Wednesday, April 17, 2019

டீக்கடை வெச்சவங்க ,வீடியோ"கேசட் வாடகைக்கு விட்டவங்க எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு வந்துடறாங்க , அது எப்படி?

1  எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக ஐ.டி. துறையை பயன்படுத்துவதா?: திருமாவளவன் கண்டனம் # திருட்டுத்தனமா சொத்து சேர்த்து கணக்கில் காட்டாம பணம் வெச்சிருக்கறவங்கதான் ஐடி ரெய்டு பாத்து பயப்படனும்,நாமதான் நேர்மையானவர்களாச்சே?ஏன் கை காலெல்லாம் நடுங்குது?=============2 விவசாயி நாட்டை ஆளலாம், விஷவாயு நாட்டை ஆளலாமா..? ஸ்டாலின் விமர்சனம்..! பாய்ண்ட்.நம்ம கழகத்தலைமை பொறுப்பு ,பொருளாளர்,இளைஞர் அணித்தலைவர் இந்த பதவிக்கு எல்லாம் ஏதாவது விவசாயியை நியமிக்கலாமே?எதுக்கு குடும்பத்துக்குள்ளயே கும்மி அடிக்கறீங்க?
==============
3 இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா # அது வந்து f61 மாத்தி சொல்லிட்டோம்னு சமாளிப்பாங்களோ?
============
4 போலீஸ் வாகனத்தில் செல்கிறது அதிமுகவினரின் பணம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுதலைவரே!அந்த விஷயம் உங்களுக்கு எப்படித்தெரிஞ்சது?

நாங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது"அப்படித்தானே செஞ்சோம்?.......... ஜாடை ..... க்குத்தானே தெரியும்?=============


5 திமுக கூட்டணி தலைவர்கள் செயற்கை கோள் மூலம் கண்காணிப்பு : தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் புகார்

# யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?
கண்ணியமானவனுக்கு கண்காணிப்பு பற்றி எதுக்கு கவலை?=============


6 ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி வேனில் சென்று வாக்கு கேட்டு இருப்பாரா!” -மு.க.ஸ்டாலின்


உயிரோட இருந்தப்ப நாமளே அம்மையார் அம்மையார்னு தானே பம்முனோம்?================


7 லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு


தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 27 முதல் 33 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு # டெபாசிட் கிடைச்சாலே வெற்றி அப்டினு நினைச்ட்டாங்க போல==============


8 கூடவே இருந்து எட்டப்பர்கள் குழிபறிக்கிறார்கள்!’- துரைமுருகன் மகன் வேதனை "கட்சிக்காரங்க எல்லாம்" செயின் பறிக்கறவங்க ,நிலத்தை முறைகேடா,பறிக்கறவங்க னு தெரியும்,இப்போ இது வேறயா?


================


9 தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை − செய்தி # கூட்டத்துல யாராவது ஜோக் சொன்னா எல்லாரும் சிரிப்போம்,அது ஒரு அதிர்வலை தானே?


=============


10 மோடிக்கு எதிராக என்னைத் தூண்டிவிட்டதே திமுக தான்… அய்யா கண்ணு பகீர் குற்றச்சாட்டு !! # ஏன்?நமக்கு சுயமரியாதை,சுய சிந்தனை,சுய அறிவு எல்லாம் சம்மர் வெகேஷனுக்குப்போய் இருக்கா?


=============

11 “விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்!” - பிரேமலதா விஜயகாந்த்
# கொளுத்தும் வெய்யிலில் அவரை அலைய விடாதீங்க.அவருக்குத்தேவை ஓய்வு


==================

12 திமுக நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்-கனிமொழி. # சம்பவ இடத்துக்கு,கிட்ட"வந்துட்டாங்க,ஏன்னா ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுக தானே?


=============


13 வருமானவரி சோதனையால் தி.மு.க.வுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும்- துரைமுருகன் பேட்டி பிடியில் வகையா சிக்கிக்கிட்ட ஒரு திருடனைப்பார்த்து அனுதாபப்டறவன் இன்னொரு திருடனாத்தான் இருப்பான்,அதிகபட்சம் 28% கிடைக்கும்,அவ்ளோதான்


==================


14 ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளேன்.. ஆதரவு அளிப்பார்.. கமல்ஹாசன் # வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அவரை மறைமுகமா தாக்கறது.ஆனா ஆதரவு மட்டும் ஈசியா கேட்டு்டறாரு


=================


15 அனல் வீசும்" - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
# தினசரி 6 லிட்டர் தண்ணீர் குடிக்கனும்.பழ ரசங்கள் ஐஸ்,அஸ்கா"சர்க்கரை இல்லாம /கலக்காம குடிக்கனும்.வெளில போறப்ப குடையுடன் செல்லனும்.பருத்தி,காட்டன் ,கதர் உடைகளை உடுத்தனும்


================


16 துரைமுருகன் கற பாலுக்கு உறை ஊத்தியாச்சு,அடுத்தது திருமா,க்கு குருமா #33 கோடி , 2 கோடி


================

17 நான் மேயரானதும் மழை பெய்தது'; தி.மு.க., தலைவரின், 'பகுத்தறிவு' பிரசாரம்"# தீபாவளி,நியூ இயர்,கிறிஸ்துமஸ் மாதிரி பண்டிகை தினங்களில் பிறந்தவங்க என் பிறந்த நாளை உலகமே கொண்டாடுது"னு சந்தோஷப்படற மாதிரி தான்.கரெக்டா மழை பெய்யும் தினமா"வானிலை அறிக்கை பாத்து பதவி ஏத்துட்டு பேச்சைப்பாருங்க


================


18 வழக்கை சந்திக்கும்போது ஒரு முறை கூட வாய்தா கேட்டாரா...எந்த குற்றமும் இல்லை என்று நிருபித்து குற்மற்றவராக வெளியில் வந்தவர் தான் ஆ ராசா − ஸ்டாலின் # மேல் முறையீடு"தீர்ப்பு வந்துடட்டும்,வெய்ட்.அப்போ நீரா ராடியா ஆடியோ டேப் ,சாதிக்பாட்சா கொலை வழக்கு எல்லாம் என்ன ஆகறது?


=================

19 நீங்க கடையில டீ குடிக்கிறீங்க... ஆனா நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம்!”- ஓ.பி.எஸ்
# டீக்கடை வெச்சவங்க ,வீடியோ"கேசட் வாடகைக்கு விட்டவங்க எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு வந்துடறாங்க


==================


20 தமிழகத்திலேயே பெரிய கட்சி நாம் தமிழர்தான் - சீமான் ?கத விடறதுலயா?


=================

0 comments: