Friday, March 01, 2013

எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ? - எம் எஸ் வி பேட்டி

'ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான்!''


விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்
உங்களைப் பத்தி ஒரு ரகசியம் கேள்விப்பட்டேனே... நீங்க குழந்தையா இருக்கும்போது உங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்கலையாம். உங்க தாத்தாதான் இப்ப நீங்க உயிரோட இருக்கக் காரணமாம். இது உண்மையா?'' 


 
''திருச்சியில் என் அப்பா ஜெயில் வார்டனா இருந்தார். எனக்கு நாலு வயசா இருந்தப்போ, திடீர்னு அப்பாவுக்கு சீக்கு வந்து இறந்துபோயிட்டார். குடும்பமே சோகத்தில் மூழ்கிருச்சு. தொடர்ந்து சில நாட்கள்லயே அடுத்த இடியா என் தங்கச்சி வேசம்மாவும் இறந்துபோயிட்டா. அம்மா தனி ஆளா என்னை வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அப்போ அக்கம்பக்கத்துல இருந்தவங்க, 'அப்பனையும் தின்னுட்டான்... தங்கச்சியையும் முழுங்கிட்டான்’னு என்னைத் திட்டித் தீர்த்துருக்காங்க. 'புருஷன் செத்துப்போயிட்டாரு... புள்ளையையும் ஊரார் கரிச்சுக்கொட்டுறாங்களே’னு  மன சொடிஞ்சுபோன அம்மா, ஒரு நாள் அதிகாலை மூணுமணிக்கு திருச்சிலேர்ந்து புதுக்கோட்டை போற ரோட்ல இருந்த ஒரு குளத்துல என்னைத் தள்ளிவிட்டுட்டு தானும் செத்துப் போகப் பார்த்திருக்காங்க. அந்த நேரத்துல வீட்ல மகளைக் காணோம்னு தாத்தா கிருஷ்ணன் நாயர் தேடிக் கிட்டு வந்து, தற்கொலை பண்ணிக்க இருந்த அம்மாவையும் என்னையும் காப்பாத்திட்டார்.  ஆமா... நீங்க  கேள்விப்பட்ட மாதிரி நான் இன்னைக்கு உயிரோட இருக்கக் காரணம், என் தாத்தா கிருஷ்ணன் நாயர்தான்!''


வி.பிரகதி, தூத்துக்குடி. 


''தமிழில் இப்போது வரும் குத்துப் பாடல் களைக் கேட்கும்போது என்ன நினைப்பீர்கள்?'' ''சினிமாவில் குத்துப் பாட்டுங்கிறது காலம் காலமா இருந்துட்டு வர்ற விஷயம் தான். இரண்டரை மணி நேர அலுப்புத் தெரியாம மக்களை சினிமா பார்க்க வைக்கிற உத்தி அது. அதுல முக்கியமாகவனிக்க வேண்டியது குத்துப் பாட்டின் வரிகளைத்தான்.  கண்ணியமா... யாரையும்புண்படுத்தாம எல்லாரும் ரசிக்கிற மாதிரி வரிகள் இருக்கணும். ஆனா, இப்ப வர்ற குத்துப் பாடல்களில் வருகிற வரிகள் எல்லாம் எப்படி இருக் குனு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை. அந்தக் காலத்துல நாங்க போடாத குத்துப் பாட்டா? என்ன, அதை அப்ப டப்பாங்குத்துனு சொல்வாங்க. 'என்னடி ராக்கம்மா...’, 'எலந் தப் பழம்... எலந்தப் பழம்...’ பாட்டெல்லாம் இந்தத் தலைமுறைக்கும் தெரிஞ்ச டாப் டப்பாங்குத்து ஆச்சே. ஆனா, அந்தப் பாட்டெல்லாம் கேட்கிறவங்க காதைக் கூசவைக்காது.''
வி.கேசவன், மயிலாடுதுறை. 

''உங்கள் இசையமைப்பில் ஜெயலலிதாவைப் பாடவைத்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்?'' ''எம்.ஜி.ஆர்... என்கிட்டே அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பார். 'நம்ம அம்மு நல்லா பாடுது. அதுக்கு இனிமையான குரல். உன் மியூஸிக்ல அம்முவுக்கு ஒரு வாய்ப்பு கொடு’னு கேட்டுட்டே இருப்பார். அது என்னமோ தெரியலை... நடிகர் கள், நடிகைகள், கவிஞர்கள் இவங்களை எல்லாம் பாடவைக்கணும்னு எனக்குத் தோணவே தோணாது. என்னைச் சுத்திலும் பிரமாதமா பாடுற பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இருந்த தும் அதுக்குக் காரணம். எம்.ஜி.ஆர். பார்க்கும்போது எல்லாம் கேட்டுட்டே இருந்ததால, முக்தா சீனிவாசன் தயாரிச்ச 'சூரியகாந்தி’ படத்துல 'ஓ மேரா... தில்ரூபா...’ பாட்டைப் பாடுற வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவுக்குத் தந்தேன். டி.எம்.எஸ்ஸோடு சேர்ந்து பிரமாதமாப் பாடியிருப்பாங்க. அந்தப் பாட்டை ரிக்கார்டிங் குக்கு முன்னால ஒரே ஒரு தடவைதான் அவங்களுக்குப் பாடிக் காட்டினேன். சட்டுனு புடிச்சிக்கிட்டாங்க. கற்பூரப் புத்தி!''ஜி.காசிநாதன், கும்பகோணம். 


''நீங்க இசையமைத்த முதல் பாட்டுக்கு உங்க பேர் வரலையாமே?'' 


''ஆமாங்க. 'வீர அபிமன்யு’ங்கிற படம். அந்தப் படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் மியூஸிக். நான் அப்ப அவர்கிட்ட வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோடு ஜி.கே.வெங்கடேஷ், சி.ஆர்.கோபால கிருஷ் ணன் போன்றவங்கல்லாம் சேர்ந்து வேலை பார்த்தாங்க. 'புது வசந்தமாமே வாழ்விலே...’ என்கிற பாட்டுக்கு ஏகப்பட்ட டியூன் போட்டாரு எஸ்.எம்.சுப் பையா நாயுடு. ஆனா, எதுவுமே பொருத்தமா அமையலை. ஒரு நாள் மத்தியானம் யாரும் இல்லாதப்ப நான் அந்தப் பாட்டுக்கு ஒரு டியூன் போட் டேன். எனக்கு என்னவோ கேட்டதுமே அந்த டியூன் பிடிச்சுப்போச்சு. நான் இதை யார்கிட்டயும் சொல்லலை. ஆனா, நண்பர்கள் விஷயத்தை  சுப்பையா நாயுடுகிட்ட போய் சொல்லி இருக்காங்க. அவர் டியூன் கேட்டுட்டு சந்தோஷப் பட்டார். நான் போட்ட டியூனி லேயே அந்தப் பாட்டு பதிவா னாலும் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பேர்லதான் படத்துல வந்துச்சு.


பல நாள் கழிச்சு ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகிட்ட என்னை அழைச்சுட்டுப் போயி, 'வீர அபிமன்யு படத்துல 'புது வசந்தமாமே வாழ்விலே...’ பாட்டுக்கு மெட்டுப் போட்டது நான் இல்லை. இதோ இந்த விஸ்வநாதன்தான். இவனுக்கு உங்க கம்பெனியில ஒரு சான்ஸ் கொடுங்க’னு சொல்லி, எனக்கு வாழ்க்கையில முதல் கதவைத் திறந்துவெச்சவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுப்ப தற்காகத்தான் அந்த உண்மையைச் சமயம் பார்த்துச் சொல்றதுக்காக, அவர் பொறுமையாக் காத்திருந்தார்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது!''எஸ்.பிரிஸில்லா, சென்னை-5.


''உங்க இசையமைப்பில் வரும் பல பாடல்களில் தமிழ் மொழியை வெச்சு ஏதாவது புதுமை செய்து இருப்பீங்க. அதெல்லாம் எப்படி அமைஞ்சுது?'' ''அதுக்கெல்லாம் அந்தப் படத்தோட இயக்குநர், தயாரிப்பாளர், கவியரசு கண்ணதாசன், என் இசைக் குழு... இவங்க எல்லாருமே காரணம். சூழல்தான் ஒரு பாட்டை மெருகேத்திப் பளபளக்கவைக்கும்னு நான் நம்புறேன். உதார ணத்துக்குச் சொல்றேன், 'பட்டினப்பிரவேசம்’ படத்துக்கு நான் ஒரு டியூன் போட்டேன். டியூனைக் கேட்ட பாலசந்தர், இந்தப் பாட்டுக்குப் புதுமையா ஏதாவது வரிகள் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னார். என் டியூனைக் கேட்ட கண்ணதாசன், 'இதுக்கு ல... ல...னு முடியிற மாதிரி வார்த்தைகளைப் போட்டா நல்லா இருக்கும்’னு சொன்னார். பாலசந்தரும் சரி சொல்ல, அப்படி உருவானதுதான் 'வான் நிலா... நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’ங்கிற பாட்டு!''


கா.விஜயராகவன், சுரக்குடி. 


''எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ?''''மனசுக்கு ரொம்பச் சங்கடமா இருக்குங்க. மெலடி பாடல்கள் வரலைனு சொல்ல முடியாது. வர விட மாட்டேங்கிறாங்கன்னுதான் சொல்லணும். ஃபாஸ்ட் பீட்னு அவசர அவசரமா அள்ளித் தெளிக்கிறாங்க. அதைத்தான் இந்தக் காலத்து இளைஞர்களும் கொறிக்கிறாங்க. ஆனா, எப்பவும் காலம் கடந்து நிக்கப்போறது மெலடி பாடல்கள் மட்டும்தான்.''எம்.மாலதி, நாகப்பட்டினம். 


''உங்களுக்கு 'மெல்லிசை மன்னர்’கிற பட்டம் கொடுத்தது யார்?'' 


''1963-ம் வருஷம்னு நினைக்கிறேன்... திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி எங்க கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. என்.கே.டி. கலா மண்டபத்துல நிகழ்ச்சி நடந்தது. ஏகப்பட்ட கூட்டம். அந்த மேடையில்தான் ரசிகர்கள் மத்தியில் எனக்கும் ராமமூர்த்திக்கும் சிவாஜி கணேசன் 'மெல்லிசை மன்னர்’ங்கிற பட்டத்தைக் கொடுத்தார். அது காலாகாலத்துக்கும் நிலைச்சது ஆண்டவன் அனுக்கிரஹம்!''


எம்.கே.பாலு, திருத்தணி. 


''உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் இதுவரை ஒரு பாடலுக்கான இசையைக் கூட காப்பி அடித்ததே இல்லையா?'' 


''ஒரு உதாரணம் சொல்றேன். 'சுகம் எங்கே’னு ஒரு படம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்சாங்க. டி.ஆர்.சுந்தரம் என்கிட்ட கேட்டார்... 'நாங்க இந்தி டியூன்லாம் கொடுத்து மியூஸிக் போடச் சொல்வோம் போடுவீங்களா?’ 'சார், இந்த வாய்ப்பே கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. சொந்தமா டியூன் போடறேன். பிடிச்சா சான்ஸ் கொடுங்க... இல்லைன்னா வேண்டாம்’னு சட்டுனு எந்திரிச்சுட்டேன். ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான் சார்!''


நன்றி - விகடன்

2 comments:

Kannada Cinemaas said...

எம்.எஸ்.வியின் பாடல்கள் அவ்வளவு எளிதில் அழிந்து விடாது..

தலைவா-விஜய் ஜோடியாக ராகி நத்வானி நடிக்கிறார்

Mohammed Arafath @ AAA said...

@சென்னை சினிமா
just select and press delete... avlo tan easy ya alichudalam