Thursday, March 28, 2013

மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

                                             
                                                 காலை 10.30 க்கு படம் னு அவசர அவசர மா போனா... அங்க 10.40 ஆகியும் ஆப்ரேட்டர் வரல... எத்தன மணிக்கு படம் னு விசாரிச்சா... தம்பி இது வரைக்கும் அஞ்சு பேர் தா இருக்காங்க.. 10.50 வரைக்கும் பாத்துட்டு 10 பேர் வந்தா தான் படம் னு சொன்னாங்க. எப்டியோ..காலேஜ் லீவு ங்கறதால.. பக்கத்து காலேஜ் பசங்க ஒரு அஞ்சு பேர் அப்டி இப்டி னு ஒரு 15 பேர் வந்துட்டாங்க. உடனே தியேட்டர் ல குஷி ஆகி ஒரு வழியா படம் போட்டாங்க.


                                                    2012 ல ரிலீஸ் ஆன ஜெயராம் நடிச்ச மலையாளப் பட டப்பிங் னு ரீல் போட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.சரி படத்தோட கதைக்கு வருவோம்... பொண்ணுங்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தன் துணையை தேர்ந்தெடுக்கற உரிமை அந்த ஊர் ஜமீன் குடும்பத்துக்கு இல்ல..பெரியவங்களா பாத்து வைக்குற ஒரு பேயையோ இல்ல வில்லனையோ தான் கட்டிக்கிட்டு மாறடிக்கனும். அந்த ஊர் ஜமீன் பையனுக்கும் அதே ஊர் சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணுக்கும் லவ் ஆகிடுது.



 எப்படியும் நம்மள சேர விடமாட்டங்கன்னு ஓடிப் போக முடிவு பண்றாங்க (உண்மையான காதலாம்......)  இது அந்த பையனோட மூணு அண்ணன்களுக்குத் தெரிஞ்சு அந்த பொண்ணு குடும்பத்த வெட்டி கொன்னுட்டு, பொண்ண .. அதாவது தாமிரபரணி படித்தில் நடித்த பானுவ.. உயிரோட கொளுத்தறாங்க... செத்தா ஒன்னா சாவோம் னு அந்த பையனும் பானுவோட சேர்ந்து ஒண்ணா எரிஞ்சு போயிடறான்.அதுல பானுவோட ஆவி மட்டும் துர் ஆத்மாவா வெறியோட பழி வாங்க அலையுது. கடைசில அது பழி வாங்குச்சா இல்லையா? ஆடியன்ஸ் இந்த படத்துக்கு வந்து எப்பிடி பலி ஆனாங்க என்பதை எந்த அளவுக்கு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு மொக்கயா சொல்லி இருக்கற படம் தான்  மாந்திரீகன்.

                                                       நமக்கு நல்லா தெரிஞ்ச  ஜெயராம் தான் பட ஹீரோ.தன் அப்பா மாந்திரீகன் என்பதால் அவர் அடக்கிய பேய்யை உங்களால்தான்  அடக்க முடியும் என மந்திரம் தந்திரம் தெரியாத ஜெயராமை பேயை அடக்க கூட்டி வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாவிட்டாலும் ஜெயராம் காட்டும் எக்ஸ்பிரசன்கள் அற்புதம். அவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் மொக்கையைத்தான் தாங்க முடியவில்லை.



முதன் முறையாக பேயைப் பார்த்து பயப்படும் போதும், தன் காதலிக்காக மனமுருகுவதும் அவர் நடிப்பு அருமை. முகத்தில் ஆங்காங்கே தென்படும் அப்பவித்தனம் அவரது ப்ளஸ்.

                                      அடுத்து பாரட்டப்படவேண்டியவர்கள் ஹீரோயின்கள்  தாமிரபரணி பானு மற்றும் பூனம் பஜ்வா (கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர்).பேயாக வரும் பானு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏனோ வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. முகம் நிறைய பவுடரும் மைய்யும் பூசீட்டா அதுக்கு பேர் பேயாம் (அப்படி பாத்தா ஊர்ல இருக்கற பாதி பொண்ணுங்க பேய்தான்....) . ப்ளாஷ் பேக்கில் வந்த வரை அவரது நடிப்பு ஓக்கே... பேயாக வரும்போது முகத்தை வடிவேலு போல் வாய், மூஞ்சியை கண்ட படி கோணித்து.... பயம் காட்டுவதற்கு பதில் சிரிப்பு காட்டுகிறார்.

                                             

                                                   பானு,  ஜெயராமின் காதலியான பூனம் பஜ்வா வின் உள்ளே புகுந்த பின் பூனம் பஜ்வா காட்டும் முக பாவனைகள் மிக அருமை. ஏன் முக பாவனைகளே தேவை இல்லை... அவரது கண்களே போதும்.. குட் .. நல்ல முயற்சி..அவரது அப்பாவித்தனம் கலந்த எக்ஸ்பிரஸன்கள் படத்திற்கு வலிமை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரியாஸ்கான் வந்த வரை ஓக்கே.. மற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.


 


மண்ணை கவ்விய ... ச் சீ... மனம் கவர்ந்த வசனங்கள்:

1. பேய் கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்கதான் நான் உங்க கிட்ட            வந்தேன்

    அதுக்கு ஏண்டா பேய் மாதிரி கத்தற?


2. ஏய்... மாந்திரீகா..... என்ன பாத்து ஏண்டா ஒடற? உன் சக்தி அவ்ளோதானா?
      
       நா உன்ன பாத்து ஓடல... உன்ன இந்த இடத்துக்கு ப்ளான் பண்ணி வர வெச்சேன்...

3. பேய் பேசும் கேவலமான ப்ஞ்ச் : 
           
               நாங்க யாரையும் கொல்ல மாட்டோம்....ஆனா வெறி வந்தா ஒருத்தர கூட உயிரோட விடமாட்டோம்... (இங்க ஆல்ரெடி எல்லார்க்கும் வெறி வந்துருச்சு)

4.ஆஆஆஆ..........ஊஊ........ஏஏஏய்ய்.... விட்ரு.... உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.(பானு 6 முறை)

5.உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.ஆஆஆஆ..........ஊஊ....... ஏஏஏய்ய்.... விட்ரு.... வேண்டாம்.... ஏஏஈஇ (பூனம் பஜ்வா 5 முறை)


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :

1. இரண்ட ஹீரோயின்களை புக் பண்ணியது... அதிலும் தாமிரபரணி தாம்பூலம் பானு மற்றும் பூக்காடு  பூனம் பஜ்வாவை புக் செய்தது.

2. ஹீரோவாக ஜெயராமை புக் பண்ணியது.( சம்பளம் தர்லைன்னாலும் கண்டுக்க மாட்டாராம் )

3. பேய் படமாக இருந்தாலும் படத்திற்கு U சான்றிதழ் பெற்று மகளிர் அணியை கவர செய்த யுக்தி .

4. ஆரம்பத்தில் வரும் கொலையை காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

5.தமிழ் படம் போன்றும், ஹைபட்ஜெட் படம் போன்ற போஸ்டர் டிசைன்.

6. பானுவின் ப்ளாஷ்பேக் காட்சியை 3 நிமிடத்தில் முடித்தது. 

7. மந்திரம் தெரியாத ஜெயராம் பேய் ஓட்டுவதாக சமாளிக்கும் காட்சிகள்.


8.முதல் கொலை கண்ணாடி முன் பேய் கழுத்தை அறுக்கும் போது வில்லனும் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சி மிரர்ஸ் படத்தில் இருந்து சுடப்பட்டாலும்... அது வெளியில் தெரியாதவாறு சமாளித்தது.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பல மந்திரங்கள் தெரிந்தவர்களே அடக்க முடியாத துர்மாத்வாவை ஒன்றும் தெரியாத ஜெயராம் பிஸ்கட் சாப்பிடுவ்து போல அடக்குகிறார்.

2. படத்தில் மூன்று வில்லன்கள்... அதாவது அண்ணண்கள்.... இருவர் முதல் காட்சியிலேயே காலி.. மூன்றாமவரையும் அப்பொழுதே போட்டிருந்தால் படம் அப்பவே முடிஞ்சிருக்குமே....

3. வில்லனைத் தவிர படம் பூரா யாரையாவது ஆவி பானு கொன்று கொண்டே இருக்கிறார்.  இதுல லாஜிக் வசனம் “எனக்கு கிடைக்காத காதல் வாழ்க்கை யாருக்கும் கிடைக்க கூடாது” னு.... படு கேவலமா இருக்கு

4.ஜெய்ராம் தன் காதலுக்காக தன் உயிரை பணயம் வைக்கிறார்... ஓக்கே.. அதுக்காக 50 நொடில எல்லா ஓலைச்சுவடியயும் படிச்சு கத்துகிட்டு அடக்கறதுலாம் ஓவர். ( எந்திரன் ரஜினிக்கே 2 நிமிஷம் ஆகும் )

5.க்ளைமேக்ஸ்தான் செம காமெடி.. ஹீரொ ஆத்மாவோட பறந்து பறந்து சண்ட போடுறார்... அத கத்தியால குத்தி இரத்தம் வர வைக்கறார்... ஆத்மாவ தொட முடியுமா? அதுக்கு உருவம் இருக்கா?

6. இசை , ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு  சுமார் ரகம். கிராப்பிக்ஸ் மகா மட்டம்.

படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு... இவ்ளோ நாள் ஓடுனதே பெரிய ஆச்சர்யம்.. அத நான் பொய் பாத்தது அத விட ஆச்சர்யம்... வெள்ளிக்கிழமை வரை ஓடுமாம்... ஏன்னா சென்னையில் ஒரு நாள் ரிலீஸ் அங்கதான் ஆகுதாம்... பெருந்துறை முருகன் தியேட்டரில் படம் பார்த்தேன்

 




டிஸ்கி - மேலே உள்ள விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் .  எடிட்டிங்க் , டைரக்சன் மேற்பார்வை மட்டும் நான் - சி பி. அட்ரா சக்க தி மு க கட்சி மாதிரி , குடும்ப உறுப்பினர்கள் யார் வேணும்னாலும்  ஆக்ரமிப்பாங்க , தமிழர்கள் அதை சகிச்சிக்கனும் ஹி ஹி , மார்ச் மாச ஒர்க் லோடு , நல்ல படங்களுக்குப்போகவே நேரம் இல்லை , குப்பைப்படத்துக்கு எங்கே போக ?


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 36 ( டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம் )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



ரேட்டிங்க் - 2 /5

 


0 comments: