Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

http://caribbeanboys.weebly.com/uploads/8/2/4/5/8245516/207920543.jpg?497

தியேட்டர்ல இருக்கற 1268 பேர்ல ஹீரோ ஜீவா அறிமுகத்தப்ப 300 பேர் கைதட்ட, ஹீரோயின் தப்ஸி அறிமுகத்தின்போது 500 பேர் மனம் மயங்க, சந்தானம் அறிமுகம் ஆகும்போது 1000 பேர் ஆர்ப்பரிக்க  அப்போதே தெரிந்து போனது இது ஜீவாவுக்கான ஹீரோயிச படம் இல்லை என..!!!!!!

சமீபத்தில் ரிலீசான உதயன் பத்தின் கதை தான்.. ஹீரோவின் அண்ணன் மும்பைல தாதா ..அவரை போலீஸ்ல சரண்டர் ஆக வெச்சு திருத்தி தன் ஊருக்கே கூட்டிடு வர்ற வேலை ஹீரோவுக்கு...

அண்ணன்க்கு ஒரு பழைய காதல் தோல்வி இருக்குன்னு வீக் பாயிண்ட்டை பிடிச்சு,வாலி அஜித் இல்லாத ஜோதிகா கேரக்டரை சிம்ரன் கிட்டே சொல்ற மாதிரி ஜீவா இல்லாத தப்ஸி கேரக்டரை தன் காதலியா சொல்லி படம் பூரா ரீல் ஓட்டி உஷ் அப்பா சாமி.. ரீல் அந்து போச்சு!!!!!!!!!!

ஆறு பட சூர்யா மாதிரி விறைப்பா வரும் நந்தா ஒரேமாதிரி நடித்திருந்தாலும் அவரது 3 நிமிட ஃபிளாஸ்பேக் காதல் ஒரு அழகிய சிறு கதை.. ஒவ்வொரு முரட்டு மனிதனுக்குள்ளும் ஒரு காதல் ஒளிந்திருக்கும் என்ற உண்மையை சொல்வது அப்ளாஸ் வாங்குகிறது..

ஜீவாவுக்கு அண்டர்ப்ளே ஆக்டிங்கா? அல்லது யாரோ எப்படியோ போங்கப்பா.. சந்தானம், தப்ஸி, நந்தா என 3 பேரை தாண்டி எனக்கு 4 வது இடம் தானே? என்ற விரக்தியில் கிண்டல்ப்ளே ஆக்டிங்க் பண்றாரா? தெரில...

தப்ஸி என்னதான் பாப்பா ஃபிகரா இருந்தாலும் கலரா இருந்தாலும் பாப்பா கிட்டே ஏதோ மிஸ்ஸீங்க்.. பாடல் காட்சிகளில் தேறி விடுகிறார். நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல. யார் நடிப்பை எதிர்பார்த்தா? என்று இயக்குநர் நினைத்திருப்பார் போல!!!

படத்தில் சிக்ஸர் அடிப்பது சந்தானம் தான். கேப் கிடைக்கும் இடம் எல்லாம் கிடாதான்.....

http://www.filmics.com/tamil/images/stories/news/May/26-5-11/Vandhan-Vendran.png
சந்தானம் காமெடியில் களை கட்டிய இடங்கள் + பட்டுக்கோட்டை பிரபாகர்  பளிச் வசனங்கள்

1. சார்... எழுதி வெச்சுக்குங்க.. நம்ம டீம் தான் ஜெயிக்கும்.. 

ஏதோ உங்களை வெச்சுத்தான் மெட்ராஸ் சுத்தி பார்க்கனும்..

2.  உன் தம்பியோட வீக்னெஸை ஏன் என் கிட்டே சொல்லி என்னை ஜெயிக்க வைக்கறே? இதுல உனக்கென்ன லாபம்?

ம்... உன் தங்கச்சியை எனக்கு கட்டி குடுப்பேன்னுதான்.. போடாங்க்க்க்...

3.  சார்... நீங்க தமிழா?

சந்தானம் -  கஷ்டப்பட்டு ஹிந்தில பேசுனேன். எல்லாம் வேஸ்ட்.. எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?

கஷ்டப்பட்டு ஹிந்தில பேசுனீங்களே? அதை வெச்சுத்தான்... 

4. சந்தானம் -  டிரெயிலரைப்பார்த்து படம் நல்லாருக்கும்ன்னு முடிவு பண்ணாதீங்கடா!!

5. மிஸ்டர்  டான்


சந்தானம் -  சொன்னா நம்புங்கடா! நான் டான் இல்ல. வெறும் டண்டணக்கா டாண் தான்.... 

6. ஏண்ணே.. தமிழன் டூ தமிழன் நம்ப மாட்டீங்களா?

சந்தானம் - ஆமா.. இவரு பெரிய வ உ சி நான் ம பொ சி .. டேய் நாயே காசைகொடுத்துட்டு இடத்தை காலி செய்டா!!!

7. சந்தானம் - என்னை இப்போ சும்மாதானே அடிச்சீங்க? அவனையும் அப்படிஅடிச்சதா நினைச்சுக்கக்குடாதா? எதுக்கு 3 லட்சம் பணம் கேட்கறீங்க?

8. சந்தானம் -  அண்ணே, இவரு நம்ம ஃபிரண்டு.. சென்னைல கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இவர் பேரு வைக்கலைன்னு கோவிச்சுகிட்டு வந்துட்டாரு.

9. சந்தானம் - கசாப்புக்காரன் வண்டில காய்கறி இறங்கற மாதிரி நம்ம டாண் ரமணா வண்டில இவன் வந்து இறங்கறானே?

10. சார். நாம 2 நிமிஷம் யூஸ் பண்ற டூத்பேஸ்ட் கலர் சேஞ்ச் பண்றோம்.. டேஸ்ட் சேஞ்ச் பண்றோம்.. அப்படி இருக்கறப்ப பல வருஷம் இருக்கப்போற வீடு பிளானிங்க்ல சேஞ்ச் பண்றதுல என்ன தப்பு?


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=5241&option=com_joomgallery&Itemid=76

11. ஹாய் மேடம்.. நீங்க போட்டிருக்கற இந்த டிரஸ் உங்களுக்கு செம மேட்சிங்க். 
என்னால உனக்கு என்ன காரியம் ஆகனும்?

12. விதி இருக்கற எல்லா இடத்துலயும் விதி விலக்குகளும் இருக்கும்.. 

13. ஏன்? ஆம்பிஷன் உள்ள ஆளுங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாதா?

14. ஹலோ.. ஃபிரண்ட். என் ஆளோட ஜட்டி அவ பேண்டை தாண்டி வெளில தெரியுது.. ரயில்ல எல்லாரும் பார்க்கறாங்க. இப்போ நான் என்ன பண்ண?

டேய். இது மிட் நைட்டுடா.. என் தூக்கத்தை கெடுத்துட்டு கேக்கற டவுட்டாடா? இது?நான் ஒண்ணு சொல்றேன். செய்வியா?

கண்டிப்பா.. சொல்..

ஃபோனை வெச்சிடு.. 

15.  உயிரைக்காப்பாத்தற மருந்துக்குக்கூட எக்ஸ்ப்யரி டேட் இருக்கு.. ஆனா நமக்கு?

16. மிஸ்.. உங்க கிட்டே சொல்லனும்னும் இருக்கு.. சொல்லக்கூடாதுன்னும் இருக்கு./...

நான் அழகா இருக்கேன்.. அதானே?

ச்சே.. ச்சே.. அந்தப்பொய் எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. 

17. உங்களுக்கு ஏன் லவ் பிடிக்காது?

அது அர்த்தம் இல்லாதது. பஸ்ஸூக்காக 2 நிமிஷம் வெயிட் பண்ணாதவன் எல்லாம் கிஸ்ஸுக்காக 8 மணிநேரம் கூட வெயிட் பண்றான்..

18. என்னைப்பொறுத்தவரை லவ் என்பது காலை கட்டிக்கிட்டு 500 கி மீ நடக்கற மாதிரி. 

19. இந்த உலகத்துல அண்ணன், தம்பி, அம்மா, அப்பா செத்தா அழுவாங்க. யாரும் தற்கொலை செஞ்சுக்க மாட்டாங்க. ஆனா காதலி இறந்தா தற்கொலை செஞ்சுக்கறாங்களே? அது ஏன்? அதான் லவ்.... சாமி, பேய் , காதல் மூணும் 1 தான், உணராதவரை அது இல்லை..

20.  ஒண்ணு சொல்றேன் கோவிச்சுக்க மாட்டீங்களே.. அரை மணி நேரமா சரக்கு அடிக்கறேன். சைடு டிஸ் இல்ல.. ஊறுகாய் வாங்கிக்கவா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfPFf-JcFN9cKz61vX3eD5MpF7Yt2mW6olpJw1z_L7jVZ3lgEXUOhSp4AHy7xsl6ROzGtoA2XUhmlO-q5y_FmPHOLTXqk0wV5sox68Tj9-HjmSpnF8EhMUYu7ma2BG4piohmMZdFqZEk/s1600/tapsi+%25284%2529.jpg

21. நாயை கண்டு ஏன் பயப்படறீங்க? நீங்க ஒரு பாக்ஸர் ஆச்சே?

அது உங்களுக்கு தெரியும். அந்த நாய்க்கு தெரியுமா? ( குமுதம் ஜோக் 1998 - வி சாரதி டேச்சு)

22. அவ சிரிச்சா அழகா இருப்பா.. சிரிக்கலைன்னா இனும் அழகா இருப்பா!!

23. இப்போ 2 பேரு எங்கே இருக்கீங்கடா?

நான் கீழே படுத்திருக்கேன்.. அவ மேலே படுத்திருக்கா. 

மேரேஜ்க்கு முன்னே இதெல்லாம் தப்புடா.

நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல , அவ ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்ல. ( எஸ் வி சேகரின் தத்துப்பிள்ளை நாடகத்திலிருந்து சுடப்பட்ட காமெடி )

24. டேய்.. அவர் கிட்டே சொல்லிட்டு போலாமா?

டேய் நாயே. நாம என்ன இப்போ சினிமாக்கா போறோம்.. பர்மிஷன் வாங்கிட்டு போக.. உயிரை காப்பாத்த ஓடறோம். 

25. என்ன வெடிக்கற சப்தம் கேக்குது? தீபாவளி அதுக்குள்ள வந்துடுச்சா?

26. என் பொண்ணை லவ் பண்றியா மேன்?

சாரி.. சார்.. உங்க பொண்ணுன்னு தெரியாது. நான் லவ் பண்ற பொண்ணு  உங்களுக்குப்பிறந்ததுன்னு இப்போ தான் தெரியும்.. 

27. லேடி - இந்த சி டியை உங்க கிட்டே குடுக்கச்சொன்னார். 

சாரி மேடம்.. இது நீங்க2 பேரும் நடிச்ச அந்த மாதிரி சி டியா? நான் பார்க்கறதில்லையே?

28.காதலுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு நானா செஞ்சுக்கிட்ட கல்யாணம் என்னை தண்டிச்சிடுச்சு..

29.  ரயில் கிளம்புது.. நான் கிளம்பட்டா/?

இரு, நான் முதல்ல கிளம்பிடறேன்.. அதுக்குப்பிறகு நீ போ.... நீ போறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது

30. சரி..நான் ஒண்ணு கேக்கறேன்.. ரமணா ஜெயிலுக்கு போய்ட்டா நீ என்ன செய்வே?

அரிசில ஒரு ஆழாக்கு கம்மியா உலைல போடுவேன்..

http://andhramirchi.files.wordpress.com/2011/02/tapasee3.jpg?w=249

31. டேய்.. எப்படிடா ரமணா மாதிரியே மிமிக்ரி பண்ண முடியுது? உன்னால?

அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ் வந்துடும்..

மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ்னா.. அப்போ மூக்கை சொறிஞ்ச மாதிரி பேசுனா தமனா வாய்ஸ் வருமா? ( செம கிளாப்ஸ் இந்த சீன்ல)

32. ஒரு கோடு வோர்டு.. அந்த ஆல் கிட்டே போய் வெள்ளீக்கிழமை காலைல மழை வரும்னு சொல்லி..

ஓ.. அவர் என்ன செய்வாரு?

 வியாழக்கிழமை மாலைலயே துவைச்சு காய வெச்ச துணியை எல்லாம் எடுத்து உள்ளே வெச்சிடுவாரு..

33. எதுக்கு ரிவால்வரை கிளவுஸ் போடாம எடுத்தே?

டேய், நான் என்ன பைல்ஸ்  ஆபரேஷனாடா பண்ணப்போறேன்?

34. கமிஷ்னர் டிரான்ஸ்ஃபர் ஆனா நீ தானே சிட்டி கமிஷ்னர்? அப்புறம் ஏன் அது வரை வெயிட் பண்ணனும்? போட்டுத்தள்ளிட்டா?


35. லவ்வுல தோத்தவன் இன்னொருத்தன்  லவ் தோத்துப்போக விட மாட்டான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI6mhjydGf-e52Tekyc9e5OX0Bm7I0G-sXYmtRn2JsuozNSZ_Eye-l_6a6dv1xV8AenBsBnCN6I_EBUSuuW-kf-AqRc303msRdQEa9vZDZX_hc5hZXAMNKwQAmdkOz7caoTeIhiX68eM1o/s1600/tapsi-hot-images0217.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. அஞ்சனா அஞ்சனா , காஞ்சனா மாலா ( கேரளா), இதயத்தில் கம்பிதனை நுழைக்காதே 3 பாடல்களை படமாக்கிய விதமும் , கவிஞர்களிடம் வரிகளை வார்த்தெடுத்த அழகும்....

2.  க்ளைமாக்ஸ்சில் ஜீவா சொல்லும் தப்ஸி கதை ட்விஸ்ட்..

3. இந்தப்படத்தில் சந்தானம், தப்ஸி கால்ஷீட் வாங்கியது.

இயக்குநரிடம் சில கேள்விகள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYMQgx5r8LeYS8wieiVMtmCoO3s9ZVUGkQNadfI9D3FR5RHlcp5gQ8ND9YJxCv6QE1wlNIcVBW2PqaP5wX8vzMN-h9LpgRMtx7q_bdFC1EC3siK_Q6kN1tX7STgGQe9C0_Flwhe_egvT0/s1600/tapsi+%2528110%2529.jpg

1.  தன்னிடம் ஒரே ஃபோட்டோ தான் அப்பாவினுடையது இருப்பதாக சின்னப்பையன் சொல்றான்... ஏன்? அம்மாவின் கல்யாண ஆல்பத்தில் அப்பா இருப்பாரே?

2. நந்தா இடது கைப்பழக்கம் இருப்பவராக காட்டப்படுகிறது.. ஆனால் சிறு வயதில் அப்படி காட்டப்படவில்லை..

3. நந்தா ஷூட் பண்றப்ப ரிவால்வரை அவர் இடுப்பு மட்டத்தில் தான் சுடறார்.. குண்டும் அதே மட்டத்தில் தான் போகுது.. ஆனா குண்டு நின்று கொண்டிருக்கும் எதிராளியின் நெற்றியில் படுதே எப்படி?

4. ஜீவா நந்தாவை மிரட்ட தன் வலது கையில் ஒரு வெட்டு, இடது கையில் 2 இடங்களில் வெட்டு போட்டுக்கறார் கத்தில .... ரோட்ல அவரை விட்டுட்டு நந்தா போய் அரை மணி நேரம் கழிச்சு சந்தானம் & குரூப் ஓடி வர்றப்ப கொஞ்சம் கூட ரத்தம் லீக் ஆகாம அப்படியே இருக்கே?ஏன்? அந்த சீன்ல சந்தானம் ஏன் ஆட்டோல வராம அரை கி மீ ஓடியே வர்றார்?

5. நந்தா இரும்புக்கம்பியால் ஆட்கள் மேல் அடிக்கும்போது ஏன் இரும்புக்கேடயத்தில் படுவது போல் நங்க் நங்க் என்ற பின்னணி சத்தம்?https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtBAE4ZwezRMpy4TM8ahqjkjomlHtiRtJoKCoHDpKqCzKyZ_6xBod3J3OgPsFHv2zJKv5AfcT3PubgDxuORr7kv1UeKsqzjwkUF0-INo00ylSvhVJcp-d_9Uda1taU6NXqecVJvhZXWYg/s1600/tapsee_pannu+movie+hot+wallpapers.jpg
படம் ஏ பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும்குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி மார்க் - 35

சி.பி கமெண்ட் - வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழி இல்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்

ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்...


டிஸ்கி - எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு -

44 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

engeyum eppothum eppadi?

குரங்குபெடல் said...

"வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழி இல்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்"

அப்ப சந்தானம் ஸ்டில்லு தானே தம்பி

போட்டிருக்கணும்

நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

M (Real Santhanam Fanz) said...

இதுவும் தலைவருக்காகத்தான் ஓடும்னு சொல்றீங்க.. ஓகே, நாளைக்கே பாத்துடனும்.

K said...

தியேட்டர்ல இருக்கற 1268 பேர்ல ஹீரோ ஜீவா அறிமுகத்தப்ப 300 பேர் கைதட்ட, ஹீரோயின் தப்ஸி அறிமுகத்தின்போது 500 பேர் மனம் மயங்க, சந்தானம் அறிமுகம் ஆகும்போது 1000 பேர் ஆர்ப்பரிக்க அப்போதே தெரிந்து போனது இது ஜீவாவுக்கான ஹீரோயிச படம் இல்லை என..!!!!!!//////////

ஆஹா, என்ன ஒரு கணிப்பு! நீங்க சொல்றது சரிதான் சார்! சந்தானம் வர வர எங்க மனச ரொம்பவே கவர்ந்திட்டாரு!

K said...

ஜீவாவுக்கு அண்டர்ப்ளே ஆக்டிங்கா? அல்லது யாரோ எப்படியோ போங்கப்பா.. சந்தானம், தப்ஸி, நந்தா என 3 பேரை தாண்டி எனக்கு 4 வது இடம் தானே? என்ற விரக்தியில் கிண்டல்ப்ளே ஆக்டிங்க் பண்றாரா? தெரில...///////

அப்போ, ஜீவாவுக்கு படத்துல ஒண்ணுமே இல்லையா? சரியாப் போச்சு!

பால கணேஷ் said...

சுடச்சுட விமர்சனமா? அசத்துறீங்க சென்னிமலையாரே... ஆக, வந்தவன் வெல்வானாங்கறது டவுட்டுங்கறீங்க...

K said...

தப்ஸி என்னதான் பாப்பா ஃபிகரா இருந்தாலும் கலரா இருந்தாலும் பாப்பா கிட்டே ஏதோ மிஸ்ஸீங்க்.. பாடல் காட்சிகளில் தேறி விடுகிறார். நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல. யார் நடிப்பை எதிர்பார்த்தா? என்று இயக்குநர் நினைத்திருப்பார் போல!!!/////

ஹி ஹி ஹி!!!!அதானே!

K said...

31. டேய்.. எப்படிடா ரமணா மாதிரியே மிமிக்ரி பண்ண முடியுது? உன்னால?

அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ் வந்துடும்..

மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ்னா.. அப்போ மூக்கை சொறிஞ்ச மாதிரி பேசுனா தமனா வாய்ஸ் வருமா? ( செம கிளாப்ஸ் இந்த சீன்ல) ///////

ஆஹா, சந்தானம்! கிரேட்!

K said...

மொத்தத்துல விமர்சனம் சூப்பர்!

செங்கோவி said...

உண்மையை உடைச்சுச் சொன்ன விமர்சனம்.

நன்றி.

kobiraj said...

எப்படி சார் இம்புட்டு வசனத்தையும் ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள் .இயக்குனர் தவறை சுட்டிக் காடுவது அருமை .

குறையொன்றுமில்லை. said...

விமர்சனம் நல்லா இருக்கு ஆனா படம் நல்லா இல்லே.

சுதா SJ said...

அப்போ ஜீவாவை இந்த படம் பழைய இடத்துக்கு கொண்டு போய்ட்டா

அவ்வ்வவ்வ்

SURYAJEEVA said...

ok ok ok ok ok ok

rajamelaiyur said...

டாப்சி படம் மட்டும் தான் போடுவிங்களா

rajamelaiyur said...

சந்தானாம் .... கிங் ..

Madhav said...

iruntha ore oru twistayum sollitinga, athuvum release ana annaike, at leaset 'spoiler' nu pottirunthurukkalam...

கவி அழகன் said...

பாக்க வேண்டிய படம் தான்

MANO நாஞ்சில் மனோ said...

சினிமா பார்த்துட்டு வந்து இந்த தியேட்டர்ல படம் பார்த்தேன்னு சொல்றியே, உனக்கு நெஞ்சில மாங்கா இருந்தா சீ ச்சே மாஞ்சா இருந்தா, படம் பார்க்கப் போகுமுன் தியேட்டர் பேரை சொல்லுடா பார்ப்போம் மூதேவி....

கடம்பவன குயில் said...

21. நாயை கண்டு ஏன் பயப்படறீங்க? நீங்க ஒரு பாக்ஸர் ஆச்சே?

அது உங்களுக்கு தெரியும். அந்த நாய்க்கு தெரியுமா? ( குமுதம் ஜோக் 1998 - வி சாரதி டேச்சு)

Aanaalum ivvalavu knapakasakthi danger thaan.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்ன இங்கே ஓசி சோறு கிடைக்கும்னு வந்தியாக்கும்....?? இது யாரு பிளாக்'ன்னு தெரியும்தானே..?? கஞ்சப்பய பிளாக்'யா இது மரியாதையா ஓடிப்போயிரு....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே, விமர்சனம் சூப்பர் அண்ணே...!!!

கடம்பவன குயில் said...

Assistant directors kitta irunthu dialogue papera aattaya pottutu vanthuteengala???

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்கு...

கடம்பவன குயில் said...

Ha......ha.....real santhaanam fans evvalavu maal vettinaanga????? Summa sollunga Sir naan onnum pangu ketka maatten

Nirosh said...

இன்னும் சற்று நிமிடத்தில் பார்க்கின்ற ஐடியா இருக்கும்... ம்ம்ம்ம் என்ன செயற....?!!!

சரி எதற்கும் சென்று பார்ப்போமே...!

விமர்சனம் அழகு.

கடம்பவன குயில் said...

Suryanin prakasaththai n


Jeevavin nadippu suryanin oli pondrathu. Endrum kuraivathillai enpathaal sollaamal vittuteengala??
Unmaithan nilvukkum suriyanukkum vilambaram etharku??

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சினிமாவை மிகவும் ரசிக்கும்
உங்கள் பார்வை ...
புதிது ..அல்ல .ஆனால்
அனைவரும் உங்கள்
விமர்சனம் எப்போ ?
என்று எதிர்பார்க்க ...வைத்து .
அதனை அழகாக படைக்கும்
உங்களக்கு ...ஒரு சபாஷ்...
சினிமாவின் நாடி நரம்பை
பிடித்து விமர்சனம் செய்து உள்ளீர்கள் .
எப்படி ஓடும் ..
எம்புட்டு மார்க் -
நான் தற்போது சினிமா பார்பதில்லை .
விமர்சனம் மட்டும் படிப்பேன் .
அந்த வரிசையல் ,,,
தங்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு .

M (Real Santhanam Fanz) said...

//கடம்பவன குயில் said...
Ha......ha.....real santhaanam fans evvalavu maal vettinaanga????? Summa sollunga Sir naan onnum pangu ketka maatten//

இது எல்லாம் தொழில் ரகசியமுங்க.. சி.பி. அண்ணே வெளில சொல்ல மாட்டாருன்னு நம்புறோம்!!!

சென்னை பித்தன் said...

சிபி மார்க் 35! அது பாஸா,ஃபெயிலா?!

காட்டான் said...

ஓய்வே இல்லாம உழைக்கிறீங்க இப்பதான் டெரியுது ஏன் நீங்க வெற்றி பெறுகிறீர்கள்ன்னு.. தலிழ்மணம் 11

கிராமத்து காக்கை said...

விமர்சனத்தை மிஞ்சிய படங்கள்

கும்மாச்சி said...

படங்கள் எல்லாம் சூப்பர்.

Menaga Sathia said...

படம் பார்க்கலாமா வேண்டாமா???

Unknown said...

படத்த பாருங்கப்பா

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

காங்கேயம் P.நந்தகுமார் said...

வந்தேன் படித்தேன் கருத்திட்டேன் சென்றேன்

காந்தி பனங்கூர் said...

தல நீங்க விஜயகாந்தை மிஞ்சிட்டீங்க புள்ளி விவரத்துல. கலக்கலான பதிவு.

Samantha said...

nalla velai escappu!!! thanx sir

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
sivagiri senthil said...

வீமர்சனம் விட டயலாக் அதிகம் சாமி இன்னும் கொஞ்சம் கத சொன்ன நல்ல இருக்கும்

”தளிர் சுரேஷ்” said...

வந்தான் வென்றானை சந்தானமும் டாப்சியும் காப்பாத்திட்டாங்கன்னு சொல்லுங்க! டாப்ஸி படங்கள எங்க பிடிச்சீங்க? சூப்பர்!

Thangasivam said...

விமர்சனம் நல்லா இருக்கு படத்தை ஒரு தடவை பாத்துட்டு எழுதுவீங்களா இல்லை பல தடவை பாத்துட்டு எழுதுவீங்களா.... வரி விடாம எப்படி ஞாபகம் வச்சு எழுதிறீங்க

ம.தி.சுதா said...

வந்தான் வென்றான வந்தான் தோற்றானா?