Wednesday, April 11, 2012

ஓ பக்கங்கள் ஞானி கொதிப்பு, மக்களை மடையர்களாக்கும் ஜெ ,சசி, ராணுவ அமைச்சர்

பளிச் 1 :


சசிகலாவை ஜெயலலிதா திரும்ப சேர்த்துகிட்டது பத்தி அரசியல்ல இருக்கற பெரிய தலைங்க யாரும் வாயைத் திறக்கல. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னுதான் எல்லாரும் நினைக்கறப்பல தெரியுது. ஆனா எனக்கு இந்த மேட்டர், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் இந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் சரியான கேணப் பசங்கன்னு நிஜமாவே நம்பறாங்களோன்னு தோணுது. இல்லாட்டி கட்சியிலயும் ஆட்சியிலயும் ஜெயலலிதா பேரைக் கெடுக்கற வேலைங்களைத் தன் சொந்தக்காரங்க செஞ்சது 24 வருஷமா தனக்குத் தெரியாதுன்னு சசி சொல்றதை யாராவது நம்புவாங்களா? போயஸ் வூட்டை விட்டு வெளியில வந்ததும்தான் தனக்கு எல்லாம் தெரியவந்துச்சுன்னு சசி சொல்றதை ஏத்துக்கறேன்னு ஜெ சொல்றதை நாம ஏத்துக்கிட்டா, நாம எல்லாரும் கேணைங்கன்னுதானே அர்த்தம்?


சி.பி - பெங்களூர் கோர்ட்டில் கேஸ் நடப்பதால் அந்த தீர்ப்பு வருவதற்குள் தன் மேல் எந்த தவறும் இல்லை என நிரூபிக்க ஜெ நடத்திய நாடகம் தான் அது.. கதை வசனம் , டைரக்‌ஷன் ஜெ.. நடிப்பு சசிகலா.. ஏமாளி ஆடியன்ஸ் மக்கள்




இதெல்லாம் ஜெ, சசி சொந்த சமாச்சாரம்னு வுடமுடியாது. 24 வருஷமா ஏன் சசியைக் கூட வெச்சிகிட்டு அவங்க சொந்தக்காரங்கள்லாம் கட்சியிலயும் ஆட்சியிலயும் ஆடவுட்டாங்கன்னு ஜெ சொல்லணும். அவங்க கட்சியிலயும் ஆட்சியிலயும் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னும் சொல்லணும். அதுக்கு என்ன நடவடிக்கைன்னும் சொல்லணும். சசியை இப்ப திரும்ப சேத்துகிட்டது ஏன்னும் சொல்லணும். இனிமே என் சொந்தக்காரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாரையும் கட் பண்ணிட்டேன்னு சசி சொல்றாங்க இல்ல, முதல்ல நடராஜனுக்கு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்களான்னு சொல்லணும்.


சி.பி - நடராஜனை டைவர்ஸ் பண்ணினதா நாடகம் போட்டுட்டு  நாங்க சட்டப்படி பிரிஞ்சுட்டோம், ஆனா எங்கள் தார்மீக (!!!??? ) உறவு நீடிக்கிறதுன்னு நாடகம் போட எவ்வளவு நேரம் ஆகும்.. ?



ரெண்டு பேரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ராவணன், நடராஜன், திவாகரன், சுதாகரன்னு ஒவ்வொருத்தரா அடுத்து பழையபடி கட்சிவேலை, ஆட்சி வேலையிலல்லாம் மூக்கை நுழைக்கத்தான் போறாங்க. நாமும் பாத்துகிட்டு ஞேன்னு நிக்கப்போறோம். ஏன்னா நம்மதான் கேணைங்களாச்சே.


சி.பி - பழைய திருடி கதவைத்திறடி, நாட்டை நாசமாக்கி நாட்டு மக்களின் நம்பிக்கையை நாறடி



பளிச் 2:


ஒண்ணு ரெண்டு டி.வில ஒரு தரம் ரெண்டு தரம் காட்டினதோட சரி. பாதி பேப்பர்லஇந்த நியூசே வரல. பட்டப்பகல்ல நட்ட நடு ரோட்டுல ஒரு போலீஸ் அதிகாரி பொதுமக்களை அடிக்கறான். அவனை என்னான்னு கேக்க ஆளே இல்ல. தர்மபுரில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்துல குளறுபடி செஞ்சதுனால, வாத்யாருங்க சாலை மறியல் செஞ்சிருக்காங்க. தன் கிட்ட வந்து முறையிட்டு பேசற ஒரு ஆசிரியரை டி.எஸ்.பி சந்தனப் பாண்டியன் அடிக்கறாரு. வேணாங்க அடிக்காதீங்கன்னு கெஞ்சறாங்க அந்த ஆசிரியரோட மனைவி. அவங்களை அப்பிடியே புடிச்சுத் தள்ளறாரு பாண்டியன். அந்தம்மா அப்பிடியே பின்னால் மண்டை தரையில படறாமாதிரி ரோடுல விழறாங்க. 


இப்பிடி செஞ்ச அதிகாரி மேல என்ன நடவடிக்கைன்னு கேட்டா மாவட்ட எஸ்.பி அவர்கிட்ட விளக்கம் கேட்டிருக்குங்கறாரு. இதுல விளக்கம் கேக்க என்னா இருக்குது. டி.வில போட்டதைப் பார்த்தலே அந்த எஸ்.பிக்கு புரிஞ்சுடுமே. கொறைஞ்சபட்சம் டி.எஸ்.பியை சஸ்பெண்ட் பண்ணிட்டுதானே விளக்கம் கேக்கணும்…இதுக்கு நடுவுல, அடிவாங்கின ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டுப் போய் மிரட்டிக் கையெழுத்து வாங்கியிருக்காங்கன்னு ஒரு செய்தி சொல்லுது. இது என்ன நாடா, இல்ல காடா ? ராஜபக்‌ஷே பண்ணின அக்கிரமத்துக்கு சட்டசபையில தீர்மானம் போடறாங்க. ஐ.நால தீர்மானம் போடறாங்க. உள்ளூர் ராஜபக்‌ஷேங்களைக் கேப்பாரே இல்லியா? சம்பளம் பஞ்சப்படின்னா சத்தம் போடற ஆசிரியர் சங்கமெல்லாம் இதுக்கு குரல் குடுக்க வரமாட்டாங்களா?


சி.பி - தப்பு பண்ற போலீஸ் ஆஃபீசரை டிரான்ச்ஃபர் பண்றது  தண்டனை அல்ல.. அதே தப்பை  வேற ஏரியாவில் இன்னும் ஜாக்கிரதையா செய்ய தரும் வாய்ப்பு..



பளிச் 3:


அண்ணா பல்கலைக்கழகத்துல படிச்சுகிட்டிருந்த மாணவன் மணிவண்னன் தற்கொலை பண்ணிகிட்டது அவனைத் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியா இருக்கு. தர்மபுரி மாவட்டத்துல செஙகல் சூளையில சிறுவனா இருந்தப்பவே கொத்தடிமையா இருந்த மணிவண்ணனை அதிகாரிங்க மீட்டு படிக்க உதவி செஞ்சதுல மாநிலத்துலயே 13 வது எடத்துல ப்ளஸ் டூ பாஸ் பண்ணி வந்திருக்கான். 


அவ்வளவு கஷ்டத்தை அவன் தாண்டி வந்து சாதிச்சதோட மட்டும் இல்ல, இப்ப கார்ப்பரேஷன் பள்ளியில படிக்கற ஏழை பசங்ககிட்ட போய் பேசி அவங்களை ஊக்கப்படுத்தற வேலையெல்லாம் செஞ்சுருக்கான்னு கிழக்கு பத்ரி சொல்றாரு. காசு திரட்டி ஏழை மாணவர்களுக்கெலாம் உதவி செஞ்சு வந்திருக்கான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகணும், ஊர்ல குடிசைல இருக்கற அம்மாவுக்கும் பிரதருக்கும் நல்ல வீடு கட்டித்தரணும், அடுத்த மாசம் தன்னோட கவிதைத் தொகுப்பை வெளியிடனும்னெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன், ஏன் திடீர்னு தற்கொலை பண்ணிக்கணும் ?


அஞ்சு செம்ஸ்டர்ல மொத்தமா 26 பேப்பர்ல பாஸாகாம இருந்த்து ஒரு காரணம்கறாங்க. ஏதோ காதல் தோல்வி இன்னொரு காரணம்கறாங்க. மாநிலத்துலயே .13வது எடத்துல வந்த பையன், காலேஜ்ல பேப்பர் அரியர்ஸ் வெக்கறான்னா, ஏன்னு ரெண்டாவது செமஸ்டர்லயே வாத்யாருங்க கவனிக்கமாட்டாங்களா? அவனைக் கூப்பிட்டு என்னாப்பா ப்ராப்ளம்னு பேசிக் கண்டுபிடிக்கமாட்டங்களா? லவ்வுதான் பிரச்சினை, அதுனாலதான் படிப்பை கவனிக்கலேன்னா அத்த எப்பிடி ஹேண்டில் பண்ணணும்னு சொல்லறதுக்கு டாக்டருங்க மாதிரி யாரும் ஆளு காலேஜ்ல இல்லியா? 


மணிவண்ணன் மீதி பசங்களுக்கு உற்சாகம் குடுத்து பண உதவி பண்ணி அவங்களும் தன்னைப் போல நல்லா படிச்சு மேல வரணும்னு சொல்ற அறிவிருக்கற பையன். அவனுக்கு ஒரு பிரசினைன்னா இப்பிடி தீர்த்துக்கலாம்னு சொன்னா அவனால புரிஞ்சுக்கமுடியும். அத்த செய்யவே காலேஜுல ஆள் கெடையாதா? அப்ப, மணிவண்ணன் மாதிரி கூட இல்லாத சாதாரண பசங்க கதி என்னாகும் ? எல்லாரும் சினிமால தனுஷ் திரியறா மாதிரிதானே ஆவாங்க? தனுஷ் படத்தைப் பாத்து பசங்க உருப்பட முடியுமா ? காலேஜுல பாடம் சொல்லித் தந்தா மட்டும் போதாது. மனசை எப்பிடி வெச்சுக்கணும்னு சொல்லித் தர்ற வாத்யாருங்களையும் கூடவே போடணும்


சி.பி - மர்மமான மரணங்கள் பெரும்பாலும் கடைசி வரை மர்மமாகவே முடிஞ்சுடுது.. என்ன நடந்தது?ன்னு மக்களுக்குத்தெரியாமயே போயிடுது

.
பளிச் 4:


எவ்வளவு நல்ல மனுஷன்.. இப்பிடி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு நான் பேசின ஒருத்தர் கூட சொல்லல… திருச்சி தி.மு.க பிரமுகர் ராமஜெயம் கொலையைப் பத்தித்தான் சொல்றேன். எல்லாரும் இப்பிடி கொடூரமா கொன்னிருக்கவேணாமேன்னு சொல்றாங்களே தவிர, நல்ல மனுஷன்னு சொல்லமாட்டேங்கறாங்க. இறந்தவரு யாரோ கொஞ்சம் பேருக்காவது நல்லவரா இருந்திருப்பார்ங்கறதுல எனக்கு சந்தேகம் இல்ல. ஆனா பெரும்பாலானவங்க அப்பிடி நினைக்கல. இதுதான் இன்னிக்கு தமிழ்நாட்டுல பெரும்பாலான அரசியல் பிரமுகர்களோட நிலைமை. ஜனங்க யாரும் அவங்களல ஒருத்தரையும் நல்லவங்கன்னு சொல்லக் கூடிய மன நிலையிலயே இல்லை. கொலை செய்யப்பட்டதும் கொலை செய்யப்பட்ட விதமும் பரிதாபத்தை ஏற்படுத்துதே தவிர, இருந்தப்ப இவங்கள்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னுதான் சாதாரண மக்களே பேசறாங்க.


அரசியல்வாதிகளும் கட்சிகளும் இதைக் கொஞ்சம் தீவிரமா சிந்திக்கணும். மேலயிருந்து கீழ வரைக்கும் ஒவ்வொரு கட்சியிலயும் அதிகாரத்துல இருக்கறவங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு மக்கள் கிட்ட நல்ல பேரே இல்லை. தங்களுக்கு வேற வழியில்லாமதான் மக்கள் இவங்களை சகிச்சுகிட்டு இருக்காங்க. இப்பிடியே போனா இன்னும் பத்து வருஷத்துல ரெண்டுல ஒண்னுதான் நடக்கும். ஓட்டு போடவே ஜனங்க வரமாட்டாங்க


. இல்லாட்டி, எவன் வந்தாலும் ரவுடித்தனம் பண்ணி காசை சுருட்டப்போறான். எனக்கு இப்பவே எவன் நிறைய குடுக்கறானோ அவனுக்கு ஓட்டு போட்டுத் தொலைக்கறேன்கற நிலைக்கு மக்கள் வந்துடுவாங்க. ரெண்டும் நாட்டுக்கு நல்லது இல்ல. மக்களுக்கும் நல்லது இல்ல, அரசியலுக்கும் நல்லது இல்ல.


சி.பி - இப்பவே கிட்டத்தட்ட அந்த நிலைமை வந்துடுச்சே? எவன் யோக்கியன்? அப்டினு மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? எரியற கொள்ளில எது நல்ல கொள்ளி? அல்லது இந்த தடவை அதிமுக அடுத்த டைம்  திமுக அப்டிங்கற மன நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்களே.. 


பளிச் 5 


இந்த பட்ஜெட்ல ராணுவ செலவு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு வந்துடுச்சு. (1,93,407 ! ). ஆனா ராணுவ தளபதி நம்ம கிட்ட இருக்கற ஆயுதம் வெடி மருந்தெல்லாம் போதாது. இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும், எல்லா ஆயுதமும் பழசாப் போச்சு, அது இதுன்னு குண்டு போட்டுகிட்டே இருக்காரு. இவ்வளவு பணம் குடுக்கறாங்களே புச்சா வாங்கவேண்டியதுதானேன்னா, ஓட்டை உடைசல்லாம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறாங்கன்னு வேற சொல்றாரு. இதுக்கு முன்ன எந்த ராணுவ தளபதியும் இவ்வளோ ஒப்பனா எல்லாத்தையும் போட்டு உடச்சதே கெடையாது. 


பொதுவா அரசாங்க அதிகாரிங்க, ராணுவ அதிகாரிங்களுக்கெல்லாம் ரிட்டையராயி ரெண்டு மூணு வருஷம் வேற போஸ்ட்டிங் எதுவும் வராதுன்னு தெரிஞ்சப்பறம்தான் மனசாட்சின்னு ஒண்ணு புச்சா வந்து உறுத்த ஆரம்பிக்கும். இவுருக்கு ரிட்டையர் ஆவறதுக்கு முன்னாடியே மனசாட்சி கொஞ்சம் ஒர்க் ஆவுது போல..


மிலிட்டிரிக்கு ஆயுதம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறது ரொம்பப் பழைய விஷயம்.. போபர்ஸ் கேசே அதானே…அது வெளியில வந்து ராஜீவ் ஆட்சி அவுட்டானப்பறம் வந்தவரு தேவ கவுடா, அவுரு கிட்ட கூட லஞ்சம் குடுக்க வந்தாங்கன்னு அவரு மகன் குமாரசாமி சொல்லியிருக்காரு. கவுடா என்கிட்ட வரல,அவன்கிட்ட வந்திருப்பாங்கன்னு சமாளிக்கறாரு.

 ஒவ்வொரு ஆட்சியிலயும் வராங்க, குடுக்கராங்க, வாங்கிக்கறாங்கன்னு நமக்குத் தெரியாதா என்ன..மொதல்ல இந்த ராணுவ பட்ஜெட்டை கொறைக்கணும். வெட்டியா அங்கே கொட்டற பணத்தை விவசாயத்துலயும் ஆஸ்பத்திரிலையும் படிப்புலயும் செலவு பண்ணா நாடு நெஜமா ஆரோக்கியமா இருக்கும். 


ஆனா, அப்பிடி செய்ய அதிகாரிங்க வுடமாட்டாங்க. பொய்யாவாச்சும் எல்லையில ஆபத்து. இங்கே ஊடுருவல்னு கதை விட்டுகிட்டு இன்னும் ராணுவ செலவை ஏத்திவிட்டுகிட்டேதான் இருப்பாங்க. அப்பதான் கொள்ளையடிக்க முடியும். அதுல அவங்களும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்க முடியும்.அதுக்காக பொய்யா தேசபக்தியைக் கெளப்பி விட்டுடுவாங்க.


ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, செலவு எல்லாத்தையும் தனியா கணக்குத் தணிக்கை அதிகாரி மாதிரி ஒரு சுயேச்சையான அமைப்பை வெச்சு நடத்தினாதான் இதையெல்லாம் சரி பண்ண முடியும்.


சி.பி - நாட்ல எந்த ஊழலையும் தாங்கலாம், பாதுகாப்புக்கே பங்கம் விளைவிக்கும் ராணுவத்தில்  ஊழல் வந்தால்?


பளிச் 6


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தின அரசாங்கம் கேட்டுகிட்டபடி அவங்க சாகும்,வரை உண்ணாவிரதத்தை நிறுத்திகிட்டாங்க. ஆனா, அரசாங்கம் பதிலுக்கு தான் சொன்னபடி எதையும் ஒழுங்கா செய்யல. கைதான் 150 பேரை விடுதலை செய்யாம, வெறுமே ஜாமீன்ல மட்டும்தான் விட்டிருக்காங்க. இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்கு ஜாமீனும் கொடுக்காம தொடர்ந்து காவலை நீட்டிச்சுகிட்டே இருக்காங்க. வேணும்னே பல தொண்டு நிறுவனங்கள்ல ரெய்டு நடத்திகிட்டிருக்காங்க.ஒரு எடத்துலயும் ஒண்ணும் உருப்படியா குற்றம் சாட்டறமாதிரி கிடைக்கல.


அடுத்து உதயகுமார் மேல கிரிமினல் கேஸ் இருக்கறதுனால, அவரோட பாஸ்போர்ட்டை சரண்டர் பண்ண சொல்றாங்க. அப்பிடிப் பாத்தா நம்ம பார்லிமென்ட்ல 160 எம்.பிகளோட பாஸ்போர்ட்டை பறிமுதல் பண்ணியிருக்கணும். அவங்க பேர்லயும் கிரிமினல் கேசெல்லாம் இருக்குது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில கோர் ட் உத்தரவுப்படி எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்கற மாறன் பிரதர்சுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வெச்சுகிட்ட மாதிரி தெரியல.


போபால் விபத்து நடந்த உடனே அதுக்குப் பொறுப்பான கம்பெனி தலைவர் ஆண்டர்சனுக்கு தனி விமானம் ஏற்பாடு செஞ்சு அமெரிக்காவுக்கு தப்பிச்சுகிட்டு போறதுக்கு வேலை பாத்தவனெல்லாம் அதை எதிர்க்கறவங்க பாஸ்போர்ட்டை பிடுங்கப் பார்க்கறாங்க. நாளைக்கு கூடங்குளத்துல விபத்து நடந்தா முத வேலையா தனி விமானத்துல ரஷ்யன்களையெல்லாம் அனுப்பிடுவாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.


சி.பி - கூடன் குளம் இயங்கட்டும் , சோனியா குடும்பம் அங்கே குடி பெயரட்டும் பார்க்கலாம்.. 


பளிச் 7 


இந்த சினிமா முதலாளிங்க அழும்பு தாங்கவேமுடியல… அவங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் சம்பள விஷயமா பிரச்சினைன்னா, சட்டப்படி அதைப் பேசி முடிக்க உதவி செய்யறதுக்குத்தான் தொழிலாளர் நல ஆணையர் இருக்காரு. இத்தனை நாள் அவர் கிட்ட போய் பேசிகிட்டிருந்தவங்க இப்ப பேச முடியாதுங்கறாங்க. அவுரு தொழிலாளருக்கு ஆதரவா இருக்கறாராம். ஆமா, அதுக்குத்தான் அந்த டிபார்ட்மெண்ட்டே வெச்சிருக்கு.


 ரெண்டு தரப்புக்கும் பாதிப்பு இல்லாம சமரசம் செய்ய முயற்சிக்கறதுதான் அவர் வேலை. தொழில் தகராறுல அரசாங்கத்துகிட்டயே போய் பேச முடியாதுன்னு சொல்ற முதல் ஆளு இந்த சினிமா முதலாளிங்கதான். அவர்கிட்ட பேசி தீர்வு வராட்டி அடுத்த கட்டம் லேபர் கோர்ட்,லேபர் டிரிப்யூனல்தான். நல்ல முதலாளிங்க பொதுவா லேபர் கமிஷனர் மட்டத்துலயே பேசி தீர்வுக்கு வந்துடுவாங்க. பிரச்சினை முடியற சமயத்துல க்ளைமாக்ஸ்ல வந்து சொதப்பாதீங்கப்பா…


சி.பி - இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவங்க வேற வருஷா வருஷம் கொடியை பிடிக்கறாங்க..  ஹீரோவுக்கு கோடிக்கணக்குல சம்பளம் தர யோசிக்காதவங்க அடி மட்ட ஊழியர்களுக்கு 100 ரூபா தர யோசிக்கறாங்க  ஹூம்


பளிச் 8:


படிச்சதுல பிடிச்சதுன்னு இந்த வாரம் ஒண்ணை சொல்லணும்னா, அது ஒரு பழைய விஷயத்தைப் பத்தி புதுசா படிச்சதுதான். மார்ச் கடைசியிலதான் ஷேக்ஸ் பியர் பொறந்த நாளை உலக நாடக தினமா உலகம் முழுக்க கொண்டாடறாங்க. தமிழ்நாட்டுல கொண்டாடற நிலைமை இல்லை. இங்கே நாடகம்னா என்னன்னே குழம்பிப் போச்சு இல்லையா.. 


டி.,வி சீரியலை நாடகம்னு சொல்லிகிட்டிருக்காங்க. தமிழ் நாடகக்காரங்க மறக்கவே கூடாத கலைஞர்கள்ல ஒருத்தரான எம்.ஆர்.ராதா 1954ல திருச்சில ராமாயணம்னு ஒரு நாடகம் போட்டப்ப அடிச்ச் போஸ்டரை ஃபேஸ்புக்ல சந்திரன் வீராசாமி எடுத்துப் போட்டிருக்காரு. படிச்சேன். என் ராமாயணம் நாடகத்தைப் பாத்துட்டு மனசு புண்படறங்க யாரும் என் நாடகத்துக்கு வரவேணாம். அவங்க காசும் எனக்கு வேணாம். மீறி வந்து மனசு புண்பட்டா நான் அதுக்கு ஜவாப்தாரியில்லைன்னு போஸ்டர்லயே அடிச்சிருக்காரு. இன்னிக்கும் எதுக்காவது மனசு புண்படறேன்னு சொல்றவங்களுக்கு இதுல ஒரு அட்வைஸ் ஒளிஞ்சிருக்கு, இல்லியா?


ராதாவுடைய நாடகங்களை ஒடுக்கறதுக்குன்னே அந்த வருஷம் காங்கிரஸ் அரசாங்கம் பிரிட்டிஷ் காலத்து நாடகத் தணிக்கை சட்டத்தை திரும்பக் கொண்டு வந்தாங்க. சட்டத்துலருந்து தப்பிக்க, ராதா தன் நாடகத்தோட பேரை மட்டும் மாத்திகிட்டே இருந்தாரு. பெரிய அவமானம் என்னன்னா, அந்த சட்டம் இன்னும் தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கு…! எந்த திராவிடக் கட்சியும் அதை நீக்கலே..


சி.பி - நாடகம் போடறதுல மன்னர் நம்ம கலைஞர் தான்.. என்னமா நடிக்கறாரு எல்லா விஷயத்துலயும்.. அதுவும் ஒத்திகையே இல்லாம?



பளிச் 9


இந்த வாரம் எனக்குப் பார்த்ததுல பிடிச்சது ஒரு சினிமா. விண்மீண்கள். பழைய டைரக்டர் சங்கரோட பேரன் விக்னேஷ் எடுத்திருக்காரு. புது கேமராமேன் ஆனந்த். அவங்க சித்தப்பா பிரபலமான கேமெராமேன் மணிகண்டன். அப்பா சினிமா பற்றின புத்தகத்துக்கு ஜனாதிபதி விருது வாங்கின ஓவியர் ஜீவானந்தன். பொறக்கறப்பவே மூளை வளர்ச்சி குன்றின நிலையில பொறக்கற குழந்தை வாலிபனாகி காதலை சந்திச்சா என்ன ஆகும்னு சொல்ற கதை. சின்னச் சின்ன ஓட்டைங்க இருந்தாலும், மசாலா பண்ணாம, நல்லா சொல்லியிருக்காங்க.


 கேரக்டர் ரோல்ல காமெடியன் பாண்டியராஜனுக்கு வித்யாசமான வாய்ப்பு. கூட நடிச்சவங்க எல்லாரும் பெரும்பாலும் புதுசு. ஆனா நல்லா நடிச்சிருக்காங்க. நல்ல ஒளிப்பதிவு. ஆனா இந்தப் படத்தை படிச்ச, எலைட், ஐ.டி க்ரூப்ஸ் உட்பட இண்ட்டெக்சுவலுங்க யாரும் சரியாவே ஆதரிக்கல. எல்லாரும் கொலை வெறிலதான் அலையறாங்களே தவிர கலைவெறியைக் காணோம். அப்பறம் எப்பிடி நல்ல படம் வரும் ?


பளிச் 10


அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யற நேரம் வந்துடுச்சு.போன தடவை நான் எழுத்தாளர் மகாஸ்வேத தேவி பேரை ரெகமெண்ட் பண்னேன். யார் கேக்கறாங்க. பிரதிபா வைப் போட்டுட்டாங்க. சரி மொத பெண்மணின்னு ஓகே சொன்னோம். அது தேறல.. சொந்தபந்தங்களோட ஊர் சுத்தறதுக்கே 200 கோடியை அழிச்சுடுச்சாமே. இந்த தடவை பாத்து போடணும். தமிழ்நாட்டுல மாபெரும் ஊழல் அரசியலுக்குப் பிதாமகரா இல்லாம இருந்திருந்தார்ன்னா நிச்சயம் கலைஞர் கருணாநிதியை ஜனாதிபதி ஆக்கணும்னு சொல்லியிருப்பேன். இப்ப ம்ஹூம். என்னோடசாய்ஸ் காந்தியோட பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. உங்க சாய்ஸ் வேற இருந்தா எழுதி அனுப்புங்க..


 சி.பி - நல்லதோ , கெட்டதோ  வாரிசுகளை ஒழிக்கனும். வேற ஆளே சிக்கலையா?


——————

நன்றி 
கல்கி 7.4.2012

5 comments:

தினேஷ்குமார் said...

டோன்ட் வொரி பாஸ் ஐ வில் கம் தேர் ...

Yoga.S. said...

நல்லாருக்கு!ச்சி......நல்லாவே இல்ல,நீங்க சொன்ன அத்தனையும்.நியூஸ் பாத்தா மண்டையே வெடிச்சுடும் போலருக்கு!(அதென்ன,நன்றி கல்கி:07/04/2012)?

கூடல் பாலா said...

நாடு போகும் போக்கைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.....சிபி கமெண்ட்ஸ் சூப்பர்!

Unknown said...

ஓ பக்கங்கள் அருமை!
உங்கள் கருத்துக்கும் ஓ போடலாம்!

புலவர் சா இராமாநுசம்

Pulavar Tharumi said...

உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது.