Friday, September 02, 2011

மீட் மை ஃபேமிலி நர்ஸ்... ஹி ஹி ஹி!!!!Sun at horizon at sea
1.மேரேஜ்க்குப்பிறகு பொண்ணு ரொம்ப பொறுப்பு ஆகிடுது, பையன் பருப்பு ஆகிடறான் # அவ்வ்வ்

--------------------------

2. புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!

-------------------------

3. மதுரைக்குப்போனா ஜாஸ்மின் ஞாபகம், கேரளா போனா மீரா ஜாஸ்மின் ஞாபகம் # ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்

---------------------

4. புருஷன் தலை ஈரமா இருந்தா அவன் மனைவி அவனை பிரெயின் வாஷ் பண்ணிட்டான்னு அர்த்தமா? டவுட்டு

-------------------------
5.அப்பாவி லவ்வர்ஸ் என்பவர்கள் யார்? தியேட்டரில் நுழைந்ததும் ரைட்கார்னர்சீட்டில் காதலன், லெஃப்ட்கார்னர் சீட்டில்காதலி என தனித்தனியே அமர்வது

-----------------------
6. பசங்க வயசை மட்டும் அல்ல ,மனசையும் மறைக்க மாட்டாங்க!பொண்ணுங்கதான் வயசு,மனசு எல்லாவற்றையும் மறைப்பதும்,மாற்றுவதும்

-------------------------

7. காதலில் விழுந்தால் அடிபடுமோ?இல்லையோ?காதலி மடியில் விழுந்தால் அடி படாது #  SO SLIP ON LOVER

----------------

8. தாமதமாக எடுக்கப்படும் சரியான முடிவு கூட தவறாகிவிட வாய்ப்பு இருக்கிறது

---------------------

9. கண்களை மூடினால் இமைக்கதவின் வாயிலில் அருவமாய் நீ! கண்கள் திறந்தால் இதயக்கோயிலில் தெய்வமாய் நீ!

------------------------


10. அதிர்ஷ்ட தேவதை வலது காலை தூக்கும்போதே என் வாழ்வில் துர் அதிர்ஷ்ட தேவதை இடது காலை வைத்து விடுகிறாள்

------------------------
11. அல்சர் இருப்பதால் காரம், உப்பு சேர்த்தாமல் சாப்பிடும் சூப்பர் ஃபிகரை சப்பை ஃபிகர் என்றழைத்தால் அது சாமி குத்தமா?

-------------------------

12. எனக்குள் நீ குடி வந்த பிறகு நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் ஏற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு

--------------------------

13. டெயிலி 1, 2, 3 என எண்களை எண்ணுபவன் தான் ”எண்”கவுண்ட்டர் ஏகாம்பரமா?

-----------------------

14.  மூளை சொல்படி கேட்டு நடப்பவன் காதலிக்க மாட்டான்.காதல் மூளையை மழுங்க வைத்து விடுகிறது, ஆனாலும் அதை விரும்புகிறோம்

-------------------------

15.  எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை சுலபமாக மாற்றிவிட்டது உன் காதலும், உன் பெயரும்

------------------------

Hammock Boat


16.  நமக்குப்புரிஞ்சதைத்தான் கவிதையா எழுதனும்னு அவசியம் இல்லை, பெரும்பாலும் நிறைய பேருக்குப்புரியாம இருப்பதே கவிதைக்கான இலக்கணம் ஆகிவிடுகிறது

-----------------------------

17. பொண்ணு பார்க்க வெளில கிளம்பறப்ப செம ஃபிகர் எதிரே வந்தா அது நல்ல சகுனமா? டவுட்டு

----------------------------

18. நீ அருகில் இருந்தால் எனக்கு தூக்கம் வருவதில்லை, பிரகாசமான வெளிச்சத்தில் தூங்கி எனக்கு பழக்கம் இல்லை # ஃபிகரு டியூப்லைட்

-----------------------

19. அவளை மறக்க நினைக்கும்போது மனம் கேட்கிறது.. “ ஏன்? அவ தங்கச்சிக்கு என்ன குறைச்சல்?” # SMS

--------------------------

20. ஹை க்ளாஸோ. மிடில் க்ளாஸோ ஃபேமிலி டாக்டர் வெச்சுக்கறாங்க, ஆனா ஃபேமிலி நர்ஸ் வெச்சுக்கறதில்லை ஏன்? டவுட் பை லோ க்ளாஸ் பையன்

-------------------

 

21.எடிட்டர் சார்! சன்மானம் கம்மியா அனுப்பிஇருக்கீங்க? 

யோவ், பவுன் விலை ஏறிடுச்சுங்கறதுக்காக நீ அனுப்பற பொன்மொழிக்கெல்லாம் ரேட் ஏத்தமுடியாது

---------------------------------

22. என் மனைவியோட பர்சனல் பீரோ கோயில் மாதிரி. 

நிஜமாவா? 

ஆமா! திறந்து பார்த்தா ஏகப்பட்ட நகைங்க!

----------------------------

23. டிராஃபிக் எஸ் ஐ - யோவ், டிரைவிங்க் லைசன்சை எடு. 

ஓக்கே சார், இப்போத்தானே சொல்லி இருக்கீங்க? எடுத்திடறேன்

--------------------

24. டைரக்டர் சார், கதைக்கும், ஹீரோயினுக்கும் சம்பந்தமே இல்லையே? 

ஹி ஹி , எனக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கே?

-----------------------------

25. ஜெயில்ல முதல்வகுப்பு வேணாம்னு தலைவர் சொல்லீட்டாராமே? 

ஏற்கனவே அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சவரை மறுபடி முதல் வகுப்பு போங்கன்னா கோபம் வராதா?

-----------------------------


26. கடைசியில் எல்லாம் சரி ஆகி விடும் என நம்புங்கள்,சரி ஆகவில்லை என்றால் இது கடைசி அல்ல என நம்புங்கள்
----------------------

27. உனக்கு சயின்ஸ் கொஞ்சம் கூடப்பிடிக்காதுன்னே!ஆனா சயின்ஸ் டீச்சரை கல்யாணம் பண்ணி இருக்கியே? 

ஹி ஹி  பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு

--------------------------

28. உங்க கவிதைல ஏதும் உள் குத்து இருக்கா? 

ஆமாங்க, என் லவ்வரோட அண்ணன் உள்ள கூட்டிட்டுப்போய் செம குத்து குத்திட்டான்,அந்த சோகக்கவிதைதான்

----------------------------

29. ஒரு பெண்ணுக்கு காதல்மூடு வர மழை,ரீசன், சீசன்,எமோஷன், எல்லாம் வேணும், ஆனா ஒருஆணுக்கு மூடு வர ஒரு பெண் இருந்தால்போதும்# நீதி -ஆண் எளியோன்

---------------------

30.  ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வீட்டுக்கு வந்தா என் மனைவி தாளிச்சுடுவா! பொய் சொல்லாதே? அவளுக்குத்தான் சமைக்கவே தெரியாதே?


-----------------------------

50 comments:

கோகுல் said...

யுவர் ஆனார கடைசியில ஒரு பொண்ணு என்ன பாத்து கனடுக்குது.நான்அப்படிப்பட்ட பையன் இல்ல சொல்லி வைங்க!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி...ஹி...ஹி...

Unknown said...

என்னமா பின்றய்யா...எப்படி இப்பிடி எல்லாம் யோசிக்க தோணுது....அதுவும் புரியாத கவிதைக்கு இருக்கும் மகத்துவம் பத்தி சற்று தெளிவாக்கவும் ஹிஹி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

rajamelaiyur said...

முதல் ஜோக் அனுபவமா ?

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

rajamelaiyur said...

கலக்கிடிங்க

கடம்பவன குயில் said...

கீழிருந்து ஒன்று இரண்டு இரண்டு படஙகளும் கலக்கிட்டீங்க. முடி பறந்து நம்முகத்தில் விழுந்துடுமோன்னு பயப்பட வச்சுட்டீங்களே.. எக்சலண்ட் ஓர்க். வொண்டர்ஃபுல் செலக்சன்

காந்தி பனங்கூர் said...

//புருஷன் தலை ஈரமா இருந்தா அவன் மனைவி பிரெயின் வாஷ் பண்ணிட்டான்னு அர்த்தமா? டவுட்டு//

இல்லங்க சார், ஹெட் வாஷ் பண்ணிட்டாங்கன்னு அர்த்தம்

கடம்பவன குயில் said...

மதுரைக்கு போனா ஜாஸ்மின் ஞாபகம். கேரளா போனால் மீரா ஜாஸ்மின் ஞாபகமா?? ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஃபிகரின் ஞாபகம். கொடு்த்துவச்சவரு நீங்க சிபி சார்.

காந்தி பனங்கூர் said...

//தாமதமாக எடுக்கும் சரியான முடிவு கூட தவறாகிவிட வாய்ப்பிருக்கு//

ஆமாம், மூவரின் தூக்கு தண்டனை விசயத்தில் ஜெயலலிதாவின் முடிவு.
ஜெயலலிதா முன்கூட்டியே இந்த தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் செங்கொடியின் உயிர் போயிருக்காது.

கடம்பவன குயில் said...

பசங்க மனசை மட்டுமல்ல வயசையும் மறைக்க மாட்டாங்களா??? ஐ அப்சக்சன் யுவர் ஆனர். பொண்ணுங்க மனசை மறைப்பது ஒருத்தரை மட்டும் குடியேற்றவே. பசங்க மனசை திறந்து வைப்பது பலர் வந்து குடியேறவே...

கடம்பவன குயில் said...

காதலில் விழுந்தால்அடிபடுமோ என்னவோ காதலி மடியில் விழுந்தால் அடிபடாதா????

காதலி கல்லாயிருந்தால்..??????

கடம்பவன குயில் said...

டெய்லி 1 2 3 என எண்ணுபவன் என்கவுண்டர் ஏகாம்பரம் அல்ல...
அவர் கணக்கு வாத்தியார் சிபி. செந்தில்குமார் (BSC.MATHS)

கடம்பவன குயில் said...

உங்க கவிதையில் ஏதும் உள்குத்துஇருக்கா?? ஆமாங்க என் லவ்வரோட அண்ணன்உள்ளகூட்டிட்டு போய் செம குத்து குத்திட்டான்//

இது செம...

RAMA RAVI (RAMVI) said...

//என் மனைவியோட பர்சனல் பீரோ கோயில் மாதிரி.திறந்து பார்த்தா ஏகப்பட்ட நகைங்க.//

நிஜமாவா???

நிரூபன் said...

ஆமா பாஸ்,
அந்த நர்ஸ் எங்கே இருக்காங்க,.
இருங்க பார்த்திட்டு வாரேன்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

மேரேஜ்க்குப்பிறகு பொண்ணு ரொம்ப பொறுப்பு ஆகிடுது, பையன் பருப்பு ஆகிடறான் # அவ்வ்வ்//

ஆகா...டபுள் மீனிங்...டபுள் மீனிங்.

நிரூபன் said...

புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!//

அம்மா தாய்க்குலங்களே,
இதனைப் பார்த்துமா பேசாமா இருக்கிறீங்க..

நிரூபன் said...

எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை சுலபமாக மாற்றிவிட்டது உன் காதலும், உன் பெயரும்//

காதல் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் என்பது இது தானோ?

நிரூபன் said...

நமக்குப்புரிஞ்சதைத்தான் கவிதையா எழுதனும்னு அவசியம் இல்லை, பெரும்பாலும் நிறைய பேருக்குப்புரியாம இருப்பதே கவிதைக்கான இலக்கணம் ஆகிவிடுகிறது//

அவ்.............ஸப்பா முடியலையே?

நிரூபன் said...

நீ அருகில் இருந்தால் எனக்கு தூக்கம் வருவதில்லை, பிரகாசமான வெளிச்சத்தில் தூங்கி எனக்கு பழக்கம் இல்லை # ஃபிகரு டியூப்லைட்

---//

போங்க பாஸ்,
புல்லரிக்க வைக்கிறீங்க.

நிரூபன் said...

அவளை மறக்க நினைக்கும்போது மனம் கேட்கிறது.. “ ஏன்? அவ தங்கச்சிக்கு என்ன குறைச்சல்?”//

ஆளை விடுங்க சாமி....

மீ எஸ்...

நிரூபன் said...

டுவிட்ஸ் எல்லாமே அசத்தல்,
காதல், செண்டிமெண்டல்,
தத்துவம், கவிஞர்களுக்கான பஞ்ச் என்று கலக்கலாக வந்திருக்கிறது.

Unknown said...

சூப்பர் தம்பி! தமிழ்மணம் 7

Unknown said...

அருமை அருமை

என்ன கற்பனை என்ன கற்பனை

கலக்கல் அண்ணா!!

சென்னை பித்தன் said...

19ஐயே ஒரு கவிஞர் வேறுவிதமாகப் பார்க்கிறார்--
“அழகாயில்லாதால்,அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்?!”

Mohamed Faaique said...

உள்குத்து, உள் குத்துஙுராங்களே அதுக்கு இதுவா மீனிங்???

kowsy said...

எப்படி? இப்படி? செந்தில்குமார். ஆச்சரியமாக இருக்கிறது. அருமையாக இருக்கிறது. சிலமணிநேரம் என்னை மறந்து இப்பதிவில் லயித்திருந்தேன்.

கூடல் பாலா said...

ஹ..ஹா ..ஹா

கும்மாச்சி said...

லொள்ளு தாங்கமுடியலை.

செங்கோவி said...

// புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!
//

அடேங்கப்பா..பிரமாதம்..பிரமாதம்.

செங்கோவி said...

//சென்னை பித்தன் said...
19ஐயே ஒரு கவிஞர் வேறுவிதமாகப் பார்க்கிறார்--
“அழகாயில்லாதால்,அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்?!”//

ஐயாவும் டஃப் ஃபைட் தர்றாரே.

செங்கோவி said...

தமிழ்மணம், இண்ட்லின்னு ஒன்னையும் காணோமே..

Yoga.s.FR said...

தாளிச்சுடுவா!/சமைக்கவே தெரியாதே?Hi!Hi!Hi!

Yoga.s.FR said...

டைவர்ஸ் எடுக்கிறதுக்கு சண்டை பிடுச்சுத் தானே ஆவணும்?!?!?

சுதா SJ said...

அந்த ஹீரோயின் மேட்டர் கலக்கல்,
இந்த ரேஞ்சுக்குத்தான் எல்லா இயக்குனரும் இருக்காங்களோ..???
அவ்வவ்

சுதா SJ said...

18 ம் சூப்பர், இனி தங்கச்சி உள்ள பொண்ண பார்த்துதான் லவ் பண்ணனும்
ஹீ ஹீ

Barath said...

ஹி ஹி ஹி.. நல்லா சிரிச்சேன்

Barath said...

ஹி ஹி ஹி.. நல்லா சிரிச்சேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஓகே பாஸ்.

Anonymous said...

I like the title..tweets..and u...

ராஜி said...

புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!

>>>
நல்ல கண்டுபிடிப்பு. இதுக்கு ஆஸ்கர் அவார்ட் குடுக்குறாங்களாம் சிபி சார்(ஆஸ்கர் அவார்ட் எதுக்கு குடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். அதை வச்சு கும்மாதீங்க)
-------------------------

ராஜி said...

மதுரைக்குப்போனா ஜாஸ்மின் ஞாபகம், கேரளா போனா மீரா ஜாஸ்மின் ஞாபகம் # ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்
>>
ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் இல்ல. ஒவ்வொரு ஃபிகர்ஸ்ன்னு திருத்திங்கோங்க.
---------------------

ராஜி said...

அப்பாவி லவ்வர்ஸ் என்பவர்கள் யார்? தியேட்டரில் நுழைந்ததும் ரைட்கார்னர்சீட்டில் காதலன், லெஃப்ட்கார்னர் சீட்டில்காதலி என தனித்தனியே அமர்வது
>>>
அடடா இதுக்குதான் சினிம்மாக்கு போறீங்களா? அவ்வ்வ்வ்

ராஜி said...

கண்களை மூடினால் இமைக்கதவின் வாயிலில் அருவமாய் நீ! கண்கள் திறந்தால் இதயக்கோயிலில் தெய்வமாய் நீ!
>>
அப்ப்போ அவங்களை பொண்ணா பார்க்குறதில்லை போல‌

ராஜி said...

அதிர்ஷ்ட தேவதை வலது காலை தூக்கும்போதே என் வாழ்வில் துர் அதிர்ஷ்ட தேவதை இடது காலை வைத்து விடுகிறாள்
>>
இதுவும் கடந்து போகும்..

ராஜி said...

அதிர்ஷ்ட தேவதை வலது காலை தூக்கும்போதே என் வாழ்வில் துர் அதிர்ஷ்ட தேவதை இடது காலை வைத்து விடுகிறாள்
>>
இதுவும் கடந்து போகும்..

ராஜி said...

பொண்ணு பார்க்க வெளில கிளம்பறப்ப செம ஃபிகர் எதிரே வந்தா அது நல்ல சகுனமா? டவுட்டு
>>
உண்மையிலேயே நல்ல சகுனம்தான். இல்லாட்டி, கல்யாணம் கட்டிக்கிட்டு பொண்டாட்டிக்கூட முதன்முறையா வெளிய வரும்போது கண்ணில பட்டிருப்பாங்க.