Saturday, March 02, 2013

டாப்ஸி தங்கச்சி ஷாகுன் ஃபிகர் தேறுமா?

டாப்ஸின்னா 'தவம் இருப்பவள்’னு அர்த்தம். சவுத் இந்தியா ஹீரோயின்கள்ல நான்தான் பெஸ்ட்னு பேர் வாங்கணும்னு தவம் இருக்கேன்னு வெச்சுக்கலாம்!''- டாப்ஸி பளிச் புன்னகையுடன் சொல்வதை ஆமோதிப்பது போல அவரது நெற்றியில் விழுந்து புரள்கிறது சுருள் கூந்தல்.


 
 ''அப்போ சாஃப்ட்வேர் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தது நல்ல முடிவுன்னு சொல்லுங்க...''



''நிச்சயமா! நைன் டு ஃபைவ் வேலை எனக்கு ரொம்ப சீக்கிரமே போர் அடிச்சிருச்சு. அதான் சினிமா வாய்ப்பு கிடைச்சதும் ஓடி வந்துட்டேன்.ஆனா, எனக்கு மேத்ஸ் ரொம்பப் பிடிக்கும். சினிமாவுக்கு வந்ததால், அதை மட்டும் மிஸ் பண்றேன். மத்தபடி... ஐ லவ் சினிமா!''  



''ஆனா, கிட்டத்தட்ட நடிக்கிற எல்லா படங்களிலும் பொம்மை மாதிரிதான் வந்துட்டுப்போறீங்க... இன்னும் பளீர் பெர்ஃபார்மன்ஸ் உங்ககிட்ட இருந்து வரலையே?''


''ரியல் லைஃப்ல நான் பயங்கர வாயாடி! சும்மா ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு என் கிட்ட பேச வர்ற பசங்க எல்லாம், ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுற அளவுக்கு மொக்கை போடுவேன். ஆனா, 'ஆடுகளம்’ ஐரீனைப் பார்த்தா, உங்களுக்கு அப்படியா தெரிஞ்சது? ராத்திரி தூங்கிட்டு இருக்கிறப்ப எஸ்.எம்.எஸ். டோனுக்கே பதறி எழுந்திரிக்கிறவள் நான். ஆனா, இப்போ 'முனி’ பார்ட் 3’ படத்தில் நடிக்கிறேன். பேய்ப் படம் பார்க்கக்கூடப் பயப்படுற நான், இப்போ பேய்ப் படத்திலேயே நடிக்கிறேன். ஒரு ஹீரோயினுக்கு ஒவ்வொரு படத்திலும் கிளாமர், லவ்வர் கேர்ள், சென்டிமென்ட்னு ஸ்கோர் பண்ண ஏதோ ஒரு ஸ்கோப்தான் இருக்கும். அதுல மிஸ் பண்ணாம நல்ல பேர் வாங்கினாலே, பெரிய விஷயம். கொஞ்ச நாள் காதலிச்சுட்டு, அப்புறமா சீரியஸா நடிக்கலாம்!''



''கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்களே... ஏன்?''



''கல்யாணம் ரொம்பக் கஷ்டம். லைஃப் முழுக்க ஒருத்தரோடவே வாழணும்னா ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமா இருக்கணும்.  மனசு முழுக்க மகிழ்ச்சி இருக்கணும். அப்படி என்னை ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா வெச்சிருப்பார்னு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி ஒருத்தரை இன்னும் நான் பார்க்கலை. அப்படி ஒரு ஆள் கிடைச்சா, கல்யாணம் பண்ணிக்குவேன். ஒருவேளை சிக்கலைன்னா, கடைசி வரை நோ கல்யாணம்!''
''உங்களைப் பத்தி நீங்களே ஒரு ரகசியம் சொல்லுங்க..?''



''என்னைப் பத்தி இல்லை... என் தங்கச்சி பத்தி சொல்லவா? என் தங்கச்சி ஷாகுன் காலேஜ் முடிச்சுட்டு வேலைல  இருக்கா. அவளுக்கும் நடிக்க ஆசை. இன்னும் கன்ஃபர்ம் ஆகலை. ஆனா, சீக்கிரமே நடிப்பா. வர்ற ஆஃபர்ல எது பெஸ்ட்டோ, அதைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு உதவுவேன். அப்புறம் இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் வாங்குறது அவ சாமர்த்தியம்!''



''ஏற்கெனவே அனுஷ்கா, இலியானா, சமந்தா, காஜல்னு ஏகப்பட்ட போட்டி... இதுல வீட்ல இருந்து வேற ஆளைக் கூட்டிட்டு வர்றீங்களே?''


  
''ஒரே விஷயம்தான்... காஜல், இலியானா, தமன்னா, அசின்... இப்போ என் தங்கச்சி... யாரா இருந்தாலும் இந்த டாப்ஸி சமாளிப்பா!''


''சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?''  



''காஜல் ரொம்ப ஸ்வீட். ஜீவா, ஆர்யா ரொம்ப க்ளோஸ். தனுஷ்கூட இப்பவும் டச்ல இருக்கேன். அஜித், நயன்தாராவும் பழக்கம்தான். எனக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க!''


''பார்த்ததில் பிடிச்ச படம்?''


''பர்ஃபி. ரொம்ப சிம்பிள் ஸ்டோரி. எந்த மசாலாவும் இல்லாம இதயம் தொட்ட படம்.''


நன்றி - விகடன்

1 comments:

RAMA RAVI (RAMVI) said...

டாப்ஸி தங்கச்சி தேறிச்சோ இல்லையோ உங்களுக்கு ஒரு பதிவு தேறிச்சு!!