Thursday, November 01, 2012

ஊழல் ரிமூவர் கேஜரிவால் பர பரப்பு பேட்டி

கேஜரிவால் உருக்கம்

ஊழலை ஒழிக்க உயிரைக் கொடுப்பேன்!

ப்ரியன்

சென்ற இதழில் அரவிந்த் கேஜரிவால் கவர் ஸ்டோரியுடன் அவரது பேட்டியையும் வெளியிட வேண்டுமென்று முயற்சி செய்தோம். ஆனால் அவர் படு பிஸியாக இருந்ததால் முடியவில்லை. இருந்தும் மொபைல் குறுஞ்செய்தி வேண்டுகோளைத் தொடர்ந்து ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு கைப்பேசியில்கேஜரிவால் ஸ்பீக்கிங்... கேள்விக் கணைகளை வீசுங்கள்என்றார். கொஞ்சம் ஆச்சர்யத்தை சுதாரித்துக் கொண்டு அவருடன் பேசியதிலிருந்து...


ஊழலை எதிர்க்கத் தூண்டுதலாக இருந்த சம்பவம்?
அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையும் சொல்ல முடியாது. நான் .. டி.யில் படித்துக் கொண்டிருக்கும்போது அரசின் கீழ் மட்டங்களில் நடக்கும் லஞ்ச லாவண்யங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் கூட கருணையில்லாமல் ஏழைகளை அரசு அதிகாரிகள் வாட்டி வதைப்பார்களா" என்று வேதனைப்பட்டிருக்கிறேன்.


 அதேபோல் வருமான வரித்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது வருமான வரி கட்டும் சாதாரண ஒருவர் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்; எப்படி அதிகாரிகளால் சுரண்டப்படுகிறார் என்பதையும் பார்த்து நொந்து போயிருக்கிறேன். அரசின் மேல்மட்டங்களில் சுத்தமான நிர்வாகத்தைக் கொடுத்தால் மட்டுமே, கீழ்மட்டங்களில் நிலவும் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். என் இப்போதைய போராட்டம் அந்த அடிப்படையில் தான் அமைகிறது."


அண்ணாவுடன் பிரிவு?

உண்மையிலேயே வருத்தம்தான். அப்பழுக்கற்ற பெரியவர். அவர் எங்களுடன் இருந்திருந்தால் தார்மிக பலம் கூடியிருக்கும். அரசியல் சாக்கடையை, அமைப்பு முறையின் வெளியிலிருந்து சுத்தப்படுத்த முயல்கிறார் அண்ணா. நாங்கள் அதற்குள் புகுந்து சுத்தப்படுத்துகிறோம். நோக்கம் ஒன்றே... வழிமுறைகள் வேறு... அவ்வளவுதான். வரும் காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உண்டு."


அரசியல் கட்சி... நன்கொடை... தேர்தல்...?


கட்சி நடத்துவதற்கு நன்கொடை வசூல் செய்ய வேண்டும்; அதன் மூலம் பாரபட்சம், ஊழல் தலைதூக்கும் என்று சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் எங்கள் பாணி வித்தியாசமானது. நாங்கள் பெரிய தலைகள், வர்த்தகப் புள்ளிகள் போன்றவர்களிடமிருந்து நன்கொடை வாங்க மாட்டோம். சாதாரண பாமரர்களிடமிருந்துதான் வாங்குவோம். நான் பேசும் பேரணி, ஊர்வலம் போன்றவற்றில் பானிபூரி, பீடா, வேர்க்கடலை விற்பவர்கள் கலந்து கொண்டு நன்கொடை தருகிறார்கள்.


 இதுவரை இயக்கம் நடத்த மூன்று கோடி ரூபாய் அப்படி வசூலாகியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் முறைப்படி கணக்கு உண்டு. அடுத்து தேர்தலைச் சந்திக்கப் பணம் தேவையாயிற்றே என்கிறார்கள். நாங்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்காகப் போராடுகிறோம். நாங்கள் சொல்வது ஆட்சி மாற்றம்; அதிகார மாற்றம் தொடர்பானதல்ல. அது அரசியல் தன்மை தொடர்புடைய மாற்றம்.


 அந்த மாற்றத்துக்கு மக்களைத் தயார்படுத்தும் பணியில் தான் இப்போது இறங்கியிருக்கிறோம். அந்த அரசியல் மாற்றம் வரும்போது அதன் பலனாக மக்கள் எங்களுக்கு வாக்குகளைப் போடுவார்கள். when we change the polity of the country, the votes will be a bye product. இப்போதுள்ள கட்சிகள் போன்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டால்தான் தேர்தலில் நிறைய செலவழிக்க வேண்டும். எங்கள் அணுகுமுறையே வித்தியாசமானது."


வதேரா... நிதின் கட்கரி?


காங்கிரஸ், பா..., சமாஜ்வாடி, பி.எஸ்.பி., தி.மு.., .தி.மு.. என்று எல்லாமே ஊழல் கட்சிகள்தான். ஒன்றுக் கொன்று ஊழல் செய்வதில் போட்டியிடுகின்றன. வதேரா விவகாரத்தில் இன்னமும் ஆதாரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் கேட்ட கேள்விகளுக்கு காங்கிரஸிடமிருந்து பதிலில்லை. நிதின் கட்கரி விஷயத்தில் என் குற்றச்சாட்டுக்கள் அவ்வளவு அழுத்தமாக இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது



 ஆனால் நான் மீடியாவைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நான் சொன்ன குற்றச்சாட்டுகளை நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து மேலும் உண்மைகளைக் கொண்டு வாருங்கள். கட்கரி விஷயத்தில் என்.டி.டி.வி. மேலும் பல விவரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்தே, நான் சொன்ன குற்றச் சாட்டுகள் உண்மை என்பது புரியும். தி.மு. - .தி.மு.. ஊழலைப் பற்றி அம்பலப்படுத்துவீர்களா என்று பலர் கேட்கிறார்கள்.


 நிறைய தகவல்கள் வருகின்றன. தேசிய அளவில் அரசியலை சுத்தப்படுத்தி நான் சொன்னது போன்று புதிய அரசியல் மாற்றத்துக்கு வழி செய்யும்போது, மாநிலங்களில் இயங்கும் தி.மு.. - .தி.மு.. போன்ற ஊழல் கட்சிகளும் அகற்றப்படும். இது ஒரு நீண்ட போராட்டம்தான்."


திக் விஜய் சிங் குற்றச்சாட்டு?


யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் மீதே குற்றம் சொல்லி விஷயத்தைத் திசை திருப்பும் வேலையில் காங்கிரஸ் இப்போது இறங்கியிருக்கிறது. வதேரா விவகாரத்தில் காங்கிரஸ் தனது பதிலை முதலில் சொல்லட்டும். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குக் கண்டிப்பாக பதில் சொல்வேன்."


ஆதரவு?


டெலிவிஷன் பார்க்கும், செய்தித்தாள் படிக்கும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் தான் எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்று சொல்வது தவறு. கிராம அளவில் கூட எங்கள் இயக்கம் பற்றிய தெளிவு வேரூன்றியிருக்கிறது என்பதே இப்போதைய நிலை."


சல்மான் குர்ஷித் - மிரட்டல்?


பேனாவில் இங்க்குக்கு பதிலாக ரத்தத்தை நிரப்பும் நேரம் வந்துவிட்டது என்று அவர் எனக்கு மிரட்டல் விடுத்தது உண்மை. இப்போதுமீடியா முழுமையாக அவரது பேட்டியைப் போடவில்லைஎன்று பசப்புகிறார். அவரது தொகுதிக்கு வந்தால்திரும்ப முடியாதுஎன்றும் மிரட்டுகிறார்


 ஒரு சட்ட அமைச்சர் இவ்வாறு பேசுவது தேசிய அவமானம். என்னைப் பொறுத்தவரை நான் நீதிக்காகவும், நியாயத்துக்காகவும், நேர்மைக்காகவும், ஊழலற்ற நிர்வாகத்துக்காகவும் போராடுகிறேன். எனது இந்தப் பயணத்தில் ஆபத்துக்களும் அகழிகளும் உண்டு என்று தெரியும். எனக்குப் பல மிரட்டல்கள் ஏற்கெனவே வந்து கொண்டுதானிருக்கின்றன. இதுபோன்ற மிரட்டல்களுக்குப் பயந்து ஓடி ஒளிய மாட்டேன். இந்தப் போராட்டத்தில் உயிரையும் கொடுக்கத் தயாராயிருக்கிறேன்."

நன்றி - கல்கி 

0 comments: