Saturday, September 03, 2011

அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை பை அவள் விகடன்

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?

அவசர... அவசிய அலசல் !
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்... இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், 'அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்...’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.

இதுவோ.... ''மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்... மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!'' என்று குஷியாகும் பெண்களின் காலம்!


இவர்களில் பலரும், 'இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது' என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ... தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க... கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.


'மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?' என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.


''மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்... மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. 

அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்'' என்ற டாக்டர்,


''விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.

''கடைகளில், 'புரஜெஸ்ட்டரோன்' (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.


இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். 

அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்... அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது... மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது... ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!'' என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,

''இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-

''மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.
முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!'
thanx- aval vikatan

31 comments:

Mohamed Faaique said...

நல்ல பதிவு...

யாரு சொன்னது கொபி பேஸ்ட் கூடாது`னு????

நீங்க தொடர்ந்து நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தல..

”தளிர் சுரேஷ்” said...

ரெண்டாவதா வந்துட்டோம்ல! பயனுள்ளதகவல்! உங்கள் தளத்தில் வித்தியாசமான பதிவு!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணா, நல்ல காப்பி பேஸ்ட் அதனால உன்னை சும்மா விடுதேன்.....

ARUL KUMAR said...

ஹய்யா..நான் மூணாவது...!

MANO நாஞ்சில் மனோ said...

நான் பஹ்ரைன் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷப் பட்டியாமே உண்மையாடா....

ARUL KUMAR said...

ச்சே டைப் பண்ணுறதுக்குள்ள நாஞ்சில் மனோ முந்திட்டாரு ...!

விஷாலி said...

பெண்களுக்கு மிகவும் அவசியமான விஷயம் அடங்கிய பதிவை பகிர்ந்ததற்கு நன்றிகள் சார்!

Arul Kumar P அருள் குமார் P said...

ரைட்டு , வூட்டுல தங்கமணி படிச்சாச்சு ...! (" நீங்களும் தான் பதிவுனு போடுறீங்க என்ன பிரயோசனம் ...! ஹும்ம்...") (இப்ப திருப்தியா CPS ..!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

சுதா SJ said...

பயன் உள்ள பதிவு பெண்களுக்கு.....
சூப்பர் தல

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

கும்மாச்சி said...

பெண்களுக்கு பயனுள்ள பதிவு, ஆனால் உங்களிடமிருந்து நான் எதிர் பார்க்கவில்லை, ஏதோ ட்வீட் மேட்டர் என்று உள்ளே வந்தேன்.

Anonymous said...

இயற்கைக்கு எதிரா நம்ம என்ன பண்ணினாலும் தப்பு தான்...மருந்து கம்பெனி காசுல தான் அத்தனை பூசி மொழுகல் வேலைலாம் நடக்கு...ஒரு நாளைக்கு ஒன்னு சொல்வாங்க...இவனுங்களுக்கு ராமதாஸ் எவ்வளோவோ தேவலை...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பெண்களுக்கு பயனுள்ள பதிவு.....

ஜெய்லானி said...

பொதுவ மாத்திரைன்னு சொன்னாலே அது சைடு எஃபெக்ட் உள்ளதுதான். அப்படி சைடு எஃபக்ட் இல்லாத மாத்திரைன்னு சொன்னா அது மாத்திரையே கிடையாது .வெறும் மைதா மாவுதான் :-)

Thangasivam said...

Useful message thank you

சக்தி கல்வி மையம் said...

maapla kalakkal..

K.s.s.Rajh said...

பொண்ணுங்க அவசியம் படிக்கவேண்டிய பதிவு.....

Manish said...

மிகவும் பயனுள்ள பதிவு...

காட்டான் said...

பொண்ணுங்க அவசியம் படிக்கவேண்டிய பதிவு.....

அப்ப நான் போட்டு வாறேன்யா..ஹி ஹி.. ஓட்டு போட்டாச்சு மாப்பிள...

கடம்பவன குயில் said...

எல்லோரும் ஏன் பொண்ணுங்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுன்னே எழுதுறீங்க... குலதெய்வ பூஜை, வீட்டில் நடக்கும் விசேஷங்கள் என்று எல்லாவற்றுக்கும் மாத்திரை போடச்சொல்லி கட்டாயப்படுத்துகற ஆண்கள் தான் அதிகம். ஆண்களும் இதன் ஆபத்தை உணரவேண்டும். பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. கலக்குங்க சிபி சார்.

கடம்பவன குயில் said...
This comment has been removed by the author.
கடம்பவன குயில் said...

எல்லோரும் ஏன் பொண்ணுங்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுன்னே எழுதுறீங்க... குலதெய்வ பூஜை, வீட்டில் நடக்கும் விசேஷங்கள் என்று எல்லாவற்றுக்கும் மாத்திரை போடச்சொல்லி கட்டாயப்படுத்துகற ஆண்கள் தான் அதிகம். ஆண்களும் இதன் ஆபத்தை உணரவேண்டும். பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. கலக்குங்க சிபி சார்.

கடம்பவன குயில் said...

சிபி ஸ்டைலில் தலைப்பு வைக்க ஒரு மேட்டர் வேண்டும். நல்லா செலக்ட் பண்ணிட்டீங்க.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சொல்ல வந்தேன் கடம்பவன குயில் சொல்லிட்டாங்க. அதென்ன பெண்களுக்கு உபயோகமான பதிவு. அதிக மாத்திரை எடுத்து படுத்துக்கிட்டா ஆண்களுக்கும் தானே சங்கடம். அதனாலே அனைவருக்கும் உபயோகமான பதிவு

நிரூபன் said...

வணக்கம், வந்தனம், நமஸ்தே...

நிரூபன் said...

இருங்க பாஸ்,
படிச்சிட்டு வாரேன்

நிரூபன் said...

அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை//

அவ்....நாம உள்ளே வரலாமா பாஸ்.

டாக்டர் ஆலோசனை ஓக்கே,
ஆனால் தலைப்பு சிபி ஆலோசனையா எல்லே இருக்கு.

நிரூபன் said...

இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். //

அவ்...இது பாயிண்டு...

நிரூபன் said...

நம்ம பாஸ் சிபி ப்ளாக்கில் பெண்களிடமிருந்து பாராட்டா..

ஐயோ...நம்பவே முடியலையே பாஸ்...

அப்போ திட்டினாங்க...இப்போ பாராட்டுறாங்க பாஸ்..

நீங்க கலக்குங்க.

ராஜி said...

எல்லாரும் நல்ல பதிவு, பென்களுக்கு உபயோகமான பதிவுன்னு சொன்னாலும் இதுப்போன்ற மாத்திரைகளை பெண்கள் தள்ளி வைப்பது நல்லது.