Friday, October 11, 2013

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்

 

 ஹீரோ  கிராமத்தில் இருந்து சென்னை போறார். ஹீரோயின் ஃபாரீன்ல இருந்து  சென்னை  வர்றார். 2 பேரும்  ஒரே அபார்ட்மெண்ட்ல  ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழல்.  பஞ்சும்  நெருப்பும்  பக்கத்தில் இருந்தா என்ன ஆகும் ? நயன் தாரா  பக்கத்துல யார் போனாலும் என்ன ஆகும் ? பத்திக்குது . ஆனா பாருங்க அந்தப்பொண்ணு ஆல்ரெடி  லண்டன் மாப்ளைக்கு  நிச்சயம் ஆன பொண்ணு . 1999 கதைல நாம பார்க்காத  ட்விஸ்ட்டா ? அந்த மாப்ளையை மீறி எப்படி 2 பேரும் சேர்றாங்க என்பதுதான்  கதை 


ஹீரோவா சிவா. இவருக்கு காமெடி நல்லா வருது , மொக்கை நல்லா போடறார். ஆனா அவர் முகத்துல காதல் உணர்வு  மருந்துக்குக்கூட வர்லை . ரொம்ப சிரமம் . அவர் தன்னை மாத்திக்கனும்  இல்லைன்னா ஆடியன்ஸ்க்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடும் , ஆல்ரெடி  தமிழ்ப்படம் அளவுக்கு  ரசிக்க முடியலைன்னு மவுத் டாக் பரவிட்டு  இருக்கு , டான்ஸ் காட்சிகளில் சமாளிக்கிறார்


ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இவர்  முகத்தில் ஆயில் எப்போதும் தடவியே இருப்பாரா?என சந்தேகப்பட வைக்கும் சருமம். புன்னகையில் அழகாகத்தெரியும்  இவர்  சோகக்காட்சிகளில்  , கோபக்காட்சிகளில் அந்த அளவு  மிளிர வில்லை , ஆனால் காலேஜ் , டீன்  ஏஜ் பெண்களைக்கவர்வார் . காதல் உனர்வுகள் இவர் முகத்தில்சரளமாகவருகிறது , சபாஷ் 



சந்தானம் இடைவேளைவிடும்போதுதான் எண்ட்ரி ஆகிறார். படத்தில் அவர் அடிக்கும்  டயலாக்ஸ் 24, அதில்  கவுண்ட்டர் டயலாக்ஸ் 7 , உருவகேலி - 5 , டபுள் மீனிங்க் 2 , மொக்கை காமெடி 6 , ஆல்ரெடி வந்த எஸ் விசேகர் காமெடி டிராமாவில்  உருவியது 4 என எப்போதும்  போல்  ஒரு ரேஷியோ  வெச்சு காமெடி டிராக்  அமைப்பார் போல. ஆனா  ஒரு ஆறுதல் என்னான்னா  அவர் இந்தப்படத்தில் அடக்கியே வாசிச்சிருக்கார் , இயக்குநர் சொன்னதை மட்டும் செஞ்சிருக்கார் ( இயக்குநர் யாரு ?  மேலிடம் இல்லை?) 


ஊர்வசி, நாசர் , ரேணுகா , ராகுல் என  நடித்தவர்கள் பட்டியல் இருந்தாலும்  பெரிதாக சொல்லும்படி இல்லை . 



அனிரூத் . ஆண்ட்ரியா அட்டாக்கர் (@ TALKER) ,மவுத் ஆர்கன் அப்பாடக்கர் , ஒல்லி கில்லி ( இசை அமைப்பதில் தான் ) இசை ஆல்ரெடி மரண  ஹிட் . க்ளைமாக்சில் கங்க்ணம் ஸ்டைல் பாட்டுக்கு நடனமும் ஆடுகிறார் .




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  உதய நிதி ஸ்டாலின்  மனைவி கிருத்திகா உதயநிதி தான் இயக்குநர் , ஒரு பெண் இயக்குநர் என்ற முறையில் அவருக்கு  ஒரு பூங்கொத்து . குடும்பத்துடன் பார்ப்பது   மாதிரி கண்ணியமான காட்சி அமைப்புகளுடன்  ஒரு சராசரிக்காதல் கதை  ரசிக்கும் படி  தந்ததற்கு


2  சந்தானம்  இருந்தும்  பெண்களை நக்கல் அடிக்கும் காட்சியோ , ஆபாச டபுள்  மீனிங்க் காட்சியோ இல்லாமல்  கண்ட்ரோல் பண்ணியது  குட் 


3  ஓப்பனிங்க்  சீனில்  டாக்சியில்  போகும்  ஹீரோயினை டிரைவர்  கரெக்ட் பண்ண ஆழம் பார்க்க  கமல்-ன் கில்மா பாட்டை  ஓட விட  உடனே  ஹீரோயின்  செல் ஃபோனை எடுத்து அப்பாவிடம் பேசுவது போல்  டிரைவர் பற்றிய  டீட்டெயில் சொல்லி  எச்சரிக்கை செய்வதும்  உடனே டிரைவர்   ரஜினி யின்  சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாட்டை மாற்றுவதும்  கிளாஸ் , இந்த  ஒரு காட்சியில் இயக்குவது ஒரு பெண் என்பதை நிரூபணம் செய்கிறார். அதேபோல்  ராத்திரியில்  தனியாய் பயணம் செய்யும்  பெண் எப்படி  ஜாக்கிரதையாக   இருக்கனும் என்பதற்கான டிப்சும் ஆச்சு 


4  மிலிட்ரி மேன் நாசர்   போலீஸ் ஆஃபீசர்  ஊர்வசியை   தாங்கிப்பிடிக்கும் காட்சியில் அவரது அவதாரம் படப்பாடலான  தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாட்டை ஓட விட்டது தியேட்டரில்  செம அப்ளாஸ் . கதையில்  இன்னும்  ரிலாக்ஸ்  தேவைப்படும் பட்சத்தில் இந்த காமெடி  டிராக்கை  இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்


5   ஏ பெண்ணே பாடல் காட்சிக்கு  அமோகவரவேற்பு . மரங்களுக்கு  லைட்டிங்க் பண்ணி  இருந்தது  ரசிக்க வெச்சுது . ஆர்ட் டைரக்‌ஷன் அட்டகாசம் , பின்னிட்டாங்க , எல்லாப்பாடல்களுமே நல்லாருக்கு  , 3 பாடல்கள்  செம ஹிட் ஐலேசா, காற்றில்  , ஒசக்க , ஏ பெண்னே , சென்னை என  5 பாட்டு  





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. மனோபாலாவிடம்  புகார்  கொடுக்கவரும்  சிவா முதல் ஷாட்டில்  திருநீறு ஒரு வரிதான் வெச்சிருக்கார் , அடுத்த ஷாட்டில்  3 வரி இருப்பது போல் பட்டை அடிச்சிருக்கார் . கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க்  அது எதுக்கு தேவை இல்லாம ? அந்த ஒரு சீன்  தவிர வேறு எந்தக்காட்சியிலும் அவர் ஒரு பக்தன் எனவோ , ஆன்மீகப்பிரியன் என்பதோ வரவே இல்லை . அபார்ட்மெண்ட்டில் இருவரும் சண்டை போட்டுட்டு  போலீஸ் ஸ்டேஷன் ல புகார்கொடுக்க வ்ர்றவர் எதுக்கு மெனக்கெட்டு திருநீறுப்பட்டை அடிச்சுட்டு வரனும் ? 



2 ஹீரோயின் ஃபோன் நெம்பரை  ஹீரோ கேட்டு வாங்கி தன்  ஃபோன் ல ஸ்டோர் பண்றார் . பின் ஹீரோயின் கால் பண்ணும்போது  ஹீரோவின்  செல் மானிட்டர்ல் +91 944---------  என வருவது எப்படி ?  ஹீரோயின்  மிஸ்டு கால்  கொடுத்தோ அல்லது   ரிசீவ்டு காலோ இருந்து பின் ஹீரோ அதை ஸ்டோர் பண்ணி  இருந்தால் தான் அப்படி +91  என வரும் , இல்லைன்னா 944....  என தானே வரும் ? 


3 ஹீரோயின் ஒருஷாட்டில் ஏரியில்  மீன் பிடித்து தூண்டிலை இழுக்கும் காட்சியில் ஆல்ரெடி பிடிச்சு செத்த மீனை தூண்டிலில் மாட்டியது நல்லாத்தெரியுது 


4 ஹீரோகிராமத்தில்   இருக்கும்  தன்  வீட்டுக்கு ஹீரோயினை அழைத்து வர்றார் . ஒரு தேயிலைத்தோட்டத்தில் இறங்கி இதுக்கு மேல் வண்டி போகாது நாம நடந்து போலாம்னு ஹீரோயினை  நடக்க வெச்சு கூட்டிட்டுப்போறார். பின் ஹீரோயின் கிளம்பும்போது    வீட்டு  வாசலுக்கே  ஜீப் வருவது எப்படி ?


5 லண்டன் மாப்ளை  நிச்சயதார்த்தத்துக்கு  ஹீர்ரோயின்  விரல் ல  எங்கேஜ்மெண்ட் ரிங்க்  போட்டிருக்கார் . அதை ஹீரோ வாங்கிஅடமானம் வெச்சாச்சு . ரிட்டர்ன் வந்த மாப்ள எங்கே நான்  போட்ட மோதிரம்?னு கேட்கவே இல்லை ?  விரலைக்கூடப்பார்க்காத கண்ணியமான மாப்ளையோ ? 


6  நிச்சயிக்கப்பட்ட லண்டன் மாப்ளை சென்னை  வந்து ஹீரோயினைப்பார்த்துப்பின்  அவர் தங்கி  இருப்பது எங்கே?ன்னு கேட்கவே இல்லை , அவர்  வீட்டுக்கும் வர முயற்சிக்கவே  இல்லை 


7 . சந்தானம் லண்டன் மாப்ளையை சந்தித்து  ஹீரோ காதலைச்சொல்லிடறார்.  அதை மாப்ளை ஏன் ஹீரோயினிடம் சொல்லவில்லை? அட்லீஸ்ட்  வெரிஃபிகேஷன்  கூடப்பண்ணலை ? க்ளைமாக்ஸில் மட்டும் எதுக்கு சம்பந்தமே இல்லாம  அதை சொல்றார்? 


8  ஊர்வசி ஹீரோ -ஹீரோயின் அபார்ட்மெண்ட்க்கு நைட் வந்து  ஹாலில் சோபாவில் படுத்து தூங்கிடறார்/. அவர் வந்ததால  கணவன் - மனைவியா நடிக்கும் அவங்க   வேற வழி  இல்லாம   பெட்ரூமில் போய்   படுக்க வேண்டிய  நிர்ப்பந்தம் மாதிரி  சீன்  ஒட்டவே  இல்லை . நான் வீட்டுக்கு விலக்கு , உங்க கூட ஹால் ல யே படுத்துக்கறேன்னு சொல்லலாம் , அல்லது  அதே  வீட்டில்  இன்னும்  2  ரூம்  இருக்கு , அங்கேபோலாம் 


9அனிரூத் பிரமாதமான பாட்டு போட்டுக்குடுத்தும்   இயக்குநர்  அந்த பாடல்களுக்கான லீடு சரியாத்தரலை . சென்னை எக்ஸ்பிரஸ்  லுங்கி டான்ஸ் மாதிரி  கங்க்னம் பாட்டை க்ளைமாக்சில் வெச்சது உட்பட எல்லாப்பாடல்களுமே ஏனோ தானோ என ஓப்பன் ஆகுது 


10  இயக்குநர்  ஒரு பெண்ணாக  இருந்தும்  எதுக்காக   ஹீரோயின் வரும் 90% காட்சிகளில்  லோ கட் ஆங்கிள் ஷாட் வெச்சு கவர்ச்சி காட்டனும் ? 

11  கல்யாண மண்டபத்தில்   ஹீரோ , ஹீரோயின்  இருவரும்  ஒருவரை  ஒருவர்  ரொம்ப நேரமாத்தேடிட்டு இருக்காங்க , 2 பேர் கிட்டேயும் செல் போன் இருக்க , ஒரு கால்  அல்லது மெசேஜ் அனுப்பி  நீ  எங்கே இருக்கே?ன்னு கேட்டாமேட்டர்  ஓவர்  


12  மேரேஜ்க்கு  வரும்,  ஹீரோயின்  கழுத்துல  ஒரு செயின் நகை  நெக்லஸ் கூட  போட்டுக்காமயாவரும் ? கைல வளையல் இருக்கு , காதுல  தோடு  இருக்கு , வெறும் கழுத்தா வரலாமா? இயக்குநர் ஒரு பெண் வேற 


மனம் கவர்ந்த வசனங்கள்

1. பாடுபடாம பலாச்சுளை கிடைக்காது



 பேய்ப்படத்துக்கு தியேட்டர்ல எத்தனை லவ் ஜோடிங்க பார்த்தியா? பேய் வந்தா பயத்துல கட்டிப்பிடிச்சுக்கலாம்.எல்லாரும் பேய்க்காகத்தான் வெயிட்டிங்


3  எவ்ளவ் காஸ்ட்லி கேமராவா இருந்தாலும் லவ் FEELING கை படம் பிடிச்சுட முடியாது


4  நீ சொன்ன மாதிரி அவ 1ம் அவ்ளவ் குண்டு  இல்லையே? 



உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்


ஒருத்தனைப்பார்த்ததுமே அவன் நல்லவனா? கெட்டவனா?னு பொண்ணுங்க கண்டுபிடிச்சுடுவாங்க.அவங்க அவ்வளவு ஷார்ப் 

எப் ஐ ஆர் = FEMALE INFORMATION REPORT ,அதாவது பொண்ணுங்க சொல்றதைத்தான் போலீஸ் நம்பும்



படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


1. ஹீரோயின் க்கு சந்தானம் வெச்ச பட்டப்பேரு டமுக்கு டப்பா # வ செ .ப்ரியா ஆனந்த்


2 சந்தானம் இடைவேளையில் தான் என்ட்ரி.பார்த்தவரை படம் சுமார் தான் # வ செ


வணக்கம் சென்னை இயக்குநர் கிருத்திகா வணக்கம்.உங்க படம் தான் பார்த்திட்டிருக்கேன்


 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-40


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் = 2.75   / 5



சி பி கமெண்ட்  -காதலர்கள்  , சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம் , பெண்களை கவரும் .  போர் அடிக்காம  போகுது . ஆண்கள்  டி வி யில் பார்க்கலாம். வணக்கம் சென்னை - சராசரி காதல் கதை .சந்தானம் காமெடி அடக்கி வாசிப்பு - விகடன் மார்க் =40 ,ரேட்டிங் 2,75 / 5..ஈரோடு  ராயல் ல படம் பார்த்தேன் . கூட்டம் கம்மி தான்



a


டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்

டிஸ்கி - நய்யாண்டி - சி பி எஸ் விமர்சனம் -http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

3 comments:

Unknown said...

அருமை

'பரிவை' சே.குமார் said...

சிவா சந்தானம் காமெடியெல்லாம் மொக்கைதான்....

நல்ல விமர்சனம்.

Unknown said...

இந்த விமர்சனத்திற்கு தனியா ஒரு பதில் பதிவு போடுறேன்...