Saturday, September 03, 2011

தி மு க முப்பெரும் விழா நடத்தும்போது சிபிஐ கிடுக்கிப்பிடி- விஸ்வரூபம் எடுக்கும் ஸ்பெக்டரம் ஊழல் விசாரணை - ஜூ வி கட்டுரை

சி.பி.ஐ. நடத்தும் முப்பெரும் விழா!

செப்டம்பர் 15
 
ஸ்பெக்ட்ரம் புயல் மீண்டும் டெல்லியில் மையம்கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்​பட்டுள்ளது!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னோட்டங்கள் தேவை இல்லை. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பாக நடந்துவரும் இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில், இது வரை இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் வரை கைது செய்யப்​பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது!’ என்று சி.பி.ஐ. தரப்பு இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்ததால், கைதான யாரும் இதுவரை வெளியில் வர முடியவில்லை.

'இவர்களை வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப்போகிறீர்கள்?’ என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை பதிவான இரண்டு குற்றப் பத்திரிகைகளை அடிப்படையாக​வைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.


ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!'' என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல... செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

 
''ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவ​னங்களுக்கு விற்பனை செய்த​தாகப் புகார் சொல்லப்​பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்​படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப் பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!'' என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.


அடுத்து தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரி​யையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான் ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!'' என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.


''சி.பி.ஐ. தனது ஆவணங்களை இந்த கோர்ட்டில் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆதாரங்​களை உடனடியாகத் தாக்கல் செய்து... அதை எங்களுக்கும் தந்தால்தானே வழக்கை எதிர்கொள்ள முடியும்?'' என்றும் சுஷில்குமார் கேள்வி எழுப்பினார். இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு ராசா, ஒரு அவசர மனுவையும் தாக்கல் செய்தார். இது சி.பி.ஐ-க்கு ஒரு விதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அவசர ஆலோசனை சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி தங்களது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணு​கோபால். ''இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!'' என்று அறிவித்து, புயல் சின்னத்தைக் காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால் சொன்னார்.


''இந்தக் குற்றப் பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனை​வரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்த மொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டு​​வருவோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்கு​மூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவு செய்துள்ளார்.

''என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது!'' என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!

இப்படி மொத்தமும் தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப்​போகிறது. பொதுவாக தி.மு.க. செப்டம்பர் 15-ம் தேதியை முப்​பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து 'கொண்டாடப்’போகிறது?!


தப்பியது கலைஞர் டி.வி.?

2ஜி வழக்கின் விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப்பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவர அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த அறிக்கையில், '2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார் 7,800 கோடி முதல்
9,000 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம்’ என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


அதன்பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதில், 'மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாக ஒதுக்கப்பட்டது.

அதனால் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்து ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் டி.வி. பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்த தாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும் அதனால் கலைஞர் டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு 2ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.

'' 200 கோடி வந்தது கனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!''

கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும் வழக்கறிஞர். 'கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.


'கனிமொழியை இந்த வழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்து முறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர் டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்​படுவது தவறு.

அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு 200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டுவரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள் எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!'' என்று சுஷில்குமார் வாதிட்டார். இந்த வாதங்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார் கனிமொழி!



சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்!

சுவாமி 2 ஜி ஆவேசம்

2ஜிஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யப்போகிறது. இந்த நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் கட்டமாக, கலைஞர் டி.வி-க்கு 214 கோடி கொடுத்த டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கிக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள்.

இதில் தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் மீதும் அடுத்தக் கட்ட நடவடிக்கை பாயும் என்கிறார்கள். கடந்த ஜூலை 6-ம் தேதி தொடங்கி இதுவரை 2ஜி விவகாரத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செப்டம்பர் 1-ம் தேதி சி.பி.ஐ தரப் பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

 இந்த நிலையில், தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்!

'1. 'உண்மையைச் சொல்லுங்கள்! ஸ்பெக்ட்ரம் வழக்கை கிடப்பில்போட உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்துப் பேசியதாக பரபரப்பு கிளம்பியுள்ளதே?''

''சென்னையில் டாக்டர் மோகன் காமேஷ்வரன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ஸ்டாலின் வந்தார். சம்பிரதாயத்துக்கு நான், 'ஹெள ஆர் யூ?' என்று கேட்க, அவரும், 'ஃபைன்' என்றார். இவ்வளவுதான் நடந்தது. வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வழக்கு விசாரணை நீண்ட தூரம் போய்விட்டது. அதனால், இந்த நேரத்தில் என்னை யாரும் அணுக மாட்டார்கள். ஊழல் விவகாரத்தைத் தடுக்கவோ, கிடப்பில் போடவோ இனி யாராலும் முடியாது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாட்டியவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு சான்ஸ் உண்டு. அவர்கள் அப்ரூவர் ஆகலாம். குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்கள், அப்ரூவர் ஆகி... பணம் எப்படி பெறப்பட்டது? யார் யாருக்கு கைமாறியது? என்று அனைத்து விவரங்களையும் தானாக முன்வந்து கோர்ட்டில் சொன்னால், தண்டனை குறையலாம்'' 


'2. 'டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் சொத்துகளை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளார்களே?''


''ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சி. 2002-ல் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. சட்டவிரோதமாகப் பணம் கை மாறினால், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில், கலைஞர் டி.வி-க்கு டிபி ரியாலிட்டி மூலம் 214 கோடி கைமாறி இருக்கிறது கலைஞர் டி.வி-யின் முதலீட்டுப் பணமே சில கோடிகள்தான். அப்படி இருக்கும்போது, இத்தனை கோடிகள் எதற்காகக் கை மாறியது? அந்தப் பணத்தை ஏதோ கடனாகப் பெற்றதாகச் சொல்லி, அவசரம் அவசரமாகத் திருப்பித் தந்து இருக்கிறார்கள் கலைஞர் டி.வி. தரப்பினர். செய்த குற்றத்தை மறைக்க நாடகம் போட்டு, மொத்தமாக மாட்டிக்கொண்டார்கள்.


மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வாதம் நடத்தப்போகிறேன். உச்ச நீதிமன்றம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு வழக்குகள் நடக்கப்போகின்றன. சி.பி.ஐ. வழக்கு தனி. என்னுடைய வழக்கு தனி. நான், சி.பி.ஐ-யிடம் உள்ள ஆவணங்களைப் பெறலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களிடம் நானும் குறுக்கு விசாரணை நடத்துவேன்.

ஊழல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அவர்களுக்கு எஜமானர் மத்திய அரசுதானே... அதனால், கொஞ்சம் மந்தமாகத்தான் செயல்பட்டார்கள். நான்தான் கோர்ட் மூலம் உத்தரவுகளைப் பெற்று சி.பி.ஐ-யை விரைவாகச் செயல்படவைத்தேன். வழக்கு விசாரணையில் எங்காவது சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்.''

3.''சோனியா காந்தி பற்றி பேச்சே இல்லையே?''

''அதுதான் புதிராக இருக்கிறது. அவருக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் என்று மட்டும் தகவல் சொல்லப்பட்டது. வேறு எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பிரதமருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்தபோது, தினமும் அவரது உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி தகவல் வெளியிட்டது. வாஜ்பாய் அவரது முழங்காலில் ஆபரேஷன் செய்துகொண்டபோதும், தகவல்கள் வெளிவந்தன. ஆனால், சோனியா விஷயத்தில் இதுவரை எதுவுமே வெளியிடப்படவில்லை. போனில்கூட அவர் பேசவில்லை. வீடியோ கான்ஃபெரன்ஸ் வசதி எல்லாம் உள்ள இந்தக் காலத்தில் சோனியா ஏன் இதைப் பயன்படுத்தவில்லை என்பதுதான் புரியவில்லை.''


4.''ஊழலை எதிர்த்து நீங்கள் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு அண்ணா ஹஜாரே ஆதரவு தருவாரா?''  

''ஊழலை ஒழிக்க மூன்று வகையான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒன்று, இரும்புப் பிடி சட்டம் இயற்ற வேண்டும். இதைத்தான் அண்ணா வலியுறுத்துகிறார். இரண்டாவது, ஊழலை ஒழிக்க ஏற்கெனவே உள்ள சட்டத்தை முடுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தவைக்க வேண்டும். இதைத்தான் நான் செய்கிறேன். மூன்றாவது, ஊழல் விஷயத்தில் மக்களின் அணுகுமுறை முற்றிலும் மாற வேண்டும். காசுக்காக ஆசைப்பட்டு குறுக்கு வழியில் போகிற மனோபாவம் மாறுவதற்கு ஆன்மிக மறுமலர்ச்சி வர வேண்டும். அப்போதுதான், ஊழல்கள், தவறுகள் செய்ய யாருக்கும் மனம் இடம்கொடுக்காது. இதை செய்ய நம் நாட்டில் உள்ள சாமியார்களும், சாதுக்களும் முன்வர வேண்டும்!''


thanx - vikatan

22 comments:

Unknown said...

ME THE FIRST?

Unknown said...

Me the second??

KANA VARO said...

me the third?

Unknown said...

பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்!!ஒட்டு போட்டிட்டு கிளம்பிடுறேன்!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்...

அரசியல் அதிரடியா...இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

மகள் சிறையில், கட்சியோ உடைந்து தொங்கும் நிலையில்..
இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பான முப் பெரும் விழாத் தேவையா?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...ஹிஹி! ஒன்லி டெம்ப்ளேட்ஸ் டுடே!

rajamelaiyur said...

கருணாநிதிக்கு இது கெட்ட காலம்

rajamelaiyur said...

என்று என் வலையில்

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஹிஹி! ஒன்லி டெம்ப்ளேட்ஸ் டுடே!//
enna oru santhosham ?

சசிகுமார் said...

இன்னும் எத்தனை பேர் மாட்ட போறாங்களோ

செங்கோவி said...

எல்லாரும் மறந்துட்டாங்களோன்னு நினைச்சேன்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

கூடல் பாலா said...

சுறா மீன்(?) இன்னும் சிக்கவில்லை !

காந்தி பனங்கூர் said...

செப்டம்பர் 15 ல் ஆப்பு அடிக்க போறாங்களா? எப்படியிருந்தாலும் கனிக்கும் ராசுவுக்கும் சந்தோசம் தான். சிறையில் இருந்தாலும் அடிக்கடி பாத்துக்க முடியுதே.

கோகுல் said...

உங்களோட சப்கமண்ட்ஸ் எதிர் பாத்தேன்! ஏமாதிடிங்க!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள உன் கமென்ட் எங்க?

Unknown said...

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
மூணும் அண்ணா சமாதியோட பொதைச்சுபுட்டு நல்லா குடுக்குறாங்கயா பெட்டி
வெட்டி ஆபீசருங்க...

Yoga.s.FR said...

பயனுள்ள தகவல்கள்,விகடனில் வெளியானதாக இருந்தாலும்!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணா எதுக்கும் ஆம்புலன்ஸ் புக் பண்ணி வச்சிக்கோ....

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...