Showing posts with label tamil film reveiw. Show all posts
Showing posts with label tamil film reveiw. Show all posts

Monday, June 03, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

 

டீ ,காபி கூட குடிக்காம சுத்த சைவம் மட்டும் சாப்பிடும் எந்த கெட்ட பழக்கமும்  இல்லாத நல்ல பசங்களை இந்த பொண்ணுங்க கண்டுக்கவே மாட்டாங்க . தண்ணியைப்போட்டுட்டு  தெருவோரம் விழுந்து கிடக்கும் பன்னாடைப்பரதேசிங்க , ஊர்ல சண்டித்தனம் , ரவுடித்தனம் பண்ணிட்டு திரியும் ரவுடிங்க , பொறுக்கிங்க , மொள்ள மாரிங்க இவங்களைத்தான் விழுந்து விழுந்து காதலிப்பாங்க . அப்படி ஒரு  கிராமத்து ( நல்ல)ரவுடியை காதலிக்கும் ஹீரோயின் என்ன ஆகறாங்க என்பதே கதை . 


இப்படியே கதை சொல்லிட்டா போர் அடிச்சுடும் என்பதால் அம்மா செண்ட்டிமெண்ட்ஸை அப்படியே மாங்காய் துண்டுகள் ல மிளகாய்ப்பொடி தூவுவது மாதிரி தூவி இருக்காங்க .


 அம்மா மீது அதீத பாசம் உள்ள ரவுடியா எம் சசிகுமார் அசால்ட்டாக நடிக்கிறார். டி ஆர்க்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிப்பவனி வரும் தாடிக்காரர்.


 எம் சசிகுமாருக்கு கிடைக்கும் ஆடியன்ஸ் வரவேற்பு ஆச்சரியம் அளிப்பதாய் இருக்கு . தியேட்டரில் அவர் பேசும் வசனங்களுக்கு , சில ரி ஆக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் மழை !! ஆனால் அவர் விருமாண்டி கமல் ரேஞ்சுக்கு முயற்சி செய்வதும் , எம் ஜி ஆர் மாதிரி தன் கேரக்டரை வடிவமைத்துக்கொள்வதும் ரொம்ப ஓவர் . இதே மாதிரி 4 படங்கள் வரிசையா வந்தா போர் அடிச்சிடும். பேட்டர்னை மாத்துங்க பாஸ்,,. 


பத்தாங்கிளாசே இப்போத்தான் படிக்கும் பக்கா ஃபிகர் லட்சுமிமேணன் தான் ஹீரோயின் . கும்கியில் கும்மென வந்த வர் இதில் இன்னும் கொஞ்சம் பூசிய உடம்பில் இருக்கார் . ( எல்லாம் ஒரு வெற்றிப்பரவசம் தான் ) .இவரது கனகாம்பர நிற உதடும் ,மயில் தோகையில் இருக்கும் கண் மாதிரியான மயக்கும் கண்ணும் ,  திருஷ்டியில் கூட அழகு சிருஷ்டியாய் அமைந்த கன்னத்து தழும்பும் வரப்பிரசாதங்கள் . இவரது ஆடை அணியும் அழகு படத்துக்கு படம் கண்ணியமும்  , அழகும் கூடுகிறது  சபாஷ்.. 

( வர்ணிப்பை நிறுத்திக்கறேன், லிமிட் தாண்டக்கூடாதாம் - ஃபோனில் உத்தரவு. பிளாக் ரெகுலரா படிப்பாங்களாம் , அவ்வ் ) 


ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யா அக்மார்க் கிராமத்து சினிமா அம்மா. பல காட்சிகளில் இவர் எல்லாரையும் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார், க்ளைமாக்ஸில்  இவரது ஆக்ரோஷம் மட்டும் கொஞ்சம் செயற்கை . 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. வில்லன்கள் வம்புக்கு இழுக்கும்போது  தானே களத்தில் இறங்காமல் ஹீரோ ஒரு சின்னப்பையனை தடி வரிசை சுத்திக்காட்டச்சொல்லும் இடமும் , அந்தப்பையன் செம கலக்கலாக  சிலம்பாட்டம் ஆடுவதும் தியேட்டரில் கைதட்டல்கள் 6 நிமிடங்கள் அள்ளிக்கிச்சு.. செம பில்டப் சீன் .2.  நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் சார்பாக ஹீரோ ஹீரோயினிடம் லவ் லெட்டர் கொடுத்துட்டு வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு வெட்க தயக்கத்துடன் ஓடும் காட்சி அக்மார்க் எம் சசிகுமார் முத்திரை . செம சிரிப்பு 


3. ஹீரோயின் - ஹீரோ மேல் ஆசைப்படுவது , காதலை நாசூக்காக வெளிப்படுத்துவது அதைத்தொடர்ந்து வரும் காதல் காட்சிகள் இதம்


4. டூயட்  காட்சிகளிலும் சரி , குத்தாட்டபாடல் காட்சிகளிலும் சரி  திரையில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடைகளில் கண்ணியமோ கண்ணியம். பார்த்து பார்த்து உடைகளை தேர்வு செய்த ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு 


5.  சரண்யாவின் அம்மா பாச நடிப்பு தாய்மார்கள் மனதை தொடும் விதம் மிக இயல்பாக அமைத்தது  அதற்கு உயிரோட்டம் அளித்த சரன்யாவின் பிரமாதமான நடிப்பு 


6. ஹீரோவை விட ஹீரோயின் 6 செமீ உயரம் என்பதால் எப்போதும் லாங்க் ஷாட்டிலேயே  ஹீரோவை காட்டி சமாளிப்பதில் ஒளிப்பதிவாளருக்கு வெற்றி . சாமான்யனின் கண்ணுக்கு இருவரும் ஒரே உயரம் என்றே தோணும் 


7. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை  ஆங்காங்கே பயன் படுத்தி இருப்பது புத்திசாலித்தனம் ( உபயம் - சுப்ரமணிய புரம் - இரு பொன் மணி )

8. ஹீரோவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பில்டப்பை கொடுத்து க்ளைமாக்சில் வைத்த ட்விஸ்ட்


9. படிச்ச பொண்ணான ஹீரோயினிடம் படிக்காத ஹீரோ  மடிச்சு விட்ட லுங்கியை எடுத்து விட்டு வாத்தியாருக்கு சொல்வது போல் அடக்க ஒடுக்க மாக வணக்கம் போடுவதும் , பெருமிதம் கலந்த வெட்கத்தோடு ஹீரோயின் அதை ரசிப்பதும் செம செம 


10 . ஹீரோயினை காதலிக்க ஏங்கும்  அந்த 4 பசங்க பண்ணும் அலப்பறைகள் , திட்டங்கள் , கலட்டாக்கள் இன்று போய் நாளை வா, கண்ணா லட்டு தின்ன ஆசையா பாதிப்பென்றாலும் ரசிக்க வைக்கிறது


11. ஹீரோயினின் தோழியாக வரும் அந்த தெத்துப்பல் அழகி கவனிக்க வைக்கும் அழகு , நடிப்பு 


கீழே உள்ள ஸ்டில்லில் மஞ்சக்காட்டு மைனா தான் நான் சொன்ன ஹீரோயின் தோழிஇயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன்னை மாப்பிள்ளை பார்க்க வரும் பெண் வீட்டார் மேல் ஹீரோ வேணும்னே அவங்களை வெறுப்பேற்ற அவர்கள் மேல் வாமிட் எடுக்கும் காட்சி உவ்வே... இந்த மாதிரி காட்சியை சென்சார் எப்படி அனுமதிக்குன்னு தெரியலை . ஆபாசம் , வன்முறைக்காட்சிகளை கட் பண்ணுவது மட்டும் அவர்கள்  வேலை அல்ல  . இந்த மாதிரி அசூயையான காட்சிகளை கட் பண்ணுவதும் அவர்கள் வேலை தான் 


2. எம் சசிகுமாருக்குன்னு தனி பாணி இருக்கும்போது எதுக்கு பருத்தி வீரன் கார்த்தி பாடி லேங்குவேஜ் , விருமாண்டி கமல் மாதிரி அடிக்கடி மீசை முறுக்கும் மேனரிசம்? 


3. வீடே பற்றி எரியுது . ஹீரோ ஒரு பெட்ஷீட்டை போர்த்திட்டு அந்த பொண்ணை  அசால்ட்டாக ஒரு தீக்காயம் கூட ஆகாம காப்பாத்தறதெல்லாம் ரீலோ ரீல் 4.  ஆடுகளம் படத்தின் பின்னணி இசையை ஆங்காங்கே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கும் வாகை சூடவா இசை அமைப்பாளர் ஜிப்ரான் பற்றி கண்டுக்கவே இல்லையே , ஏன்?


5. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவரும் விதத்தில் படமாக்கப்ப்ட்டிருந்தாலும் நந்தா ஸ்டைலில் சரன்யா  வரக் வரக் என வில்லனை கழுத்தை அறுப்பது ஓவர். இன்னும் கண்ணியமாக காடி இருக்கலாம் 


6. சரண்யா பேங்க்ல டெபாசிட் பணம் போட்டு வெச்சிருக்காங்க . அந்த பாண்ட் பேப்பரை அடமானமா வெச்சு கடன் கேட்கறாரு ஒரு பிரைவேட் ஆள் கிட்டே . அந்த இடத்துல ஒரு வசனம் . மெச்சூரிட்டி பீரியட் முடியாம பணம் எடுக்க முடியாது அப்டினு . அது தப்பு . எடுக்கலாம். வட்டி கட் ஆகும் அவ்வ்ளவுதான். இந்தக்காட்சியைப்பார்க்கும் பாமர ஜனங்க மனதில் பேங்க் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் .
மனம் கவர்ந்த வசனங்கள்
  
1. நீ குடுக்கற பரிசு பார்த்து அவ அப்படியே ஷாக் ஆகனும். அப்போ கரன்ட் கம்பியைத்தான் குடுக்கனும்2.  நிஜ வாழ்க்கைல யும் சரி.சினிமாவிலயும் சரி.பொண்ணுங்க சல்லிப்பசங்களைத்தான் லவ்வு பண்ணுதுங்க3. பல ஆபத்தான சந்தர்ப்பங்கள் அமைஞ்சும் நம்ம உயிருக்கு எதுவும் ஆகறது இல்லையே? அதுக்கு என்ன அர்த்தம்? மனிதனின் சாவு அவன் கைல இல்ல
4. லேடி -யோவ்.நான் சொன்னதை எப்பய்யா கேட்டே? பகல்லயும் சரி ,நைட்லயும் சரி5.  ஒரு பொண்ணு நினைச்சா மட்டும் தான் நீயும் ,நானும் ,யாரும் ஆம்பளை.


6. குடிகாரப்பயலுக்கும் கோவக்காரப்பயலுக்கும் வாக்கப்பட்ட பொண்ணுங்க வாழ்க்கை வீணாத்தான் போகும்


7 பொண்ணு எப்பவாவது உன்னைப்பார்த்து வெட்கச்சிரிப்பு சிரிச்சா உன் மேல லவ்வுன்னு அர்த்தம்.எப்போ பாரு கெக்கெபிக்கேனு சிரிச்சா லூசுன்னு அர்த்தம்


8. ஆம்பளை கெட்டுப்போனா ( உதவாக்கரையா ) அவன் குடும்பம் தான் அழியும்.பொம்பளை கெட்டா அவ வம்சமே அழியும்


9. தரைல விழுந்த பூவை தலைல வெச்சா குடும்பத்துக்கு ஆகாது10. கடவுள் இல்லாத கோயிலும் ,கரகம் இல்லாத திருவிழாவும் எதுக்கு ?
 


11.  நான் எதுவும் செய்யலையேம்மா? 

 ம்க்கும், செஞ்சிருந்தாத்தான் குழந்தை பொறந்திருக்குமே?


12. உன் கிட்டே வாழ முடியலைன்னு ஒருத்தி செத்துப்போனா நீ எப்படி ஆம்பளை ஆக முடியும் ? 


13. ஒரு ஆம்பளை தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கறதை விட அவ பொண்டாட்டி அவனை ஆம்பளைன்னு சொல்லிக்கறதுல தான் பெருமை14. நல்லவங்க எப்பவும் நல்லா இருக்கனும், அதுக்கு நாம குறுக்கே நிக்கக்கூடாது 


14. பெத்த அம்மா, கட்டிக்கப்போற பொண்ணு 2 பேரும் நல்லவங்களா அமைவது ஒரு ஆணுக்கு கிடைக்கும் வரம்


15.  என் பையன் சிங்கம் மாதிரி இருப்பான், ஆனா பேரு புலி 


16. டேய், அவன் கிஸ் அடிக்கறானே?  உதட்டை அப்படியே குடிக்கறானா? 


17. பொம்பளை சாபம் விட்டா புழுப்பூத்துத்தான் சாவோம்னு நம்பிக்கை உள்ளவன் நானு, அதனால உன் பாவம் எனக்கு வேணாம்

18. போலீசையே அடிச்சுட்டானா? ரைட்டு , இன்னைக்கு இருக்குடி கச்சேரி 


19. பொண்ணு முகம் மட்டும் லட்சணம் இல்லை , முழுசும் லட்சணம் தான் . 


20. அம்மா, எப்போ வேணாலும் சாவு வரும்னு தெரியற  என்னை மாதிரி ரவுடிங்க ஒரு பொண்ணை நினைக்கறது பாவம்மா.. 

 டேய்..  கல்யாணம் பண்ணிக்கறது பாவமா? 

 ஆமா, அது பெரும்பாவம் 

 


சி பி கமெண்ட் - குட்டிப்புலி - எம் சசிகுமார் ன் அதே பார்முலாப்படம் - ,பி .சி சென்ட்டர்களில் சுமாரா ஓடிடும்விருதாச்சலம் கலெக்டரே! ஊர்ல தியேட்டர்ல 70% பேர் சரக்கு அடிச்சுட்டு பார்சல் புரோட்டா சாப்ட்டுட்டு இருக்காங்க.என்ன பண்ணிட்டு இருக்கீங்க?( செக்ண்ட் ஷோ @ விருதாச்சலம் ) 


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


குமுதம் ரேங்க் - ஓக்கே  ரேட்டிங்க் -  2.75 / 5 
 


Tuesday, April 23, 2013

கவுரவம் - சினிமா விமர்சனம்மொழி , அபியும் நானும் போன்ற பிரமாதமான படங்கள் கொடுத்த ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியா இப்படி ஒரு படம் கொடுத்திருக்காங்க? என கேள்வி எழுப்பும் வகையில் ஒரு சறுக்கல் படமாக இப்போது வழக்கொழிந்த கவுரவக்கொலையை பேஸ் பண்ணி எடுத்திருக்காங்க. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழியை பொய்யாக்கி திரைக்கதையில் தடுமாறி இருக்கும் ராதாமோகன் ( வசனங்களில் மட்டும் இன்னும் அதே கம்பீரம் காட்டுவது படத்துக்கு பெரிய பலம். 

ஹீரோ ரோட்டில் கார்ல போறார். எதேச்சையா அவர் ஸ்கூல் மேட் ஒருத்தரோட ஊர் கண்ல பட அவரைப்பார்க்கலாம்னு ஊருக்குள்ளே வண்டியை விடறார். அங்கே அவரோட நண்பர் ஆளைக்காணோம்.ஏதோ லவ் மேட்டர். ஆள் எஸ். அந்த ஊர் டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஆள்ங்க குடி இருக்க வேண்டிய ஜாதி வெறி பிடிச்ச ஊர். கவுரவக்கொலைகள் , கலவரங்கள் நடக்கும் ஊர்.அப்பேர்ப்பட்ட ஊரில் காணாமப்போன நண்பனை எப்படி தேடிக்கண்டுபிடிக்கறாங்க என்பதே மிச்ச மீதிக்கதை 


இது ஒரு தெலுங்குப்படமோ என எண்ணும் அளவுக்கு ஏகப்ப்ட்ட ஆந்தரா வாசனை படம் முழுக்க. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனாவின் தம்பி அல்லு சிரிஷ் தான் ஹீரோ . இதயத்தை திருடாதே நாகார்ஜூன் மாதிரி அவருக்கு வாய் ஏன் அப்படி இருக்கு? அண்ணனுக்கு நடிப்பெல்லாம் வர்லை .பக்கத்துல 4 கண் நொங்கு மாதிரி குளு குளுனு ஒரு ஃபிகர் இருந்தும் நரசிம்மராவ் கணக்கா அவர் ஏன் முகத்தை அப்படி வெச்சிருக்காரோ? தேறுவது ரொம்ப கஷ்டம் . ஒரு வேளை ஆந்திராவில் பாஸ் மார்க் வாங்கலாம் .

 


ஹீரோயின் யாமினி கவுதம் . வெய்யிலில் நின்னு காய்ஞ்சு போன தமனாவின் சாயலில் , மாநிற தேவதையாய்   அவர் முகம். படம் முழுக்க துப்பட்டாவை கழுத்து ஒண்ட போட்டிருக்கும் அவரது மேனரிசம் ஐ லைக் இட். ஆனாலும் நோ யூஸ் . பாப்பா பூஸ்ட் குடிக்காமயே வளர்ந்திருச்சு போல . அவர் நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் அழகும் , ஆடை அணிகலன்களில் காட்டும் நேர்த்தியும் அழகு. ராதாமோகனின் பட ஹீரோயின்களுக்கே உரித்தான் கண்ணியம் இதிலும் உண்டு . எதிர்காலம் உண்டு .பிரகாஷ் ராஜ் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரை முன்னிறுத்தாமல் கதைக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் அவர் வந்து போவது மனசுக்கு ஆறுதல் . அவரது தம்பிகளின் நடிப்பும் கன கச்சிதம் . நாசர் ஏமாற்றவில்லை . ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமாரவேல் இதிலும் நல்ல ரோல் பண்ணி இருக்கார். குட் .


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. ஆட்டிசக்குறைபாடுள்ள அந்தப்பையனின் அக்காவாக வரும் ஒரு செம கட்டை பாலுமகேந்திரா பட ஹீரோயின் மாதிரி மிளிர்கிறார். அவரை இன்னும் நல்லா பயன் படுத்தி இருக்கலாம் ( அதாவது படத்துல )


2. ராஜேஸ்வரியின் அண்ணியாக வருபவர் பூ விழி வாசலிலே ஹீரோயின்  கார்த்திகா மாதிரி முகச்சாயலில் , ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றார்.  ஆள் நல்ல உயரம் ( அளந்து பார்த்தியா  ராஸ்கல் ) 


3. ஹீரோவின் நண்பராக வருபவர் நம்ம ட்விட்டர் ஐ ஆம் கார்க்கி போன்ற முகச்சாயலில் , குறும்பில் , டைமிங்க் விட் அடிப்பதில் கலக்குகிறார். சில காட்சிகளில் எங்கேஎ இவரே ஹீரோயினை கரெக்ட் பண்ணிடுவாரோ என பதை பதைக்க வைக்கிறார்,. 4. ராதாமோகனின் ஆஸ்தான வசனார்த்தா விஜி  பிரமாதமான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


5. பெண்களைக்கவரும் கண்ணியமான வசனங்கள் , ஆங்காங்கே ஒளிப்பதிவு இயற்கைக்காட்சிகளை சுட்டுப்போட்டது , லொக்கேசன் செலக்சன்இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தொலைஞ்சு போன ஒரு ஆளை படம் பூரா த்தேடி அலைவது இது வரை தமிழ் சினிமாவில் தோல்வியையே அதிகம் கொடுத்திருக்கு. உதாரணம் - சுஜாதா கதை வசனத்தில் உருவான  ப்ரியா, கரை எல்லாம் செண்பகப்பூ இயக்குநர் சுசி கணேஷின் ஃபைவ் ஸ்டார் .. அப்படி இருக்கும்போது என்ன தைரியத்தில் இந்த கதைக்கருவை தேர்வு செஞ்சீங்க? 


2. படம் போட்டு 2 வது ரீலிலேயே என்ன நடந்திருக்கும் என்ற சஸ்பென்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. ஆனா படத்தை இழு இழுன்னு இழுக்கும் இயக்குநருக்கோ, படத்தில் ஹீரோவுக்கோ அது தெரியாமல் போனது ஆச்சரியம் 


3. ஜாதிக் கலவரத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணை யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று குமரவேல் சொல்லும் போது ஏன் நீ செய்து கொள்ளக் கூடாது என்று சிரிஷ் கேட்குமிடம் சேரனின் பொற்காலம் வடிவேல் சீனை சுட்டு இருக்கிறது 


4. லவ் பண்ணி ஓடும் ஹீரோயின் நகையை ஏன் அண்ணி கிட்டே கழட்டி கொடுக்கனும்? அண்ணிக்கு அதில் ஏதோ சம்பந்தம் இருக்கு என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணவா? சாரி, அது ஒர்க் அவுட் ஆகலை 


5. நாவல் அல்லது சிறுகதைல ஒரு கேரக்டரை காட்டாமயே அதை தேடுவது ஓக்கெ, ஆனா சினிமான்னு வரும்போது அந்த கேரக்டரை ஆல்ரெடி அறிமுகப்படுத்திடனும் . யார்னே தெரியாத 2 பேரை படம் பூரா தேடிட்டே இருந்தா அலுப்பு வந்துடும் 


6. ஹீரோ சொன்னதும் எல்லா ஃபிரண்ட்சும் வேலையை எல்லாம் விட்டுட்டு கிராமத்துல வந்து செட்டில் ஆகிடறாங்க . அவங்களுக்குனு ஃபேமிலி , சம்சாரம் எல்லாம் கிடையாதா ? பூவாவுக்கு என்ன பண்ணுவாங்க?


7. படத்தோட ஓப்பனிங்க்ல நண்பர்கள் 60 பேர் வந்திருக்காங்கன்னு வசனம் வருது. அவங்களைக்காட்டும்போது 53 பேர் தான் இருக்காங்க. அதே நியூஸ் டி வி ல வரும்போது 50 பேர்னு  சொல்ற மாதிரி சீன் வருது. ஏன் இந்த குழப்பம் ?


 


8. படம் பூரா டென்னிஸ் கோர்ட் டொக்கா வரும் ஹீரோயின் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஒரு பனியன் , ஜீன்ஸ் மட்டும் போட்டு  நமீதா மாதிரி நெஞ்சை நிமிர்த்தி வருவது எப்படி? நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன் , ஹி ஹி 


9.காணாமப்போன சண்முகம்23 ந்தேதி எழுதுன லெட்டர் சென்னையிலிருந்து அவர் கிராமத்துக்கு 24 ந்தேதியே வருவது எப்படி?  25 தானே வரும்? இப்போ சென்னை ல இருந்து போஸ்ட் செய்யப்படும் லெட்டர் அடுத்த நாள் காலைல ஈரோடு வருது . அது பிரிக்கப்பட்டு அடுத்த நாள் தான் சென்னிமலை வருது . இதே மாதிரி தானே எல்லா கிராமங்களுக்கும் இருக்கும் ?


10. கோர்ட் ல ஜட்ஜ் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு ஆள் அத்து மீறி கோர்ட் உள்ளே வந்து கலாட்டா பண்ணும்போது யாருமே தடுத்து நிறுத்தலையே?11. காதலை எதிர்க்கும் ஒரு குடும்பத்தில் உள்ள ரவுடி  லவ்வர்சை கொலை செய்து ஒரே குழியில் புதைப்பது எப்படி? ஜாதி வெறி உள்ளவன் தனித்தனி குழியில் தானே புதைக்கனும்?


12. பொதுவா ஜாதி வெறியில் கொலை செய்வது , செஞ்ச உடனே தீ வெச்சுத்தான் கொளுத்துவாங்க . அப்போதான் ஆதாரம் அதிகமா சிக்காது ( என கொலையாளிங்க நினைப்பாங்க ) ஆனா புதைச்சு மாட்டிக்குவது எப்படி?


13.  அந்த கிராமத்துக்கு மீடியா வந்து கூடுவது நம்பும்படி இல்லை . அதே போல் புரட்சிப்பாட்டு எடுபடலை . செயற்கை


14. மகள் ஓடிப்போய்ட்டா என்னும்போதே கல்லுளி மங்கன் போல் இருக்கும் அப்பா மகன் ஜெயிலுக்குப்போய்ட்டான் என்பதற்காக  தற்கொலை செய்வது எப்படி?


15 . படத்தில் வரும் எல்லா கிராமத்து கேரக்டர்களுமே  அதி புத்திசாலித்தனாமாய் வசனம் பேசுவது எப்படி? 


 மனம் கவர்ந்த வசனங்கள்1. ஃபாரீன்காரன் மளிகைச்சாமான் விற்கக்கூட இந்தியா தான் வர்றான் , ஆனா  நாம ஏன் அங்கே போகனும்?


2. நீ வந்த ஃபிளைட்ல ஏதாவது ஃபிகர் இருக்கா?

 நான் வந்தது ஏர் இந்தியாவுல . 50 வயசுப்பாட்டிதான் இருந்தது
3. இப்படியே விட்டா நம்மாளுங்க எலெக்சனுக்காக தொகுதி எம் எல் ஏவையே கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க


4. அவனுக்கு ஊர் இல்லாம போச்சு , எனக்கு பிள்ளை இல்லாம போச்சு5. சன்முகம் எந்த தப்பும் செய்யலை, ஆனா கீழ் ஜாதில பொறந்ததே  தப்புதான்


6. இயற்கையை விட்டு மனிதன் எப்போ விலக ஆரம்பிச்சானோ  அப்பவே அழிவு ஸ்டார்ட்  ஆகிடுச்சுன்னு அர்த்தம் . உயிரினங்கள்லயே செப்பல் போட்டுட்டு நடப்பது மனிதன் மட்டும் தான்


7. ஆறு மணீக்கு மேல சந்திரமுகி வருமா? குஷ்பூவுக்குத்தான் கோயில் கட்னாங்க , ஜோதிகாவுக்குமா? சந்திரமுகிக்கப்புறம் காஞ்சனா எல்லாம் வந்துட்டுப்போயிடுச்சே?


8. நாங்க பொறக்கும்போது இருக்கும் கஷ்டம் எங்க பொணத்துக்கும் இருக்கும்


9.  சென்னைக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. என்னை யாரும் என்ன ஜாதின்னு கேட்டதே இல்லை. என்னைப்பொறுத்தவரை சென்னை தான்  எனக்கு எல்லாமே , என் அன்னை கூட அதுக்குப்பின்னால தான்


10. சென்னைல மட்டும் தான் கிழிஞ்சதும் ஃபேஷனு , கிழிச்சதும் ஃபேஷனும் ( கிழி கிழி - கலா மாஸ்டர்)


11. காணாமப்போனவனைத்தேடலாம், ஆனா ஓடிப்போனவனைத்தேடுனா ஓடிட்டே தான் இருக்கனும்


12, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கவுரவம் இருக்கும். சொத்து சேர்ப்பது மாதிரி அதை சேர்த்து வெச்சிருப்பாங்க


13. ஒரு பொண்ணு குடும்பத்துல இருக்கும் வரை தான் மரியாதை . ஓடிப்போய்ட்டா முடி - மயிர் மாதிரிதான்


14.  அடேங்கப்பா , ஒரு விதவைத்தாய் மட்டும் இந்த கேங்க் ல இருந்தா பி வாசு படம் மாதிரி ஆகி இருக்கும்15. அடிமைகள் எல்லாம் சேர்ந்து  கொண்டாடுவதா சுதந்திரம்


16. நாம முதன் முதலா பார்க்கும்போது மாட்டுடன் இருந்துச்சே அதான் அவங்க எனகு மாட்டுப்பொண்ணு ஹி ஹி


17.  மேடம், ஒரு டவுட்டு , லாயர் ஆகனும்னா இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி வெச்சா போதுமா? இல்லை படிச்சே ஆகனுமா?

 

18.  இவ்ளவ் பிரச்சனை உள்ள ஊர்ல உங்கப்பா டைம் டேபிள் போட்டு லவ் பண்ணி இருக்காரு


19. அந்த பாட்டியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

 உன் ஃபேஸ் புக் ஃபிரண்டா இருக்கும் 


20. என்னது அவ உனக்கு பிரில்லியன் கேர்ளா? வேணாண்டா. நாமளே ஒருத்தனை தேடி இங்கே வந்திருக்கோம், இப்டி பண்ணினா உன்னைத்தேடி நாங்க டெண்ட் அடிக்க வேண்டி வரும்


21. நானும் இதே ஊர்ல தான் இருக்கேன். இந்த தகவல்கள் எல்லாம் எனக்குத்தெரியலையே?


 மேடம், உங்களுக்கு வேலை வெட்டி இருக்கும்


22.  நான் மீன் சாப்பிட்டதே முதல் மரியாதைல  சிவாஜியைப்பார்த்துத்தான் . ஆட்டுக்கறி சாப்டதே ராஜ் கிரனைப்பார்த்துத்தான் ( நல்ல வேலை , முதல் இரவு கொண்டாடுனதே வாலி படத்துல அஜித் - சிம்ரனைப்பார்த்துத்தான்ன்னு சொல்லலை )


23. காதல் தோன்றுவதற்கும் , மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும்னு ஜெயகாந்தன் சொல்லி இருக்காரு  ( கர்ப்பமான காரணங்கள் தான் நிறைய ஹி ஹி )


24.  என்னடா சப்பாத்தி கருகிடுச்சு?

 சப்பாத்தி வேகுவதற்கும், கருகுவதற்கும் அற்பமான காரணங்களே போதும் ( கலாய்ச்சுட்டாராம் )


25.  அவன் மெயில் ஐ டி கண்டு பிடிச்சு எப்டியாவது பாஸ்வோர்டை கண்டு பிடிக்கனும்

 யூ மீன் ஹாக்கிங்க்

 யா

  இங்கே பக்கத்துல ஜெயில் எங்கே இருக்கு?

 ஏன்?

 நானே போய் அங்கே அட்மிட் ஆகிக்கறேன்


26. சினிமால கூட நான் அப்பப்ப ஆக்ட் பண்ணி இருக்கேன்

 நடு நிசி நாய்கள் ல 4 நாய்கள் வருமே அதுல ஒரு நாய் இவன் தான் ஹி ஹி


27. நாட்ல மீடியாக்கள் இருக்கும் அளவு பர பரப்புச்செய்திகள் இல்லை. அவனவன் பேயா அலைஞ்சுட்டு இருக்கான்


28. சார், ஆல்ரெடி பாதுகாப்பு கொடுத்தாச்சு  இன்னும் என்ன பண்ன? போலீஸ் ஸ்டேஷனையே பெயர்த்து எடுத்து வெச்சாத்தான் உண்டு


29. கோயிலுக்கு போய்ட்டு வர்ற கேப்ல எல்லாம் வில்லன் வந்துட்டுப்போறான்?

 மங்காத்தா படத்தை விட இதுல வில்லன்க அதிகம்


30. செத்தாதான் அழனும், கொன்னா கோபம் தான் வரனும்


31. இந்த ஊர்ல 4 திசைகளிலும் சுடுகாடு இருக்குன்னு சொன்னாங்க, ஆனா ஊரே சுடுகாடாத்தான் இருக்கு


32.  நீ அவளை கொல்லனும்னு கொல்லலை. ஆனா நான் சாகாம செத்துட்டு இருக்கேன்


33. ஒரு குழந்தையைக்கொல்லவா இன்னொரு குழந்தையை பெத்தேன்?


34. உங்க மானம் போச்சுன்னு நினைச்சா நீங்க செத்திருக்கனும். அவளைக்கொன்னிருக்கக்கூடாது  

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க்  -   2.5 / 5


 சி. பி கமெண்ட் - ராதா மோகன் ரசிகர்கள் , பெண்கள் பார்க்கலாம் . மற்றபடி தியேட்டரில் படம் பார்க்க பொறுமை வேணும் . பொறுமை எருமையை விட பெருசு.. டிஸ்கி - ராதா மோகன் படம் பூரா ஹீரோயினை கண்ணியமாத்தானே காட்டி இருந்தாரு , எப்டி ஸ்டில்ஸ் எல்லாம் கிளாமரா இருக்கு?ன்னு யாரும் கேட்காதீங்க. அட்ரா சக்க வுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு ,. அதை மெயிண்ட்டெயின் பண்ண வேணாமா? ஹி ஹி


உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/04/nh4.html

Monday, April 08, 2013

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

 

 நம்ம ஊர்ல நடந்த ஒரு உண்மைச்சம்பவம் -ஹிதேந்திரன் என்ற சிறுவனின் உடல் உறுப்பு தானம்  பற்றிய  கதையை மலையாளத்துல டிராபிக் என்ற பெயரில் எடுத்து ஹிட் ஆக்கினாங்க , அதை ரீ மேக்கி இருக்காங்க . இது எப்படின்னா தமிழன் தமிழ் நாட்டில் கிடைக்கும் 10 ரூபா இளநீரை வாங்கிக்குடிக்காம அந்த இளநீரை அமெரிக்காக்காரன் நம்ம நாட்டில் வந்து வாங்கி அவங்க நாட்டுக்குக்கொண்டுபோய் பாலிபேக்ல பேக் பண்ணி 100 ரூபாய்க்கு விக்கும்போது அதை வாங்கிப்பான். அந்த மாதிரி


மாமூல் மசாலாக்கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு  இது மாதிரி வித்தியாசமான களத்தில் சொல்லப்படும் கதைகள் ஆச்சரியத்தைத்தருவதில் ஆச்சரியம்  ஏதும் இல்லை 


குடும்பத்துக்கு நேரம் ஒதுக்காத சினிமா சூப்பர் ஸ்டார் பொண்ணுக்கு மாற்று இருதயம் 1 வேணும்.அதுவும் உயிரோட இருக்கும் ஆளின் இதயம் தான் வேணும்.  ஒரு விபத்தில் பலி ஆகி மூளைச்சாவு ஏற்பட்டு நிச்சய இறப்பு என உறுதி ஆன ஒரு கேஸ். அந்தப்பையனோட இதயத்தை  இந்தப்பொண்ணுக்கு பொருத்தனும் .டிராபிக் உள்ள பகல் டைம்ல சென்னை டூ வேலூர் 170 கிமீ வேகத்துல 90 நிமிடங்கள் ல போய் ஆகனும். இதை எப்படி சக்சஸ் ஃபுல்லா செய்யறாங்க என்பதுதான் திரைக்கதை 


 சமீபத்தில் எனக்குத்தெரிந்து  இத்தனை கதாப்பாத்திரங்களை வைத்து அத்தனை பேரையும் நம் மனசில் பதித்து பிரமாதமான, குழப்பமே இல்லாமல் ஒரு திரைக்கதை வந்ததில்லை . கதைப்போக்கு  மணி ரத்னத்தின் ஆய்த எழுத்தை ஒத்திருந்தாலும் , திரைக்கதை சாயல் எங்கேயும்  எப்போதும் படம் மாதிரி இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு முக்கியமான படமே..

படத்தில் கம்பீரமான நடிப்பு சரத் குமாருடையது .ஆபரேஷன் லீடர் இவர் தான் . போலீஸ் ஆஃபீசர் , நாட்டாமை ஆகிய 2 கேரக்டர்களும் சரத்துக்கு  அல்வா சாப்பிடுவது போல . அசால்டாக செய்து இருக்கிறார். அவர் காட்டும் பாடி லேங்குவேஜ் , உடல் மொழி , கம்பீரம் , தோரணை புது நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று .


ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தும் முக்கிய ஆள் அந்த காரின் டிரைவராக போலீஸ் காரர் சேரன் .சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட குற்ற உணர்ச்சி அவர் முகத்தில் தாண்டவம் ஆடுது .தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் பயன் படுத்திக்கொள்வதில் ஒரு சுய நலம் இருந்தாலும் அதில் பொது நலனும் இருப்பதால் நோ இஸ்யூஸ்


குடும்பத்தின் மீது கவனம் செலுத்தாமல் எப்போதும் பிசியாகவே  இருக்கும் சூப்பர் ஸ்டாராக பிரகாஷ் ராஜ். ஆர்ப்பாட்டமான நடிப்பு , அவர் மனைவியாக வரும் ராதிகா இந்தப்படத்தின் புரொடியூசர் என்பதற்காக அவருக்கு அதிக சீன் எதுவும் வைக்காமல்  அண்டர்ப்ளே ஆக்ட் செய்ய வைத்திருப்பது சிறப்பு


இடைவேளை திருப்பத்துக்காகவும் , கதையில் கமர்சியல் சுவராஸ்யத்துக்காகவும் பிரசன்னா , இனியா கேரக்டர்கள் . தன் மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாள் அதுவும் தன் உயிர் நண்பனுடன் என்பதை உணரும் பிரசன்னாவின் நடிப்பு எதார்த்தம் 


 பேஷண்ட்டின் காதலியாக பார்வதி மேனன். புருவம் ரொம்ப அடர்த்தி என்ற குறை தவிர நல்ல ஃபிகர் தான்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. ஒரு உண்மைச்சம்பவத்தை சுவராஸ்யமான சம்பவச்சேர்ப்புகளோடு திரைக்கதை அமைப்பது சவாலான பணி , மிகப்பிரமாதமாக அதை செய்து இருக்கிறார். வாழ்த்துகள் 2. பாத்திரத்தேர்வு அழகு . கே பாலச்சந்தர் படம் போல் எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்கிறார்கள் , அவர்களை அழகாக நடிக்க வைத்ததற்கு , நம்  மனதில் நிறுத்தியதற்கு 3.  மொத்தப்படமும் நமக்கு உணர்த்தும் சேதிகள் 2 தான் . 1. சாலையில் செல்லும்போது கவனம் வேண்டும்  2 உடல் தானம் உயிரைக்காக்கும் . அதை எந்த பிரச்சார நெடியும் இன்றி கலைப்படத்தின் நேர்த்தியுடன் ஜனரஞ்சகமாய்ச்சொன்னது 


4. ராடான் பிக்சர்ஸ் செய்த புத்திசாலித்தனமான விஷயம் மலையாள ஒரிஜினல் டிராபிக்கில் உதவி இயக்குநராகப்பணி ஆற்றியவரையே இதில் இயக்குநர் ஆக பிரமோஷன் பண்ணியது 


5. மூளைச்சாவு நிகழ்ந்த பேஷண்ட்டின் பெற்றோராக வரும் இருவர் நடிப்பும் கன கச்சிதம் 


 மனம் கவர்ந்த வசனங்கள் ( அஜயன் பாலா)


1. ஒரு மனுசன் கடவுளா நம் கண்ணுக்கு தெரிவது இக்கட்டான தருணங்களில்---------------------


2. எல்லோருடைய லைப்லயும் ஏதாவது ஒரு நாள் முக்கியமான நாளா அமைஞ்சிடும் 


----------------------


3. தப்பாயிடும் தப்பாயிடும்னு பயந்துட்டே ஒரு காரியம் செஞ்சா அந்த காரியம் தப்பாயிடும்


--------------------


4. முடியாதுன்னு சொல்லிட்டா வழக்கமான நாளா இதுவும் ஆகிடும்.முடியும்னு சொல்லி முயற்சி செஞ்சா இந்த நாள் வரலாறா மாறும்


--------------------


5. க்ளைமாக்ஸ் சூப்பர்னு எல்லாரும் சொல்றாங்க 


அப்போ அதை மட்டும் ரிலீஸ் பண்ணா போதுமா? ---------------


6. காரியம் நடக்கனும்னா கொஞ்சம் செண்ட்டிமெண்ட் கலந்து பேசுவது தப்பில்லை -------


7. உங்களுக்கு என் பையன் சாகக்கிடக்கும் ஒரு உயிர் , ஆனா எங்களுக்கு அவன் உயிரோட இருக்கும்  மகன் 
-----


8. எல்லா மனிதர்களுக்கும்  அவர்கள் குடும்பம்தான் முக்கியம், அதை சரியா கவனிக்காத யாரும் வெற்றியாளர் கிடையாது ----------------------------


9.  ரசிகர்களை ஏமாத்தலை . உங்களை நீங்களே ஏமாத்திட்டு இருக்கீங்க 
----------------------


10 ஒரு ஹீரோவா நீங்க ஜெயிச்சிருக்கலாம் , ஆனா ஒரு மனுஷனா தோத்துட்டீங்க -------

 
இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. மிட் நைட்ல தம்பதிகள் அவங்க பெட்ரூம் ல படுத்திருக்காங்க , அப்போ மனைவிக்கு அவ கள்ளக்காதலனும் , கணவனின் நெருங்கிய நண்பனுமான ஆள் கிட்டே இருந்து ஃபோன் வருது. அப்போ மனைவி “ அவர் பக்கத்துல தான் இருக்கார், நான் அப்புறமா கூப்பிடறேன்”ன்னு சொல்லி ஃபோனை கட் பண்றா, அப்போ புருஷன் எழுந்து யார் ஃபோன்ல என கேட்க மனைவி “ ராங்க்  கால்” ங்க்கறா. எவ்வளவு பெரிய ஓட்டை இந்த காட்சில ... 


அ. கணவனின் நெருங்கிய நண்பன் என்பதால் அவன் எப்போ வீட்ல இருப்பான்னு நண்பனுக்கு தெரிஞ்சிருக்கும் , மிட் நைட்ல ஃபோன் பண்ணினா ஆபத்துன்னு தெரியாதா? 


ஆ.  கள்ளக்காதலன் கிட்டே இருந்து ஃபோன் வரும்போது  அருகில் கணவன் இருப்பதால் மனைவி ஃபோனை கட் பண்ணி ஆஃப் பண்ணி இருக்கலாம், அல்லது மெசேஜ் அனுப்பி இருக்கலாம், அல்லது பெட்ரூமை விட்டு வெளியே பாத்ரூம் போவது போல் போய் அங்கே ரகசியமாய் பேசி இருக்கலாம் 


இ . போன் பேசி முடித்ததும் அந்த காலை எரேஸ் பண்ணவே இல்லை . பின் கணவன் ஃபோனை எடுத்துப்பார்த்து மிட் நைட்ல அவன் ஏன் ஃபோன் பண்ணான்? என கேட்க மாட்டானா? 


2. பர்சனாலிட்டியான , வசதியான , கவுரவமான பதவியில் கணவன் , குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கறான். மனைவியை அப்பப்ப சந்தோஷப்படுத்தறான், இத்தனை பிளஸ் இருந்தும் மனைவி தடம் மாறுவதற்கு காரணம் சொல்லவே இல்லை 3.  துரோகம் செய்த மனைவியை பிரசன்னா கார் ஏத்தி கொலை பண்ண முடிவு எடுத்தாச்சு , ஓக்கே . மோதியவர் அரைகுறையா அப்டியே விட்டுட்டுப்போவாரா? மனைவி அவரை பார்த்துட்டா , உயிர் பிழைச்சா ஆபத்து , சாட்சி ஆகிடுவா . இன்னொரு ஏத்து ஏத்தினா மேட்டர் ஓவர். அதை செக் பண்ணாம ஆளில்லா அந்த ரோட்டில் அவசர அவசரமா அவர் ஏன் திரும்பனும் ? 4. கிரிமினலான பிரசன்னாவுக்கு சேரன் எதுக்கு பரிதாபம் காட்டறார்? 5. பொதுவா மேல் அதிகாரிகள் என்ன சொல்றாரோ அதைக்கேட்பதுதான் நம்ம வேலை. ஆனா கமிஷனரின் ஆர்டருக்கு கட்டுப்படாமல் சேரன் தன் போக்கில் முடிவு எடுப்பது ஏன்? அதை சரத்தும் கண்டு கொள்ளலையே? 

 

6. ராமராஜன் வேட்டிகள் மற்றும் பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் மார்க்கெட்டிங்க் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் ஒழுங்கா  ஏரியா பார்க்கறாங்களா? என்பதைக்கண்காணிக்க அவர்கள் வசம் ஜிபிஎஸ் ஃபோன் கொடுப்பாங்க , அது அவங்க இருக்கும் ஏரியாவை காட்டிக்கொடுத்துடும் . சாதாரண கம்பெனியே அந்த ஐடியா ஃபாலோ பண்றப்ப போலீஸ் ஏன் அதை ஃபாலோ பண்ணலை?  சேரன் செல் கீழே விழுந்தாலோ , திடீர்னு ரிப்பேர் ஆனாலோ எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு ஏன் முதல்லியே யோசிக்கலை? 7. மணிக்கு 170 கிமீ வேகத்துல போகும் போலீஸ் சேரன் செல் ஃபோன்ல பேசிட்டே போவது ஆபத்து இல்லையா? பக்கத்துல ஒரு ஆள் சும்மாவே இருக்காரே? எதுக்கு? ஃபோன் ஆர்டர்களை ரிசீவ் பண்ண ஒருவர் , கார் ஓட்ட ஒருவர் என ரெடி பண்ணி இருக்கலாமே? 8. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட் ஃபேமிலி உருக்கம் ஓக்கே , ஆனா எப்போ திரைக்கதை கார்ப்பயணத்துக்கு வந்துச்சோ அப்பவே  அந்த செண்ட்டிமெண்ட் போர்ஷன் ஓவர் ஆகிடுச்சு , அதுக்குப்பின் கரெக்ட் டைம்க்கு அது போய்ச்சேர்ந்ததா? என்பதில் தான் ஆடியன்ஸ் ஆர்வம் இருக்கும் . அந்த டைம்ல பழைய சோகத்தை எல்லாம் பிழியக்கூடாது 9. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் காதலியாக வரும் ஃபிகர் புருவம் ஏன் அவ்ளவ் அடர்த்தியா இருக்கு? அதை ட்ரிம் பண்ணி இருக்கலாம் .க்ளோசப் ல அடிக்கடி காட்டுவதால் உறுத்துது ( உறுத்துதுன்னா கொஞ்சம் தள்ளி உட்கார்) 10 .  மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் அப்பா கேரக்டர் சோகம் காட்டின அளவுக்கு அம்மா கேரக்டர் சோகம் காட்டலை . மேக்கப் எதுக்கு அவ்வளவு ? குங்குமம் எல்லாம் கல்யாண வீட்டுக்குப்போற  மாதிரி , அந்த ஹாஸ்பிடல் சீன்ல இன்னும் அந்தம்மாவுக்கு மேக்கப் டல் பண்ணி இருக்கனும் 


 

மல்லிகாவுக்குப்பக்கத்துல இடது புறமா நிக்கும் ஃபிகரின் கீழ் உதட்டைப்பார்க்கவும் ஹி ஹி

11. பேஷண்ட்டோட கிரிட்டிகல் சிச்சுவேஷன் பற்றி ஒரு டாக்டர் இப்படித்தான் ஹெட் ஆஃப் த டாக்டர்ஸ் கிடே பேஷண்ட்டோட பேரண்ட்ஸ் முன்னால உளறுவாங்களா?12. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எப்பவும் “ நீ இந்த வேலையைச்செஞ்சிடு”ன்னு ஆர்டர் தான் போடுவாங்க. ஆனா கமிஷனர் சரத் “ யார் இதை செய்யத்தயார்?”னு கேட்பது காமெடின்னா யாருமே தயார் இல்லை என்பதும் செம காமெடி 13 . ஹெலிகாப்டர்ல போக முடியாது என புத்திசாலித்தனமா வசனம் வெச்சா போதுமா? குறிப்பிட்ட அந்த பயணம் பூரா மழை வருவது போலவோ , வானம் மோடம் போட்டிருப்பது போலவோ காட்ட வேணாமா? 14. மொத்தப்படமும் பிரமாதமா போய்ட்டிருக்கும்போது சூர்யா கேரக்டர் திணிப்பும் அவர் ரசிகர்கள் காருக்கு ரூட் ஏற்படுத்துவதும் அப்பட்டமான சினிமாத்தனம் 


15. சூர்யா ரசிகர்கள் உதவி பண்றாங்க  ஓக்கே , அப்போ படத்துல சூப்பர் ஸ்டாரா வரும் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் ?


16. இதய தானத்துக்கு ஆரம்பத்துல பெற்றோர் ஒத்துக்கலை , ஓக்கே , ஆனா அவங்க பின்னர் ஒத்துக்கொள்வதை காட்சியா காட்ட வேணாமா? சும்மா வசனத்துல மட்டும் ஒப்பேத்துனாப்போதுமா? 17. காரில் பயணம்  செய்ய  இன்னொரு ஸ்பேர் டிரைவர் ஏன் ரெடி பண்ணலை? சப்போஸ் அவர் டயர்டு ஆனாலோ , முடியாம போனாலோ ஆல்ட்டர்நேட்டிவ் டிரைவர் வேண்டாமா?


18. சாதாரண கார் டிரைவரை யூஸ் பண்ணீயதை விட அஜித் மாதிரி பைக் ரேஸ் வீரர் அல்லது  கார் ரேஸ் வீரர் என காட்டி இருந்தால் இன்னும் நம்பகத்தன்மையா இருந்திருக்கும்


19. கார் பயணிக்கும் நேரம் எல்லாம் வெய்யில் கொளுத்துவது போல் ஏன் காட்ட வேண்டும்? மூலப்படமான டிராபிக் மலையாளப்படத்தில்  மிகச்சிறப்பாக சீதோஷ்ணத்தை பேலன்ஸ் செய்து இருப்பதாக பார்த்தவர்கள் சொல்றாங்க20 ரவுடிகள் காரைத்துரத்தி பைக்கில் ரவுண்ட் கட்டும்போது அந்த லேடி ஏன் கார்க்கண்ணாடிக்கதவுகளை ஏற்றி விட வில்லை? 
 
21, சிட்டி கமிஷனர் நடத்தும் அவசர மீட்டிங்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமே இடம் பெற முடியும், சாதாரண போலீஸ் ட்ரைவர் எப்படி இடம் பிடிக்க முடியும்? அதே போல் ஆல் போலீஸ் டிரைவர்ஸ் மீட்டிங்க்கு வரனும் என சரத் குறிப்பிடுவதும் தேவை இல்லாததே


22. யார் யாருக்கோ நன்றி என டைட்டில் கார்டு போட்டவங்க “ 2008 இல் உடல் தானம் செய்ய உதவிய ஹிதேந்திரனின் பெற்றோருக்கு நன்றி என டைட்டில் ல போட்டிருக்கலாமே? 


23.  சேரன் ஃபாஸ்ட் டிரைவிங்க்கில் இருக்கும்போது சரத் அடிக்கடி ஃபோன் பண்ணி இப்போ எங்கே இருக்கீங்க? என பொண்டாட்டி மாதிரி நச்சரிப்பது மகா எரிச்சல். அவர் கார் ஓட்டுவாரா? உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருப்பரா?சென்னையில் ஒரு நாள் - நல்ல திரைக்கதை உத்தி - விகடன் மார்க் மே பி - 46  ( இது ட்விட்டர்ல போட்டது, ஆனா விகடன் மார்க் - 43 குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க்  3.5 / 5


சி பி கமெண்ட் - மாறுபட்ட சினிமாக்களை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத படம்

Monday, March 25, 2013

கந்தா - சினிமா விமர்சனம்

 
 
தினமலர் விமர்சனம்

  • நடிகர் : கரன்
  • நடிகை : மித்ரா
  • இயக்குனர் :பாபு.கே.விஸ்வநாத்

பத்திரிகையாளரும், ஆயிரம் சிறு கதைகளுக்கு மேல் எழுதிய இளம் எழுத்தாளரும், இயக்குனர் சரணின் உதவியாளருமான திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் எனும் பெயரில் தமிழ் சினிமா இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "கந்தா".

கதைப்படி, தஞ்சாவூரை சேர்ந்த படித்த இளைஞரான கரண், சில வருடங்கள் மலேசியாவிற்கு வேலைக்கு போய் கைநிறைய காசு பணத்துடன் ஊர் திரும்புகிறார். கரண் எதிர்பார்த்து திரும்பிய தஞ்சை காணாமல் போயிருக்கிறது. காரணம் தாதாயிசம்! 
 
 
 
 
 இத‌ில் கடுப்பாகும் கரணை அவ்வப்போது அவரது பால்ய காலத்து நண்பர்கள் பக்குவமாக பேசி கட்டுப்படுத்தி வர, ஒருநாள் தனக்கு கல்வியையும், வாழ்க்கையையும் வகையாக அமைத்துக் கொடுத்த வரது வாத்தியாரைத் தேடி புறப்படுகிறார் கரண். அப்பொழுது அவர் கண் எதிரேயே வரது வாத்தியாரை அடிக்கத் துரத்துகிறது ரவுடிக்கும்பல்! 
 
 
பொறுத்தது போதும் என பொங்கி எழும் கரண், அந்த கும்பலை நையப்புடைத்து அனுப்புகிறார். அவர்கள் தஞ்சையை கலக்கும் வில்லன் போஸின் ஆட்கள்! அப்புறம் விடுமா வில்லன் கோஷ்டி...?! கரணை விடாமல் துரத்துகிறது. போலீஸ்க்கு போகும் கரணுக்கு தாதா போஸ், தன் குருநாதர் வரது வாத்தியாரின் வாரிசு என்பது தெரிய வருகிறது. படிக்க வசதி இன்றி வாடிய தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய வரது சாரின் வாரிசு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என தஞ்சையை நஞ்சாக்குவது கரணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!
 
 
 
 வரது சார் விரும்பும் வகையில் போஸை திருத்த முற்படுகிறார். போஸ் திருந்தினாரா? கரண் வருந்தினாரா..? எனும் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையுடன் கரண்-மித்ரா ஜோடியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி கந்தா படம் தந்திருக்கிறார் பாபு கே.விஸ்வநாத்!

கரண், கந்தா எனும் பாத்திரத்தில் மலேசியா ரிட்டர்னாக பந்தாவாக அறிமுகமாகிறார். வில்லன்களுடன் வித்தியாசமாக மோதுகிறார். நாயகி மித்ராவுடன் விறுவிப்பாக ஆடுகிறார், என்றெல்லாம் சொல்வதற்கு ஆசை தான். ஆனால் எல்லாமே ஏற்கனவே எங்கோ பார்த்த சாயலிலேயே இருப்பது பலவீனம். ஆனாலும் அவரது வாத்தியார் - ராஜேஷின் எண்ட்ரிக்குப்பின் படத்திற்கு புதிய பலமும், புத்தம் புதிய களமும் கிடைக்கிறது! வரது வாத்தியாரின் வாரிசுதான் தஞ்சையை கலக்கும் தாதா போஸ் என்பது ட்விஸ்ட்!


கதாநாயகி மித்ரா தேய்த்து வைத்த வெள்ளி குத்துவிளக்காக வருகிறார், போகிறார். அம்மணிக்கு நடிப்பு எனும் ஜொலிப்பு மட்டும் கம்மியாக இருக்கிறது பாவம்! அவருடன் வரும் குண்டு ஆர்த்தி கடிக்கிறார். ஆர்த்தியை விட காமெடி என்ற பெயரில் அதிகம் கடிக்கின்றனர் விவேகமில்லாத நடிகரும், செல்முருகனும்! அதேநேரம் கரணின் நண்பராக வரும் சத்யனை இந்தப்படத்தில் சகித்துக் கொள்ள முடிவது ஆறுதல்!

போலீஸ் அதிகாரி ரியாஸ்கான், அரசியல்வாதி காதல் தண்டபாணி உள்ளிட்டோர் கந்தாவுக்கு பலம்! அதேநேரம் இந்தப்படத்திலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரான ரியாஸ்கான், தன் மகனுக்கு வரதராஜன் என தன் பள்ளி ஆசிரியரின் (கரண் மாதிரி ரியாஸ்க்கும் ராஜேஷ் தான் ஆசிரியர்) பெயரை சூட்டியிருப்பது டிராமாவாகத் தெரிவதும் மாதிரியே, க்ளைமாக்ஸில் வில்லனுக்கு சுதந்திரதினமன்று காந்தி வேஷம் கட்டி போலீஸிடமிருந்து அவரை காப்பாற்ற போராடும் கரணின் சாதுர்யமும் புதுமை என்றாலும் நாடகத்தன்மையாக இருப்பது கந்தாவின் பலவீனம்!

ஆக மொத்தத்தில், சக்தி ஆர்.செல்வாவின் இனிய இசை, சிவக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பாபு கே.விஸ்வநாத்தின் எழுத்து - இயக்கத்தில், "கந்தா" பாதி "பந்தா!" மீதி...?!!
 
 
 

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

Wednesday, February 27, 2013

சில்லுனு ஒர் சந்திப்பு - சினிமா விமர்சனம்

 

அந்தக்காலத்துல சீத்தலைச்சாத்தனார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் ஏதாவது தப்பா எழுதிட்டா தன் தலைல தானே எழுத்தாணியால குத்திக்குவாரு. அப்படி குத்தி குத்தி மண்டை செப்டிக் ஆகி சீழ்த்தலை சாத்தனார் ஆகிட்டாரு, பேச்சு வழக்கில் பின் சீத்தலைச்சாத்தனார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க . அதே மாதிரி ஒரு ஃபிகரு தான் என்ன தப்பா சொன்னாலும் அழகா தன் மண்டைல கொட்டிக்கறாரு ( நல்ல வேளை ... மண்டைல கொட்னாரு ) 


ஹீரோயின் மண்டைல கொட்டிக்கற அழகைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்து தொலைச்சுடுது. 2 கேனங்களும் லவ் பண்ணுது . இதுல என்ன புதுமைன்னா அவங்க 2  வீட்டு பெற்றோர்களும் மாமா வேலை பார்க்காத குறையா  அவங்க லவ்வுக்கு சப்போர்ட் பண்றாங்க . ( ஒரு சீன்ல மாடில இருக்கும் பெட்ரூம்க்கு 2 பேரையும் அனுப்பிட்டு 2 பெற்றோர்களும் கெக்கே பிக்கே னு இளிக்குதுங்க )

படத்துல வில்லனே இல்லைன்னு தெரிஞ்சதுமே நமக்கு சிச்சுவேஷன் தான் வில்லன்னு தெரிஞ்சுடுது. ஹீரோவுக்கு  +2 படிக்கும்போது ஒரு  லவ் இருந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிஞ்சுடுது , ரொம்ப சென்சிட்டிவ் கேரக்டரான ஹீரோயின் டூ விட்டுட்டு போய்டுது . 

 ஹீரோ அந்த + 2 படிக்கறப்ப லவ்வுன ஃபிகரை இப்போ மீட் பண்றாரு. 2 பேரும் லவ்வைப்புதுப்பிச்சாங்களா? இல்லையா? யார் கூட ஹீரோ ஜோடி சேர்றார்? என்பதே கதை

களவாணி படம் ஹிட் ஆனது இயக்குநர் சற்குணத்தால. விமல் தன்னால தான் அப்டினு நினைச்சுட்டு இருக்கார் போல. ரொம்ப அசால்ட்டு . என்னமோ புருஷனை மதிக்காத பொண்டாட்டி மாதிரி படம் முழுக்க ஏனோ தானோன்னு நடிச்சிருக்காரு . வசனம் பேசும்போது வாய்ஸ் மாடுலேஷன் சுத்தமா வர்லை . கவனம் செலுத்துனா நல்லது . மற்றபடி ஆள் பர்சனாலிட்டி ... 

ஹீரோயின் தீபா ஷா , ஃபிகருக்கு  கண் உதடு 2ம் ரொம்பச்சின்னது . ( இனி ஒண்ணும் பண்ண முடியாது , சும்மா சொல்லி வைப்போம் )  அடிக்கடி தலைல கொட்டிக்கும் சீன், வெட்கப்படுவது என ஸ்கோர் பண்றார். க்யூட்டான நடிப்பு , ஆனா பாப்பாவுக்கு கோபம் சரியா வர்லை . இன்னும் வளரனும் ( ஃபீலிங்க்ஸை சொன்னேன் ) 


 போஸ்டர்ல மார்க்கெட் வேல்யூ ஏத்திக்க இன்னொரு ஹீரோயின் ஓவியா. நேர் கொண்ட பார்வை , நிமிர்ந்த நன்னடை வேணும்னு பாரதியார் சொன்னாலும் சொன்னாரு . ஓவியா டைட் டி சர்ட் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு படம் பூரா வருது . என்னமோ ஜிம்ல பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் டூ செஸ்ட் பண்ணிட்டு அப்போதான் வெளில வர்ற மாதிரி ஒரு பில்டப் . செம கிளு கிளுப்பு . இவர் +2 கேர்ளா வர்றது கூட ஓக்கே , ஆனா விமல் கூட  + 2 பாய்னு சொல்றது எல்லாம் ஓவரோ ஓவர் 

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  போஸ்டர் டிசைனும் , டைட்டிலும் செமயான லவ் ஸ்டோரி போல என எண்ண வைக்கும் யுக்தி , நல்லா ஒர்க் அவுட் ஆகி  ஓப்பனிங்க்ல தியேட்டருக்கு காலேஜ் ஸ்டூடண்ட்சை வர வெச்சிருக்கு 2. சின்னத்தம்பி பெரிய தம்பி பிரபு சத்யராஜ்  மாதிரி சின்ன தங்கச்சி பெரிய தங்கச்சி மாதிரி தீபா ஷா , ஓவியா வை முறையே ஹீரோயின் நெம்பர் 1 , நெம்பர் 2 வா புக் பண்ணது 


3. இதே ஹீரோ விமல் நடிச்ச இஷ்டம் படக்கதையை கொஞ்சம் உல்டா பண்ணி இவர் கிட்டேயே கால்ஷீட் வாங்குனது


4. மனோபாலா காமெடி டிராக்கை டபுள் மீனிங்கில் எழுதி சி செண்ட்டர் ரசிகர்களை கவர முயன்றது 5. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் 2ம் குட் 
இயக்குநரிடம் சில கேள்விகள்1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ ஹீரோயின் 2 பேரும்  பிளஸ் டூ ஸ்டூடண்ட்ஸா டவுன் பஸ்ல டிக்கேட் எடுக்காம பொய் செக்கிங்க்ல மாட்டிக்கறாங்க . ஓக்கே , ஆனா  அதுக்காக 2 பேரையும் போலீஸ் ஜீப்ல ஏத்திட்டு போகுமா? வார்ன் பண்ணி விட்டுடுவாங்க . அதுவும் மாணவியை ஜீப்ல ஏத்திட்டு போக சட்டத்துல இடம் இல்லை 2.  ஹீரோ கூட சைக்கிள் ல போக ஹீரோயின் தன்னோட சைக்கிளை  ஹேர் பின்னால டயரை குத்தி பஞ்சர் பண்ணிக்குது. அது ஏன் காலம் காலமா அப்படியே பண்றாங்க? வால்ட்யூப்பை ஓப்பன் பண்ணி விட்டா காத்து இறங்கிட்டுப்போகுது . அவன் என்ன செக் பண்ணவா போறான்? 


3. ஹீரோ ஃபோன்ல  “ அங்கே தான் வந்துட்டு இருக்கோம் “னு பன்மைல தான் சொல்றாரு , எதுக்கு “ அவளையும் கூட்டிட்டு வா அப்டினு அம்மா சொல்வதா ஒரு வசனம் ? 4.  லவ்வர்ஸ் ஹோட்டல்ல சாப்பிடுவதும் , காதலி லவ் பண்ணலைன்னு சொன்னதும் காதலன் தனித்தனி பில் என்பதும் உடனே காதலி கிஸ் கொடுப்பதும் பல படங்களில் பார்த்து சலித்த சீன். அந்த காமெடியை அவ்வளவு நீளமா மொக்கையா கொண்டு போகனுமா? 5. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கும் எல்லா பசங்களுக்கும் நான் தான் டாக்டர் அப்டினு ஓவியா சொல்லும் டபுள் மீனிங்க் காமெடி சகிக்கலை 


 
6.  அமெரிக்கா போறவர் தன் சொந்தக்கார்ல போய் பார்க்கிங்க் பண்ணிட்டு ஃபிளைட்ல போய் அமெரிக்கால செட்டில் ஆவது செம காமெடி , சொப்பன சுந்தரி கார் மாதிரி ஸ்டேண்டில் விட்ட காரை யார் வெச்சுப்பாங்க? அதுக்கு டாக்சில போய் இறங்குவதா காட்டி இருக்கலாம் 


7. க்ளைமாக்ஸ்;ல ஹீரோயின் ஹீரோவுக்கு ஃபோன் பண்றார், அவர் எடுக்கலை , பர பரப்பான சூழல்ல ஒரு எஸ் எம் எஸ் அனுப்ப மாட்டாரா/ ?


8.  கதைக்களம் ஊட்டி, ஆனா ஒரு சீன்ல ஜெமினிகணேஷன் பங்களா வருது , அது கொடைக்கானல் ஆச்சே? 


9. ஹீரோ ஃபாரீன்ல இருந்து ஒரு  நாய் பொம்மை வாங்கிட்டு வர்றார். அதுக்கு ஏன்  அவ்வளவு முக்கியத்துவம்? கதைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எடிட்டிங்க்ல கட் ஆகிடுச்சா?


10 .  ஸ்கூல் லவ்வை ஹீரோவே கேவலமா பேசுவதும் , இந்தக்காதலி இல்லைன்னா அந்தக்கதலி என்னும் விதமாய் ஹீரோ பல்டி அடிப்பதும் காதலை கொச்சைப்படுத்தும் உத்திகள் 


11. ஸ்கூல் கலாட்டா என்ற பெயரில் நடக்கும் டீச்சர் - வாத்தியார் லவ் கூத்துகள் , காபி சாப்டியா? என்றால் மேட்டரை முடிச்சுட்டியா? என்ற டபுள் மீனிங்க் காமெடியை ஒரு லேடியே சொல்வது எல்லாம் மலிவான வியாபார உத்தி  

மனம் கவர்ந்த வசனங்கள்1.  டியர் ஸ்டூடண்ட்ஸ் , லிசன்  ( கவனிங்க ) 


அடேய்.. எங்கேடா பார்க்கறீங்க? போர்டை பார்க்கச்சொன்னா பொண்ணுங்களைப்பார்க்கறீங்க? 2.  செக்கிங்க் ஆஃபீசர் - டிக்கெட் எங்கே? 

 போன ஸ்டாப்பிங்க்லயே இறங்கிப்போய்ட்டா.. 3.  என்னை மட்டும் இல்லை , என் பேப்பரைக்கூட உன்னால திருத்த முடியாது 


4. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.
அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா?


5. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு6. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை
7. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே 8.  நீ பேசிட்டே இருக்கணும். நான் கேட்டுட்டே இருக்கணும். அதுக்குத்தான் நான் எதையும் சொல்லலை


9.நீ இவுங்க மகளோட குடும்பமே நடத்தினாலும், கண்டுக்காத குடும்பம் இது


10.  உலகத்துலயே பெரிய அருவியான நயாகரா அருவியை தெரியாதவங்க கூட இருக்கலாம் , ஆனா வயாக்ரா தெரியாத ஆளே கிடையாது 

 

11.  என்னம்மா நோட்டு(ம்) கசங்கி இருக்கு> ?`12.  கண்டக்டர் கிட்டே பேசுனே ஓக்கே , டிரைவர் கிட்டேய்யும் பேசுறியே , அவர் நம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துடப்போறார்13.  அம்மா , அடிக்கடி அந்த மேஜர் அங்கிள் துப்பாக்கியை காட்டி பயப்படுத்தறார்14.  ஃபாரீன்ல கில்மா எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க . ஜஸ்ட் காஃபி சாப்பிடற மாதிரி 

 லேடி - தம்பி , அப்போ எத்தனை காபி சாப்டிருக்கீங்க? 15.  எனக்கு காபி சாப்பிடற பழக்கமே இல்லைங்க 

 கல்யாணத்துக்கு அப்புறமாவாவது சாப்டுறு, வேற யாராவது உன் காபியை குடிச்சுடப்போறான்


16.  நீ எனக்கு தெரிஞ்சதைப்பேசுனாலும் , தெரியாததைப்பேசுனாலும் எனக்கு அது புதுசாத்தான் இருக்கும் 


17. பொண்ணுங்க ஏன் ஆபத்துல இருந்து அவங்க காதலனை க்காப்பாத்தறாங்க?

 மேரேஜ்க்குப்பிறகு தான் சாகடிக்க வேண்டிய ஆளை வேற யாரும் சாகடிக்கக்கூடாதுன்னுதான் 


18.  வீட்டுக்கு ஒரு மேரேஜ் புரோக்கர் ஓக்கே, ஆனா உங்க வீட்ல  வீடே புரோக்கர் மயமா இருக்கே? 19.  வெட்கமா இருக்கு 

 ஏன்? வெட்கம்னா உனக்குப்பிடிக்காதா? 


 வெட்கத்தைப்பிடிக்காத  பொண்ணு உலகத்துலயே இல்லை 20 . கல்யாணம் ஆகும் வரை ஒரு செகண்ட் கூட சலனப்படாத , சலனப்படமாட்டேன்கற  நேர்மையோட நான் இருப்பேன்  21 இந்த உலகத்துல எத்தனை லவ் ஃபெயிலியர் ஆனாலும் மீண்டும் மீண்டும் லவ் தோன்றக்காரனம் சரக்கு இருக்கும் தைரியம் தான்22.  உன்னைப்பார்த்தா லவ் ஃபெயிலருக்காக குடிக்கற மாதிரி தெரியல , குடிக்கறதுக்காகவே லவ் ஃபெயிலியர் ஆன மாதிரி தோணுது 23.  பசங்க சைக்காலஜி என்னன்னா மிஸ்டு கால் வந்தா உடனே கூப்பிட்டு பேசிடனும் , அது ஒரு ஃபிகரா இருக்கக்கூட சான்ஸ் இருக்கே..?  ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்  சி பி கமெண்ட்  - ஓவியாவின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்,  மற்றபடி படத்துல ஒண்ணும் கிடையாது . அரியலூர் நடராஜா தியேட்டர்ல இந்த டப்பா படத்தை பார்த்தேன் . தியேட்டரும் டப்பா  . தமிழ் நாட்லயே கேண்ட்டீன் கூட இல்லாத  ஒரே தியேட்டர் இதுதானாம், டெண்ட் கொட்டாய்ல கூட கேண்ட்டீன் இருக்கும் . ஹூம்..  படம் பிப்ரவரி 14 க்கே ரிலீஸ் ஆகிடுச்சு, இப்போதான் நான் பார்த்தேன்Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டின் அடுத்த சி எம் கனவில் இருக்கும் கேப்டன் நடித்த ஏ வி எம் மின் மாநகரக்காவல் ல பாரதப்பிரதமரை வில்லன் கிட்டே இருந்து ஹீரோ காப்பாத்துவாரு,அமரர் திருப்பதிசாமி இயக்கிய நரசிம்மா படத்துல கேப்டன் தீவிரவாதியா  அவங்க கூட்டத்துல ஊடுருவி  டபுள் கேம் ஆடுவாரு.இந்த 2 கதையையும் மிக்ஸ் பண்ணுனா  டக்னு நம்மாளுங்க கண்டு பிடிச்சுடுவாங்க . அதனால  மசாலாப்பொரி ல சீரகம் சேர்த்தற மாதிரி THE TRAITOR ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி தாலிபான்கள் வாழ்க்கை பற்றி கொஞ்சம் சேர்த்தி  அர்னால்டு ஸ்வார்செனேகர் நடிச்ச TRUE LIES  படத்துல இருந்து கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவுனா கம கமக்கும் பர பரக்கும் ஆக்‌ஷன் மசாலா ரெடி .


4 படங்கள் பார்க்கும் செலவை ஒரே படத்துல  ஆடியன்ஸ் பார்த்துவிடுவதால் டிக்கெட் 4 மடங்கு போல .. 


ஓப்பனிங்க்ல நாட்டியக்கலைஞரா வரும் கமல் காட்டும் நளினங்கள், கண் அசைவுகள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் அட்டகாசம் . ஆல்ரெடி வரலாறு படத்துல அஜித் பண்ணின கேரக்டர்தான் என்றாலும்  கமல் டச் இன்னும் மெருகு .ஆணழகன் ல பிரசாந்த் ட்ரை   பண்ணுனார்,ஆனா இந்த அளவு நளினம் இல்லை. அந்தப்பாடலில் வரும் அட்டகாசமான 75 மார்க் ஃபிகர்கள் 6 பேரால்
   கூட காட்ட முடியாத நளினத்தை , பெண்ணின் பாவத்தை அநாயசமாய்க்கமல் காட்டி விடுகிறார்

முஸ்லீமாக  கமல் வரும் காட்சிகளில்  அசல் முஸ்லீமாகவே தெரிவது கமலின் தனிச்சிறப்பு.இந்த 2 டானிக் தவிர நடிகர் கமல் பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங்க்தான். அவரை சர்வசாதாரணமாக இயக்குநர் கமல் ஓவர் டேக்கி விடுகிறார்.  வில்லனாக வரும் ராகுல்போஸ் என்னமா  முகத்துல குரோதத்தை தேக்கி வெச்சிருக்கார் . அற்புதம் . ஆஜானுபாவகமான தோற்றம் + உயரம் அவருக்கு பெரிய பிளஸ்.. 


ஹீரோயின் பூஜா குமார் .அல்வாத்துண்டு உதட்டழகி .கிறங்க வைக்கும் மேனி அழகை அவர் ரொம்ப இறங்கி வந்து காட்டினாலும் , உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டாமலேயே எழுப்பினாலும் , தமிழ் ரசிகர்கள் இந்த அளவு இறங்கிப்போன அழகை ரசிப்பார்களா என்பது சந்தேகமே. அவர் இனி வரும் படங்களில் மல்லிகா ஷெராவத் , ஏஞ்சலினா ஜூலி இவர்களின்  பேடு  வைக்கும் நாலெட்ஜை கற்றுக்கொண்டால் நல்லது .


ஊறுகாயாக வரும் ஆண்ட்ரியா  பெருசா ஏதும் நடிப்பை(யும் ) காட்டலை . அவருக்கு வாய்ப்பு கம்மி 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. தாலிபான்கள் வாழ்க்கையில் நிகழும் அவலங்கள் , அகதி வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம் ,குழந்தைகள் கூட தீவிரவாதப்பயிற்சி எடுப்பது, டாக்டருக்குப்படிக்க விரும்பும் சிறுவன் ஆசை நிராகரிக்கப்படுவது என முழுக்க முழுக்க ஒரு மணி நேர வரலாற்றுப்பதிவு ஆக்கியது தமிழ் சினிமா வில்  ஒரு மைல் கல். ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டதும் தமிழில் இதுவே முதல் படம் 


2. கமல் விஸ்வரூபம் எடுக்கும் ஓப்பனிங்க் ஃபைட் காட்சி அட்டகாசம் . தியேட்டரில் கரகோஷம் அடங்கவே இல்லை . இதே போல் தமிழ் சினிமாவின் அட்டகாசமான ஃபைட் காட்சிகள்  கேப்டன் பிரபாகரனில் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட் , ரன்  படத்தில் மாதவன் ஓடிப்போய் ஷட்டரை இறக்கும் காட்சி , பாட்ஷா படத்தில் ரஜினி யின் இடைவேளை ஃபைட்  அரங்கு அதிரும் உதாரணங்கள் பூஜா குமார் அதே ஃபைட் சீனை நினைத்துப்பார்ப்பதும் அது ஸ்லோ மோஷனில் வருவதும் தமிழ் சினிமாவுக்கு முதல் முறை ) ஆல்ரெடி சிறையில் பூத்த சின்ன மலர் -ல் கேப்டன்  40 செகன்ட் அப்படி ஸ்பீடு , ஸ்லோ மோஷன் என டபுள் எண்ட்ரி ட்ரை பண்ணி இருந்தாலும் இது டியூரேஷன் , மேக்கிங்க் உலகத்தரம் .ஜாக்கிசானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் பட ஃபைட்டை நினைவு படுத்தியது .ஸ்டண்ட் மாஸ்டர் , பின்னணி இசை அமைப்பாளர் , கமலின் உழைப்பு மூன்றுக்கும் ஒரு  ராயல் சல்யூட்3. கமலின் மனைவி கேரக்டர் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது போல் நடிப்பது கடந்த 20 வருட கமல் சினிமா வாழ்வில் இது முதல் முறை . இமேஜ் பார்க்காமல் நடித்தது குட்.. ( 20 வருடங்களுக்கு முன் அவர் நடிச்ச படங்கள்ல ஒரு வேளை இருந்திருக்கலாம் ) 


4. ஒரு மீடியமான ஆக்‌ஷன் படத்தை உலக  அளவில் கவனத்தை ஈர்த்த விதம் , 100 கோடி ரூபாய் செலவு பண்ணினாலும் கிடைக்காத நெகடிவ் பப்ளிசிட்டி , அப்படி தடை பண்ணும் அளவு என்னதான் படத்துல இருக்கு என சாமான்ய ரசிகனையும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய சாமார்த்தியம்  எல்லாம் கமலுக்கே போய்ச்சேரவேண்டிய கிரடிட்.. 

5. உனைக்காணா பாட்டில் கமல் காட்டும் அபிநயங்கள், பாடல் இசை எல்லாம் அற்புதம் . அதே போல் யார் என்று புரிகிறதா? பாட்டும் நல்ல மேட்சிங்க் 


இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 
9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 

11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?


 மனம் கவர்ந்த வசனங்கள்( காதுக்கு கேட்ட கொஞ்சமாச்சும் புரிஞ்ச வசனங்கள் )
1. நான் கெட்டவ இல்லை டாக்டர் 


இங்கே வர்ற பேஷண்ட்ஸ்  யாரும் கெட்டவங்க கிடையாது
2. பிடிக்காத விஷயத்தை எப்படி ரசிச்சு செய்யறீங்க? என் மனைவிக்கு சிக்கன்  ரொம்பப்பிடிக்கும் , எனக்கு என் மனைவியை ரொம்பப்பிடிக்கும் . மணவாட்டியே மணவாளன் பாக்கியம் இல்லையா? 3. ஒபாமா ரேட்டிங்கை ஏத்திக்கறார்

 இது தப்பில்லையா? 
4.  அப்பா இல்லாத பசங்க சராசரி ஆளுங்களை விட  உஷாரா இருப்பாங்க உன்னை மாதிரி .. தமாசு அப்பா யாருன்னே தெரியாத  பசங்க எல்லாரையும் விட உஷாரா இருப்பாங்க , உன்னை மாதிரி , இதுவும் தமாசு 


5.  என்ன மொழி பேசுனாலும் என் மகன் போராளியாத்தான் வருவான், என்னை மாதிரி 


6. பொம்பள நீ முக்காடு போடு , உடம்பை மூடு , ஊரை விட்டு ஓடு 
7. நீங்க உங்கப்பாவை விட நல்லவரா? 


 நோ


 ஏன் அப்டி இல்லை?


8. கடவுள் தான் காப்பாத்தனும் 


 எந்தக்கடவுள் ?


9.  என் வாழ்க்கைல நான் நல்லதும் செஞ்சிருக்கேன், கெட்டதும் செஞ்சிருக்கேன் , ஐ ஆம் எ ஹீரோ அண்ட் ஐ ஆம் எ வில்லன் 10. அல்லா நம்மை மன்னிக்கவே மாட்டார் 


 நம்மை? உங்களைன்னு சொல்லுங்க 11.  என் கடவுளுக்கு 4 கை 


 அப்போ எப்படி சிலுவைல அறைவீங்க? 
சி.பி கமெண்ட் -  கமல் ரசிகர்கள் , போர் அல்லது  போராளிகள் பற்றிய படம் விரும்பிப்பார்ப்பவர்கள்  இந்த இரு தரப்பு மட்டுமே படம் பார்க்கலாம். மற்றபடி படத்தில் வன்முறைக்காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதால் பெண்கள் , மைனர்கள் , மாணவ மாணவிகள் பார்க்க முடியாது . 


ஆனந்த விகடன் ஆல்ரெடி 46 மார்க் போட்டுட்டாங்க. கம்மி. ஏழாம் அறிவுக்கே 48 கொடுத்தவங்க இதுக்கு  தாராளமா 50 மார்க் கொடுத்திருக்கலாம் ரேட்டிங்க் - 7 / 10 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 


 டிஸ்கி - இன்னைக்கு சண்டே , படம் போட்டு 3 நாட்கள் தான் முடிஞ்சிருக்கு , ஆனா 30 % சீட் தான் ஃபுல் ஆகி இருக்கு . கமல் ன் விஸ்வரூபம் ரஜினி யின் எந்திரனை மட்டுமல்ல விஜய் ன் துப்பாக்கியை கூட தாண்ட முடியாது # தமிழ்நாட்டில்.ஆனால் வசூலில் ஆல் ஓவர் த வோர்ல்டு  100 கோடியை அள்ளிடும்