மாணவர்கள் உண்ணாவிரதம் 2 வது நாளாக நீடிப்பு; வைகோ நேரில் ஆதரவு! ( படங்கள் )
சென்னை:
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, லயோலா
கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2 ஆவது நாளாக
நீடிக்கும் நிலையில், அவர்களை வைகோ இன்று நேரில் சென்று பார்த்து தனது
ஆதரவை தெரிவித்தார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை. லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.
அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க
கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனபது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன்,
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள்
சண்முகப்பிரியன், ஜோ.பிரிட்டோ, பால் கெனப், லியோ ஸ்டாலின், திருக்குறள்
திலீபன், பிரசாத், அந்தோணி சாஜி, அனிஷ் குமார் ஆகிய மாணவர்கள் நேற்று காலை
லயோலா கல்லூரி அருகில் உள்ள ஏ.ஐ.சி.யு.எப்.எனப்படும் அகில இந்திய
கத்தோலிக்க ஃபெடரேசன் அலுவலக வளாகத்திற்குள், காலவரையற்ற உண்ணாவிரத
போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் தங்களது உண்ணாவிரதத்தை சென்னை கோயம்பேடு பகுதிக்கு
இடமாற்றம் செய்து, அவர்கள், தங்களது உண்ணாவிரதத்தை இன்று 2 ஆவது நாளாக
தொடர்ந்தனர்.
முன்னதாக, நுங்கம்பாக்கம் பகுதியில் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பிற கல்லூரி மாணவர்கள், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை தங்களது போராட்டத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர்.
லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சென்னை நந்தனம் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

வைகோ ஆதரவு
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களை இன்று நேரில் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாணவ சமுதாயம் தன்னநலமற்றது என்றும், அவர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

மக்கள் கருத்து
1. ஸ்டுடென்ட் பவர் ; சூப்பர் பவர் ". மாணவ தோழர்களே மிகுந்த மகிழ்ச்சி;
வாழ்த்துக்கள்; இந்தியாவில் ஒரு அமைதி புரட்சி தோன்றியது போல் உள்ளது;
போராட்டம் மாணவர் சமுதாயம் கையில் எடுத்து உள்ளதால்
இனிமேல் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களும் , பொதுமக்களும் பங்கேற்று
இது மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது; இனிமேலும் இலங்கை தப்பிக்கொள்ள
அனுமதிக்ககூடாது; இலங்கை பிரச்னையை வைத்து முதலில் தி மு க வும் அ தி
மு க வும் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். வேண்டும்
என்கின்றபோது டெசோ , தேவை இல்லை என்கின்றபோது டெசோ கலைப்பு; செய்தது
இதே கருணாநிதி தான்.
இதை வைகோவோ அல்லது
வேறு தலைவர்களோ கேட்டால், கேள்வி கேட்பவர் மீது அவர்களுக்கு "பதவி ஆசை
-உள்ளே வர " ஆசை என்று கூறி தப்பிக்கிறாய் . கடந்த 60 ஆண்டு காலம்
சிங்கள இனம் , (ஒரு கொசுறு நாடு), இந்தியனை , இந்திய தமிழனை , இலங்கை
தமிழனை அழிக்கும் முயற்சியை, உங்கள் போராட்டம் ஒடுக்கும்.
வாழ்த்துக்கள் . அணி திரளுங்கள் "மக்கள் தலைவர்" "மக்கள் சக்தி"
"மக்கள் போராளி" வைகோ பின்னால் ;
2. தமிழகத்தின் கலங்கரை விளக்கே
ஈழத்தமிழர்களின் விடிவெள்ளியே
நேர்மையில் காமராசரே
எளிமையில் கக்கனே
வீரத்தின் நண்பனே
தென்னாட்டு காந்தியே
தொடரட்டும் உன் தமிழர் நலத்தொண்டு
ஈழத்தமிழர்களின் விடிவெள்ளியே
நேர்மையில் காமராசரே
எளிமையில் கக்கனே
வீரத்தின் நண்பனே
தென்னாட்டு காந்தியே
தொடரட்டும் உன் தமிழர் நலத்தொண்டு
3. 1965-ல் இப்படி ஆரம்பித்த போராட்டம் இந்திய அரசையே ஆட்டம் காண வைத்தது.
ஆனால் அதன் பலனோ தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சென்றது. இந்த முறை
மாணவர்கள் தங்கள் போராட்டத்தை "இனப்படுகொலை", "போர்க்குற்றம்" என்ற இரண்டே
வார்த்தைகளை முன்னிறுத்தி தீவிரப்படுத்த வேண்டும். இனத் துரோகிகளை அருகே வர
அனுமதிக்க கூடாது.
ட்விட்டர் போராளிகள் ஆதரவுக்குரல்கள்
1 comments:
STUDENTS.... YOU ARE HAVING SUPER POWER... KEEP UNITY.. CONGRATS
Post a Comment