Thursday, September 22, 2011

ஒரு ஜோதிடப்பைத்தியத்தின் கேனத்தனமான காதல்!!!!!!!!!

Aliens Bike
1.நீ என்னுடன் இருக்கையில் நான் குழந்தை ஆகிறேன், நீ என்னை விட்டு விலகிச்சென்றதும் நான் மடந்தை ஆகிறேன்.

-----------------------------------

2. உயிர் மெய் எழுத்து என் உயிர் ஆனது - நீ!  ,

மெய் எழுத்து என் கனவானது - ச்!

----------------------------

3. உன் அழகைப்பார்க்கையில் எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது, 

உன் அன்பைப்பெறுகையில் வாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது

---------------

4. உன் அலங்காரங்கள் என்னைத்தாக்குகின்றன! உன் அகங்காரங்கள் என்னை உன்னிடம் அண்ட விடாமல் செய்கின்றன!

-------------------------

5. உன்னுடனான சம்பாஷைணகளின்போது உன் உதடுகளின் மூலம் வரும் ஒலிகளை உன் கண்களின் ஒளிகள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன. (ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை மிஞ்சி விடும்னு சயின்ஸ் டீச்சர் டெல்)

---------------------------

6. பூக்களை நீ சூடும்போது உனக்கான பிரத்யேக நறுமணத்தை நீ இழக்கிறாய் அன்பே!!

-----------------------------

7. உலகில் இதுவரை சொன்னவற்றில் உன்னத புத்திமதி - யாருக்கும் புத்திமதி சொல்லாதே!

----------------------------

8. முடியும் என்றால் முயற்சி செய், முடியாது என்றால் பயிற்சி செய்

-------------------------

9. ஒரு இடத்தை வாங்கும் முன் வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மாதிரி ஒரு மனதை நேசிக்கும்முன் வெற்றிடச்சான்றிதழ் வாங்கமுடிந்தால் எப்படி இருக்கும்? ( பெரும்பாலும் ஆல்ரெடி புக்டு ஆகவே இருக்கே?)

-----------------------------------

10. நாம் இருவரும் இணையும் காதல் கூட்டணியில் விருப்பம் எனக்கு! கடைசி நிமிடம் வரை கூட்டணி பற்றி வாய் திறக்காத சாமார்த்தியம் உனக்கு!

---------------------------


11. நமக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வழியே இல்லை, ஏன் எனில் உன்னுடனான ஒற்றுமையில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன்

-

---------------------

12. வாழ்வின் பாதி நேரம் உன் மடியில் நான் தலை சாய்ந்திருக்க வேண்டும், மீதி நேரம் என் மடியில் நீ தலை சாய்ந்திருக்க வேண்டும். ( வேலைக்கே போகமாட்டேன் ஹி ஹி )

---------------

13. உணவில் நான் சைவம், நீ அசைவம், அன்பில் நான் புத்தன், நீ ஹிட்லர், எதிர் எதிர் துருவங்கள் நாம், ஆனாலும் ஈர்க்கப்பட்டோம்

---------------14. உன் மனதை மாற்றிவிட நான் முயலும்போது என் மனதை ஏமாற்றி விட நீ முடிவு செய்து விடுகிறாய்

-------------------


15. நீ 143 சொல்லும்போதே கூட்டுத்தொகை 8 வருதே, அஷ்டமத்துல சனி என்றே நினைத்தேன் # ஒரு ஜோதிடப்பைத்தியத்தின் கேனத்தனமான காதல்

---------------------------------


16. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் சிலரிடம் மட்டுமே உண்டு, அதை திருத்திக்கொள்ளும் மனோ பக்குவம் மிகச்சிலரிடம் மட்டுமே உண்டு

---------------------------------

17. குற்றம் நடந்தது என்ன? என்று நட்பு வட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தால் நம் மனநிம்மதி,நேரம் இழப்பதைத்தவிர பெரிதாக ஏதும் நடக்காது

--------------------------------

18. கனகாம்பரப்பூக்களை மட்டுமே நான் உன் கூந்தலில் சூடுவேன், உள்ளதில் மிக லேசான பூ அதுவே! # ஒரு முழமே 5 ரூபாதான் - சிக்கன சிகாமணி

-----------------------------

19. அடுத்த ஜென்மத்திலாவது நாம் ஒன்று சேர்வோம் என்றாய்!ஆறுதலாய்,போன பிறவியிலும் இப்படி சொல்லி ஏமாற்றி இருப்பாயோ?

------------------

20. உன்னை சந்திக்கும் முன் எனக்கு விக்கல் வந்ததில்லை! சந்தித்த பின் விக்கல் வராத நாளே இல்லை!

----------------------------------------
21. தன்னைவிட மிகக்குறைந்த வயதுள்ள பெண்ணை திருமணம் செய்தபெரியாரை எதிர்த்த அண்ணா ஏனோ எம்ஜிஆரை, கலைஞரை கண்டிக்கவும்,கண்டுக்கவும் இல்லை

--------------------------------------
22. கறந்த பாலின் தூய்மையுடன் உன் மனசு! பிறந்த மழலையின் பொலிவுடன் உன் காதல்!

-------------------------------------

23. வேண்டும் என்றே நீ என்னைப்பிரிந்தாய்! நான் வேண்டாம் என்றே விலகிச்சென்றாய்!

------------------------------------

24. நம் இருவர் கண்களும் முதன் முதலில் சந்தித்தபோது என் உள்ளுணர்வு ஏதும் சொல்லவில்லை!ஏன் எனில் என் உணர்வுகள் ஏதும் அப்போது வேலையே செய்யவில்லை

---------------------------

25. காங்., தனித்து போட்டி: திமுக., வெளியேற்றவில்லை: தங்கபாலு # முதல் இரவில் சண்டை ஏதும் இல்லை, திண்ணையில் தான் நல்லா காத்து வருது!!

--------------------------------------

27 comments:

ராஜி said...

1 ?

Unknown said...

அண்ணே 23rd நச்!

rajamelaiyur said...

21 super

rajamelaiyur said...

Tamilmanam problem panuthuthu

ராஜி said...

3rd tweet super

சக்தி கல்வி மையம் said...

மாப்ள தமிழ்மணம் பிரச்சனை பண்ணுதே?

உலக சினிமா ரசிகன் said...

25 நச்&நங்

இந்திரா said...

முதலாவது மூன்றவாது படமெல்லாம் பயமுறுத்துதுங்க..

வெளங்காதவன்™ said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

நச்,,,,,,..............

Astrologer sathishkumar Erode said...

தமிழ் 10 இணைஞ்சாச்சா...நம்மை நீக்கிட்டா அப்புறம் அவங்களுக்கு ஆதரவு யாரு இருக்கா ஹிஹி

Mathuran said...

அசத்தல் பதிவு
இரண்டாவது போட்டோ கலக்கல்

நிரூபன் said...

டுவிட்ஸ் அனைத்தும் வழமை போலவே அசத்தல்.

வர வர காதல் போதை அதிகமாகிக் கொண்டே போகிறது.

மகேந்திரன் said...

துணுக்குகள் அத்தனையும் அருமை.
படங்கள் மனத்தைக் கவ்வுகிறது.

RAMA RAVI (RAMVI) said...

3,16,17 அருமை. படங்கள் ரொம்ப அழகா இருக்கு. ஏன் படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டீங்க?

சசிகுமார் said...

தங்கபாலு மேட்டர் ஹீ ஹீ

MANO நாஞ்சில் மனோ said...

எட்டாவது சூப்பர்!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குறது உண்டா, இல்லை பதிவுலதான் படுத்து உறங்குரியா???

K said...

நகைச்சுவை, காதல், தத்துவம், கிண்டல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது டுவீட்ஸ்!

வழக்கம் போல அசத்தல் சி பி !

Anonymous said...

சூப்பர்! எப்படி இப்படி! ஒன்றை விட ஒன்று வெல்லுது...சிரிப்பிலும், சிந்தனையிலும்.வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

எதுகை மோனை அருமை அண்ணே

பெரியார் மேட்டர் டச்சிங்

ட்ரகோன் பைக் சூப்பர்

SURYAJEEVA said...

பத்து பத்தா போட்டா படிக்க திகட்டாது சாமி... நான் நேரா 25 படிச்சேன் இன்னிக்கு..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

அம்பலத்தார் said...

அசத்தலான டுவிட்ஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லாமே சூப்பர் அண்ணே... 20 நல்லா இருக்கு

Anonymous said...

டுவிட்ஸ் அசத்தல்...

IlayaDhasan said...

இருபத்தி அஞ்சு நல்லா இருக்குங்கோ .

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

aotspr said...

அனைத்தும் கலக்கல்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com