Showing posts with label பாலா. Show all posts
Showing posts with label பாலா. Show all posts

Friday, February 16, 2018

நாச்சியார் - சினிமா விமர்சனம்

Image result for naachiyaar movie stills

17 வயசு பொண்ணு , அதே வயசு மைனர் பையன் இவங்களுக்குள்ள நிகழும் காதல் மாதிரி ஏதோ 1 , ஒரு கட்டத்துல கட்டில்ல 2 பேரும்  ஒரு கேம் விளையாடிடறாங்க , பிரியறாங்க . பொண்ணு மாசமா இருக்கு , டி என் ஏ டெஸ்ட் பார்த்தா அப்பா அந்தப்பையன் இல்லை , யார் கெடுத்திருப்பாங்க என்ற அரிய தகவலை கண்டு பிடிப்பது தான் பின் பாதிக்கதை 


 படத்தோட ஹீரோவா  அசால்ட் ஜோதிகா . இவரு ஆக்டிங்க்கு மெனக்கடலை , தன் கணவர் சூர்யாவோட சிங்கம் 1,2,3 பாகங்களைப்பார்த்து அசால்ட்டா முடிச்ட்டாங்க , இவரோட பாடி லேங்குவேஜ் பிரமாதம் , சூர்யா இவர் கிட்டே கத்துக்க வேண்டியது அடக்கி வாசிக்கும் வசன உச்சரிப்பு , ஜோ சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹரி தான் இயக்கி இருப்பாரோனு டவுட் கிளப்பற மாதிரி  காமரா பறக்குது , செம ஸ்பீடு காட்சிகள் , எடிட்டிங் 


படத்தோட அடுத்த ஹீரோ ஜிவி பி . இவரும் குறை சொல்ல முடியாத நடிப்பு , ஆரம்பக்கட்ட்சிகளில் பாலா படங்களுக்கே உரிய மட்டமான முக ஒப்பனை ஹீரோவா வந்தாலும் போகப்போக கருணை மனசுடன் அவரை அழகா காட்டி இருக்காரு 

 இன்னொரு நாயகியா அந்த புதுமுகம், தமிழுக்கு நல் வரவு , காதல் காட்சிகளீல் சில இடங்களீல் யதார்த்தம் , பல இடங்களில் நாடகத்தனம்.

இளையராஜாவின் பிஜிஎம் பற்றி சொல் வது  மயில் தோகையை வர்ணிப்பது போல 


வில்லனாக வருபவர் கச்சித நடிப்பு , ஜோ வின் கணவரா வர்றவர் தம்பி மாதிரி இருக்கார் 

ஜோ வின் மகள் அவரை எடுத்தெறிந்து பேசுவது செயற்கை திணிப்பு 


இடை வேளை ட்விஸ்ட் , க்ளைமாக்ஸ் அதிரடி வழக்கம் போல்.


Image result for naachiyaar movie stills


நச் டயலாக்ஸ்


முறைக்காத.நீ சாதாரணமாப்பாத்தாலே முறைக்கற மாதிரிதான் இருக்கு


நான் அந்த மாதிரி ஆள் இல்ல சார்

எல்லா பொறம்போக்குகளும் அப்டிதான் சொல்றாங்க


என்னடா ,இப்பதான் பொண்ணைப்பாத்த ,அதுக்குள்ள இருமுடி கட்டீட்ட போல


என் லவ்வர் தாங்க எனக்கு
அம்மா
என்னை மாதிரி பசங்களுக்கு காதலி தாங்க அம்மா
என்னடா சொல்ற?புரியல


எதுக்கு என் கிட்ட இருந்து ரத்தம் எடுக்கறீங்க?
உனக்கு பொம்பள வியாதி இருக்கா?னு பாக்க
நான் ஆம்பளைங்க,எனக்கு எப்டீ பொம்பள வியாதி வரும்?


நீ தென் கலையா?வட கலையா?
தோப்பனார் தென்கல ,அம்மா வடகல
நினச்சேன்


பணம் கறது மீத்தேன் மாதிரி,அதல பாதாளம் வரை போய் நாசம் பண்ணீடும்

ட்விட்டரு ,FB , வாட்சப் னு நெட்ல குடி இருக்கற பொண்ணுங்களைக்கூட நம்பிடலாம் ,ஆனா ஊமக்கோட்டான் மாதிரி இருக்கற பொண்ணுங்களை மட்டும் நம்பவே கூடாது


முதல்ல விசாரிச்ட்டு அப்றமா அடிக்கலாமில்ல?
;சாரி,நான் அடிச்ட்டுதான் விசாரிக்கற பழக்கம்





தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


மைனர் பையன் ,மைனர் பொண்ணு லவ் பண்ற கதைதான் ,அதனால இயக்குனர் திரைக்கதைல மேஜரா எதுவும் யோசிக்கல போல.இடைவேளை வரை சுமார் , ஸ்லோ


Image result for naachiyaar movie stills


சபாஷ் டைரக்டர்


1  வழக்கமா பட ஹீரோவை  ரொம்ப கேவலமான மேக்கப்ல காட்றவர் இதுல கொஞ்சம் திருந்தி இருக்கார்

2  வழக்கமா வன்முறை ல கொடிகட்டிப்பறக்கும் இவரது சை க்கோத்தன இயக்கம் இதில் குறை வு


3 ஒரு ஆச்சரியமான மாற்றம் படத்தில் யாரும் கஞ்சா அடிக்கலை, 

4 பின் பாதி திரைக்கதை இயக்கம்  கனக்ச்சிதம்


5   பாலாவுக்கு பொதுவா காமெடி அவ்வளவா வராது , ஆக்சன் காட்சிகளீல் கூட இயல்பான காமெடியை கொண்டு வர முயற்சி  செய்தது அழகு 



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஒரு கோடீஸ்வர வீட்டில் வேலை பார்க்கும் நாயகி செலவுக்கு 200 ரூபா கேட்பதை அந்த வீட்டு ஓனர் 10 நிமிசம் டைம் எடுத்து தன் மனைவியிடம் வியாக்கியானம் பேசுவது செம செயற்கை


2 பொதுவா அழகான பொண்ணுங்க எதுனா உதவி கேட்டா பிற்கால நலன் கருதி ஆம்பளைங்க டக்னு செய்வதுதான் வழக்கம். பிசாத்து 200 ரூ பாய்க்கு அவர் ப்ம்முவது  காமெடி

3   பா ரஞ்சித் , பாலா போன்ற இயக்குநர்கள் கதைக்கு சம்பந்தம் இருக்கோ இல்லையோ பிராமணர்களை போகிற போக்கில் திட்டுவது போல வோ நக்கல் அடிப்பது போலவோ காட்சிகள் , வசனங்கள் வைப்பது ஏனோ? 


4  முந்தைய படமான தாரை தப்பட்டை  கொடுத்த அடியின் காரணமா இதில் வன்முறைக்கு கடிவாளம் போட்டிருப்பது ஓக்கே , போலீஸ் ஆஃபீசராக வரும் ஜோதிகா  தன் கார் டிரைவரை வாடா போடா என பேசுவது  ஓவர்


5 அதே போல் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் உயர் அதிகாரி லேடியிடம் பஞ்ச் டயலாக் பேசுவதும் செயற்கை



சி.பி கமெண்ட் -நாச்சியார் − பாலா தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி சராசரி மசாலா்.முன் பாதி சராசரி விடலை லவ் ,சுமார் ,பின் பாதி அதிரடி ஸ்பீடு.பாலா ரசிகர்களுக்கு பிடிக்காது,சராசரி ரசிகர்களுக்கு Ok.ஜோதிகா,BGM குட்.விகடன் 41 , ரேட்டிங் 2.75 / 5


பெண்களும் பார்க்கலாம்,. அதிகம் வன்முறை , கச்சடா காட்சிகள் இல்லை,

மீடியமா எல்லா செண்ட்டர்களிலும் ஓரளவு ஓடிடும்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)  - 41


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3/5


c @ erode aanoor




Thursday, August 06, 2015

சண்டி வீரன் - களவாணியின் கமர்ஷியல் + வாகை சூடவாவின் கலை நயம் - இயக்குநர் சற்குணம் பேட்டி

கிராமத்து படங்களை எடுக்கும் தற்கால இயக்குநர்களில் முக்கியமானவர் சற்குணம். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, வரிசையில் தற்போது ‘சண்டி வீரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த அவரிடம் உரையாடியதில் இருந்து..
‘சண்டி வீரன்’ படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்களைப் பார்த்தால் நீங்கள் கமர்ஷியல் படங்கள் பக்கம் திரும்பியது போல் இருக்கிறதே?
என்னுடைய முந்தைய படங்களில் கமர்ஷியல் விஷயங்களுடன் ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லியிருப்பேன். அது இந்த படத்திலும் இருக்கிறது. ‘களவாணி’ படத்தில் இருந்த எதார்த்தத்தை மீறாத கமர்ஷியல், ‘வாகை சூட வா’ படத்தில் இருந்த தரம் இப்படி இரண்டையும் கலந்து ‘சண்டி வீரன்’ படத்தை எடுத்துள்ளேன். அதற்காக அந்த இரண்டு படங்களின் கதையையும் சேர்த்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன் என்று நினைக்க வேண்டாம். இப்படத்தின் இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுபோல காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தின் தலைப்பை பார்த்தால் ஜாதியை மையப்படுத்திய படமாக இருப்பது போல் தெரிகிறதே?
கண்டிப்பாக கிடையாது. இந்தப் படம் 100 சதவீதம் எந்த ஜாதியைப் பற்றியும் பேசாது. எந்த ஜாதியையும் உசத்தி பிடிப்பதோ, இறக்கி காட்டுவதோ என் படத்தில் எப்போதுமே இருக்காது. ஜாதியை மையப்படுத்திய படங்களை எடுக்கவும் மாட்டேன். இந்தப் படத்தில் வெறும் காதல், ஆக்‌ஷன் மட்டும் இருக்காது. அதைத் தாண்டி வேறொரு விஷயம் படத்தில் இருக்கிறது. அதை இப்போதே கூறினால் நன்றாக இருக்காது. படம் பார்க்கும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு படத்துக்கும் இடையே நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வது ஏன்?
என்னுடைய ஒரு படம் வெளியான உடன், அடுத்ததாக எந்தக் கதையைப் பண்ணலாம் என்று தேர்வு செய்து திரைக்கதை அமைக்க நேரம் எடுத்துக் கொள்வேன். கதைக்காக நேரம் எடுத்துக் கொள்வதை என்னைப் பொறுத்தவரை பலமாக கருதுகிறேன்.
‘சண்டி வீரன்’ படத்தை எப்படி இயக்குநர் பாலா தயாரிக்க முன்வந்தார்?
படத்தின் ஒளிப்பதிவுக்காக செழி யனிடம் இக்கதையை கூறினேன். அவர்தான் இந்தக் கதையை பாலா சாரிடம் கூறியுள்ளார். பின்னர் நான் அவரை சந்தித்தேன். இப்படத்தின் கதையை இடைவேளை வரை கேட்டு விட்டு, இதில் நாயகன் வேடத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். அதர்வா செய்தால் நன்றாக இருக்கும் என்றேன். அதன் பின் இரண்டாம் பாதி கேட்டார். முழுமையாக கதையைக் கூறி முடித்தவுடன் ‘நானே தயாரிக்கிறேன், அதர்வாவுக்கு சரியா இருக்கும் இல்லையா’ என்றார். அந்த இடத்திலேயே அதர்வாவுக்கு போன் செய்து வரவழைத்து இந்தப் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், எடுத்தவரை படத்தைப் பார்க்கிறீர்களா என்று பாலா சாரிடம் கேட்டேன். ‘முழுப் படத்தையும் முடி, முதல் பிரதியை பார்க் கிறேன்’ என்று கூறிவிட்டார். இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
பாலா தயாரிக்கிறார் என்பதால் முன்னணி நாயகர்களை வைத்து படத்தை எடுத்திருக்கலாமே?
படத்தின் கதையை ஆரம்ப கட்டத் தில் வேறு மாதிரி தான் எழுதியிருந் தேன். கதையின் கருவை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதும் போது நிறைய மாற்றி எழுதினேன். அப்போதுதான் அதர்வா நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
தொடர்ச்சியாக கிராமம் சார்ந்த கதைகளையே இயக்குகிறீர்களே?
நம்மை பாதித்த விஷயங்களை பட மாக எடுக்கும்போதுதான் அது நல்ல சினிமாவாக மாறும். நான் கிராமத்தில் இருந்து வந்ததால் என்னை சுற்றி நடந்த விஷயங்கள் மற்றும் மனிதர்களை வைத்து படம் பண்ணுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன், அது தான் நல்லதாகவும் படுகிறது. என்னு டைய பலம் என்ன என்று எனக்கு தெரியும்


நன்றி - த இந்து

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்



2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே



3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி






இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?



7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?



10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )



12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...



13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..



மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்



3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி



4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?



6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........



7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?



9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 



சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

Tuesday, November 27, 2012

பரதேசி - ஆடியோ விழாவில் பாலா, பாலுமகேந்திரா ,வைரமுத்து பேசியது என்ன?


விக்ரம் - சூர்யாவை விட நான் தான் சிறந்த நடிகன்! - 'பரதேசி' பாலா 

 

'அவன் - இவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் 'பரதேசி'.


அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் பிரபல இரட்டை டைரக்டர்களில் ஒருவரான ஜெர்ரி இந்தப் படத்தில் கங்காணி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை ஒட்டி டைரக்டர் பாலா சிறப்பு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி இதோ உங்களுக்காக...


கேள்வி : 'பரதேசி' என்ன மாதிரியான கதை?


பரதேசின்னா வேற ஒண்ணுமில்லை. பஞ்சம் பொழைக்கப் போற ஒரு கூட்டம். அவங்களோட கதை, அதுதான்.



கேள்வி : உங்கள் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே சினிமாவில் சீக்கிரம் பாப்புலராகி விடுகிறார்கள், ஆனால் ஹீரோயின்கள் அந்தளவுக்கு பிரபலமாவதில்லையே?



பதில் : ( சில நொடிகள் யோசிப்புக்குப் பின்...) பிதாமகன் படத்துல நடிச்ச சங்கீதா, அவ ஒரு நல்ல நடிகையாத்தானே இருக்கா... நெறைய படங்கள் நடிச்சிருக்கா? ஹிட் கொடுத்திருக்கா...? அப்புறமென்ன..? அந்த லைலா பொண்ணுக்கும் எனக்கு லவ்வுன்னு எழுதியே அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க, அப்புறம்.., ஆனால் இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாக சினிமாவுல நல்ல சான்ஸஸ் இருக்கு.



கேள்வி : இந்தப் படத்துக்காக மலைகளையெல்லாம் சொந்தமா வாங்கி ஷூட்டிங் நடத்தினீங்களாமே..?


பதில் : என்னது மலையா..? அதெல்லாம் இல்லீங்க, ரெண்டாவது மலைகளையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது, விட்டா திருநீர் மலையையே நான் வாங்கிட்டேன்னு சொன்னாலும் சொல்வீங்க போலிருக்கு. படத்துக்காக சில காட்சிகளை காடுகள்ல எடுக்க வேண்டியிருந்தது, அதுக்கு வனத்துறையினர் ரொம்ப கெடுபிடி பண்றதுனால நானே சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதுல காடு மாதிரி செட்போட்டு ஷூட்டிங் பண்ணினேன். ஆனால் மரங்களையெல்லாம் வெட்டல. அத ஒரு நியூஸா போட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க.



கேள்வி : உங்க படங்கள்ல நடிச்ச சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா இவங்கள்ல யார் சிறந்த நடிகர்ன்னு சொல்வீங்க?



பதில் : விஷாலை விட்டுட்டீங்க...என்றவுடன் ( நிருபர் ஆமாம்.. விஷாலும் என்று சொல்கிறார்) கேள்வியைக் கேட்டு சிரித்தவர் தாடையை தடவிக்கொண்டே.., இவங்கள்ல யாருமே சிறந்த நடிகன் கிடையாது. அவங்களை விட நான் தான் சிறந்த நடிகன்
என்றவுடன் ஒரே சிரிப்புச் சத்தம்.



கேள்வி : விளிம்பு நிலை மனிதர்களோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே எப்போதுமே உங்க படங்கள்ல நல்ல கருத்துக்களை சொல்றீங்க? கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணம் இல்லையா..?



பதில் : கமர்சியல்ன்னா எதைச் சொல்றீங்க? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்போதைக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் படமா எடுப்பேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்கே போதும் போதும்னு ஆயிடுச்சி, அடுத்தப் படத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை.


கேள்வி : இந்தப்படம் 'எரியும் பனிக்காடு'ங்கிற நாவலைத் தழுவி படமா எடுத்திருக்கீங்க, இப்படி நாவலையோ, சிறுகதையையோ படமா எடுக்கிறப்போ இருக்கிற சவுகரியம் எப்படி இருக்கு?



பதில் : ம்... நாமளே ஒரு கதையை சொந்தமான யோசிச்சி அதை படமா பண்றதை விட இது இன்னும் ஈசியா இருக்கு, ரெண்டாவது முழுக்க முழுக்க இது 'எரியும் பனிக்காடு' நாவல் கிடையாது, அதுல எனக்கு பிடிச்ச ஒருபகுதியை எடுத்துக்கிட்டு என்னோட கற்பனையையும் கலந்து படமாக்கியிருக்கேன்.



கேள்வி : நல்ல கலரா, அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கு கருப்பு சாயத்தை தடவி மேக்கப்பெல்லாம் போட்டு அவங்களை கருப்பா காட்டுறதை விட ஏற்கனவே கருப்பா இருக்கிற ஒரு ஹீரோயினை நடிக்க வெச்சா இன்னும் ஈசியா இருக்கும்ல?



பதில் : யாரு வேதிகாவா..? அந்தப் பொண்ணு கலர்னு சொல்லுங்க, ஆனா அழகுன்னு சொல்லாதீங்க..என்றவுடன் அங்கு சிரிப்பு சத்தம், (அப்போது, இதற்கு என்ன அர்த்தம் என்று வேதிகா பக்கத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனிடன் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டுக் கொள்கிறார்.) இல்லை அப்படின்னு கிடையாது, இந்தப் படத்துல கூட ஒரு கலர் கம்மியான மாலதிங்கிற ஒரு பொண்ணை ஒரு முக்கியமான கேரக்டரில் நான் அறிமுகப்படுத்துகிறேன். கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ அவங்களை நடிக்க வைப்பேன். கலரெல்லாம் பாக்கிறது இல்லை.



கேள்வி : இளையராஜாவை போடாம எதுக்கு ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டரா போட்டுருக்கீங்க?



சூர்யா,அடுத்து விக்ரம்,அடுத்து ஆர்யா, அப்புறம் சூர்யா,விக்ரம்ன்னு ஒரே ஆட்களோட வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க? புதுப்புது ஆட்களோட வேலை பார்க்க மாட்டீங்களான்னு நீங்க தான் விமர்சனத்துல எழுதுனீங்க...? அதனால தான் இந்தப் பையனை கமிட் பண்ணினேன். ஆனா இப்போ நீங்களே எதுக்கு ஜி.வியை போட்டீங்கன்னு கேட்குறீங்க..


இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

http://www.thamizhthirai.com/wp-content/gallery/paradesi-first-look/paradesi_first_look_exclusive_stills_01_0.jpg


பாலா என் மூத்த மகன் : பரதேசி ஆடியோ விழாவில் நெகிழ்ந்த பாலுமகேந்திரா!


"பாலா என் வீட்டிலேயே வளர்ந்த என் மூத்த மகன், அவன் தேசிய விருது வாங்கிய போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை" என்று டைரக்டர் பாலுமகேந்திரா பேசினார்.

டைரக்டர் பாலா லேட்டஸ்ட்டாக தயாரித்து, டைரக்‌ஷன் செய்து வரும் 'பரதேசி' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்திரா "பாலா என் மூத்த பிள்ளை" என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்.., " என்னுடைய 'வீடு' படத்தின் போது பாலா என்னிடம் வந்து சேர்ந்தான். அவனையும், ராம் என்பவனையும் பாடலாசிரியர் அறிவுமதி என்னிடம் கொண்டு வந்து விட்டுப் போனார். நான் பாலாவை யூனிட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் அவன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நான் “ யாருப்பா..நீ நான் உன்னை பார்த்ததே இல்லையே..? என்று கேட்டேன். அதற்கு அவன் நான் உங்கள் படத்தில் தான் வேலை செய்கிறேன். மதுரையில் படித்து விட்டு உங்களிடம் சேர வேண்டும் என்று வந்து விட்டேன், நீங்கள் தான் என்னை கண்டுகொள்ளவே இல்லை என்றான், அன்றிலிருந்து அவனை நான் என்னிடம் சேர்த்துக் கோண்டேன். அவன் என் வீட்டில் ஒருவனாக வளர்ந்தான்.


பொதுவாக நான் எல்லா படங்களின் ஆடியோ ரிலீஸுக்கும் வருவேன். ஆனால் என் மனைவி வரமாட்டார். ஆனால் இந்த பரதேசி படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு என் மனைவி அகிலாவை கூப்பிட்டபோது அவள் உடனே வந்து விட்டாள். அந்தளவுக்கு அவன் மீது ஒரு தாய் போல அவள் பாசம் வைத்திருக்கிறாள். அதனால் தான் இந்த விழா எனக்கு முக்கிமானது" என்று பேசிய பாலுமகேந்திரா.., தொடர்ந்து.., "பாலாவும் தேசிய விருது வாங்கி விட்டான், என்னுடைய இன்னொரு பிள்ளை வெற்றிமாறனும் தேசியவிருது வாங்கி விட்டான், எனது ரெண்டு பிள்ளைகளும் தேசிய விருது வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"  என்ற குறளைப் போல நான் மகிழ்கிறேன்" என்றார்.

விழாவில் நடிகர்கள் சூர்யா,விக்ரம், ஒளிப்பதிவாளர் செழியன், கவிப்பேரரசு வைரமுத்து, ஹீரோ அதர்வா,ஹீரோயின்ஸ் வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டைரக்டர் பாலாவின் 'பரதேசி' படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம் நடிகர் அதர்வா.


ஆர்யா-விஷால் இணைந்து நடித்த 'அவன் - இவன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா சைலண்ட்டாக டைரக்‌ஷன் செய்து வரும் படம் தான் 'பரதேசி'.

அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்தப் படத்துக்காக தனக்கு பழக்கப்பட்ட ஏரியாவான தேனி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். மேற்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆக்டிங் என்ற பெயரில் நடிகர் அதர்வாவை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.

அதன் ஒரு பகுதியாக அதர்வாவை சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார். கேரக்டருக்கு இந்த எடைக்குறைப்பு முக்கியம் என்று பாலா சொன்னதால் அதர்வாவும் வேறு வழியில்லாததால் ரொம்பவும் மெனக்கட்டு தனது உடல் எடையைக் குறைத்தாராம்.

இதுவரை இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இசைக் கூட்டணி போட்ட பாலா இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டராக கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த மாதம் 25-ஆம் தேதி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா.


என்னமோ போங்க.. எடையைக்குறைக்க அந்த மெடிசின் இந்த மாத்திரைனு டிவில காட்டுறதெல்லாம் வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ இந்த பாலா மெடிசின் மட்டும் கரெக்டா வொர்க்கவுட் ஆகுது; சேது விக்ரம், செய்யாத படத்துக்கு அஜீத், இப்பொ அதர்வா என.




http://www.tamil.haihoi.com/news/Dhansika%20Character%20In%20Paradesi_HaiHoi_214.jpeg
நான் பாடல்களை திருத்த அனுமதிப்பதில்லை என்று யாரோ தவறான வதந்தியை பரப்பி விட்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.




டைரக்டர் பாலாவின் ’பரதேசி’ படத்தின் எல்லா பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்...



இந்த 'பரதேசி' படம், தமிழ் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும். படத்தில், ஒரு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். இங்கே மாறுபட்டு சிந்திக்கிறவன் தான் எப்போதுமே கவனிக்கப்படுகிறான். அந்த வகையில் இயக்குனர் பாலா மாறுபட்டு சிந்திக்கிறவர்.


வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்யவிடுவதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை., நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்த படத்தில் கூட , ‘கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, ‘செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று மாற்றிக் கொள்ளலாமா? என டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொண்டேன்.


நான் எல்லா இயக்குனர்களும் சொல்லும் திருத்தங்களையும் நியாயமான காரணமாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் பெரும்பாலான இயக்குனர்கள் என் பாடல்களை என் அனுமதியோடு திருத்தியிருக்கிறார்கள், ஆனால் பாரதிராஜா மட்டும் தான் என் பாடல்களை இதுவரை திருத்தியதேயில்லை.


அதேபோல எல்லோரும் பாரதிராஜா படங்களில் வரும் நல்ல இனிமையான பாடல்களைப் போல தாருங்கள் என்று கேட்கிறார்கள், அதுதான் சொன்னேன், பாரதிராஜா என் பாடல்களை திருத்துவதிலை அதனால் அந்தப் பாடல்கள் பிரபலமாகி விடுகிறது.


இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

 நன்றி - சவுண்ட் கேமரா ஆக்‌ஷன், நக்கீரன், தினமணி

http://chennaionline.com/images/articles/October2012/7ed70fca-9621-4f3b-bf1e-e4a3043d5445OtherImage.jpg



டிஸ்கி 1 - பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது
டிஸ்கி 2 - பரதேசி - கலக்கல் ட்ரெய்லர்,
டிஸ்கி 3 - பாலாவின் பேட்டி

http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html


http://sim.in.com/f4f460a229d5c7e281072787ca350276_ls.jpg 

Sunday, November 25, 2012

பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது

எரியும் பனிக்காடு எனும் நாவலைத்தான் பாலா பரதேசி ஆக்கி இருக்கிறார். அது பற்றி திரு எஸ் ராம கிருஷ்ணன்


சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது.

இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள்.

1940 ம் ஆண்டுகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் கால் பதித்த டேனியல் அங்குள்ள நிலவிய சகிக்க முடியாத மனிததன்மையற்ற சூழலைக்கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார்.

தேயிலைத் தோட்டத்தின் பனிமூட்டத்தில் மறைந்து போயிருந்த ஆயிரமாயிரம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை நேர்த்தியாக பதிவுசெய்திருக்கிறது டேனியலின் நாவல். பிளான்டேஷன் பனோரமா என்ற கட்டுரைத்தொகுப்பும் டாக்டர்ஸ் டேல்ஸ் என்ற சிறுகதை தொகுப்பையும் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் டேனியல்.  அவை இன்னமும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. 1969ல் இந்த நாவல் வெளியான போது அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் துணை குடியரசு தலைவர் விவிகிரி.

**

1925 ஆண்டின் டிசம்பரில் நாவல் துவங்குகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் அன்றாட வேலை செய்து பிழைக்கும் கருப்பனின் வாழ்வு விவரிக்கபடுகிறது. ஆறுமாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கருப்பன் வேலை கிடைக்காத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகிறான். அவன் மனைவி வள்ளி இருப்பதைக் கொண்டு காலத்தை ஒட்டுகிறாள். நாளைக்கு என்ன செய்வது என்ற கவலை அவன் மனதை அரிக்கிறது. வேலை தேடி அதிகாலையில் அருகாமையில் உள்ள ஊரான கயற்றாறுக்கு புறப்படுகிறான்.

கயற்றாறின் அன்றைய காட்சி விவரிக்கபடுகிறது. உணவங்ககளில் தலித் மக்களுக்கு தனிக்குவளை தரப்படுவது. அவர்கள் தரையில் உட்கார்ந்து தனியே சாப்பிட வேண்டும் என்று கட்டாயபடுத்துவது. சிரட்டையில் உணவை கொண்டுவந்துவைத்துவிட்டு போய்விடும் பழக்கம் என யாவும் விவரிக்கபடுகிறது. அந்த அவலங்களுக்கு நடுவே வேலை கேட்டு யாசிக்கிறான் கருப்பன்.

அப்போது தேயிலை தோட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் கங்காணியான சங்கரபாண்டி. அவன் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் நீ உன் மனைவியை கூட்டிக் கொண்டு வந்துவிடு என்று ஆசைவார்த்தை காட்டி அவனை நம்ப வைத்து முன்பணம் தந்து அனுப்பி வைக்கிறான்

வேலையில்லாமல் கரிசல்காட்டில் கிடப்பதை விட தேயிலை தோட்டவேலைக்கு போகலாம் என்றுகருப்பனும் அவன் மனைவியும் கிளம்புகிறார். அவர்களைப் போல கூலிகளாக அழைத்துவரப்பட்டவர்கள் ஒன்றாக ரயிலில் பயணம்செய்கிறார்கள். பலிமுகாம்களுக்கு ரயிலில் யூதர்கள் அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகளை நினைவுபடுத்துவது போன்றிருக்கிறது இந்த ரயில் பயணவிவரணை.

ரயிலில் பயணம் செய்து இறங்கி நடந்து மலையேறி அவர்கள் தேயிலைத் தோட்டம் உள்ள மலைப்பகுதிக்கு செல்வதற்குள் இருட்ட துவங்கிவிடுகிறது. இந்த பயணம் நாவலின் மிக முக்கிய பகுதியாக விவரிக்கபடுகிறது. கண்முன்னே விரியும் காட்சிகள் போல எழுத்தின் வழியே அவை நமக்கு புலப்படுகின்றன.

அவர்கள் நினைத்தது போலின்றி தேயிலை தோட்டத்து வேலை ஒரு அடிமை வாழ்வு என்பது போய் இறங்கிய முதல் நாள் இரவே தெரிந்து போய்விடுகிறது. அந்த மலையிலிருந்து எவரும் தப்பிபோக முடியாது என்ற நிலையில் அவர்களை ஆடுமாடுகளை போல கொட்டடியில் அடைக்கிறார்கள். குளிரும், கடினமான மலையில் ஏறி நடந்த வேதனையும் அவமரியாதையாக நடத்தபடுவதும்  அவர்களை உறக்கமற்று செய்கிறது.

மறுநாள் அவர்கள் கூலிகளாக பதிவு செய்யப்படுகிறார்கள். அங்கு காரணமில்லாமல் கருப்பன் அடிபடுகிறான். அவன் மனைவியை பகிரங்கமாக ரசிக்கிறான் எஸ்டேட் நிர்வாகி. இங்கே நடப்பவற்றை சகித்து கொண்டால் மட்டுமே வாழமுடியும் எதையும் சகித்து கொள்ளுங்கள் என்று உடன் இருந்தவர்கள் அமைதிபடுத்துகிறார்கள். ஆனால் கிராமத்து மனிதர்களான கருப்பனுக்கும் வள்ளிக்கும் இந்த அவமானங்கள் மிகுந்த வலியை உருவாக்கின்றன.

அங்கிருந்து வெளியேறி போகவே முடியாது என்ற  நிலையில் உடல்வருத்தம் பாராமல் அடிமை வாழ்வை நடத்த துவங்கி மூன்று ஆண்டுகள் கூலிகளாக அவர்கள் வேலை செய்வதையும் அந்த நாட்களில் பாலியல் ரீதியாக வள்ளி சந்திக்கும் நெருக்கடியும் கருப்பன் அவமதிக்கபடுவதும் அடிவாங்குவதும், அவர்களை போன்ற சக தொழிலாளர்களை வெள்ளைகார முதலாளிகளும் அவர்களது ஏவல் நாய்களும் பன்றிகளை விடவும் மிக மோசமாக நடத்தும் விதமும் விஸ்தாராமாக விவரிக்கபடுகிறது.

ஒருவகையில் அன்றைய தேயிலைத் தோட்டம் ஒரு இருண்ட உலகம். ஒரு நரகம். அதன் அவலங்கள் உலகம் அறியவில்லை. முறையான சாலைகள் கிடையாது. கடுங்குளிர். போதுமான உணவில்லை. போதுமான உடையில்லை. உறக்கமில்லை. நோய்மை எதிர்பாராத சாவு, நம்பிக்கையிழப்பின் உச்சநிலை என்று நாவல்  காட்டும் மலைவாழ்வு அதிர்ச்சியானதொரு உண்மை.

தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பெண்கள் பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகிறார்கள், ஆண்கள் காரணமின்றி அடித்து நொறுக்கபடுவது. அன்றாட உணவிற்கு கூட போராட வேண்டிய சூழல் என நீளும் தேயிலைத் தோட்ட வரலாறு கண்முன்னே கதையாக விரிவடைகிறது.

நாவல் வாசிப்பின் ஊடாக வாசகன் திகைத்தும் கலங்கியும் நிற்கும் தருணங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டத்தில் திடீரென காய்ச்சல் பரவுகிறது. மலேரியா போன்ற கடும் சுரத்தில் பாதிக்கபட்டு நடுங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கு முறையான மருத்துவர்கள் கிடையாது. கம்பௌண்டராக இருந்த ஒருவர் மருத்துவராக வேலை செய்கிறார். அவராலும் அத்தனை நோயாளிகளையும் கவனிக்கமுடியவில்லை.

கருப்பனுக்கும் காய்ச்சல் அடிக்கிறது. நடுங்குகிறான். மருத்துவர் வந்து மருந்து தருகிறார். வள்ளி செய்வதறியாமல் தடுமாறுகிறாள். நோய்மையிலும் மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்படியாக கங்காணி மிரட்டுகிறான். தன்னால் முடியாது என்று கருப்பன் சொன்னதும் அவன் மனைவியை வேலைக்கு அனுப்ப சொல்லி கத்துகிறான். வேறுவழியில்லாமல் அவள் வேலைக்கு செல்கிறாள். நோய் முற்றி இறந்தவர்கள் அதே மண்ணில் புதைக்கபடுகிறார்கள். நோய் பலரை காவு கொள்கிறது. அதே நேரம் இதே எஸ்டேட்டில் வெள்ளைகாரர்கள் மதுவிருந்து நடத்தி தங்கள் வாரஇறுதி கொண்டாட்டங்களை இசையோடு கழிக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை எந்த அர்த்தமும் இன்று காலனிய பிரபுக்களுக்கு அடிமைதொண்டு செய்தவற்கே முடிந்து போகிறது. குளிரில் பெண்கள் விரல்கள் எரிய தேயிலை கொழுந்து கிள்ளுகிறார்கள். ஆனால் அதை எடைபோடும் ஆள் பாதியை தனது கள்ளமனைவியின் பெயரில் பதிவு செய்துவிடுகிறான். அழகான பெண்ணாக இருந்தால்இச்சைக்கு மயங்கும்படியாக வற்புறுத்துகிறான்.

நாவல் முழுவதும் வள்ளியின் மீது இச்சை மிகுந்த கண்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு பக்கம் தொழிலாளர்கள் கீழ்தரமாக நடத்தபடுகிறார்கள். இன்னொரு பக்கம் தேயிலைத் தோட்டத்தை நிர்வாகம் செய்கின்றவர்கள் அதை சுரண்டி வாழ்கிறார்கள். அப்படி சுரண்டி வாழ்வதற்காக தனது மனைவியை வெள்ளைகாரனுக்கு கூட்டிக் கொடுக்கிறார்கள். வீட்டில் விருந்து தந்து  வெள்ளைகார பிரபுக்களை குளிப்பாட்டுகிறார்கள். ஒருவருக்கொருவர் குழிதோண்டி புதைத்து கொள்கிறார்கள். பிழைப்பிற்காக மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் ஒட்டுண்ணிகள் சிறந்த உதாரணம்.

நாவலின் சிறப்பு அது கவனம் கொள்ளும் அடிநிலை மக்களின் வாழ்வு. நேரடியான அனுபவம் கொண்டவர் டேனியல் என்பதால் துல்லியமாக அதை விவரித்திருக்கிறார். அதுபோலவே இயற்கையை உற்று நோக்கி அவதானிக்கும் கூர்மை அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவேதான் தேயிலைத் தோட்டங்களில் உள்ள பறவைகள், பூச்சிகள், விதவிதவிதமான பூக்கள், ஒடைகள், மழைக்காலத்தின் அடைமழை. ஆளை மறைந்து பெய்யும் பனி என்று இயற்கையின் அத்தனை நுட்பங்களையும் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மருத்துவர் என்பதால் அவருக்கு நோய்மை பற்றியும் அதனால் உருவாகும் வலியும் உளப்பிரச்சனைகளும் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த நாவலில் எல்லா கதாபாத்திரங்களின் மனநிலைகளும் விரிவாக வெளிப்படுத்தபட்டுள்ளன. மோசமான குணமுடைய கதாபாத்திரங்கள் கூட அப்படி நடந்து கொள்வதற்கான காரணங்கள் விவரிக்கபடுகின்றன.

நாவலின் ஊடாக டேனியல் போல இரக்கமனது கொண்ட மருத்துவராக  ஆபிரகாம் என்ற ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறார்.  தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்து முதலாளிகளுடன் போராடுகிறார். தொழிலாளர்களை பரிவோடு கவனிக்கிறார். வள்ளி கருப்பன் இருவருமே இவரது வருகைக்கு பிறகு ஆறுதல் அடைய துவங்குகிறார். நோய்வாய்பட்ட  வள்ளி மீண்டும் தனக்கு ஒரு புதுவாழ்வு பிறக்க போகிறது என்று நம்பிக்கை கொள்கிறாள். அவர்களை போலவே அங்கிருந்த பலரும் தங்களுக்கு இனிவிடிவு காலம் என்று நம்புகிறார்கள். ஆனால் எதிர்பாராமை அவர்கள் மீழ கவிழு கருப்பனின் கனவு நிர்மூலமாக்கபடுகிறது.

நாவலின் அத்தியாயங்கள் துவங்கும் போது அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள்கள் டேனியலால் இணைக்கபட்டிருக்கின்றன. அவர் எந்த அளவு ஆழ்ந்து இலக்கியம் படித்தவர் என்பதை அது ஒரு பக்கம் நிருபிக்கிறது.  டிக்கன்ஸில் துவங்கி காந்தி, தோரு, லாங்பெல்லோ என்று விரிந்து பைபிள் வரையான பல்வேறு முக்கிய பகுதிகள் மேற்கோள்களாக தரப்படுகின்றன. ஒருவகையில் இந்த மேற்கோள்கள் அத்தியாயங்களின்  பிரதான அம்சத்தின் குறியீடுகளை போல காணப்படுகின்றன.

உயிரியல் ரீதியாக பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான் என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும்.

நான் வாசித்தவரை இந்திய நாவல்களில் மிக அரிதாகவே தோட்ட தொழிலாளர்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் விஷகன்னிகா என்ற நாவலை வாசித்திருக்கிறேன். புதுமைபித்தன் துன்பக்கேணி என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். மலையக தேயிலை தோட்ட வாழ்வு பற்றிய தனித்த நாவல்கள் இலங்கையில் வெளியாகி உள்ளன.  சமீபத்தில் கூட டார்ஜலிங் என்ற பெயரில் தேயிலை தோட்டம் குறித்து ஆங்கில நாவல் வெளியாகியிருக்கிறது.

டேனியலின் கதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சி சொல்லில் அடங்காதது.

தேயிலை தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடப்பதையும் பிழைக்க வந்து அங்கேயே மடிந்து போன நூற்றுக்கணக்கான மக்களின் வலி நிரம்பிய குரல்கள் இன்றும் காற்றில் கேட்பதையும் நாவலின் வழியே உணர முடிகிறது.

சுரங்க தொழிலாளர்களை பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்க தொழில் முறைக்கே பல புதிய சட்ட மாற்றங்களை கொண்டுவந்தது. டிக்கன்ஸின் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் புதிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் ஒரு போராளியாக மலையக மக்களின் வாழ்வை செம்மைபடுத்த முன்நின்ற டேனியலின் படைப்பு நேர்மை நாவல் முழுவதும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற நெருக்கத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வந்த  மொழிபெயர்ப்பாளர் முருகவேள் பாராட்டுக்கு உரியவர். நாவலை வெளியிட்ட விடியல் பதிப்பகத்திற்கு இந்த நாவல் வெளிவரக்காரணமாக இருந்த நண்பர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்று இதைச் சிபாரிசு செய்கிறேன்.

எரியும் பனிக்காடு. பி.எச்.டேனியல்.  தமிழில் இரா. முருகவேள். விடியல் பதிப்பகம். கோவை.  விலை ரூ.150.


நன்றி - எஸ் ராம கிருஷ்ணன்

பரதேசி - கலக்கல் ட்ரெய்லர், பாலாவின் பேட்டி

http://chennai365.com/wp-content/uploads/Poster/Paradesi-Movie-Latest-Posters/Paradesi-Movie-Latest-Posters-Stills4355Aa12.jpg

பாலாவின் பரதேசி படம் விரைவில் ரீலிஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்



. இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு பரதேசி என்று பெயரிட்டிருக்கிறார் பாலா. படத்தின் சூட்டிங் முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து பாலா,


. இதனால் அடுத்த மாதம் மத்தியில் பரதேசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரதேசி படத்துக்கு பிறகு விஷாலை வைத்து படம் இயக்க பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.


நன்றி - தினமலர்



பாலாவின் ’பரதேசி’! சில தகவல்கள்!


அவன்-இவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் ’பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா,தன்ஷிகா,வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘எரியும் தணல்’ என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்படும் பரதேசி. தமிழ்நாட்டின் மலைக்கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த பரதேசி, கேரளாவின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மூணார், குற்றாலம் போன்ற பகுதிகளில் கடைசிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது டப்பிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது பரதேசி யூனிட்.


இந்த படத்தில் 
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா அரவான் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்ஷிகாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் போனதால் தன்ஷிகாவிற்கு எமாற்றமே.ஆனாலும் மனம் தளராமல் பாலா படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் தன்ஷிகா. 

பாலா படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சினிமா உலகில் ஒரு நல்ல மார்கெட் கிடைக்கும். எனவே தன்ஷிகா அரவானில் விட்டதை பரதேசியில் பிடிக்கிறாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மாத இறுதியில் பரதேசி படத்தின் இசை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. பரதேசி படத்தின் மொத்த ஷூட்டிங் ஷெட்யூல் 90 நாட்கள் தான் என்கிற போது படம் ரிலீஸ் செய்ய தாமதம் ஆகாது என்கின்றனர் படக்குழுவினர்.
 
 நன்றி - நக்கீரன் 

http://www.cinegemini.com/wp-content/uploads/2012/10/bala-in-paradesi-movie-stills-adharvaa-murali-9.jpg

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



திரைப்படத்தின்  படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது.



சிறப்பு தகவல்கள்:


http://www.galatta.com/assets/gallery/movie/paradesi-9683/image-big/paradesi-18.jpg

இயக்குனர் பாலா இசை அமைப்பாளர் G V பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் முதன் முறையாக இணைந்து பணி புரிந்திருக்கிறார்.

பரதேசி படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.




இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியிட உறுதி செய்யப்பட்டுள்ளது.


நன்றி - தமிழ் மீடியா  

ஆனந்த விகடனில் வந்த பரதேசி பாலாவின் பேட்டி -http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html





Thursday, October 11, 2012

பரதேசி -இயக்குநர் பாலா பேட்டி

சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்!"


'பரதேசி' பாலா
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPhnhmo-P9VVq0EljHSVawfVso7iHmhA43mQOzoiVOHy_KJUmhn-kDpXq3MDaiRat5a2IiA8EUxoEWLwEFcp5CBJNh6UqY9J1QvAByEIvZtIfqbkQfNQ-3C0IR6QPkhK-e227y2GDfJOY/s400/2004092113060201.jpg

'வலி சொல்லவே இல்லையே
வாய்மொழி
கண்ணீருதான் ஏழையின்
தாய்மொழி’




- வைரமுத்துவின் பாடல் வரிகள் எடிட்டிங் அறையின் வெளியே சன்னமாகக் கேட்கின்றன.



அதர்வாவா இது? ஆச்சர்யம் கண்களில் விரிய எதிரில் இருந்த புகைப்படங்களில் அடிமைகளின் உறைந்த சரித்திரம். 100 வருடம் வளர்கிற தேயிலைச் செடிகளின்  இலைகளைப் பறித்து, நறுக்கிக் குறுக்கி வளரவிடாமல் ஒரு செடியாகவே வைத்திருக்கிற பெரும் சோகம். நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்காக, தேயிலைத் தோட்டங்களில் காலம் காலமாக ரத்தம் சிந்திய கொத்தடிமை உயிர்களின் உலகம்.



எடிட்டிங் அறையில் இருந்து பாலா வெளியே வருகிறார். உரையாடலில் இருந்து...



''பாலா பட வரிசையில் 'அவன் இவன்’ பெரிய ஏமாற்றம் தந்துச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு?''



''ஒண்ணும் ஆகலையே'' எனச் சிரிக்கிறார். ''சினிமா ஒரு பரமபதம். பகடைகள் இங்கே உருட்டப்பட்டுக்கிட்டே இருக்கும். எப்போ ஏணி... எப்போ பாம்பு வரும்னு  தெரியாது. தெரிஞ்சா அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு? 'அவன் இவன்’ உங்க விமர்சனப் பார்வையில் தோல்விதான்.



ஆனா, என்ன விமர்சனம் வந்தா எனக்கென்ன? விஷாலுக்குள் ஒளிஞ்சிருந்த அற்புதமான கலைஞனைக்  கண்டு பிடிச்சேன். ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கும் ஆர்யாவை என் கிராமம் வரைக்கும் அழைச்சுக் கிட்டுப் போனேன். என்னோட தயாரிப்பாளரை நிம்மதியா தூங்க வெச்சேன். இது மாதிரி சில நல்ல விஷயங்கள் 'அவன் இவன்’ மூலமா நடந்துச்சு. 'ஜாலியா ஒரு படம் எடேன்’னு சொன்ன உங்களை மாதிரி ஆளுங்களே 'நீ உன் ஸ்டைல்லயே படம் எடுடா’னு கேட்டுக்கிட்ட தால் இப்ப 'பரதேசி’.''





''இந்த மாதிரி டைட்டில்களை எங்கே பிடிக்கிறீங்க? 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்கே?''





''என்ன பயங்கரமா இருக்கு? நாம எல்லாருமே பரதேசிகள்தான். பிழைக்க வழி இல்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசிதான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான். கார்ல போற பரதேசியும் இருக்கான்; பிச்சை எடுக்கிற பரதேசியும் இருக்கான். இப்படி 1940-கள்ல டீ எஸ்டேட்டுக்குக் கொத்தடிமையாப் போன பரதேசிகள்ல ஒருத்தன்தான் அதர்வா. நீங்க 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்குங்கிறீங்க. இதுக்கு முதல்ல வெச்ச பேர்... 'சனி பகவான்’. சிரிக்காதீங்க!''




''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால்... இப்போ அதர்வா?''




''அதர்வாவைக் கவனிச்சுப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும்போதும் அவன் கண்ணுல மெல்லிசா ஒரு சோகம் தெரியும். ஒரு நடிகனுக்கு அது பேரழகு. நூறாவது படத்தில் தொட வேண்டிய உச்சத்தைத் தன்னோட மூணாவது படத்திலேயே அதர்வா தொட்டுட்டான்னு நினைக்கிறேன்.''



''ஒரு படத்துக்கான கதையை எப்படி முடிவு செய்றீங்க? 'ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி’யாப் பண்றீங்களா?''



''அந்தக் களத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதுல இந்தப் பரதேசியை இறக்கிவிட்டுஇருக்கேன். இன்ஸ்பிரேஷன் இல்லாம நாம யாருமே இல்லை. ஒரு மனுஷன் அவனோட இருபது வயசு வரைக்கும்தான் வாழ்றான். அப்புறம், வேலை, குடும்பம், குழந்தைகள், அவங்க கல்வினு பிழைப்புதான் எல்லாமே.




நான் தறிகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கேன். அவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள், தரிசனங்கள் என் மனசுக்குள்ள இருக்கு. உள்ளுணர்வுதான் என்னை நகர்த் துது. என்னைப் பொறுத்தவரைக்கும் கதைனு ஒண்ணு கிடையாது. பாத்திரங்கள் தான். ஒரு காதல், ஒரு துரோகம், ஒரு பகை, ஒரு வலி, ஒரு வெற்றினு அவங்களுக்குள்ளே நடக்கிற பரமபதம்தான் எல்லாம்.



'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’. இது எல்லாத்தையும் சேர்த்துவெச்சுப் பாருங்க. நான் எங்கே கதையை முடிவு பண்றேன்? இங்கே யாரும் சுயம்பு இல்லை!''




''கதாநாயகர்களை வதைக்கிறீங்களே... 'சேது’வில் தொடங்கி 'பரதேசி’ வரை உங்கள் ஹீரோக்கள் எல்லோரையும் 'ஒரு டைப்பாக’ மாத்திடுறீங்களே?''




''படங்கள் கேட்குதே... என்ன செய்ய? சினிமால ஒரு நடிகன் தனியா துருத்திக்கிட்டு தெரியக்கூடாதுனு நினைக்கிறேன். அவனை ஒரு மனுஷனா, அந்தக் கதாபாத்திரமாதான் நீங்க பார்க்கணும். அதுக் குக் கொஞ்சம் மெனக் கெடத்தான் செய்யணும்; 'ஒரு டைப்பா’ மாத்திதான் ஆகணும்!''




''இந்தப் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?''



''நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.



முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.



வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுப வத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார். நெஞ்சுக்குள்ள முள்ளு குத்துற தமிழ்!''




''ஆமா, உங்களுக்குப் பெண்கள் மீது மரியாதையே கிடையாதா? உங்க படங்கள்ல ஏன் ஆணாதிக்கம் தலைவிரிச்சு ஆடுது?''




''ஆணாதிக்கம் இருந்ததுங்கிறது உண்மைதான். எனக்கு ஒரு மகள் பிறந்து, அவள் தன்னோட பிஞ்சுக் கைகளால் அடிக்க ஆரம்பிச்சப்பவே எனக்குள் இருந்த, நான் கர்வப்பட்ட ஆணாதிக்க உணர்வு போய்டுச்சு. அவள் கற்றுத்தந்த அன்பு இந்தப் படத்தில் வேதிகா, தன்ஷிகாவுல ஆரம் பிச்சு படத்துல வர்ற ஒரு குட்டிப் பாப்பா வரைக்கும் இருக்கும்!''




''ஜாலியாப் பதில் சொல்லுங்க. பாலாவோட டாப் 10 மாதிரி வெச்சுக்கலாம்...''




''ம்... இது வேறயா?''



''பிடித்த 10 மனிதர்கள்... பிடித்த படைப்புகள் சொல்லுங்களேன்?''



''எம்.ஜி.ஆர். - 'பெற்றால்தான் பிள்ளையா’
சிவாஜி - 'தேவர் மகன்’
கலைஞர் - 'பராசக்தி’
ஜெயலலிதா - 'எங்கிருந்தோ வந்தாள்’
கமல் - 'மகாநதி’
ரஜினி - 'முள்ளும் மலரும்’
பாலுமகேந்திரா - 'வீடு’
போதும்ல?''





''இன்னும் மூணு இருக்கே...''



''இன்னுமா?''

''உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்?''




''ருத்ரய்யா, மணிரத்னம், பாலாஜி சக்திவேல்.''



''நீங்க இயக்க விரும்பின நடிகர்கள்?''



''நானா படேகர். ஜோதிகா.''



''பிடித்த நடிகர்கள்?''    



''என் பட நாயகர்கள் எல்லோரும். இப்போ தைய மனநிலையில்... அதர்வா. ஹீரோயின்... அனுஷ்கா.''



''சரி, சினிமாவுக்கு வரலைன்னா, என்னவாகி இருப்பீர்கள்?''



''டாக்டராவா ஆயிருப்பேன்... ம்ஹூம்... நான் வாழ்ந்த கேடுகெட்ட வாழ்க்கைக்கு, செத்தே போயிருப்பேன். போதுமா? முடிச்சுக்குங்க!''



நன்றி - விகடன்

Tuesday, June 21, 2011

பாலாவின் அவன் இவன் - , நோ ஜீவன் ,எஸ் காமெடி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR4VASGXr92m6x4llPrwB3NumoAQoKyoYIVro5eLYnrLYIE5OWdJpru5P3spGJrdgCr5PRJjOMlHUryxLpL40GYD_hxeDvORnC_J3r1Ms7DeG36uWxZH6ziuScw2o92PpBndAhASQymAo/s1600/avan_ivan_movie_posters_wallpapers1.jpg 

நமக்குப்பிடித்த கலைஞன் (கவனிக்க - கலைஞர் அல்ல) கம் படைப்பாளி மிக பிரமாதமான படைப்பு ஒன்றை அளிக்கும்போது மனம் குதூகலம் அடைந்து அவருக்கு கை குலுக்க கை கொடுப்போம்.அதே படைப்பாளி எப்போதாவது சறுக்க நேரிட்டால் அவருக்கு ஆதரவுக்கரம் கொடுத்து ஆறுதல் வரம் அளிப்போம். அப்படி ஆறுதல் தர வேண்டிய அளவிலான ஒரு சறுக்கல் படம் தான் பாலா எனும் கம்பீர யானையின்  அவன் இவன் .

தொடர்ந்து ஒரே விதமான படங்களை தரும் படைப்பாளி விமர்சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது பாணியிலிருந்து விலகி வித்தியாசமான படம் தர முற்படுகையில்  அவரையும் அறியாமல் அப்படம் மக்கள் ரசனையை விட்டு விலகி விட நேர்வது உண்டு.. அப்படி ஒரு விலகல் படம் தான் இது..

கதை ரொம்ப சிம்ப்பிள்.. வளர்ப்புத்தந்தையை  அவமானப்படுத்திய,கொலை செய்த வில்லனை  கொடூரமாக கொலை செய்யும் இரண்டு மகன்களின் கதை.அந்த 2 பசங்களுக்கும் உண்டான  காதல்,அவர்களுக்கிடையே யான உறவு என்று படம் ரொம்ப சாதாரண திசையில் செல்கிறது..

படத்தில் முதல் பாராட்டு விஷாலுக்குத்தான்.. என்னா ஒரு பாடி லேங்குவேஜ்.. என்னா ஒரு நளினம்.. கமல் மாதிரி பரத நாட்டியக்கலைஞர் பெண்மையின் நளினத்தை கொண்டுவருவது சிரமமான விஷயம் இல்லை.. விஷால் மாதிரி ஆண்மை மிளிரும் பாடி பில்டர்ஸ் பெண்மையின் நளினத்தை , கிட்டத்தட்ட திருநங்கை மாதிரி ஒரு லாவகத்தை முகத்தில்,உடல் மொழியில் கொண்டு வந்தது அபாரம். இந்த ஆண்டின் சிறந்த நடிகர் விருது நிச்சயம்..

http://tamil.filmychai.com/images/moviewallpapers/orginal_48596ff5-1d4a-3788-7a37-000046c0b421.jpg

ஆர்யா மட்டும் என்ன? அசால்ட்டாக நடிப்பதில் அவரை அடிச்சுக்க ஆள் ஏது?சம்பட்டைத்தலையா.. சட்டித்தலையா என்று கவுண்டமணி செந்திலைத்திட்டுவது போல அவரது கெட்டப் இருந்தாலும் மைனஸ்ஸையே ப்ளஸ் ஆகும் ரசவாத வித்தையை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்யா ஆங்காங்கே கோல் அடிக்கிறார்.. பாத்திரத்தின் தன்மை கருதி பல இடங்களில் விஷாலுடனான கம்பைண்டு சீனில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கில் அசத்துகிறார்.. 


இருவரது வளர்ப்புத்தந்தையாக வருபவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதே.. (ஜி எம் குமார்)பாத்திரத்தின் தன்மை கருதியும்,திரைக்கதையின் தேவை கருதியும் அவர் துகில் உரியப்பட்டு வில்லனால் சித்திரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்தது செம துணிச்சல் தான்.. 

ஹீரோயின்களில் ஆர்யாவின் ஜோடியாக வரும் மதுஷாலினியின் நடிப்பு சுமார் ரகமே... அவரது ஃபேஸ்கட் வசீகரம் கம்மி..
ஆனால் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் கான்ஸ்டபிளாக வருபவர் (ஜனனி அய்யர்) கண்களால் கவிதை சொல்கிறார்.. கிட்டத்தட்ட லைலா வின் வெகுளித்தன காப்பி என்றாலும் அவரது பாடி லேங்குவேஜ் அழகு.. 

ஒரு காட்சியில் விஷாலும், இவரும் போட்டி போட்டுக்கொண்டு காதல் பார்வைகளை பகிர்வதும்,விருந்து பரிமாறும்போது பார்வைகளை பரிமாறுவதும்  காதலர்கள் காணக்கண் கோடி வேண்டும்..

http://chennai365.com/wp-content/uploads/movies/Avan-Ivan/Avan-Ivan-Moive-04-18-Stills-018.jpg

பாலாவின் காமெடி வசனங்கள் ( விளிம்பு நிலை மனிதர்களின் உரையாடல் என்பதால் கண்ணியம் குறைவாக இருந்தாலும் அதுவும் ஒரு கலாச்சாரப்பதிவே)

1. டேய்,, அநாதை நாயே.. 

ஆமா.. இவரு மட்டும் 4 பொண்டாட்டி,5 வைப்பாட்டி வெச்சிருக்காரு..


2. அடப்பாவி.. எப்படி என் வீட்டுக்குள்ள வந்தே? இந்த அர்த்த ஜாமத்துல?

ம்.. ஏறிக்குதிச்சு.. பின்னே காலிங்க் பெல் அடிச்சு எந்த திருடனாவது வருவானா?

3. எங்கேடி போறீங்க?

ம். காலேஜ்க்கு.. 

எனக்குத்தெரியாத காலேஜா? ஓ.. டுட்டோரியல் காலேஜா?

4. ஏண்டி.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே.. பொம்பள புள்ளைங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்?

5. என்னை இப்போ யாரும் ஃபோட்டோ பிடிக்காதீங்க.. நான் மேக்கப்ல வேற இல்ல.. 

6.  அந்த கோமாளிப்பையன் என்னையே பார்க்கறான் (செல்வா மன்னிக்க)

விடுடி.. அவனாவது உன்னைப்பார்க்கறானே? சந்தோஷப்படு.. 

7.  டேய்.. என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா.. 

டி எஸ் பி சார்.. கண்ல இருந்து தண்ணி தான் வரும்... பின்னே  மூ********மா வரும்?


8. ஏம்மா.. கூப்பிட்டதும் உடனே ஓடோடி வர்றதுக்கு நான் என்ன உன் புருஷனா?


9. பாப்பா.. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு.. உன் பேண்ட்ல ஜிப் இருக்கா ? இல்லையா? என்பதை மட்டும் சொல்லிடு.. 

10. சரி.. உன் பேரென்னடி?

தேன் மொழி.. தேனு.... 

ஓ.. நக்கனும்னு நினைப்பீங்களோ.... ( படிக்கும்போது விரசமாக இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி இல்லை)

http://www.cinehour.com/gallery/actresses/kollywood/Janani%20Iyer/Janani%20Iyer%20Stills%20At%20Avan%20Ivan%20Audio%20Launch/34365645Janani-Iyer-At-Avan-Ivan-Movie-Audio-Launch-17.jpg

11. அம்பிகா.. - டேய்.. சரக்கு அடி வேணாம்கலை.. அம்மாவுக்கு கொஞ்சம் மிச்சம் வைடா.. இப்போவெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா தூக்கமே வரமாட்டேங்குது./.

12. போலீஸ்- ஆள் பார்க்க எப்படி இருந்தான்..?

கருப்பா இருந்தாலும் களையா தான் இருந்தான்,,,, 

13. என்னா இது சலூன் பக்கம் பொம்பள புள்ளா?.. ஏம்மா கட்டிங்க்கா? ஷேவிங்க்கா? ( இந்த வசனத்தில் இன்னும் கண்ணியம் காட்டி இருக்கலாம்)


14. டேய்.. என்னமோ உழைச்சு சம்பாதிச்ச மாதிரி யோசிக்கறே.. நீ திருடனதைத்தானே தாரை வார்க்கப்போறே?

15. டேய்.. சுமங்கலியோட சாபம் உங்களை சும்மா விடாது.. 


அட போடா.. அவளுக்கு 2 புருஷன்.. அதும் இல்லாம அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல கை பட்டவ.. 

14.  அதுக்குத்தாண்டா நானும் சொல்றேன்.. அவ நமக்கு எதுக்கு?

அடப்பாவி .. நமக்குன்னு ஏன் என்னையும் சேர்க்கறே?

15.  டேய்... ஒரு கோடி ரூபா சரக்கு.. ஒரு டீயும் ,பன்னும் வாங்கிக்கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கறாங்கடா.. ஏமாந்துடாதே?

16. எதுக்குடா லேடீஸ் காலேஜ் பஸ் ஸாப் பக்கம் ஜீப் வர்ற மாதிரி பண்ணுனீங்க..?

உள்ளே போறது உறுதி ஆகிடுச்சு.. அண்ணி முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்துட்டு போயிடறோம்.. 

17. என்னது பிளேடு முழுங்கிட்டானா?

டாக்டர்.. என் குடல் ஃபுல்லா நீங்க உருவு உருவுன்னு உருவுனாலும் ஒரு பிளேடு எடுக்க முடியாது..  ( டபுள் மீனிங்க் டயலாக்  யூ டூ பாலா)

18.   இன்ஸ்பெக்டர்.. அவன் பிளேடு முழுங்கலை.. ஹி ஈஸ் எ லையர் (HE IS A LIEAR)

என்ன டாக்டர் சொல்றீங்க? அவன் ஒரு லாயரா? (LAWER)

(கிரேசி மோகன் பாணி வசனம்)

19. சூர்யா - அகரம் ஃபவுண்டேஷன் மூலமா  ஏழைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யறோம்.. 

ஆர்யா- அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கோடிக்கணக்குல சம்பாதிக்கறீங்களே.. கொடுத்தா என்னவாம்..?

20.  டேய்.. மாப்ளே.. நீ பெரிய நடிகன்டா.. த்ரிஷா உனக்குத்தான்.. 
21. ராத்திரி தூங்கறப்பக்கூட பவுடர் அடிச்சுட்டு, செண்ட் போட்டுக்கிட்டு தான் அவன் தூங்குவான்..

22. டேய்.. நாயே.. நல்ல படம் ஓடிட்டு இருக்கறப்ப  எதுக்கு நடுவுல தேவை இல்லாம பிட் படம் ஓட்டிட்டு இருக்கே?

23. யோவ்.... உன் அரண்மனையை வித்து ஒரு படம் எடுக்கப்போறேன்.. அதுல கதை ,வசனம்,வெட்டிங்க்,ஒட்டிங்க் ,புட்டிங்க் எல்லாம் நீ தான், நான் டைரக்சன் மட்டும்,,

24.  ஆர்யா - எனக்கு அவனை பிடிக்கும்,.. ஆனா அதை வெளில காண்பிச்சுக்க மாட்டேன்.. அவனுக்கு மட்டும் தான் நடிக்கத்தெரியுமா?

25.  டேய்.. போதும்டா.. அப்பனை மாதிரி எக்ஸ்ட்ரா பிட்டுப்போடாதே.. இத்தோட நிறுத்திக்கோ..

26. உனக்கு என்ன வேணும் மவனே..... 

என்ன வேணும்னே தெரில .. நீ என்ன சாமி.. ? 

(ஆனந்த விகடனில் வந்த கவிதையின் உல்டா வடிவம் .

ஒரிஜினல் கவிதை - என்ன வரம் வேண்டும் என கடவுள் கேட்டார்..   பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்பதே தெரியவைல்லை.. நீ என்ன கடவுள் என்றேன்.. ) 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_v_OH_3PtVTWg1CebplEHUM7ymMSXSXRIqbW77JK0x_hZ7VWJTelwh9DsjoCrphCDxVH47usjgKIaXWpqyZvQIcEH7ecc6O6uoOnk-30dQG06sciHwQXfXE8qX-0RYX97xbfXtEtd_5PU/s640/Madhu+Shalini5.jpg

இயக்குநர் பாலா சபாஷ் பெறும் இடங்கள்

1. விஷாலின் பாத்திரப்படைப்பும், அவர் மூலம் இப்படியும் ஒரு நடிப்பை வர வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும்.. 

2.  ரவுடி,கேடிகளுக்கு போலீஸ் அழைப்பு விடுத்து விருந்து வைத்து வேண்டுகோள் விடுக்கும் காமெடி சீன்.. 

3. காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி  காத்துக்கிடக்கேன் வாடி பாடல் படமாக்கப்பட்ட விதம்..

4. சக்சஸ் சக்சஸ் என்று கத்திக்கொண்டே அந்த சின்னப்பையன் லேடி கான்ஸ்டபிளை கட்டிப்பிடிக்கும் சீன் , தியேட்டரில் செம் ஆரவாரம்..

5. சூர்யா வேடிக்கை பார்க்க விஷால் காட்டும் நவரச நடிப்பை வேடிக்கை பார்க்கும் காதலியின் முகத்தில்  தோன்றும் பெருமித உணர்வு  காதலனின் நடிப்பை விட பிரமாதமாக படம் ஆக்கியது.. 

http://aambal.files.wordpress.com/2011/06/bala.jpg
  இயக்குநர் சறுக்கிய இடங்கள்

 1. மூளையை கழற்றி மூலையில் வைத்து விட்டுப்பார்க்க வேண்டிய காமெடிப்படமாக இருந்தாலும்  இயக்குநர் தாராளமாக தவிர்த்திருக்கவேண்டிய பல கட்டங்கள் உண்டு.. அதில் முக்கியமானது படத்துக்கும் விஷாலின் மாறுகண் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை.. தேவையே இல்லாமல் அவரை ஏன் சிரமப்படுத்த வேண்டும்?

2. எந்த காதலனாவது காதலியை கலாட்டா பண்ணுவதாக நினைத்து மற்றவர் முன்னிலையில் காதலியை குட்டிக்கரணம் அடிக்க சொல்வானா? அப்படி சொன்னால் அவன் நல்ல காதலனா? ( காதலியின் முந்தானை காற்றில் விலகினாலே பரிதவிப்பவன் தானே உண்மையான காதலன்? )

3. பாலா டச் வேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் அந்த கொடூரமான துரத்தல் காட்சியும், அப்பா கேரக்டர் ஆடை இல்லாமல் தூக்கில் தொங்க விடப்படுதல் .. தேவையற்ற திணிப்பு.. 

4. இடைவேளை வரை காமெடியாக போகும் திரைக்கதை அதற்குப்பின் சீரியசாகப்போக வேண்டிய சூழ்நிலையில் பாலா பதட்டத்தில் பல காட்சிகளை ரெண்டும் கெட்டானாக காமெடி+ சோகம் மிக்ஸிங்க்காய் அமைத்தது..

5. வில்லனின் பாடி லேங்குவேஜ் கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகானின் நடிப்பை காப்பி அடித்தது..

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmUL_O1sduh4QFZbCu9v1VU5mAei6tiDOdEGpb2Okvw9tlaLx-X1hSa_2sYuz9TOmafrLPxVa4ZpY5g82pXCV7U_uxTo3UrJkAz7ARcjs9UeUG88nRV0GZUQW8NwPJtroXb6GsEZzUQTtJ/s1600/Janani+Iyer+Hot+1.jpg

இந்தப்படம் வசனங்களில் அத்துமீறல், காட்சி அமைப்பில் ஒரு பத்து நிமிடங்கள் பெண்கள் முகம் சுளிக்கும்படியாக இருப்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.. ( ஆனா எல்லாரும் தனித்தனியா போய் பார்க்கலாம்)

 கமர்ஷியலாக இந்தப்படம் ஓடாது.. அதிகபட்சம் 25 நாட்கள் ஓடலாம்.. ஏ செண்ட்டரை விட பி சி செண்ட்டரில் தான் எடுபடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - காமெடி ரசிகர்கள்,பாலா அபிமானிகள் மட்டும் பார்க்கலாம் (கதையைப்பறி கவலைப்படாதவர்களும் )

ஈரோடு அபிராமி,சண்டிகா  என 2 தியேட்டர்களில் படம் ஓடுது.. நான் அபிராமியில் பார்த்தேன்.. (ஏன்னா என் பொண்ணு பேரு அபிராமி.. )