Monday, September 05, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - விமர்சனம்

போனவாரமே வந்திருக்கவேண்டியது..3 கதைகள்ல 2 கதை தான் பார்க்க முடிஞ்சது. ஒண்ணு பெண்டிங்க். இப்போதான் லிங்க் கிடைச்சது.. 9 கதைகள்ல 6 கதைகள் தலா 3 வீதம் கடந்த 2 வாரமா பார்த்தாச்சு.. இது கடைசி வாரம்..

1.  ரமேஷ் - பரிதி மாறன்

நாய்ங்களை வெச்சு கதைன்னதும் நான் கூட ராமநாராயணன் டைப் கதையோன்னு பயந்தேன்.. ஒரு கிராமம், அதுல 2 குழந்தைகள் கொண்ட ஒரு தம்பதி 2 நாய்க்குட்டிகளை வளர்க்கறாங்க.. தன் குழந்தை போலவே பாசமா வளர்க்கறாங்க.. பெரியவன், சின்னவன்ன்னு பேர் வெச்சு கூப்பிடறாங்க..

ஊர்ப்பெரிய மனிதர் உங்க கிட்டே தான் 2 நாய் இருக்கே? ஒண்ணை எனக்கு குடுங்கன்னு கேட்கறார்.. மறுத்துப்பேச முடியாத நிலையில் , தன் குடும்பத்தில் அனைவர் எதிர்ப்பையும் மீறி ஒரு நாயை தானம் செய்கிறார்... ஆனால் அது அடுத்த நாளே இவர்களிடம் ஓடி வந்துடுது.. பெரிய மனிதர் அதை பார்த்துட்டு சினிமா வில்லன் மாதிரி வசனம் எல்லாம் பேசாம ஓக்கே இனி உங்க கிட்டேயே வளரட்டும்கறார். 

ஊர்க்காவல் காக்கறப்ப அந்த நாய்களை ஒரு ஓநாய் கடிச்சுடுது ( இந்த சீனை ஆள வந்தான் ல மணீசாகொய்ராலா கார்ட்டூன் சீன் மாதிரி எடுத்து சமாளிஃபிகேஷன்.)


ஆனா நோய்வாய்ப்பட்டு  அதுல சின்ன நாய் இறந்துடுது..பெரிய நாய் சோகமா சின்ன நாய் புதைக்கப்பட்ட இடத்தையே சுத்தி சுத்தி வருது. ஊர் மக்கள் இப்போ பெரிய நாயையும் கொன்னுட சொல்றாங்க.. அதுக்கும் நோய் தொத்தி இருக்கு..

தன் கையால கொல்ல மனம் வராத குடும்ப தலைவன் காட்ல சில ஆளுங்க கிட்ட  அதை ஒப்படைச்சு கொன்னுடுங்க அப்டீங்கறான்.. அவங்க கிட்டே இருந்து நாய் தப்பிடுது..

வீட்டுக்கு வந்தா மனைவி கடுப்பா கேக்கறா.. நம்ம குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிருந்தா இப்படித்தான் பண்ணி இருப்பீங்களா? நாம் நாய் மாதிரியா அதை வளர்த்தோம்? குழந்தை மாதிரி தானே வளர்த்தோம்..?கறா..

அப்போ கரெக்டா நாய் அங்கே வந்துடுது.. ஒரு பார்வை பார்க்குது.. குற்ற உணர்ச்சியில் பொங்கி அவன் மன்னிப்பு கேட்கறான்.. ஆனா நாய் அதை ஏத்துக்கலை.. அவனை ஒரு எகத்தாளமா, சோகமா பார்த்துட்டு வேற பக்கம் கிளம்பிடுது..

பல நுட்பமான உணர்வுகளை படம் தூண்டி விட்டது.. நிதர்சனமா என்ன நடக்கும், மனித மனம் சுய நலமா சிந்திக்கும் என்பதை எல்லாம் பிரமாதமா சொல்லி இருக்காங்க.. பலே!!!!!!!!!!!!





2.  ராஜ்குமார் - கறை (ரை?)

நாட்டு நடப்பு வெச்சு அரசியல் நையாண்டி செஞ்சிருக்காரு இயக்குநர். படம் செம கல கல . தீப்பொறி ஆறுமுகத்தைத்தான் நக்கல் அடிச்சிருக்காருன்னு நினைக்கறேன்.


எல்க்‌ஷன் டைம்.. ஹீரோ ஒரு பேச்சாளன்.. ஒவ்வொரு எலக்‌ஷன்லயும் ஏதோ ஒரு கட்சி சார்பா பேசுவான் மேடைல.. யார் முதல்ல புக் பண்றாங்களோ அவங்க கட்சி சார்பா.. .. பணம் கை நீட்டி வாங்கிட்டா அவன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூச்சமே இல்லாம எதிர்க்கட்சியை பொளந்து கட்டுவான்..


அவனை ஒரு கட்சிக்காரர் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிடறார்.. வீட்டுக்கு அட்வான்ஸோட வந்தா மனைவி எதிர்க்கட்சி ஆள்கிட்டே அட்வான்ஸ் வாங்கி இருக்கா..

வாங்குன அட்வான்ஸை திருப்பி கொடுக்க போனா அவர் ஏத்துக்கலை...

இப்போ என்னடா பண்றதுன்னு முழிக்கறப்ப ஒரு குட் நியூஸ். 2 கட்சியும் இணைஞ்சிடுது.. அப்பாடா.. நிம்மதி..

 டாக்டர் ராம்தாஸ், திருமா, குருமா மாதிரி பச்சோந்திகளுக்கெல்லாம் சரியான செருப்படி..  அதை ஆவேசமா சொல்லாம மைல்டான காமெடியா சொல்லி இருக்கார்.


மனம் கவர்ந்த வசனங்கள்

1. முக்கால் மீட்டர் துணியை பொணத்து மேல போர்த்திட்டு  300 ஓட்டை அநாசியமாய்  அள்ளிடலாம்னு பார்க்கறீங்களா? விடுவமா?

2.  அடேய்.. அவன் 10 வருஷமா எங்க கட்சில தான் இருந்தான்.

அதெல்லாம் கணக்கில்லை.. சாகறதுக்கு கடைசி ஒரு வருஷம் எங்க கட்சில தான் இருந்தான்... எங்களுக்குத்தான் அவன் (!!) சொந்தம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCd1WmKZRR05JwH5P0NHfWZE6qO8QnU9zlPWYSvC2Taz9BsUaALqhhVH6fRvWcGPX0KiMlDqGDNYxYPGhHA8l6a_5pHqoWYyJ9VBzdEvXmqz-DwNWb34Xhm44pT_9HtF3sNdH38zjDp-I/s1600/nadodi+mannan.jpg


3. அருண்குமார் - நாடோடி மன்னன் 

 50 வயதான ஒரு தம்பதியின் அந்நியோன்யமான அன்பு தான் கதை.. காதல் என்பதும் அன்பு என்பதும்  வயதான பின்னும் தொடரும்கற அழகான கருத்தை  ஒரு கவிதை போல சொல்லி இருக்காரு.. இயக்குநர்... தம்பதிகளின் நடிப்பு டாப் கிளாஸ்..

லோ க்ளாஸ் ஜோடி.. அவங்களுக்கிடையே மலரும் அன்பு ஹை க்ளாஸ்..  அவளோட பிறந்த நாள் அன்னைக்கு நாடோடி மன்னன் படம் போலாம்னு பிளான். ஆனா அவன் அன்னைக்குன்னு பார்த்து லேட்டா வர்றான். அதனால செகண்ட் ஷோ போறாங்க..

என்ன ஒரு டிரா பேக்... ஏதோ புரொஜக்டர் ஃபால்ட்டால அன்னைக்கு செகண்ட் ஷோ கேன்சல்னு சொல்லிடறாங்க.. உடனே கணவன் முகம் வாடிடுது.. மனைவியின் கல்யாண நாள் ஆசையை நிறைவேத்த முடியலையேன்னு சோகம். உடனே மனைவி சமாளிக்கறா.. இதுவா முக்கியம்..? உங்க கையால
பூ வாங்கிக்குடுங்க.. அது தான் செம கிக்  என்கிறாள்.. பூ வாங்கி வைத்து விடுகிறான்.


இப்போ ஸ்பீக்கர் ஒலிக்கிறது.. ஆபரேட்டிங்க் மிதின் சரி ஆகி விட்டது, படம் ஓடப்போகிறது என அறிவிப்பு வருகிறது.. இருவர் முகத்திலும் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே?

கடைசில கேமரா நாடோடி மன்னன் போஸ்டர்ல  வந்து நிக்க எம் ஜி ஆரின் புன்னகையோடு படம்  முடியுது..

http://awardakodukkaranga.files.wordpress.com/2009/09/nadodi_mannan.jpg

 முதல் படம்  ஜட்ஜ்ங்களை ரொம்பவே கவர்ந்தது..... அரசியல் நையாண்டி என்பதாலும் காமெடி எனக்குப்பிடிக்கும் என்பதாலும் 2வது படம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தது.

ஆனால் 3 வது படம்  அனைத்துப்பெண்களையும், மென்மையான மனம் கொண்டவர்கள், அன்புக்கு ஏங்குபவர்கள், காதலர்கள், முன்னாள் காதல் தோல்வியாளர்கள் என பலரைக்கவரும் வாய்ப்புக்கள் உள்ள படம்.


டிஸ்கி - நமது நண்பர்  திருமலை கந்த சாமி அவர்கள் நாளைய இயக்குநர் குறும்படங்கள் காண லிங்க் கொடுத்து உதவினார், அவருக்கு நன்றிகள்....

  http://tamil.techsatish.net/file/naalaiya-5/

19 comments:

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! 3 படங்களும், நீங்க சொல்றத பார்த்தா தேவலாம் போலிருக்கே! அந்த லிங்கில் சென்று பார்க்கிறேன் சார்! பகிர்வுக்கு ரொம்ப நன்றி!

ஓட்டுக்கள் போட்டுட்டு கெளம்புறேன்!

நன்றி வணக்கம்!

Thenammai Lakshmanan said...

முதல் படம் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுடையது. அவருக்கும் பரிதிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிபி

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்னயிருக்கு.எனக்கு முதல் படம்தான் பிடிக்கிறது.

வெளங்காதவன்™ said...

திறமான விமர்சனம்....
வெகுஜனப் பார்வைகளுக்கு அப்பால், இழுத்துச் சென்றுவிட்டன உங்களின் வார்த்தைச் செழுமை....
வாழ்க!

#எத்தன நாள்தான் படிச்சிட்டு மட்டும் போறது...
சௌக்கியமா அண்ணே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

குறும் படங்கள் ஓகே தானா? லிங்கில் பார்கிறேன்

கடம்பவன குயில் said...

முதல் கதைதான் அருமை. விமர்சனமே குறும்படம் பார்த்த திருப்தியைத் தருகிறது.

கடம்பவன குயில் said...

முதல் கதைதான் அருமை. விமர்சனமே குறும்படம் பார்த்த திருப்தியைத் தருகிறது.

Anonymous said...

மூணு கதைகளும் நல்லா இருக்கு ...

அந்த இரண்டாவது போட்டோ சூப்பராய் இருக்கு .

Unknown said...

குறும் படத்துக்கே திரைப்படம் போல் விமர்சனம் எழுதும் அண்ணன் சி பி புகழ் ஓங்குக!!

செங்கோவி said...

நல்ல முயற்சியை பலரிடமும் கொண்டு சேர்க்கும் பதிவு!

ராஜி said...

விமர்சனம் நல்லா இருக்கு.

ராஜி said...

முதல் படம் தான் எனக்கு பிடிச்சு இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

நல்ல விபரமான விமர்சனங்கள் மூலம் பட clips பார்க்கவேண்டுமென்ற அவாவை தூண்டிவிட்டிட்டியள்

சுதா SJ said...

பாஸ் நல்ல பதிவு, எனக்கும் முதல் படமே புடித்து இருந்தது,
லிங்க் தந்ததுக்கு தேங்க்ஸ் பாஸ்

Anonymous said...

விமர்சனம் நல்லாயிருந்தது...சி பி

puduvaisiva said...

Thanks for the link

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி பற்றிய காத்திரமான அலசலோடு,
நீங்கள் விமர்சித்திருக்கும் விமர்சனங்களைப் பார்ப்பதற்குரிய லிங்கினையும் தந்திருக்கிறீங்க,
ரொம்ப நன்றி பாஸ்.

Ravikumar Tirupur said...

அந்த லிங்கில் படங்களோடு முடிந்துவிடும் நிகழ்ச்சியின் நிறைவாக பரிசளிப்பும் நடந்தது
முதல் பரிசு -ரமேஷ்(பரிதி மாறன்)
இரண்டாம் பரிசு- அருண்குமார் (நாடோடி மன்னன்)
மூன்றாம் பரிசு-ரவிக்குமார் (ஜீரோ கிலோமீட்டர்)