Thursday, April 04, 2019

ஜெயலலிதாவுக்குப்பிடித்த கட்சி திமுக தான் பிடித்த தலைவர் ஸ்டாலின் தான்

1  அழகிரியை பின்னுக்குத் தள்ளி, குறுக்கு வழியில் தலைவரானவர் ஸ்டாலின்.-வனத்துறை அமைச்சர் சீனிவாசன்: # நம்ம ஓபிஎஸ்   ஈபிஎஸ் எல்லாம் நேர் வழியில் முதல்வர் ஆனாங்களா:?


===============


ஜெயலலிதாவிற்கு, மோடியை பிடிக்காது. மோடியா, லேடியா பார்ப்போம் என்றார்.விஜயகாந்த்தை கூட பிடிக்காது. வன்முறையின் மறுபெயர், பா.ம.க., என, ஜெயலலிதா கூறினார்.- ஸ்டாலின்:   # ஜெயலலிதாவுக்குப்பிடித்த கட்சி திமுக தான் பிடித்த தலைவர் ஸ்டாலின் தான் அப்டினு பிரச்சாரம் பண்ணிடுவாரோ?


================


3 ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வரை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது.-   ராமதாஸ்:  # அடப்பாவமே, அப்படி ஒரு வியாதி இருக்கா? சரி திட்டிட்டுப்போகட்டும், அதிமுக வைத்திட்டுனவங்க எல்லாம் அதிமுக கூட கூட்டணீல இருக்காங்க இப்ப 


=================


4  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அது, மக்கள் கையில் தான் உள்ளது.-சிதம்பரம்  # அப்போ இவங்களை எம் பி ஆக்குனா இன்னொரு தேர்தல் வர வைக்க ஆவண செய்வாங்க, தண்டச்செலவு


===============

5  தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே, நாம் தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுவோம்.-தினகரன்  # அது கிடக்குது க்ழுத், நம்ம சின்னப்படி பரிசுப்பெட்டில குக்கர் தருவீங்களா? வேற எதுனா மோதிரம், மூக்குத்தினு ஐடியா இருக்கா?


==========


6   மோடி  தவிர, வேறு யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லை. வேறு யார் பிரதமரானாலும் நாட்டுக்கு ஆபத்து.-பா.ஜ., - எம்.பி., நடிகை ஹேமமாலினி # மோடி பிரதமர் ஆனாதான் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆபத்தா?


==============


7 -. பா.ம.க., தேர்தல் அறிக்கையை,தி.மு.க., 90 சதவீதம்,காப்பியடித்துள்ளது -ராமதாஸ்  # ஸ்டாலின்  -  அட்லீ , தேவா ரசிகராம்


============


8  நம்ம வீட்டு கல்யாணம்னு நினைச்சு, தேர்தல் செலவுகள பார்த்து பண்ணச் சொல்லுங்கப்பா' என, ஆளும் கட்சியினரை அறிவுறுத்துமாறு, அ.தி.மு.க., தலைமையிடம், பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது. # மொய் வைக்கச்சொல்றாரோ? தேர்தல் செலவுக்கு?

============


சசிகலாவின் காலில், மண்புழு போல ஊர்ந்து சென்று, பதவியை வாங்கியது சந்தர்ப்பவாதம். இப்போது, 'படிப்படி யாகவே முதல்வர் பதவிக்கு வந்தேன்; சசிகலா இதற்கு காரணம் அல்ல' என்று, இ.பி.எஸ்., கூறுகிறார்; இதுதான், சந்தர்ப்பவாதம் - ஸ்டேலின்  # மண்புழு ரொம்ப மெதுவா தானே பயணிக்கும், இவரு டகார்னு ஸ்பீடாத்தானே கால்ல அ விழுந்தார்?

====================


10 இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்ட சபை தொகுதிகளில், ஒரு ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, ஆளுங்கட்சி திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. #  234 தொகுதிகளுக்கும் இதே மாதிரி இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதா?


===================

11    பல கல்லா பெட்டிகளை, பரிசு பெட்டி உடைக்கும்,'' - தினகரன் #  அப்போ பரிசுப்பெட்டியை உடைச்சா உள்ளே எதுனா  கல்லாப்பெட்டி இருக்குமோ?


============


12 'தினகரனின், அ.ம.மு.க., இன்று தேர்தல் களத்தில் இல்லை. அவரது சின்னம் பரிசு பெட்டி இல்லை. காலி பெருங்காய டப்பா,'' -, கூட்டுறதுத்துறை அமைச்சர் ராஜு  # காலியா இருந்தாலும் வாசமா இருக்கும்கறாரா?


=============


#  இவரு சொல்றதை ஜனங்க காதுல வாங்குவாங்களா?வாங்க மாட்டாங்களா? தெரில 


================


14    8 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அபாரம்; புகழ்ந்து தள்ளுகிறார் ராம்தாஸ்  # அப்போ ஊழல் நிறைந்த ஆட்சினு கவர்னர்ட்ட மனு கொடுத்தது யாரு>?


================


15  

பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. கல் மனிதர்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு  #  கல் நெஞ்சம்னு பேசி “கல்”லா கட்டப்பார்க்கறாரா>?============

16   

ஊழலின் மறுபெயர் காங்கிரஸ்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு  # அதனால தானே காங்”கிரேஸ்” குறைஞ்சிடுச்சு?


=============

17 

அறிவில்லாத அரசுதான் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும்': மிஷன் சக்தி குறித்து ப.சிதம்பரம் காட்டம் #  சாதனையைச்சொன்னாஅது எப்படி பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாகும்? அவர் என்ன ராணுவ ரகசியத்தையா வெளியிட்டார்?=========


18 நான் கழிப்பறைகளின் காவலனாக (சவுகிதார்) இருப்பதில் பெருமைப்படுகிறேன், இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் கவுரவத்தை நான் பாதுகாக்கிறேன் = மோடி  # டோல்கேட் , ஜிஎஸ்டி மாதிரி அதுக்கு எதுவும் கட்டணம் வசூலிக்காம இருந்தா சரி-===============


19 

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்: கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுரை  # அப்போ வெற்றி பெறத்தேவை இல்லை? வாக்கு % மட்டும் உய்ர்ந்தா போதுமா? அதை வெச்சு அடுத்த தேர்தல்ல கூட்டணீ பேரம் பேச உதவிய இருக்கும்னா?===============

20 

என்னிடம் வசூலித்த ரூ.10 ஆயிரத்தில் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு மீதியை கொடுங்க: கமலுக்கு விருப்ப மனு அளித்த எஸ்.ஐ. கடிதம் #  இப்படி எல்லாருமே திருப்பிக்கேட்டா தேர்தல் நிதி க்கு என்ன பண்ண?


==============


0 comments: