Monday, September 12, 2011

சம்சாரம் காணாம போனா மொத ஸ்டெப்பா என்ன பண்ணனும்?

Photographer Nelleke Pieters
Photographer Nelleke Pieters
1. ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் - டாக்டர் சந்தீப் சால்வி # அய்யய்யோ!கேன்சர் கன்ஃபர்மா?

-------------------------------

2. உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு கருணாநிதி # ஓவர்கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு தல மங்காத்தால சொன்னதுஉங்களுக்குத்தானா?

------------------------------

3. ரூ.5 கோடி வீடு ஆக்கிரமிப்பு: மன்னர் பரம்பரையைச் சேர்ந்த 2 பேர் கைது  # இன்னொரு பெரிய பரம்பரை கைது எப்போன்னு தெரியல

---------------------------

4. ஊதியத்துக்காக நிறுவனங்களை மாற்றாதீர் : ஐ.பி.எம்., அதிகாரி அறிவுரை # அடிமாட்டு சம்பளத்துலயே காலம் தள்ளச்சொல்றீங்களா?

------------------------

5. காஞ்சிபுரம்-மனைவியைக் காணவில்லை, எனக் கணவர் போலீசில் புகார்  # ஜவுளிக்கடைகள்ல முதல்ல தேடிப்பாருங்க, மே பி சேலை செலக்டிங்க்

---------------------
6. சென்னையில் 19 சதவீத வீடுகளை வாங்க ஆளில்லை # ரொம்ப பெரிய வீடா இருந்திருக்கும், இப்போ எல்லாம் ”சின்ன வீட்டு”க்குத்தான் டிமாண்ட் ஜாஸ்தி

-------------------

7.உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான், படைப்பாளிகளை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

------------------------

8. பொய் சொல்லி விடுப்பு எடுப்பதில் இந்தியர்கள் இரண்டாமிடம்! # ச்சே! தமிழர்கள் இருந்துமா முதல் இடத்தை பிடிக்க முடியல?

----------------------------

9. மங்காத்தா முதல் நாள் கலெக்‌ஷன் எந்திரன் கலெக்‌ஷனை மிஞ்சியது - த்ரிஷா ட்விட்டரில் # ராணால சான்ஸ் இல்லங்கறதுக்காக இப்படியா ரீல் விடறது?

-------------------------

10. சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!! #  ரொம்ப சின்ன வயசா இருக்கப்போகுது!ஓஹோ அவரு சின்னவயசுல அவருக்கும் சின்ன வயசா ? அப்போ சரி!

-----------------
11.டர்ட்டி பிக்சர்ஸ்-வித்யாபாலன் கிளுகிளு ஸ்டில்ஸ் வெளியீடு # நோ டர்ட்டி, ஒன்லி பியூட்டி & கிளாரிட்டி. சபாஷ்!சில்க் ஸ்மிதாஆத்மசாந்திஅடைக!

-----------------------------

12. திருப்பதியில் யுவனின் 2வது திருமணம் முடிந்தது  #  ஓக்கே, யுவனின் 3 வது திருமணம் முடிவாகும் வரை 2 வது பெண்ணை மொட்டைஅடிச்சுட்டுஇருப்பாரா?

----------------------------

13.  ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் பேசும்போது அவன் நோட்டம் போடுவது அவன் அருகில் இருக்கும் ஃபிகரை

------------------------

14. உங்க பொண்ணுக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் ஜாஸ்தின்னு சொன்னீங்க? ஆனா மிடி போட்டு கிளாமரா ஊர் சுத்துதே? ஹி ஹி டிரஸ் கம்மி,சென்ஸ் ஜாஸ்தி

-------------------------

15. காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டால்  அது தெய்வீகக்காதல் ஆவதில்லை, அதனால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன போலும்

-----------------------------------
16. சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?

----------------------------

17. மேனேஜர் ரூம்ல இருந்து எல்லாரையும் நோட் பண்றார்.. ஆனா அவர் ரூம்ல என்ன நடக்குதுன்னு நம்மால நோட் பண்ண முடியல.. #திங்க் பண்ணு..

-------------------------------

18.நான்தான் உன்னைபிடிக்கலைன்னு சொல்லிட்டனே, இன்னும் ஏன்என்னையேசுத்திவர்றே? மிஸ். பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு அர்த்தமாமே?

-------------------------------

19. குறும்பு பண்ணாம இருந்தா அது குழந்தையே இல்லை, குறும்புத்தனம் பண்றது பிடிக்கலைன்னா அது நல்ல ஃபிகரே இல்லை # ரீ மிக்ஸ்

----------------------

20.தண்டனை இல்லா குற்றம் இந்த உலகில் ஒன்றுதான், பெண்ணின் இதயத்தை களவாடுவது

----------------------------

21. டியர், நீங்கதானே ஆஃபீஸ்க்கு வர்றப்ப சேலை கட்டி வான்னு சொன்னீங்க?

அடிப்பாவி , அதுக்காக முதல் மரியாதை ராதா மாதிரியா வர்றது?

---------------------------

22. டியர்,உன்னைப்பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..

ஏன்?

என்னை மாதிரி செம பர்சனாலிட்டியான ஆள் உனக்கு லவ்வரா கிடைச்சிருக்கே?

---------------------------

23. கல்யாண மண்டபங்களில் பெண்கள் விதவிதமான நகைகளை அணிந்துவந்து அனைவரையும் கவர்கின்றனர்,ஆண்கள் புன்னகையை மட்டும் வைத்து கவர்கிறார்கள்

---------------------------

24. கல்யாணமான பெண்ணால் அவள் கணவனுக்கு மட்டுமே இம்சை, கன்னிப்பெண்ணால் கணக்கற்ற இளைஞர்களுக்கு இம்சை # நீதி - ஆணால் யாருக்கும் இம்சை நோ

--------------------------

25. நீ உதைத்தால் நான் பந்தாவேன்.. அணைத்தால் அஃறிணை தாண்டி உயர்திணை ஜந்தாவேன் # ட்வீட் அந்தாதி

---------------------------------------

47 comments:

சசிகுமார் said...

உலவுல இன்னும் இணைக்கலியா சீக்கிரம் இணையுங்க சிபி

RAMA RAVI (RAMVI) said...

சம்சாரம் காணாமல் போனா மொத ஸ்டெப்பா என்ன பண்ணனும்?

சந்தோஷ படணும்!!! சரியா ?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...சிரிக்க வைத்த யார்த்தமான விஷயங்களை பதார்த்தமா வைத்ததுக்கு நன்றிங்க!

காந்தி பனங்கூர் said...

//தண்டனை இல்லாத குற்றம் இந்த உலகத்தில் ஒன்று தான், பெண்ணின் இதயத்தை களவாடுவது.//

களவாடிய பிறகு, வாழ்க்கை முழுதும் அவங்க கூட வாழ்றது தான் பெரிய தண்டனை.

சென்னை பித்தன் said...

ரைட்டு!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது முதல் மரியாதை ராதா மாதிரியா.....???
எங்கே எங்கே உடனே பார்க்கணுமே...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, பெரிய குடும்பம்ன்னு சொல்லிட்டு நடுரோட்ல நாய் மாதிரி அடி வாங்கிரப் போறே பார்த்து ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

பொண்டாட்டியை காணலைன்னா போலீஸ் ஸ்டேசன் போகாதே, சேலை ஸ்டேசனுக்கு po.....hi hi...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஆறுடா வெண்ணை...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

தலைப்பு வைப்பதில் சி பி என்றும் சிங்கம் தான்.
ஹாட் ஷர்ட் காமெடி ... சி பி பக்கங்கள் ....
எப்போது ?
தாங்கள் -பா. கே .ப- பக்கங்கள் .எப்போது ?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ramvi-comment -super
mano-comments -fun

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

i like it mano ..u r timing jokes...

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் பாஸ்..

இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

சம்சாரம் காணாம போனா மொத ஸ்டெப்பா என்ன பண்ணனும்?//

போங்க பாஸ்...இது கூடத் தெரியாம நம்ம கிட்ட கேட்கிறீங்களே?
ஆப்சன் ஒன்று,
சம்சாரத்திற்கு தங்கை இருந்தா.............................

இல்லேன்னா பக்கத்து வீட்டில பிகர் இருந்தா செட்டப் ஆக்கனும்...

அவ்...........

நிரூபன் said...

ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் - டாக்டர் சந்தீப் சால்வி # அய்யய்யோ!கேன்சர் கன்ஃபர்மா?//

அவ்...ஆமா பாஸ்....நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும்..

கொசு வலை வாங்கினா நம்ம பாடியைப் பாதுகாக்கலாம் அல்லவா.........

நிரூபன் said...

2. உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு கருணாநிதி # ஓவர்கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு தல மங்காத்தால சொன்னதுஉங்களுக்குத்தானா?//

மங்காத்தா ஆட்டத்தில கோர்த்து விடுறீங்களே.............

நிரூபன் said...

காஞ்சிபுரம்-மனைவியைக் காணவில்லை, எனக் கணவர் போலீசில் புகார் # ஜவுளிக்கடைகள்ல முதல்ல தேடிப்பாருங்க, மே பி சேலை செலக்டிங்க்//

இது செம காமெடி பாஸ்...ஆனாலும் அவங்க வேறு யார் கூடயாச்சும் இருப்பாங்க என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

சென்னையில் 19 சதவீத வீடுகளை வாங்க ஆளில்லை # ரொம்ப பெரிய வீடா இருந்திருக்கும், இப்போ எல்லாம் ”சின்ன வீட்டு”க்குத்தான் டிமாண்ட் ஜாஸ்தி//

ஆமா...இதில அந்த மீனிங் இல்லையா பாஸ்...


கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான், படைப்பாளிகளை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.//

அடடா...இது நல்லா இருக்கே....

பெண்களிற்கு ரசனை அதிகம் என்று இதனால் தானே சொல்லுவார்கள்..........

நிரூபன் said...

பொய் சொல்லி விடுப்பு எடுப்பதில் இந்தியர்கள் இரண்டாமிடம்! # ச்சே! தமிழர்கள் இருந்துமா முதல் இடத்தை பிடிக்க முடியல?//

அதானே...வெள்ளிக் கிழமையில தியேட்டருக்குப் போக நம்ம பாஸே லீவெடுக்கிறார்...

ஒரு போனைப் போடுங்க நம்ம சிபிக்கு..
சூப்பர் ஐடியா சொல்லிக் கொடுப்பாரு........

நிரூபன் said...

.டர்ட்டி பிக்சர்ஸ்-வித்யாபாலன் கிளுகிளு ஸ்டில்ஸ் வெளியீடு # நோ டர்ட்டி, ஒன்லி பியூட்டி & கிளாரிட்டி. சபாஷ்!சில்க் ஸ்மிதாஆத்மசாந்திஅடைக!//

ஆகா...சூட்டைக் கிளப்புறாங்களே..........

நிரூபன் said...

மங்கி பாலூட்டுதே..........

சூப்பர் ஸ்டில்லு....

நிரூபன் said...

.நான்தான் உன்னைபிடிக்கலைன்னு சொல்லிட்டனே, இன்னும் ஏன்என்னையேசுத்திவர்றே? மிஸ். பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு அர்த்தமாமே?//

அவ்...இது வேறையா...நடக்கட்டும்

நிரூபன் said...

20.தண்டனை இல்லா குற்றம் இந்த உலகில் ஒன்றுதான், பெண்ணின் இதயத்தை களவாடுவது//

ஆகா..இதயத்தை டச் பண்ணிட்டீங்களே பாஸ்..........

நிரூபன் said...

25. நீ உதைத்தால் நான் பந்தாவேன்.. அணைத்தால் அஃறிணை தாண்டி உயர்திணை ஜந்தாவேன் # ட்வீட் அந்தாதி//

அடடா...பாஸ் தத்துவம் வேற சொல்லுறாரே..
கலக்கல் பாஸ்..

நிரூபன் said...

டுவிட்ஸ் எல்லாமே வழமை போல அசத்தல்...
இன்று சினிமாக் கொசுறுத் தகவல்களைக் குறைத்து...பொது விடயங்களை வைச்சு காமெடி பண்ணியிருக்கிறீங்க..

ரசித்தேன்.

சிசு said...

4th- Same blood...

சிசு said...

23rd - :)

Rizi said...

ஹ்ம்ம்ம் நல்லாயிருக்கு படங்கள் உட்பட

Nirosh said...

வழக்கம் போல மாஸ்..>!
தமிழ்மணம் 10.

கும்மாச்சி said...

\\சம்சாரம் காணாமல் போனா மொத ஸ்டெப்பா என்ன பண்ணனும்?//

சரக்குக்கு ஏற்பாடு பண்ணனும்.

மகேந்திரன் said...

நீங்கள் போட்டிருக்கும் படங்கள்

ஆயிரம் கதை பேசுது நண்பரே..

சக்தி கல்வி மையம் said...

மாப்ள தலைப்பு????

கடம்பவன குயில் said...

2. ஏன் தலைக்கும் தலைவருக்கும் முடிச்சு போடுறீங்க....??? அவருபாட்டுக்க கனியேன்னு உட்கார்ந்திருக்கிறார்...

காட்டான் said...

அந்தகாலத்தில சொல்லுவாங்க கிளிய வளர்த்து பூணை கையில கொடுத்துட்டாங்கண்னு உங்க படத்த பார்த்தா அப்பிடி இனி சொல்லமாட்டாங்கையா..!!!

கடம்பவன குயில் said...

பொய் சொல்லி லீவு எடுப்பதில் இந்தியர்கள் முதலிடம். தமிழர்கள் இருந்துமா முதலிடம் கிடைக்கவில்லை...//


சிபி பொய் சொல்லி லீவு எடுப்பது எப்படின்னு ஒரு டிரெயினிங் சென்டர் ஆரம்பிங்க... சீக்கிரமே முதலிடம் வாங்கிடலாம்.

Jana said...

இரண்டாவது விடயம் ஓவர் கான்பிடன்ட் அல்ல ஓவர் குசும்பு :)

சுதா SJ said...

பாஸ் வர வர உங்களுக்கு ஓவர் குசும்பு பாஸ்
ஹீ ஹீ

செங்கோவி said...

நல்லாத் தான் யோசிக்கிறீங்க..ரைட்டு.

சுதா SJ said...

9 வது கமெண்ட் திரிஷா வா சொல்லிச்சு, அவ்வ்
திரிஷாக்கு என்ன கோவமோ ரஜனி மேலே .....????

சுதா SJ said...

படங்கள் செம அழகு

shortfilmindia.com said...

பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியில் இணைத்து, உங்கள் திரட்டியை முன்னணி திரட்டியில் ஒன்றாக்குங்கள்.

http://udanz.com

ADAM said...

SUPER

Unknown said...

குழந்தையையும் பொண்ணையும் பத்தின உங்க ட்வீட் நல்ல இருக்கு

ஒரு படம் தவிர மட்ட எல்லாம் சூப்பர் அண்ணா

ராஜி said...

மேனேஜர் ரூம்ல இருந்து எல்லாரையும் நோட் பண்றார்.. ஆனா அவர் ரூம்ல என்ன நடக்குதுன்னு நம்மால நோட் பண்ண முடியல.. #திங்க் பண்ணு..
>>
உங்களுக்கும் புரமோஷன் வருமில்ல!

ராஜி said...

தண்டனை இல்லா குற்றம் இந்த உலகில் ஒன்றுதான், பெண்ணின் இதயத்தை களவாடுவது
>>>
கொஞ்சம் அசந்தா அதுக்குதான் ஆயுள் தண்டனை கிடைச்சுடுதே

ராஜி said...

டியர்,உன்னைப்பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..

ஏன்?

என்னை மாதிரி செம பர்சனாலிட்டியான ஆள் உனக்கு லவ்வரா கிடைச்சிருக்கே?
>>>
ஓவர் கன்ஃபிடன்ட் உடம்புக்கு ஆகாதுன்னு மங்காத்தா படத்துல உங்களுக்காதான் சொல்லியிருக்காங்க‌