க?


=================


  இலங்கையில் தொடர்ச்சியாக இனப் படுகொலை நடந்து கொண்டிருப்பது, உலக அளவில் கவலை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் திருந்தவில்லை என்பதை, மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. அதனால், அந்த அரசுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.-முத்தரசன் :  # போராடும்போது ராஜபக்சே கூட விருந்து சாப்பிட்ட திருமா, கனிமொழியையும் சேர்த்துக்குங்க 


================


5  லோக்சபா தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வோ, காங்கிரசோ, புதிய அரசை அமைக்கப் போவது இல்லை. -மம்தா பானர்ஜி  # பழைய அரசே தொடரும்கறாரா? இதுக்கு எதுக்கு தண்டமா தேர்தல் செலவு?  அப்டியே ஆட்சியை ரினுவல் பண்ணீடலாமே?


=====================
6  அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து, புதிய அரசை அமைப்போம். இதற்காகவே நாங்கள், ஐக்கிய இந்திய முன்னணியை அமைத்து இருக்கிறோம். மோடி அரசை, நாங்கள் வெளியேற்றுவோம்.  - 
மம்தா பானர்ஜி  # அவ்ளோ நம்பிக்கை இருந்தா பிரதமர் வேட்பாளர் யார்?னு இப்பவே தில்லா சொல்லலாமே?


===============
7  ஹிந்து முன்னணியின் மீது அவதுாறு பரப்பப்படுவதை, போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.-ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர், ராம.கோபாலன்  # போலீசார் எ,லாருமே  மாற்று மத்தத்தை சார்ந்தவங்களா? இந்துக்களும் இருக்காங்க இல்ல? அவங்க ஏன் உங்க மேல அவதூறு பரப்பனும்?


===============


8  வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ) என்பது , சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED ) விட பலமானது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் - மோடி  # பார்த்து கை க்கு ஓட்டு போட்டு தாமரைக்கு வேட்டு வெச்சுடப்போறாங்க 


=================


அமேதி மக்களுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'ஷூ' வினியோகித்துள்ளார்; இது, அந்த மக்களை அவமதிக்கும் செயல்,'' = பிரியங்காகாந்தி #  ஆமா ஏகப்பட்ட புகார் வருது, சாக்ஸ் யாரு தருவாங்கனு ஜனங்க கேட்கறாங்க செருப்பு தரலாம்னு இருந்தாராம், மேடைல பேசறப்போ செருப்பை வீசிட்டா என்ன பண்றதுனு ஷூ க்கு மாறிட்டாராம்


ஷூ மந்திர காளி  காங் இனி காலினு பஞ்ச் டயலாக் பேசினாரா?


உஸ்ஷூ இது ரகசியம் - ஸ்மிருதி ராணி

======================

10  தாமரை சின்னத்தைச் சேர்ந்த, காவலாளி தான், உண்மையான திருடன் என்பதை, மக்கள் நீதிமன்றம் முடிவு செய்யும்.- ராகுல்     #   திருடன் பொய்யானவனாத்தானே இருக்க முடியும்?>அதென்ன  உண்மையான திருடன் ?


================

11  திமுக பெயரில் பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
# நாற்பதும்"நமதே னு நம்ம தளபதி அடிச்சு விட்டாரே?அவர் மேலும் நடவடிக்கை இருக்குமா?==============


12 டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்...
# தீர்ப்பு சொன்ன ஜட்ஜே டிக்டாக் ரசிகராம்


================13 தேர்தலுக்காக பொய் சொன்னேன் என மன்னிப்புக்கேட்ட ராகுல் தேர்தல் ரிசல்ட் வந்ததும் கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் அப்டிம்பாரோ?


==============


14 ரபேல் விவகாரத்தில் நான் பொய் தான் சொன்னேன். தேர்தல் பிரச்சார வேகத்தில் அவ்வாறு பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்'' - ராகுல் காந்தி
# தான் ஜெயிக்கனும்கறதுக்காக மத்தவங்க மேல பழி போடறவங்க எதிரியை விட துரோகியை விட ஆபத்தானவங்க


================


15  :வயநாடு தொகுதி மக்களுக்கு ஒரு கோரிக்கை. டில்லியில் இருந்து, விமானத்தில் வந்திறங்கி, இங்கு போட்டியிடுவோரை, நம்ப வேண்டாம்.  = நிர்மலா சீதாராமன்  #அப்போ ஹெலிகாப்டர்ல இருந்து இறங்கி வர்றவரை ( மோடி) நம்பலாமா?


==============

16   பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம், இறக்குமதி தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை என்பதை, நிரூபித்து காட்டுங்கள்.  -  நிர்மலா சீதாராமன்    #  நமக்கு ஓட்டுப்போட்டா பேங்க் ல லோன் வாங்கிட்டு விஜய் மல்லய்யா லலித் மோடி நீரவ் மோடிமாதிரி ஆளுங்க கடனை அடைக்காம வெளிநாடு ஏற்றுமதி ஆகிடறாங்களே?


=================
17  : லோக்சபா தேர்தலில், என் மகன் நகுல் வெற்றி பெற்று, உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், அவன் சட்டையை கிழித்து எறியுங்கள் -மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்  # நம்ம தளபதி சட்டையைக்கிழிக்கற டெக்னிக்கை ஆளாளுக்கு ஃபாலோ பண்றாங்களே?


அவரு சட்டையைக்கிழிச்சா அவரு 500 ரூபா கொடுத்து வேற சட்டை வாங்கிக்கப்போறாரு, இதை எல்லாம் சட்டையே பண்ணமாட்டாரு


=================


18 லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருங்கள். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடும். அவர்களுக்கு வேறு வழியே இல்லை- சல்மான் குர்ஷித்: #இணைஞ்சுட்டா சல்மாண் குஷி த் ஆகிடுவாரா?


===============

19  வேலையின்மை, விவசாயிகளின் துயரம் மற்றும் கடன், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு ஆகியன நாட்டின் முக்கிய பிரச்னைகள். இந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்?-ப.சிதம்பரம்  # பாஜக வுக்கு ஓட்டுப்போடலைன்னா இலங்கை குண்டு வெடிப்பு போல் சம்பவங்கள் நடக்கும், நம்ம ஆட்சிலதான் தேசம் பாதுகாப்பா இருக்கும்னாரே? கேட்கலை?


=================


20  வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது
வாக்காளர் அடையாள அட்டை'-மோடி #  அய்யய்யோ , ஐ டி கார்டை வெச்சிருக்கவே பயமா இருக்கு

============

0 comments: