Large Lilly

1.நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை எஸ்பி.சரண்மீது போலீசார் வழக்கு # சோனா அவள் அங்கம் தங்கம்தானா? பாடலுக்கு தடை!?

------------------------------
2. அனுஷ்கா, எமி ஜாக்சனுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் விக்ரம்...! # ஜிம்முக்குப்போய் உடம்பை ஏத்தப்போறீங்களா? உயரத்தை ஏத்தப்போறீங்களாண்ணே?
------------------------------------------
3. பருவ நிலைகளைப்பொறுத்து பனியும், மழையும் பொழிகின்றன!உன் அன்பு மட்டும் பொழியாமல் இருந்ததே இல்லை!
----------------------------
4. நான் சோகத்தில் இருக்கும்போது தாய் மடி நீ! நான் சந்தோஷத்தில் இருக்கும்போது தாயம் அடி நீ!
--------------------------------
5. நம் உள்ளங்கைகள் சேர்ந்து இருந்த போது நம் உள்ளங்கள் ஒரு நிமிடம் கூட சோர்ந்து போனதே இல்லை!
--------------------------------
6. உன் இமைகள் சேர்ந்திருக்கும் நேரம், அல்லது என் இமைகள் சேர்ந்திருக்கும் நேரம், நம் உள்ளங்கள் சேர்ந்திருக்கும் # தூக்கத்தில் வரும் ஏக்கங்கள்
---------------------------
7. மனதிற்குப்பிடித்த ஒருவரை,நேசிப்புக்குள்ளான ஒருவரை இழப்பதை விட மரணம் ஒன்றும் வலி நிறைந்தது அல்ல!
------------------
8.தனக்கென நிகழும் வரை இந்த உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே வேடிக்கையானவையே!
----------------------------------
9. பிரியத்துக்கு உரியவளின் கண்ணுக்குப்புலப்படாத கண்ணீருக்கு நாம் ஒரு பொழுதும் காரணம் ஆகி விடக்கூடாது!
----------------------------------
10. இழந்தால் கிடைக்காதது
1. சொல்லி விட்ட வார்த்தை
2. கடந்து போன காலம்
3. நிராகரிக்கப்பட்ட நேசம்
4. முதல் காதல்
---------------------------------
11. சுவாமி கில்மானந்தாவின் டைரி வரிகள் - லவ் த லேடி, டோண்ட் டச் த பாடி, மீறி டச் பண்ணுனா யாராவது ரெடி பண்ணிடுவாங்க 3 D சி டி
----------------------------------
12. பிஎஸ் சி எலக்ட்ரானிக்ஸ் படிக்கும் காதலனின் லவ் பஞ்ச் டயலாக் - கனெக்ஷன் விட்டுப்போக நாங்க ஒயர் இல்லைடி! உயிர்!!!
----------------------------------
13. ஒஸ்தி படத்தில் வரும்அந்தமுக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக்கொண்டுள்ளார் - சிம்பு # எப்படியோ படம் நாஸ்தி ஆகாம இருந்தா சரிதான்
----------------------------------------
14. வாழ்க்கை என்பது நம் இறப்பு வரை அல்ல! மற்றவர் மனதில் நாம் வாழும் வரை
--------------------------
15. உன் இதயத்துடிப்பை கேள்! ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு அர்த்தம் சொல்லும்,என் இதயத்துடிப்பை கேள்! துடிப்பின் அர்த்தமே நீதான் என்று சொல்லும்
---------------------------------
16. சுனாமிஅலைல சிக்கி உயிர் பிழைச்சவன் இருக்கான், சுடிதார் வலைல சிக்கி உயிர் பிழைச்சவன் எவனுமே இல்லை . திஸ் கேவலமான பஞ்ச் பை கோவலன் கோமேதகம்
-------------------------------------
17. என்னைப்பார்க்கும்போது உன் கண்கள் கவிதை பேசுகின்றன, என் கவிதைகள் கண்ணீர் வடிக்கின்றன
---------------------------
18. நிலவில் வாழ ஆசைப்படுகிறார்கள் கோடீஸ்வரர்கள், காதலியின் நினைவில் வாழ ஆசைப்படுகிறார்கள் காதலீஸ்வரர்கள்
-----------------------------
19. சுமைகளைக்கண்டு துவண்டுவிடாதீர்கள்!இந்த உலகத்தையே சுமக்கும் பூமி கூட நம் காலடியில் தான்!!!!
--------------------------------
20. ஆனந்தக்கண்ணீர் என்ற வகையறாவில் கூட உன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது,உப்புச்சுவையை உன் கன்னங்களோ, உதடுகளோ ருசிக்கக்கூடாது
21. அழகான பெண்களுக்கும் , உண்மையான அன்பிற்கும் எதிர்மறைத்தொடர்பு உள்ளது.முற்றிய தேங்காய்பருப்பின் சுவைக்கும், அதன் தண்ணீருக்கும் உள்ள சுவைபோல
----------------------------------
22. பெரும்பாலான பெண்கள் கூந்தலை சரி செய்வதையும், ஆண்கள் மீசையை தடவுவதையும் தங்கள் மேனரிசமாக வைத்திருக்கிறார்கள் # அவ(ல)தானிப்பு
---------------------------
23. உயர்பதவியில் இருந்தாலும், செல்வச்சீமாட்டியாய் வள்ர்ந்தாலும்ஏட்டிக்குப்போட்டியாய் காதலி செய்யும் சில குழந்தைத்தனங்கள் அவளை தேவதைஆக்குகின்றன
------------------------
24. என் அருகாமையில் உன் கன்னங்கள் நாணுகின்றன. ஊற்றெடுக்கும் கவிதைகளை வடிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது
----------------------------
25. அழகால், திறமையால், வசதியால் பலர் உன்னை வசீகரித்தார்கள். அன்பால் நான் மட்டுமே உன்னை ஆகர்சித்தேன்

