Monday, September 12, 2011

நாளைய இயக்குநர் - கே பாக்யராஜ் ஜட்ஜ்மெண்ட்டில் - விமர்சனம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/bhagyaraj.JPG

இத்தனை நாளா ஹாய் மதன், பிரதாப் போத்தன் இருவரது தீர்ப்புகளை பார்த்துட்டு கே பாக்யராஜ், சுந்தர் சி காம்பினேஷன் பார்க்க ரொம்பவே மாற்றங்கள். அனைத்தும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்...  இருவரும் அலட்டிக்கொள்வதே இல்லை.. போட்டியாளர்கள் அவர்களை விட 3 மடங்கு வயது குறைந்தவர்களாக இருந்தபோதும் சார் என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நிறைகளை முதலில் பாராட்டி விட்டு ,குறைகளை மயிலிறகில் வருடுவது போல் சொல்கிறார்கள். சபாஷ்..!!

கீர்த்திப்பாப்பா இன்னைக்கு பிளாக் கலர் நைட்டி மாதிரி ஒரு டிரஸ் போட்டு வந்தாங்க. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்துன கே பி யை ஜட்ஜா இவர் அறிமுகப்படுத்துறதா சொன்னது செம தமாஷ்.

நானும் ஒரு ஸ்டூடண்ட்டா இந்த புரோகிராம்ல நிறைய கத்துக்கனும்கற ஆர்வத்துல வந்திருக்கேன்னு கே பாக்யராஜ் சொன்னாரு. 

1. சீனிவாசன் - செல்வி. 

 ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் ரெட் லைட் ஏரியா போறான். அந்த பொண்ணு படிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சு  அவளை டீச்சரா ஏத்துக்கறான். பல டைம் மீட் பண்ணி படிச்சு எக்சாம்ல  பாஸ் ஆகிடறான். நன்றி சொல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு வர்றப்ப போலீஸ் ரெய்டுல அவளை கூட்டிட்டு போகுது. ஒரு முழுமையான நிறைவைத்தராத படம்னாலும் வசனங்கள் செம ஷார்ப்.


மனம் தொட்ட வசனங்கள்

1.  வந்து. வந்து. எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். 

இன்னைக்கு மட்டும் ஃபர்ஸ்ட்டா? இதுவரைக்குமே இதான் ஃபர்ஸ்ட்டா? ( சபாஷ் சிக்ஸர்)

2.  படிச்சிருக்கற நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே?


ஏன்? நீ கூடத்தான் படிச்சிருக்கே? இங்கே வர்லையா? ( பளார் பளார்)



3. வேணாம், போகாதீங்க.. நீங்க போய்ட்டாலும் எப்படியும் இன்னொருத்தனை அனுப்பத்தான் போறாங்க.  ( நாயகன் வசனம் பை சரண்யா உல்டா?)

4. என்னை பார்க்க வந்த பலர் என்னை யூஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க, என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்த முத ஆள் நீங்க தான்./.

கே பி  கமெண்ட் - கத்தில நடக்கற மாதிரி கதை. பொதுவா இந்த மாதிரி கதையை யாரும் எடுக்க யோசிப்பாங்க, பசி படத்துல துரை, அவளும் பெண்தானே,அரங்கேற்றம்ல பாலச்சந்தர் சார் எடுத்தாங்க.. குறும்படம் எடுக்கற நீங்க இதை எடுக்க வந்தது துணிச்சல் தான்.

சுந்தர் சி -  கேமரா ஒர்க் நீட்.  ரீ ரெக்கார்டிங்க் எங்கெங்கே எவ்வளவு தேவையோ அதை மட்டும் யூஸ் பண்ணி இருக்கீங்க.. பல இடங்கள் சைலண்ட்.. சபாஷ்..

http://3.bp.blogspot.com/-48Mp_h8_8hU/ThbnvyiDz9I/AAAAAAAACho/wEk0fdKnGUc/s1600/monica-sun-tv-093-766789.jpg


2. பிரசாந்த் - நைஜீரியன் காதல்

காமெடியான கதை.. ஒரு 60 மார்க் ஃபிகர்.. நைஜீரியன் ஆளை ரோட்ல பார்க்குது..  பார்த்ததுமே லவ். அவனையே ஃபாலோ பண்ணுது.. ஃபிகரோட ஸ்கூட்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும்போது அண்ணன் தான் ஸ்டார்ட் பண்ணித்தர்றான்..  ( அதுக்காக  3 டைம் ஒரே மாதிரி ஸ்டார்ட் சீன் வெச்சது ஓவர்..)கடைசில பார்த்தா க்ளைமாக்ஸ்ல அவன் படு லோக்கலான தமிழ் பாஷை பேசறான்.. ஃபிகர் நொந்து நூடுல்ஸ் ஆகி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மனம் தொட்ட வசனங்கள்

1.  வண்டிக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். லவ் ஸ்டார்ட் ஆகிடுத்து ..


2. என் ஹார்ட் பீட்  லவுடு ஸ்பீக்கர் போட்டது போல் ஏன் சத்தம் போடுது?

3. நைஜீரியன் காதல்னு நினைச்சேன், ஆனா கடைசில லோக்கல் நீலாங்கரை லவ் ஆகிடுச்சே?

கதை கொஞ்சம் சில்லித்தனமா எனக்கு தோணுச்சு,, காமெடின்னாலும் காதலை காமெடி பீஸ் ஆக்குவதை காதலர்கள் விரும்ப மாட்டார்கள்..


கே பி  கமெண்ட் - இது ஒரு எவர் க்ரீன் ஃபார்முலா. ஆனா ஒரு பொண்ணு இவ்ளவ் ஜொள்ளு விடுமா? டவுட்டு.  படம் ரொம்ப்ப சிம்ப்பிள் & நீட்..

சுந்தர் சி கமெண்ட் - ஓ ஹென்றி, சுஜாதா,புதுமைப்பித்தன் இவங்க எல்லாம் அவங்க சிறுகதைல கடைசில ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க.. அது மாதிரி ட்ரை பண்ணீ இருக்கீங்க.. படத்தோட க்ளைமாக்ஸ்ல நைஜீரியன் சாங்க் வெச்சது சூப்பர்.. நைஜீரியனா நடிச்ச அந்தாள் நடிப்பு செம..

http://www.faltooclub.com/Biography/Bigimage/kanika62011.jpg

3. நந்தா - உயிர்

ஒரு பழைய பைக், அதை வித்துடுங்கன்னு மனைவி சொல்றா.. கணவன் ஓக்கே சொல்லி மெக்கானிக் ஷாப்ல அதை காட்டி ரேட் கேக்கறான்.. 2 நாள் கழிச்சு வாங்கன்னு அவன் சொன்னதால பைக் ரிட்டர்ன் பேக் டூ த சேம் ஹவுஸ்..

அவங்க பாப்பா வீதில விளையாடப்போகுது.. அப்போ பஸ் ஒண்ணு வருது. பைக் வீட்டு வாசல்ல இருந்து  கிளம்பி பஸ்ஸூக்கு முன்னே விழுந்து பாப்பாவை காப்பாத்துது.. அதுக்கும் உயிர் இருக்குன்னு ஒரு ஃபீலிங்க் காட்றாங்க.. ( ஃபிலிம் காட்றாங்க? )

அப்புறம் அந்த பைக்கை சாமியா நினைச்சு கும்பிடறாங்க.

சத்தியமா நம்பவே முடியல..

கே பி  கமெண்ட் - பைக் ஸ்டேண்ட் லூஸா இருந்துச்சு.. தானா ரிலீஸ் ஆகி ரோட்டுக்கு வந்துடுச்சுன்னு காட்டி இருக்கலாம்.. இன்னும் நம்பகத்தன்மை வந்திருக்கும்.. பொல்லாதவன் படத்துல கூட இந்த மாதிரி ஒரு சீன் வருது,, தனுஷை துப்பாக்கிக்குண்டுல இருந்து பைக் காப்பாத்தும்./.

சுந்தர் சி கமெண்ட் - பழைய பைக் மாதிரி கதைல சொல்றாங்க. ஆனா அது புது பைக் மாதிரிதான் தெரியுது.. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/namitha-latest-hot-photos/Namitha-latest-sexy-photo-45.jpg

4. நிகிலன். - புதிர். 

ஒரு குறும்படத்துல இவ்வளவு டேலண்ட்டை காட்ட முடியுமா? என திரைக்கதையில், மேக்கிங்க் ஸ்டைலில் கலக்கிய படம்.  ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிபடுது.. அவ கிட்டே இருந்து ஒருத்தன் செல் ஃபோனை அடிச்சுக்கிட்டு ஓடறான். அவன் எப்படி போலீஸ்ல பிடிபடறான்.. அப்டிங்கறதை பல திருப்பங்களோட சொல்லி இருக்காங்க.

ஓப்பனிங்க் சீன்ல என்ன சீன் வருதோ அதுவே க்ளைமாக்ஸ்ல வேற கோணத்துல காட்டி இருப்பாங்க..

இந்த இயக்குநர்க்கு செம  எதிர்காலம் உண்டு.. கங்க்ராட்ஸ்.. இவரோட ஸ்கிரிப்டை யாராவது திருடுனாக்கூட இவரைத்தவிர யாராலும் அதை புரிஞ்சுக்க முடியாது.



கே பி  கமெண்ட் - ஆங்கிலத்துல இர்ரிவர்சிபிள்னு ஒரு படம் வந்தது.. அதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்க. ரொம்ப வித்தியாசம்.. கீப் இட் அப்.

சுந்தர் சி - பக்கா ஸ்க்ரீன்ப்ளே வெரி டிஃப்ரண்ட்.. நைஸ்..

 லிங்க் -
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/
 

33 comments:

CS. Mohan Kumar said...

பரிசு வாங்கின படம் சுத்தமா புரியலை பாசு ! வெங்காயம் நறுக்கி கிட்டே பார்த்தால் இருக்குமோ? :)))

Thirumalai Kandasami said...

http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

வழக்கம் போல் கலக்கிட்டீங்க..

சக்தி கல்வி மையம் said...

மாப்ள., விக்கிய ஆளக்காணோமே?

Unknown said...

ம் ம் ம்...
வழக்கம் போல அசத்தல் விமர்சனம் அண்ணா...

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா அண்ணா பண்ணுறீங்க இங்கே, எனக்கு ஒரு மண்ணும் புரியலை...கிர்ர்ரர்ர்ர்....

MANO நாஞ்சில் மனோ said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு .//



லெப்டு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு .//



லெப்டு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள., விக்கிய ஆளக்காணோமே?//



வரவேண்டிய நேரத்துல சரியா வந்துருவான் தக்காளி ஃபிகருங்க கூட...

Anonymous said...

ரசிக்க வைத்த பகிர்வு...

rajamelaiyur said...

Last movie really super . . .

rajamelaiyur said...

Selvi also super

Unknown said...

அண்ணே பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

super Photoes also fine. congratz.
Vetha.Elangathilakam.

செங்கோவி said...

நிறைகுடம் நீர் தளும்பாதுன்னு பாக்கியராஜைப் பார்த்து நாம கத்துக்கலாம்.

ராஜி said...

இந்த புரோகிராமை நான் பார்க்கலை. ஆனால், பார்த்த திருப்தி உங்க விமர்சனத்துல கிடைச்சது. நன்றி!

மகேந்திரன் said...

நானும் இந்த நிகழ்ச்சி பார்த்து வருகிறேன் நண்பரே.
முன்பை விட இப்போது பொலிவு கூடியிருக்கிறது என்பது
உண்மையே......
திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் வந்தபின்னே களைகட்டுகிறது.
எனக்கு பிடித்த நிகழ்சிகளில் இது முக்கியமான ஒன்று.

ம.தி.சுதா said...

3 வது தான் ரொம்ப ரச்

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

K said...

உங்க குருநாதர் கே.பாக்யராஜ் வந்துட்டாருல்ல! இனி உங்களுக்கு கொண்டாட்டம்தான்! எனக்கும் ஹேப்பியா இருக்கு!

ப்ரோகிராமும் நல்லா இருக்கும்!

K said...

அப்புறம் அந்த, 4 வது ஸ்டில்ல, அந்தாளு குனிஞ்சு, நமீதாவோட... வளையலைத்தானே பார்க்குறாரு? டவுட்!!

சுதா SJ said...

எனாகு 3 வது புடிச்சுது. நமிதா படங்கள் கலக்கல். விமர்சனம் வழமைபோல் ஆஹா

Philosophy Prabhakaran said...

இத்தனை ஹீரோயினி படம் போட்டதுக்கு கீர்த்தி படத்தையாவது தேடி கண்டுபிடிச்சு போட்டிருக்கலாம்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

நன்று

காங்கேயம் P.நந்தகுமார் said...

நன்று

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

சூப்பர் பதிவு.பகிர்வுக்கு நன்றி

Unknown said...

சூப்பர் பதிவு.பகிர்வுக்கு நன்றி

நிரூபன் said...

விமர்சனப் பகிர்விற்கு நன்றி பாஸ்..
படத்தைப் பார்த்திட்டு வாரேன்,

பால கணேஷ் said...

நிறைகளை முதலில் சொல்லிவிட்டு பின் குறைகளை சொல்லும் கே.பாக்யராஜ் சாரின் பண்பாடு எனக்கும் பிடித்திருந்தது. நல்ல பதிவு தல.

தமிழ் பையன் said...

அய்யா.. நைஜீரியன் காதல் கதையில் வரும் இசை நைஜீரியன் இசை அல்ல.. அது உலகப் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் லூயிஸ் ஆர்ம்ஸ்டிராங் அவர்களின் பாடல்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! குட்டி படங்களுக்கேற்ற குட்டியான விமர்சனங்கள் அழகு!