Wednesday, March 20, 2013

புதிய தமிழ் வருடமான விஜய வருடம் - ராசிபலன்கள்


விஜய வருடம் - ராசிபலன்கள்

 அமோக விளைச்சலைத் தரப்போகும் விஜய வருடம்!
ந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.13 சனிக்கிழமை நள்ளிரவு 1.24 மணிக்கு சுக்லபட்சம் சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் 4-ஆம் பாதம், ரிஷப ராசி, மகர லக்னம் 4-ஆம் பாதத்தில், நவாம்சகத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், 'ஆயுஷ்மான்’ நாம யோகம் 'வனிசை’ நாமகரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற- ஜீவனம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில் வல்லூறு இரவு 4-ஆம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில், சூரிய தசை- செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாகப் பிறக்கிறதுஇடைக்காடரின் இந்தப் பாடலின்படி, இந்த வருடம் மழை அதிகம் பெய்யும். கம்பு, சோளம், கேழ்வரகு, பச்சைப் பயறு உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் புஞ்சை, நஞ்சை தானியங்களும் நன்கு விளையும். எனினும், மக்கள் மனத்தில் ஒருவித அச்சம் இருக்கும்.


விஜய வருடத்தின் ராஜாவாக குரு வருவதால் ஆன்மிகவாதிகள், வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றுபவர்கள், வேத விற்பன்னர்கள், ஸ்தபதிகள் ஆகியோர் கௌரவிக்கப்படுவார்கள். பசுக்கள் நன்கு பால் சுரக்கும். மந்திரியாக சனி பகவான் வருவதால், ஒருசில இடங்களில் மழை குறையும். மக்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவர்.
பதுக்கல் பொருட்களும் போதைப் பொருட்களும் கண்டறியப்படும். வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டு அரசுக்குப் பலகோடி ரூபாய் வருமானம் கூடும். ஜூன் மாதத்தில் இருந்து மின்சாரத் தட்டுப்பாடு நீங்கும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவம் பலப்படும். மரைன் மற்றும் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்ட், மெக்கானிக்கல் ஆகிய துறைகள் சூடுபிடிக்கும். அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் ஆபரண விலை கட்டுக்குள் வரும். தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். வெள்ளி விலை உயரும். கண்ணாடி, சிமென்ட், மின்னணு சாதனங்கள், செங்கல், மணல் முதலான கட்டுமான பொருட்களின் விலை உயரும்.மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால், விடியற்காலை நேரத்தில் மழை அதிகம் பொழியும். மலைப் பிரதேசங்களில் மண் சரிவால் பாதிப்பு ஏற்படும். மக்களின் ஆரோக்கியம் கூடும். ரசாதிபதியாக குரு வருவதால் மதுபானங்கள், மிளகு, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றின் விலை உயரும். சர்க்கரை விலை கட்டுக்குள் இருக்கும். ஸஸ்யாதிபதியாக செவ்வாய் வருவதால் பால், நெய் உற்பத்தி அதிகரிக்கும். தான்யாதிபதியாக சூரியன் வருவதால் சிவப்பு, வெள்ளை தானியங்கள் நன்கு விளையும். நீரசாதிபதியாக செவ்வாய் வருவதால் சந்தனம் உள்ளிட்ட மலையகப் பொருட்கள் மற்றும் பவழம்- முத்து ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.


லக்னாதிபதி சனி உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், இந்தியா தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிக்கும். சனியுடன் மாயாஜால கிரகமான ராகு சேர்க்கை பெற்று நிற்கிறார். வெட்டிப்பேச்சு, பொய்யான உறுதிமொழிகள் அதிகரிக்கும். உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் கலப்படம் அதிகரிக்கும். பூச்சித் தொல்லையால் விவசாயம் பாதிக்கும். உரம் விலை உயரும்.

சிறுபான்மை இனத்தவர்கள் கல்வி மற்றும் அரசு பதவிகளில் முன்னேறுவர். தீவிரவாதிகளின் கை ஓங்கும். வருடம் பிறக்கும்போது சனியும் செவ்வாயும் சமசப்தமமாகப் பார்ப்பதால் பாகிஸ்தான், சீனா, இலங்கை தூண்டுதலால் நம் நாட்டில் கலகமும், கலாசார, பொருளாதார சீரழிவும், குண்டு வெடிப்புகளும் நிகழும். எல்லையில் பதற்றம் நீடிக்கும்.

பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மை கிடைக்காமல் போகும். சட்ட விதிமீறல்கள், பாலியல்  பலாத்காரங்கள், மனிதநேயமற்ற செயல்களால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறையும். வழக்குகள் அதிகரிக்கும். ஊழல் அதிகரிக்கும். சர்க்கரை நோய், கான்சர், இருதய நோய், நுரையீரலில் தண்ணீர் சேர்தல் மற்றும் தோல் நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர்.

பெண்ணாதிக்க கிரகமான சந்திரன், மற்றொரு பெண்ணாதிக்க கிரகமான சுக்கிரனின் வீட்டில் உச்சமானதால், பெண்களுக்கு ஆதரவான திட்டங்கள் உலகெங்கும் நடைமுறைக்கு வரும். ஆனால், சூரியனின் நட்சத்திரத்தில் சந்திரன் நிற்பதாலும், மற்றொரு பெண்ணாதிக்க கிரகமான சுக்கிரன் செவ்வாய், சூரியன், கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து சனியின் பார்வை பெறுவதாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும்.வாகன விபத்துகளும் அதிகரிக்கும். வருடம் பிறக்கும்போது குரு வலுவாக இருப்பதால் சாதுக்கள், சந்நியாசிகள் கை ஓங்கும். ஜூன் மாதத்திலிருந்து வங்கிகள் நலிவடையும்.

புதன் நீசமாகி இருப்பதால் மாணவர்கள் மத்தியில் பொது அறிவு, நுண்ணறிவு குறையும். செவ்வாய் சனியின் பார்வை பெறுவதால், நிலம் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். அயல்நாட்டு மோகம் குறையும். சேமிக்கும் குணம் குறையும். மகர சங்கராந்தி தேவதையாக மஹோதரி வருவதால், செம்மண் பூமி நன்கு விளையும். சுமங்கலிப் பெண்களின் ஆரோக்கியம் பாதிக்கும். புயல், புழுதிக் காற்று அதிகரிக்கும். அயல்நாட்டார் அதிகம் முதலீடு செய்வார்கள்.
  
24.12.13 முதல் 6.2.14 வரை சுக்கிரன் வக்ரம் ஆவதால் இந்த காலகட்டங்களில் பெண்களுக்குக் கெடுதியும், சினிமாத் துறையில் பாதிப்புகளும் உண்டாகும். 13.11.13 முதல் 12.3.14 வரையிலும் குரு வக்ரமாவதால், நாட்டில் நிதி நெருக்கடியும், வங்கிகள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு பாதிப்பும் உண்டாகும். 12.4.13 முதல் 5.7.13 மற்றும் 2.3.14 முதல் விஜய வருடம் முடியும் வரை சனி வக்கரிப்பதால், விபத்துகள் அதிகரிக்கும். சுரங்கங்கள் பாதிப்படையும். பரம்பரைப் பணக்காரர்கள் பாதிப்படைவர்.

30.11.13 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் கன்னியிலேயே அமர்வதாலும், 1.3.14 முதல் வக்ரம் அடைவதாலும், கடல் கொந்தளிப்பும், நில நடுக்கமும் உண்டாகும். மின் விபத்துகள் அதிகரிக்கும். சகோதர பாசம் குறையும். நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாகும். பங்காளிப் பிரச்னைகள் கூடும். 7.10.13 முதல் 28.10.13 வரை மற்றும் 28.1.14 முதல் 21.2.14 வரை புதன் வக்ரம் ஆவதால் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், கடந்த வருடத்தைவிட மக்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், அதே நேரம் ஒருவித அச்சத்தையும் சேர்த்துத் தருவதாக அமையும்.


கிரகணம்... கிரகப் பெயர்ச்சி!
குருப்பெயர்ச்சி: விஜய வருடம் வைகாசி மாதம் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (28.5.13) இரவு 9.15 மணிக்கு குருபகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார்.


சந்திர கிரகணம்: விஜய வருடம் சித்திரை மாதம் 12-ஆம் தேதி (25- 26.4.13) வியாழக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் நள்ளிரவு 1.22 மணிக்கு சந்திரனை தென்மேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து, நள்ளிரவு 1:37 மணிக்கு அதிகமாகி, நள்ளிரவு 1.51 மணிக்கு தென்கிழக்கு திக்கில் விடுகிறது.  

கிரகணப் பலன்: உத்தராயனம் வசந்த ருது, பௌர்ணமி திதியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் வியாபாரிகள் நஷ்டமடைவார்கள். கால்நடைகள் பாதிக்கும். மக்களுக்குப் பசி அதிகரிக்கும். புது நோய் உருவாகும். திருவாதிரை, சித்திரை, விசாகம், சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

மேலும் சித்திரை மற்றும் ஐப்பசியில் நிகழும் சூரிய கிரகணங்களும், வைகாசியில் நிகழும் சந்திரகிரகணமும் இந்தியாவில் தெரியாது!


சுயமரியாதை மிகுந்தவர் நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் விஜய வருடம் பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கூடும். உங்களின் பூர்வ புண்யாதிபதியின் சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களின் அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் இனிதே நிறைவேறும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

27.5.13 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் 2-வது வீட்டில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். 28.5.13 முதல் வருடம் முடியும் வரை 3-ஆம் வீட்டுக்கு குரு செல்வதால், காரியத் தடைகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். எனினும் தந்தைவழியில் உதவிகளும், சொத்துகளும் கிடைக்கும்.

வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் செவ்வாயும் வலுவடைந் திருப்பதால் வீடு- மனை வாங்குவது, விற்பது லாபமாகும். இந்த ஆண்டில் சொந்த வீடு அமையும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். இந்த ஆண்டு முழுவதும் கேது உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மின்சாரம், நெருப்பு ஆகியவற்றைக் கவனமாகக் கையாளவும். இந்த ஆண்டு முழுக்க சனியும் ராகுவும் உங்கள் ராசிக்கு 7-ல் தொடர்வதால், தம்பதிக்கு இடையே கருத்துமோதல்கள் வரும். வெளியாட்களை வீட்டு விஷயங்களில் அனுமதிக்க வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய், தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். ஆனி மாதத்தில் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவர். சிலருக்கு புது வேலை அமையும்.

12.8.13 முதல் 7.9.13 வரை சுக்கிரன் மறைவதால், இந்த காலகட்டத்தில் சிறு விபத்துகள் நிகழலாம். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவுபோகாமல் பார்த்துக்கொள்ளவும். 19.8.13 முதல் 10.10.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமாகி, சனியின் பார்வையைப் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உடல்நிலை பாதிக்கும். சகோதரர்களுடன் கருத்துமோதல், பண விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படும். வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். 30.11.13 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் தொடர்வதால், வீடு- மனை வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.

வியாபாரத்தில் போட்டிகள் உண்டு. சந்தை நிலவரத்தை அறிந்து புதிய முதலீடுகள் செய்யுங்கள். அதிக வட்டிக்கு வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவதோ, புதிய துறைகளில் ஈடுபடுவதோ வேண்டாம். பங்குதாரர்களால் பிரச்னைகள் எழும். கெமிக்கல், பெட்ரோ- கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு. ஆனி, ஆவணி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தை, மாசியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத் தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளை பகைக்க வேண்டாம். தை மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கண்டகச் சனி தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். எனினும், சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமாகப் பார்ப்பதால், கலைத் துறையினர் யதார்த்த படைப்புகளால் புகழ் பெறுவர்.
கன்னிப் பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும், கிடைத்த வேலையில் சேர்வது நல்லது. அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு மறதி, தூக்கம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் மிக அவசியம். அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் இருந்து முக்கிய பொறுப்பு கிடைக்கும். ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை வசைபாட வேண்டாம்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடாமுயற்சியால் உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் ராம நாமம் சொல்லி தியானிப்பதால், உங்களின் செயல்பாடுகள் சிறக்கும்.

ல்லோரையும் நேசிப்பவர் நீங்கள். ராகுவும் சனியும் 6-ஆம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர் வழி சொத்துக்களில் பிரச்னைகள் விலகும். வழக்கு சாதகமாகும். கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் கூடும். உங்கள் ராசியிலேயே விஜய வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
27.5.13 வரை ஜென்ம குரு நீடிப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்கவும். சிலர், உங்களை அவதூறாகப் பேசலாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். 28.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி, வருடம் முடியும் வரை 2-ஆம் வீட்டில் அமர்கிறார். வீட்டில் குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்கு இடையே கலகம் ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து விலக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாகும். சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் துவங்குவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீட்டுப் பணியை பூர்த்தி செய்ய, தேவையான வங்கி லோன் தொகை வந்து சேரும்.
விஜய வருடம் முழுவதும் கேது, ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகங்களை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். 7.9.13 முதல் 3.10.13 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலவீனம் அடைவதால் சிறு வாகன விபத்துகள், மனஉளைச்சல், வீண் பழிச்சொல் வந்து நீங்கும். 30.11.13 முதல் வருடம் முடியும் வரையிலும் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிலேயே செவ்வாய் நீடிக்கிறார். இந்த காலகட்டத்தில் மனைவியை அனுசரித்து செல்லவும்.
அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிக்கவும். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொள்ள வேண்டாம். சொத்து விற்கும் போது ஒரே தவணையில் பணத்தை வாங்குங்கள்.
வியாபாரத்தில், ஆனி, கார்த்திகை, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.
28.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக்கூடும். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பளம்- பதவி உயர்வு கிடைக்கும். கலைத் துறையினர் பற்றிய வதந்திகள் விலகும். பாராட்டு கிடைக்கும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வர். நல்ல வாழ்க்கைத் துணைவர் அமைவார். அரசியல்வாதிகளுக்கு  மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம், உங்களுக்கு வெற்றியை அளிப்பதுடன், வசதி-வாய்ப்புகளை வாரித் தருவதாக அமையும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு துணை நிற்கும். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று, துளசி சார்த்தி வழிபட்டு வாருங்கள்; இன்னல்கள் காணாமல் போகும்.

யர்வு-தாழ்வு பேதம் பார்க்காதவர் நீங்கள். முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை மிளிரும். தடைப்பட்ட விஷயங்கள் இனிதே பூர்த்தியாகும். புதிய வீடு- மனை வாங்க முயற்சிப்பீர்கள். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும்.
அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.      
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறப்பதால், சிக்கனம் தேவை. நீண்ட நாட்களாக செல்ல நினைத்த கோயில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். 28.5.13 முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் வீண் அலைச்சல் குறையும். முன்கோபம், உணர்ச்சிவயப் படுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் வாக்குவாதம், தம்பதிக்கு இடையே ஈகோ பிரச்னை வேண்டாம். மனைவிக்கு தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் வந்து செல்லும். வேலை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எவரை நம்பியும் உறுதிமொழி தரவேண்டாம். வங்கிக் காசோலைகளில் கவனம் தேவை.
வருடம் முடியும் வரை சனியும் ராகுவும் 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகளிடம், குடும்பச் சூழலை அன்புடன் எடுத்துச் சொல்லி புரியவையுங்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிகள் எடைமிகுந்த பொருட்களைச் சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி, முறையாகப் பராமரிக்கவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் கருத்து மோதல்களும் வந்து செல்லும். தாய்வழி உறவினருடன் விரிசல்கள் எழலாம்.
30.11.13 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் செவ்வாய் தொடர்கிறார். இந்தக் காலகட்டத்தில் அலைச்சல், வீண் பழி, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். வீடு-வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு.
கேது லாப வீட்டில் நிற்பதால், வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சந்தை நிலவரத்தைக் கவனித்து செயல்படுவது சிறப்பு. கடையை வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சித்திரை, ஆவணி, கார்த்திகை மற்றும் பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரியிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். முக்கிய பொறுப்புகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பதவி- ஊதிய உயர்வு உண்டு. கலைத் துறையினர் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
மாணவர்கள், சமயோசிதமாகச் செயல்பட்டு வெற்றி காணவேண்டும். அரசியல்வாதிகள், தலைமையிடம் கவனமாகப் பழகவேண்டும். பதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள், ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் வார்த்தையை புறக்கணிக்க வேண்டாம்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம் செலவு, அலைச்சலை தந்தாலும் உங்களின் செல்வாக்கை அதிகரிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: துர்கை வழிபாடு துன்பம் அகற்றும். அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். சகல வளமும் பெருகும்.

தவி- பணத்துக்கு மயங்காதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. அந்தஸ்து உயரும். பிரபலமாவீர்கள். பதவிகள் தேடி வரும். உடல் நிலை சீராகும். செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகியோர் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். முன்பணம் கொடுத்திருந்த சொத்துக்கு, பாக்கி தொகையையும் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அயல்நாட்டு பயணம் சாதகமாகும். சகோதரர்கள் உதவுவர். வழக்கு சாதகமாகும். மகளுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.
27.5.13 வரை உங்களின் பாக்கியாதிபதியான குரு லாப வீட்டில் தொடர்கிறார். தொட்டது துலங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு குதூகலம் பெறும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். 28.5.13 முதல் வருடம் முடியும் வரை, 12-ஆம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் துரத்தும். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் பணம் தரவேண்டாம். உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவு முறைகளை அமைக்கவும்.
விஜய வருடம் முழுக்க சனியும் ராகுவும் 4-ஆம் வீட்டில் நீடிப்பதால், வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும்போது வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரத் தைச் சரிபார்த்து வாங்கவும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. பழைய வாகனங்கள் வாங்கும்போது, உரிய ஆவணங்களைச் சரிபார்க்கவும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு வரி செலுத்தவேண்டிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். விஜய வருடம் முழுவதும் கேதுவும் 10-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். எவருக்காகவும் வாக்குறுதி தரவேண்டாம். 30.11.13 முதல் வருடம் முடியும் வரை, செவ்வாய் உங்கள் ராசிக்கு 3-ல் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு- மனை சேரும். பணத் தட்டுப்பாடு வந்து நீங்கும். வியாபாரத்தில், புதியவர்களை நம்பி கடன் தர வேண்டாம்.
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பற்று - வரவு உயரும். புது ஒப்பந்தங்களும் பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வியாபார பிரச்னைகள், நீதிமன்றம் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங் கள். புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுங்கள். துரித உணவு, கணினி உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில், பணியின் நிமித்தம் வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரிடும். எனினும், கேது 10-ல் தொடர்வதால் வீண் பயம் நீடிக்கும். அலுவலக ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம் கூடும். மார்கழி, பங்குனி மாதங்களில் புது பொறுப்புகள் வரும்.
கலைத் துறையினர், அரசால் கௌரவிக்கப்படுவர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். பெற்றோர் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேர்வார்கள். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்றுக் கொள்வர். எனினும், உட்கட்சிப் பூசல் வெடிக்கும். சகாக்களிடம் பெருமை பேச வேண்டாம். கன்னிப் பெண்கள், தாயை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கெட்ட நண்பர்களிடம் இருந்து விடுபடுவீர்கள்.
மொத்தத்தில், இந்த விஜய வருடம் கடின உழைப்பாலும் தொலைநோக்கு சிந்தனையாலும் முன்னேற்றம் தருவதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி அல்லது ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமையன்று பழநி ஸ்ரீமுருகனை தரிசித்து வாருங்கள். தினமும் சஷ்டி கவசம் படியுங்கள். சங்கடங்கள் நீங்கும்; செல்வம் சேரும்.


thanx - vikatan

balance wait......

0 comments: