Sunday, April 21, 2019

தம்பி,இன்னும் பெண் பார்க்கும் படலமே வர்ல,அதுக்குள்ள மச்சினி மேல் ஆசை இல்லைன்னா எப்டி?

வன்னியர்கள் மீது ஸ்டாலின் காட்டும் அன்பு என்பது, ஆடு மீது ஓநாய் காட்டும் அன்பு போன்றது”- ராமதாஸ் # குறிப்பிட்ட பிரிவுன்னு இல்லங்க,பொதுவாவே இந்துக்கள் மீது அவர்கள்"காட்டும் போலி அன்பு தேர்தலுக்காக,வாக்குக்காக.தேர்தல் முடிஞ்ச அடுத்த நாள்ல இருந்து இந்துக்களை கேவலமாப்பேச ஆரம்பிச்சிடுவாங்க=============ஒழுங்கா ஆட்சி நடத்துகிறார்களா என்று

அம்மா ஆவி எங்களை கண்காணிக்கிறது: ஓபிஎஸ்
#அது உண்மைன்னா ஜெ உயிரோட இருந்தப்ப நீங்க பதவி ஏற்கும்போது நடிகர் திலகம் ரேஞ்சுக்கு பர்பார்மென்ஸ் தந்துட்டு ஜெ இறந்தபின் நிகழ்ந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அசால்டா இருந்திருக்க மாட்டீங்களே?ஆவி"கண்காணிக்கும்னு ஆக்டிங் பண்ணி இருப்பீங்களே

==============


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது− ஸ்டாலின

# கடைசி வரை நம்ம வெற்றி ஆன்லைன்ல
நக்கீரன்ல
முரசொலி ல மட்டும்தான் போல.==============


4 “அடுத்த 5 ஆண்டுகள் ஏழைகளுக்கான ஆட்சியாக இருக்கும்”
- அமித்ஷா # அப்ப இந்த முறை ஆண்ட 5 வருஷமும் பணக்காரர்கள் ,தொழில் அதிபர்களுக்கான ஆட்சியா இருந்ததுனு ஒத்துக்கறாரா?


==============


5 அமித்ஷா நடந்து வந்தாலே வெற்றி.. இப்போ பறந்து வந்துள்ளதால் வெற்றி நிச்சயம்.. தமிழிசை # சமீப காலமா இவரு எதுகை மோனைல பஞ்ச் டயலாக்கா விட்டுட்டு இருக்காரே?டெல்லில இருந்து பறந்து தான் வரமுடியும்,நடந்து வந்தா எலெக்சனே முடிஞ்சிடுமே?


==============


6 துரைமுருகன் வீட்டில் ரெய்டு.. தேமுதிக மீது கை வைத்தால் இதுதான் கதி.. பிரேமலதா பாய்ச்சல்!
# என்ன?சாபம் எல்லாம் விடறீங்க? எங்க தளபதி கூடத்தான் நக்கல் பண்ணாரு,உங்க பவரை காட்டுங்க பார்ப்போம்


===============

7 நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங். தேர்தல் அறிக்கை
# அப்ப காங் கிரசை எதிர்க்கும் மாநிலங்களில் காங் ரத்து செய்யப்பட்டு கலைக்கப்படுமா?சும்மா அடிச்சு விடறது===========


8 பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள 200 எழுத்தாளர்கள் கூட்டறிக்கை
# அடடா!200 ஓட்டு போச்சே!இதனால ஆட்சி அமைக்க முடியாம போய்டுமே?200 பேரால ஒரு ஆட்சியே மாறப்பாகுது,பொலிடிக்கல் மிராக்கிள்


===============


9 துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை
# ரெய்டு வர்றப்ப எல்லாம் பாத்ரூம் போய்டறாரு,பயமா?பதுக்கலா?தெரில.எதுக்கும் வீட்ல இருக்கற பாத்ரூமை இடிச்சு தேடுங்க,எதுனா சிக்கும்


================


10 மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா?
- மு.க.ஸ்டாலின் # நம்ம ஆட்சி நடந்தப்ப / நடக்கறப்ப நம்ம ஆளுங்க மேல புகார் அளித்தா நாம நடவடிக்கை எடுப்பமா?


==============


11 துரைமுருகன் வீட்டில் சோதனை நடப்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்” - EPS # நீங்கள் தமிழக முதல்வர்தானே?

அதுவும் சசிகலா சொன்னப்ப தான் தெரியும்


==================


12 துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் மத்திய பாஜக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை
- பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் # இது"கட்சியின் கருத்து அல்ல,அவரது"தனிப்பட்ட கருத்து − தமிழிசை


===================


13 அதிமுகவை அடிமை எனக்கூறும் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியிடம் கொத்தடிமையாக இருக்கிறார்
நாங்கள் பாஜகவுக்கு 5 தொகுதிகள் தந்துள்ளோம், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் தந்துள்ளார் ஸ்டாலின்
- அமைச்சர் செல்லூர் ராஜூ # நாளைக்கு தோத்ததும் அவங்க மேல பழி போட்டு தப்பிச்சுக்கலாமே?


==================


14 பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும்

- தம்பிதுரை # என்ன?ஓட்டு கேட்கறப்ப பணிவா கேட்காம மிரட்டி கேட்கறாரு?


===============


15 குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின் கடும் சாடல் # தலைவரே!முன்னாடி கண்ணாடி==============


16 திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை ஏற்றியதே கிடையாது - ஸ்டாலின் # ஒரு சின்ன திருத்தம்,திமுக ஆட்சியில் கரண்ட் 24 மணி நேரம் ஒரு"நாள் கூட இருந்ததே கிடையாது,சின்னத்தம்பி"கவுண்டமணி பாணி ல சொல்லனும்னா உங்க ஆட்சில ஒரே உபயோகம் ,கரண்ட் பில் அதிகம்"கட்டவே வேண்டியதில்லை


================
17 'சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர் பிரதமர் மோடி" -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் # இது ரஜினியோட பஞ்ச் டயலாக்குங்கோ,குரு சிஷ்யன் ல பேசுவாரு,அதை பட்டி,டிங்கரிங்க் பண்ணி கலைஞர் பேசுனாரு,இப்ப நீங்க


==========


18 மத்திய அமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை - ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்
# தம்பி,இன்னும் பெண் பார்க்கும் படலமே வர்ல,அதுக்குள்ள மச்சினி மேல் ஆசை இல்லைன்னா எப்டி?


==============


19 தனக்கு ரூ. 8,97,44,503 கடன் உள்ளதென்றும், மனைவி ஸ்ரீநிதிக்கு 8,43,36,613 ரூபாய் கடன் உள்ளதென்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்
# கடன் காரக்குடும்பமா இருக்கே? இவங்க கடனை அடைக்க குறுக்கு வழி தேர்தல் ல ஜெயிக்கறது?=================


20 உழைப்பை நம்பி திமுக தேர்தல் களத்தில் நிற்கிறது அதிமுக, பா.ஜ. பணத்தை நம்பி போட்டியிடுகிறது: திருச்சி சிவா எம்.பி. பேச்சு
# பணம் செலவு பண்ண மனசு வராதுங்கறது எல்லாருக்கும் தெரியுமே?அதனாலதானே கட்சிக்காரங்களே ஆர்கே நகர்ல மாத்தி ஓட்டுப்போட்டு நமக்கு டெபாசிட் போச்சு?===============

0 comments: