Wednesday, March 25, 2015

ட்விட்டரில் கொண்டாட்டம் - 66 ஏ - 144

ட்விட்டர் பகிர்வுப் படங்கள்
ட்விட்டர் பகிர்வுப் படங்கள்
'சமூக ஊடக வெளியில் இந்த அளவுக்கு உற்சாகம் பொங்கியதில்லை' என்று சொல்லக்கூடிய வகையில், இணையவாசிகள் கருத்து சுதந்திரத்தை காக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவு 66ஏ-வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கும் ஹாஷ்டேகுகளுடம் ட்விட்டரில் முன்னிலை பெற்றுள்ளன.
சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டால் கைது செய்யப்பட வழிவகுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சர்ச்சைக்குறிய 66 ஏ பிரிவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்தது.
கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான இந்தத் தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று வரும் நிலையில், இணையவாசிகள் ட்விட்டரிலும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
கருத்து சுதந்திரம் காக்கப்பட்டது எனும் கொண்டாடும் வகையிலும், இனி சமூக ஊடக் கருத்துக்களுக்காக கைது அபாயம் இருக்காது எனும் நிம்மதி உணர்வை வெளீப்படுத்தும் வகையிகும் கருத்துக்கள் அமைந்துள்ளன.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஆயிரக்கணக்கான குறும்பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக்களை தாங்கி வரும் #FreedomOfSpeech, #Sec66A, #SupremeCourt ஆகிய ஹாஷ்டேகுகளும் முன்னிலை பெற்று வருகின்றன.
இவை தவிர இந்த வழக்கை தொடுத்த ஷ்ரேயா சிங்கால் தொடர்பான ஹாஷ்டேகும் பிரபலமாகி இருப்பதுடன் #onlineazadi எனும் ஹாஷ்டேகும் முன்னிலை பெற்றுள்ளது.
பெரும்பாலான குறும்பதிவுகளில் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இணைய சுதந்திரம் காக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் துவேஷ கருத்துக்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் மற்றும் இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரபல எழுத்தாளரான சேத்தன் பகத தனது ட்விட்டர் பக்கத்தில் (@chetan_bhagat) நான் சுந்திரமான நாட்டில் வசிப்பதை நினைத்து மகிழ்கிறேன். #Sec66A இனி இல்லை... என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவாதம் தொடர்பான சில குறும்பதிவுகள் வருமாறு:
* மகத்தான அதிகாரத்துடன், மகதான பொறுப்பும் வருகிறது - @ychunks
* உச்ச நீதிமன்றம் 66ஏ-வை ரத்து செய்துள்ளது. இன்டர்நெட் இன்குலாப் ஜிந்தாபாத். #FreedomOfSpeech ஜெய்ஹோ. உற்சாகம் பொங்குகிறது. - @AKSHAY_PN
* உச்ச நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு. ஆனால் துவேஷ பேச்சை கண்டிக்க வேண்டும் - @kondorpa
* லகான் கிராம மக்கள் போல உணர்கிறேன். ஜீத் காயீ... - @Rahul4Music
* உச்ச நீதிமன்றம் நமது உரிமையை காப்பாற்றியுள்ளது. நாம் பொறுப்புடன் செயல்பட்டு, இதை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் - @Girijabki
* ஷ்ரேயா சிங்காலுக்கு நன்றி. உங்கள் மனு தான் எல்லாவற்றையும் துவக்கியது - @Alexxious
* உச்ச நீதிமன்றம் கருத்து சுதந்திரத்தை காப்பாற்றி உள்ளது- @sushinps
* 66ஏ-வை ரத்து செய்து அனைவரின் கருத்துரிமையை நிலைநிறுத்திய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. -@veejaysai
* இன்று #FreedomOfSpeech தினமாக கொண்டாடப்பட வேண்டும் - @gotokrish
* இன்னொரு சுதந்திரம் வாங்கியதற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கள். உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி - @ani_rocking
சைபர்சிம்மனின் அதிகாரபூர்வ வலைதளம் http://cybersimman.com/


நன்றி - த இந்து