Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

3 comments:

Unknown said...

இயக்குனரிடம் சில கேள்வியில்//

பரதேசிkku எதிர்பார்த்தது போல் உங்கள் விமர்சனத்திற்கு எதிர்பார்த்தே இருந்தேன்

Question.4

அவன் வீட்டு வாசலில் காதல்
மயக்கத்துல கூட கால் மேல கால் போடகூடாதா அண்ணா

(எல்லாருக்கும் உணர்சிகள் தனிமையில் வெளிப்படுவது இயல்புதானே)

விமர்சனம் எப்போதும் போல் அருமையாய் எழுதிரிகீங்க// :-)

படம் பார்த்த அனைவருக்குமே திருப்தி அளிக்காத ஒரே விசியம் இசையாய் இருந்திருக்கும் / ஜீவி திறமைசாலிதான் ஆனால் / இந்த படைப்பிற்கு உயிர் குடுக்க முடியவில்லை

10. கிழம் இறந்ததை அறிந்தவர்கள் சிலர் சாப்பிடாமல் எழுந்து செல்வார்கள் என நினைத்தேன் ஆனால் எல்லொரும் சிரித்து கொண்டே இருந்தது சற்று அபத்தமாக இருந்தது//

ஆமாம் இந்த அங்கம்மா எப்படி letter போட்டுச்சு//கரெக்ட் அட்ரெஸ்க்கு// யார் சொன்னாக
பதில் கடிதம்னா அப்ப முதல் கடிதத்திற்கு வருத்த பதில்கள் மிஸ்ஸிங்,பிறகு நீங்க சொன்னாப்புல அலெர்ட் மெசேஜ் செஞ்சிருக்கணும்// அவ்வளவு சுதந்திராமவா அந்த எஸ்டேட் இருந்துச்சு-- எங்க hostella கூட வார்டன் படிச்சு தான் postuvaar//

-@Ericpavel
:-)

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

வசனம் நம்பர் 4.. அப்படியா சொல்வாரு..? ஹாஹாஹா.
வசனம் நம்பர் 6.. எனக்கு இப்பதான் விளங்குது. சினிமாவில் பார்த்தபோது புரியல. டியூப் லைட்.

காரிகன் said...

போன வாரம் இந்த படம் வந்த போது அதற்கு கிடைத்த உணர்ச்சிபூர்வமான ஆராவாரமான விமர்சனங்கள் எதோ பாலா தமிழில் யாரும் செய்யாததை செய்துவிட்டார் என்று எல்லோரையும் என்ன வைத்தது. இப்போது வரும் விமர்சனங்கள் பெருவாக உணர்ச்சி நிலையிலிருந்து வெளியே வந்து யதார்த்தமாக இருக்கினறன.உங்கள் விமர்சனம் கூட அப்படித்தான். சிலர் செய்ததைபோல பாலா அடுத்த மகேந்திரன் என்று நீங்களும் கண்மூடித்தனமாக அபிப்ராயம் கொள்ளாமல் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.