Thursday, August 15, 2013

ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்

 

அமரர்  எழுத்தாளர்  சாவி  எடிட்டோரியல் மீட்டிங்கில் அடிக்கடி சொல்வது போல் ஒரு நல்ல தொடர்கதை என்பது படிக்கும்  வாசகனை  இன்னும் சில வாரம் வராதா என ஏங்க வைக்கனும் , அடடா , அதுக்குள்ளே  முடிஞ்சிடுச்சா? எனகேட்க வைக்கனும் . அதே போல்   ஒரு நல்ல சினிமா என்பது   பார்ப்பவர் மனதில், அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சா ? என  ஆச்சரியப்பட வைக்கனும் . அப்படி  ஆச்சரியப்படுத்தியபடம்  தான்  இது 


ஹீரோ ஒரு சுமாரு  மூஞ்சிக்குமாரு . ஹீரோயின்   ஒரு  மாநிற   தேவதை ஃபிகரு . 2 பேரும்  லவ்வறாங்க.  வாலிப வயசுல எல்லா லவ்வர்சும் பண்ற தப்பை பண்றாங்க .  ஹீரோ மேல  நேசமா இருந்த   ஃபிகரு   மாசமா ஆகிடுது . வீட்டுக்கு மேட்டர்  தெரிஞ்சு பெரிய பஞ்சாயத்து ஆகுது .  அதுக்குப்பின் என்ன ஆகுது என்பதே கதை . தர்மபுரி இளவரசன்  , சேரன் மகள் காதல் மேட்டர் பர பரப்பா பேசப்படும் கால கட்டத்தில்  இந்த மாதிரி ஒரு படம் வர்றது பெரிய பிளஸ்..   


ஹீரோ சந்தோஷ்  . இவர்  புது முகம் என்ற  எண்ணமே  எழாதவண்ணம்    ஆங்காங்கே  அமர்க்களப்படுத்தி ஆங்காங்கே படுத்தி இருக்கிறார். ஓக்கே . பின் பாதியில்   அவர் முகம்  வில்லன்மாதிரி ஆகி விடுவது   கேரக்டர் மற்றும்  திரைக்கதை அமைப்பால் . வெல்டன்  இயக்குநர் 


ஹீரோயின்  மனீஷா யாதவ் . . வழக்கு எண் ஹீரோயின். நந்திதாதாஸ் -ன் ஸ்கின் டோன்  , சிம்ரனின்  உதடு சாயல் , சோனியா அகர்வாலின்  இடை  சாயல் எல்லாம்  கலந்த  கலவை  ( முக சாயல்மட்டும்  பார்த்தா போதாதா? எல்லா சாயலும் பார்க்கனுமா? ராஸ்கல்ஸ் ) . காதல் வயப்படுவது ,  வீட்டில்  திருட்டுத்தனமாய்  ஃபோன் செய்வது , மெசேஜ் அனுப்பவது , வாமிட் எடுக்கும்போது  அம்மாவிடம் பம்முவது  , கர்ப்பம் கலைக்க மாட்டேன் என உறுதியாய் நிற்பது என  இவர் சிக்சர் அடிக்கும்  காட்சிகள்  18 . சபாஷ்  மனீஷா  .






 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. நீண்ட  இடைவெளிக்குப்பின்  ஜஸ்ட்   110  நிமிடங்கள்  மட்டுமே ஒடக்கூடிய   ஒரு தமிழ்வெற்றிப்படம் தந்தது  .


2. எங்கே செல்வராகவன் தான் முன் பாதியை  இயக்கிக்கொடுத்தாரோ    என  எண்ணும்  வகையில்  முன் பாதி காதல் எபிசோடில்   கலக்கியது , மிக இயல்பான காதல்  காட்சிகள்  ரசிக்க வைத்தது 



3. ஓப்பனிங்க்  சாங்க்  கில் பாலே டேன்ஸ் பாணியில்   டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கலக்கல்  ரகம் . பேக் டிராப்பும்   அருமை . பின்னணி இசையும்


4,. பர்த் டே விஷ் பண்ண வரும்   தோழிகளில் அந்த  ஸ்கை  ப்ளூ  டி சர்ட்  தோழி   செம டைட் டிரஸில் வந்து ஆடியன்சை    5 நிமிஷம் டைட் ஆக்கியது   


5.  சன்  மியூசிக்கில்  பர்த்  டே விஷ் பண்ணிய பாய்  ஃபிரண்டை   அம்மாவுக்கு    நாயகி அறிமுகப்படுத்த   அதை பார்க்க த் தவற  விட்ட அம்மா  இன்னொரு டைம்  வராதா   என ஏக்கமா கேட்பது செம அப்பாவித்தன்ம்


6.  வாக்கிங்க்   போகும்   ஹீரோ  - ஹீரோயின்   லவ்  எக்ஸ்போசிற்குப்பின்  கோபித்து   செல்லும் இடத்தில்     தோழி மட்டும் விரைப்பாக  செல்ல  நாயகி   நாயகனை   ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி செம அப்ளாஸ் தியேட்டரில்  ( பார்த்து ப்பார்த்து  புளித்துப்போன காட்சி தான் என்றாலும்)


7.  ஹீரோவின்  குடும்பம் , ஹீரோயின் குடும்பம்  இரு தரப்பையும் மிக எதார்த்தமாய்  காட்டியது அழகு, .சினிமாத்தனம்  ஒரு சீனில்   கூட இல்லை  , குட்  .  பூர்ணிமா பாக்யராஜ்   நாயகனின் அம்மா வாக  வரும்  சில காட்சிகள் கூட குட் 




8.  தனிமை வாய்ப்பு கிடைக்கும்போது  வீட்டில்  கடலை போடும்  லவ் ஜோடி ஆண்ட்டி  வீட்டுக்கு வருவதாக அம்மா  ஃபோன் பண்ணியதும்   டக் என கொரியர் பாய் போல   லவ்வர்  மாறுவது  செம  



 9 மாமல்லபுரம்   கில்மா    ஹோட்டல் காட்சி   என்னதான்செல்வராகவன் -ன் 7ஜி ரெயின் போ   காலணி  உட்பட பல படங்களில் பார்த்திருந்தாலும்   செம கிக் 



10 . காதல் மேட்டர்    தெரிந்ததும் இரு தரப்பு பெற்றோருக்கு இடையே  நடக்கும் மீட்டிங்க்  விவாதங்கள்    செம  யதார்த்தம் 

11. அனைத்துக்கும்  சிகரம்  வைத்தாற்போன்ற   க்ளைமாக்ஸ் காட்சி , ஆடியன்ஸ்   செமகிளாப்ஸ் . லவ்வர்ஸ்பாட்டுக்கு   ஹேரே போச்சுன்னு  லவ் பண்ணி குழந்தை  பெத்து  அதை   அநாதையா விட்டுட்டுப்போய்டுவாங்க , அவங்கவங்க  வாழ்க்கைல   வேறவேற ஆள்  கூட செட்டில் ஆகிடுவாங்க  , அந்த  குழந்தையின் கதி? என கேட்டு ஒரு பாடல்  வைத்த இயக்குநரின்  தைரியத்துக்கு  ஒருஷொட்டு


12.  ஹீரோயின்  வாமிட் எடுக்கும் காட்சி , அப்போ அம்மா படும்  பதட்டம் , அப்பாவுக்கு  ஃபோன் பண்ணி வரவைச்சு    வீட்டுல் ஒரு இறுக்கமான சூழல் , பதட்டம் அப்போ வரும் பி ஜி எம் எல்லாம்  அருமை


13, போஸ்டர்  டிசைன் , விளம்பர  க்ளிப்புங்குகள் , மார்க்கெட்டிங்க் டெக்னில்  அருமை


14.   ஹீரோயின்  தோழியாக  வரும் சிடு சிடு முக  சில்பான்சி நடிப்பும் , ஹீரோவின் அக்காவாகவரும் ஃபிகரும்  வெரிகுட்  நடிப்பு


15.  யுவன்சங்கர்ராஜாவின் பின்னணி இசை  அருமை, பாடல்களில் 2பாட்டு ஆல்ரெடி ஹிட்டு , ஒவ்வொரு பாட்டு ஓப்பன் ஆகும்போதும்  வரும்  பிஜி எம்  நல்ல உத்தி



இயக்குநரிடம்  சில  கேள்விகள்



1. ஹீரோ  தோழிக்கு  ஹீரோயின் லவ் பிடிக்கலை . அவங்க   2 பேரும் பேசும்போது , எனக்கு கால் போட்டு  ஃபோனை  ஆன் ல  வெச்சிரு. நான்  உங்க   2 பேர் பேச்சையும்  கேட்கறேன் அப்டினு  ஹீரோ சொன்னபடி  ஹீரோயின்  கேட்கறா . ஆனா  அந்த  ஃபோனை  ஹேன்ட் பேக்கில் வைக்காம ஏன்  தோழியின்  கண்ணில் மானிட்டர்  தெரியும் படி  முன்னாலயே வைக்கனும் ? அட்லீஸ்ட் ஒரு புக்கில் மறைச்ச மாதிரி வெச்சிருக்கலாமே?


2.  ஹீரோயின் தோழி ஹீரோயினின் அம்மாவிடம் போட்டுக்குடுக்க நினைப்பவள்  இருவரையும்  பார்க்கில் பார்த்தப்பவே சொல்லி  இருக்கலாமே?   எதுக்கு   ஹீரோயின்  வீட்டுக்கு  வரும் வரை வெயிட்பண்ணனும்?  


3.  கலைக்க  ஹாஸ்பிடல்   போகும்  லவ்வர்ஸ்   அறிமுகம்  இல்லாத   ஹாஸ்பிடல்  தான் போறாங்க. ஆனா  எதுக்காக காதலனின்  நண்பனை  காதலியின் கணவனாக டாக்டரிடம்   நடிக்க வைக்கனும் ? இதுக்கு எந்தப்பெண்ணும்   ஒத்துக்க மாட்டாளே? 




4.  டாக்டரிடம்    போய் பேசும்   ஜோடிக்கப்பட்ட லவ் ஜோடி   முதல்லியே ரிகர்சல் பார்த்துக்க மாட்டாங்களா?  மேரேஜ் ஆகி  எத்தனை    வருசம் ஆச்சு என்ற எதிர்பார்க்கப்பட்ட   ஒரு  சாதா   கேள்விக்குக்கூட   இருவரும்  முன்னுக்குப்பின்  முரணான பதிலை  அளிப்பாங்க்ளா?  


5.  கருவைக்கலைக்க   ஹீரோவிடம்  பணமில்லை .  அக்கா விடம்  , நண்பர்களிடம்   கடன் கேட்கிறான் .  ஆனா ஹீரோவிடமே   புது பைக்  75, 000 ரூபா மதிப்புள்ளது  இருக்கு ,அதை ஏன்  அடமானமா வைக்கலை ? மூன்றில் ஒரு பங்கு காசு  கூடவா  கிடைக்காது?  அது பற்றி  ஹீரோயின்   ஏன் எந்தகேள்வியும் கேட்கலை  ? 


  6. ஹீரோயின்   கருவைக்கலைக்க    தோடு , மோதிரம் , செயின் என  3 பவுன்  கொண்டுவந்து  தர்றா.  ஒரு பவுன்  22,000 ரூபாய்க்கு விக்குது,  பழைய நகை என்பதால்  18,500  ரூபாய்க்குப்போகும்னு கணக்கு  வெச்சாலும் ஒண்ணே கால் அல்லது ஒன்றரை பவுன்போதுமே> 


7.   வீட்டுக்கு   லவ் மேட்டர்   தெரிஞ்சபின்னும் எப்ப்படி   ஹீரோயினால் சர்வசாதாரணமா   40  பவுன் நகையை வீட்டில்  இருந்து எடுத்துட்டு வர முடியுது ? இந்தக்கால பெற்றோர்கள்  உஷாரா  இருக்க மாட்டாங்களா?



8. லவ்வர்ஸ்  கில்மா  பண்றது தற்செயலா நடக்கலை, உணர்ச்சி வசப்பட்டு  திடீர்னு  நடக்கலை . 2பேரும்  பிளான் பண்ணி மகாபலிபுரம்  போய்  மேட்டர்முடிக்கலாம்னு பேசிட்டே தான் போறாங்க . பாதுகாப்பா   இருக்க 2 பேரும்  யோசிக்கவே இல்லையா?  அப்போ தான்  பாதுகாப்பா  இல்லைன்னா அதுக்குப்பின்  கூட   அதை கண்டுக்காம  இருப்பது எப்படி ?




9.  ஹீரோயின்   கர்ப்பமா  இருப்பது தெரிஞ்சதும் ஹீரோவின் அம்மா  ஹீரோவிடம்   அது ஒரு எவிடென்ஸ் ஆகி   சட்ட சிக்கல் வரும்  , பிரச்சனை ஆகும் , கலைச்சுடச்சொல்லுங்கறாங்க. .  கலைக்கும் முன்   டி என் ஏ  டெஸ்ட்  எடுத்து  ஆதாரம்  வெச்சுக்கிட்டாலும் மாட்டிக்குவாங்களே? 


10 . பொண்ணோட   லவ்  மேட்டர்  பிரச்சனை வரும்போது   பையன் வீட்டுக்குப்போகும்போது பாதிக்கப்பட்ட பொண்ணை கூட்டிட்டுப்போக மாட்டாங்களே?  எல்லாரும்  வேடிக்கை பார்ப்பாங்கன்னு  தெரியாதா?


 11.கதை  உணர்த்தும்  நீதி அழகு . ஆனால் அதை  சொல்லும்  விதத்தால்    ஆதலால் காதல் செய்யாதீர்  என்று தானே   டைட்டில்  இருக்கனும் ?



மனம் கவர்ந்த வசனங்கள்


1. பைக் வேணும்  பைக் வேணும் னு கேட்கறியே ,உனக்கு  முதல்ல பைக்  ஓட்டத்  தெரியுமா? பைக் பின்னால  உக்கார வெச்சு கூட்டிட்டு போவியா?


 படுக்க வெச்சுக்கூட கூட்டிட்டுப்போவேன்



2.  எவரெவர் பிகருக்கு எவரெவரோ அவரவர் பிகருக்கு அவரவரே




3. எப்பவும் ஏதாவது பிராப்ளம்ஸ் FACE பண்ணிட்டே இருப்பவன் தான் தலைவன்



4. தான் காதலிக்கும் ஆணுடன் பைக்கில் உலா போக எல்லா பொண்ணுங்களும் விரும்புவாங்க.அதனால பொண்ணை கரெக்ட் பண்ண நினைக்கறவங்க முதல்ல பைக் வாங்கனும்



5  .FACE TO FACE ,EYE TO EYE ,LIP TO LIP லவ்வை சொல்லிட்டா நல்லது.அதான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்



6.  டென்னிஸ் சம்பந்தமா என்ன டவுட்வேணாலும் கேளு.நான் சொல்லிடுவேன்.



ஓஹோ.நெட் ல எத்தனை ஓட்டை ?



7.லவ்வர்சை பிரிக்க நினைச்சா ஸ்ட்ராங் ஆகிடுவாங்க.அப்டியே விட்டா அவங்களுக்குள்ளே பிரச்சனை வந்து அவங்களா பிரிஞ்சுடுவாங்




8 லவ் பண்றப்ப சுத்தி இருக்கறவங்க எல்லாம் முட்டாளாத்தான் தெரிவாங்க.ஆனா ஏமாந்த பின் தான் நாம முட்டாள்னு தெரியும்



9. ஏய்.மகாபலிபுரம் போலாமா?



 ம் ஆனா லிமிட் தாண்டக்கூடாதுடா.



 ம்க்கும் ,நீ தாண்டாம இருந்தா சரிடி



. அடிங்



10. தப்பு பண்ற வயசுல வாய்ப்பைத்தவற விடாம ,மாட்டிக்காம தப்பு பண்ணுனா எதுவும் தப்பில்லை





11. FRESH பொண்ணுங்களை லவ் பண்ணனும்னு நான் நினைக்கலை.லவ் பெய்லியர் பொண்ணுங்கதான் என் டார்கெட்.இருட்டுல இருப்பாங்க.சின்ன வெளிச்சமா நாம  இருந்துட்டா போதும்



12. லவ்வை சொல்லலாம்னு கிட்டே போனாலே கை நடுங்குதுடா. இப்ப இதுக்கே இப்டி நடுங்குனா மத்த எல்லாத்துக்கும் இனி என்னடா பண்ணப்போறே



13. இந்தப்பசங்களை நம்பவே முடியாதுடி.நம்ப வெச்சு கழுத்தை அறுத்துடுவானுங்க




14. டேய்.மச்சி.உன் அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம்.நீ மாமா ஆகிட்டேடா.



கூடிய சீக்கிரம் அப்பாவே ஆகப்போறான்.அவன் ஆள் கர்ப்பம்



15. அப்போ எங்க கேங்க்ல நீ சேர்ந்ததே ஸ்வேதாவை கரெக்ட் பண்ணத்தானா?



16.  உனக்காக   உயிரை விடவும்  தயாரா  இருக்கேன்  , ஆனா  உன் ஃபேமிலிக்காக எல்லாம்   உயிரை  விட  முடியாது



17.  செத்தாலும்  பரவாயில்லை, இந்த  மாதிரி  ஒரு செல்ஃபிஷ்ஷோட   வாழமுடியாது


18.  என்னது? கருவைக்கலைக்க       25,000   ரூபாயா? ஜாஸ்தி


 உங்க  காலேஜ் அப்டிங்கறதால தான்ப்   இந்த   ரேட்.  வேறன்னா  ரேட் ஜாஸ்தி  , இப்போக்கூட உங்க காலேஜ்   பொண்ணுங்க  3 பேரு  கலைச்சுட்டுத்தான்  போனாங்க



19.  எனக்கு ஏன்  இந்த லவ் மேட்டர்   சொல்லலை?

 இது என்ன ஒண்டே மேட்சா?   எல்லாருக்கும்    அறிவுச்சுட்டு பண்ண



20 . நீ லவ் பண்ற  பொண்ணை  விட உன்னை லவ் பண்ற பொண்ணை....


 டேய் சும்மாநிறுத்து  இங்கே  என்னமோ  க்யூகட்டிட்டு பொண்ணுங்க    நிக்க ற   மாதிரி





21   தோளுக்கு மேல வளர்ந்துட்டா பர்மிஷன்   கேட்க இப்படி பம்மக்கூடாது  .  கேட்கும்   விதத்தில்   கேட்டா   எல்லாம் கிடைக்கும்



22  இவன்   6 மாசமா  உங்க பின்னாலயே வந்திருக்கான் , உங்களூக்கு தெரியாதா?

 நான் முன்னால போனப்ப அவன் பின்னால வந்தா  எப்படிங்க   தெரியும்?



23. சரி  , விடுங்க, ஃபாலோபண்ணத்தெரியாம   ஃபாலோவிட்டான் . லவ்விடுங்க

 சாரி ,   அண்ணா , நான்  அவர் ஃபிரண்டைத்தான் லவ்வறேன், நீங்க தான் சேர்த்து வைக்கனும்


24.,  நான்  4 மாசம் வெயிட் ;பண்ணட்டா?


 உங்க  ஜெனரேஷனுக்கு அவ்ளவ் பொறுமை கிடையாது டா, 2 மாசத்துல   பதில்  வர்லை ஆள் மாத்திட்டுப்போய்ட்டேஇருப்பாங்க


25,. என் லவ் பிரேக்கப் ஆகிடுச்சுடா


 அடப்பாவி , போன வாரம் தானே பிக்கப்பே பண்ணே?

 இப்பவெல்லாம் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடற  மாதிரி    பிரேக்கப்பும் ஆகிடுச்சுடா






 






ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-   43



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே


ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்- செல்வராகவன் பாணியில் சுசீந்தரன் -ன் ஆதலால் காதல் செய்வீர் -ஹைக்கூ -விகடன் மார்க் - 43 -  , ஏ பி  செண்ட்டரில் ஹிட் . காதலர்கள்  , பெற்றோர்கள் அனைவரும்  நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . ( சி  செண்ட்டரில்  சுமாராப்போய்டும்) ஈரோடு தேவி அபிராமியில்  படம் பார்த்தேன் .


a







5 comments:

குரங்குபெடல் said...

good & encouraging review


thanks for sharing

கலியபெருமாள் புதுச்சேரி said...

நல்லா இருக்கு. பட் படமே பாத்துடலாம் போல..படமே ரெண்டு மணி நேரம்..விமர்சனம் மூனு மணி நேரம்..முடியல பாஸ்..

'பரிவை' சே.குமார் said...

படம் அருமையின்னு இணைய விமர்சனம் எல்லாம் சொல்லுது...

பார்த்துட வேண்டியதுதான்...

Shankar said...

Nowa days the review from the blogs kills most of the movies. But, for this film all the reviews so far has been good and encouraging. Lets hope this film does well too.
Thanks for the fair review, as usual.

Unknown said...

Nice Boss!!!