Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Tuesday, April 23, 2019

உயிரினும் மேலான உடன்பிறப்பே! டெபாசிட் கிடைப்பதே பெரும் பாடே

ஒரு மனநல மருத்துவருக்கு மன நலம் சரி இல்லைன்னா அவர் எந்த மனநல மருத்துவரிடம் சென்று தம் மனசை சரி செய்வார்?


============

2 திமுக விலிருந்து அடிப்படை உறுப்பினர் தகுதி நீக்கம் பெற்ற ராதாரவி அதற்குக்காரணமாக இருந்த நயன் தாரா நடித்த ஐரா படம் (28/3/19) பார்ப்பாரா?மாட்டாரா?


==============


3 கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையில் கனிமொழிக்கு பலம் இருப்பது போல் தோன்றினாலும்
தனி நபர் நேர்மை யில் தமிழிசை கனிமொழியை தகுதி அடிப்படையில் முந்துகிறார்,இதை உடன்பிறப்புகளே (மனதுக்குள்) ஒப்புக்கொள்வார்கள்.பார்ப்போம்,மக்கள் தீர்ப்பை


================


4 சிவகங்கை தொகுதியில் பிக்பாஸ் புகழ் கட்டிப்பிடி வைத்திய ஸ்பெஷலிஸ்ட் சினேகன் போட்டியிடுவதால் அத்தொகுதியில் இருக்கும் பெண்கள் தங்கள் சோகங்களை வெளிப்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்


================


5 விழி ஒளி இழந்த அதிர்ஷ்டத்தால் முதல்வர் பதவி,துணை முதல்வர் பதவி கிடைத்த OPS மகன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது எதிர் வேட்பாளரின் ஜாதி குறித்து பேசி இருக்கிறார்,சட்டப்படி தவறு.தேர்தல் ஆணையம் இவரை தகுதி நீக்கம் செய்யனும்,அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்


=================


6 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் பிளாப் ஆகிடுச்சு,அப்போ ஹெச் ராஜா வும் அதே செண்ட்டிமெண்ட்படி தோற்கத்தானே போறாரு னு யாராவது மொக்கை போட ஆரம்பிச்சிருப்பாங்களே?==========


7 பரீட்சை எழுதும்போது அடிஷனல் ஷீட் வாங்கற மாதிரி அதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை இப்ப விட்டிருக்கு.இனி ஆளாளுக்கு ஒரு பிட் சேர்க்கப்போறாங்க,நல்ல டைம் பாஸ்================


8 பொது இடங்களில் பேசும்போதோ ,சமூக வலைத்தளங்களில் எழுதும்போதோ (டைப்) குறிப்பிட்ட ஒரு ஜாதியினரை ஜாதிப்பெயர் சொல்லி அழைப்பதே தவறு.ஆனால் மெத்தப்படித்தவர்களே ஒரு குறிப்பிட்ட ஜாதியை கேவலமான முறையில் திட்டுவது சர்வசாதாரணம் ஆகி விட்டது.பெற்றோர் வளர்ப்பு ,படிப்பித்த ஆசிரியர்கள்,சேர்க்கை மூன்றில் ஒன்று சரியில்லை


=================


9  கும்பிடு குருசாமி OPS ன் மகன் மேடையில் பேசிய வீடியோ கண்டேன்.திமிர் அதிகம் தெரியுது.தோற்கடிக்கப்பட வேண்டியவர்.இந்த லட்சணத்துல இவரு ரஜினியை வேற இமிடேட் பண்றாரு


=================


10 காங் கிரசின் பெஸ்ட் மூவ் கன்யாகுமரி.
ஒர்ஸ்ட் மூவ்
சிவகங்கை


=============


11 வாத்தியார் பிள்ளை மக்கு − பழமொழி

அரசியல்வாதி பிள்ளைங்க எல்லாமே மக்குக − புதுமொழி
( மக்கு னு சொன்னது மத்த GK விஷயத்துல,திருடறதுல,கொள்ளை அடிக்கறதுல விவரமானவங்க)


===============


12 வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகளின்"தரவரிசை (தரங்கெட்ட வரிசை)
1 திமுக
2 அதிமுக
3 காங
5 நாம் தமிழர்
4 பாமக
எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதான்
6 பாஜக


===========


13 வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது அவர்களது பெயர்களுடன் இன்ன ஜாதி என அடைப்புக்குறிக்குள் இட்டு வெளியிட்டது சட்டப்படி"தவறே!பொதுவெளியில் ஒருவர் இன்ன ஜாதி என குறிப்பிடுவது"தவறு.விண்ணப்பங்களில் இன்ன ஜாதி என குறிப்பிடுவது வேறு


=================


14 சினிமாவில் ஜெ வேடத்தில் நடிக்க கங்கணாரன்வத்தை புக் பண்ணுனதும் பலரும் நித்யாமேனன்,அஞ்சலி நல்ல சாய்ஸ்ங்கறாங்க.ஜெ.தீபாதான் பெஸ்ட் சாய்ஸ்.வெட்டியாதான் இருக்காப்டி.கால்ஷீட் ஈசியா கிடைக்கும்.என்ன காலைல எந்திரிக்கவே 10 ஆகும்,ஷூட்டிங் வர 12 ஆகிடும்,மத்தபடி முகசாயல் கச்சிதம்


================


15 சமூகவலைத்தளங்களான ட்விட்டர் ,FB ல யாரு யாரை கரெக்ட் பண்ணிட்டு இருக்கீங்கனு பயோ ல ஒரு ஹின்ட் குடுத்துட்டா நெட் தமிழன் உங்க ரூட்ல குறுக்கே வராம வேற புது ப்ராஜெக்ட் ட்ரை பண்ணுவான் (பொது நலன் கருதி)


================


16 மோடி ஆட்சி வேண்டாம்
முடியாட்சி போதும்
தாத்தா மகன் பேரன்
பரம்பரை பரப்பரையாக ஒரு குடும்பமே கொள்ளை அடிப்பதே மன்னராட்சி,முடியாட்சி
கொள்ளுப்பேரன் என


========================


17 திமுக ஆ ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதியில் 1.67 கோடி கணக்கில் வராத பணம் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..அது திமுக பணம் என பரப்பப்படும் வதந்தியை நான் நம்பவில்லை.கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தாலும் கட்சித்தொண்டனுக்கோ ,ஜனங்களுக்கோ 10 பைசா செலவு பண்ண மனம் வராத கட்சி==============


18 இந்தத்தேர்தலில் நான் கேள்விப்பட்ட புதுத்தகவல்கள்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அழகா இருந்தா ஓட்டு போடனும்.
வேட்பாளரோட அப்பா "என் மகன் நல்லா இங்க்லீஷ் பேசுவான்" னு சொன்னா ஓட்டு போடனும்
வேற வேற.. நான் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கறேன்===============


10 இதுவரை ராகு காலம்,இனிமே ராகுல்"காலம் னு ஒரு விளம்பரம் பார்த்தேன்.இதை் ராகுலுக்கு ராகுகாலம்னு எடுத்துக்கறதா? இனிமே என்பது எதிர்காலத்தைக்குறிக்கும்,அப்ப அவருக்கு நிகழ்காலம் இல்லைனு எடுத்துக்கறதா?


===============


11 உரிய ஆவணம் இல்லாம பணம் கொண்டு போறாங்க னு குப்பன்,சுப்பன் மாதிரி அப்பாவிங்களை டார்ச்சர் பண்ணும் தேர்தல் அதிகாரிகளே!அரசியல்வாதிகளை ,திருடனுங்களை பிடிக்கறதுதான் வீரம்.அப்பாவிகளை டார்ச்சர் பண்றதுல இல்ல


=================


12 பொள்ளாச்சி,தூத்துக்குடி இந்த 2 தொகுதிகளிலும் எந்தக்கட்சிக்கூட்டணி வெற்றி பெறுகிறதோ அதுதான் மீதி 38 லும் வெல்லும் என பலர் கணிக்கிறார்கள்.ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனை தமிழகம் முழுக்க எதிரொலிக்கும் என நான் கருதவில்லை


==================


13 நான் பகலில் தூங்கி இரவுத்தூக்க சார்ட்டேஜை மேனேஜ் பண்ணிடுவேன் என சிலர் சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.இரவுத்தூக்கத்தை ஒருபோதும் பகல் தூக்கம் சமன் செய்யாது.அதுவும் இல்லாமல் இரவில் ஒரு மணிநேரம் தூங்குவது பகலில் 2 மணி நேரம் தூங்குவதற்கு ஒப்பானது


================


14 நான் தினமும் 4 மணி நேரம்தான் தூங்கறேன்னு"பலர் பெருமையா பேஸ்புக்ல ஸ்டேட்டஸ்"போடறாங்க.குறைந்த பட்சம் 7 மணி நேர தூக்கம் ஆரோக்யமான நிலைக்கு தேவை.குறிப்பாக 10 pm - 5 am
11pm- 6 am தூக்க நேரமா இருக்கனும்
இல்லாவிட்டால் புற்று நோய் வருவதற்கு அது ஒரு காரணி ஆகிடும்


=================


15 தமிழகத்தில் பாஜக வுக்கு வாக்கு வங்கி 2% −4% என்ற அளவுதான் என்பது உண்மை.ஆனால் அதற்காக இந்தியா பூரா அப்படித்தான் என்று நினைத்துக்கொள்வது தவறு.பாஜக எதிர்ப்பு அதிகம் உள்ள மாநிலங்கள்
தமிழகம்
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
டெல்லி
குஜராத்
மட்டுமே (பாஜக வை நான் ஆதரிக்கிறேன் என்று இதற்கு அர்த்தம் அல்ல)


===============


16 திருமா வுக்கு பானை சின்னமாம்,அட பாவத்த,அட்லீஸ்ட் உதய சூரியன் சின்னத்துல போட்டி இட்டிருந்தா"கவுரவமான தோல்வியையாவது"தழுவ வாய்ப்பு இருக்கு.==============


17 தேர்தல் கருத்துக்கணிப்பு யூகிக்கறது"ரொம்ப சுலபம்,
நக்கீரன் தேர்தல்"கருத்துக்கணிப்பு மற்றும் படித்த மேதாவிகள் பீல்டுக்கே போகாம"நெட்லயே எல்லாத்தையும்"கண்டுபிடிப்பவர்கள் என்ன ரிசல்ட் சொல்றாங்களோ"அதற்கு"நேர்மாறா இருக்கும்


=================


18 உயிரினும் மேலான உடன்பிறப்பே! டெபாசிட் கிடைப்பதே பெரும் பாடே
2014 தேர்தல் முடிவுகளின் படி....
அதிமுக. -1,79,83,168 - 44.34%
பாமக- 18,04,812. - 4.45%
பாஜக- 22,22,090. - 5.48%
தேமுதிக- 20,79,392 - 5.13%
புத- 2,62,812 - 0.65%
--------------------------------
மொத்தம்- 2,43,52,274- 60.05%
---------------------------------

திமுக- 95,75,850 - 23.61%
இதேகா- 17,51,123 - 4.32%
சிபிஐ- 2,19,866 - 0.54%
சிபிஎம்- 2,20,614 - 0.54%
விசிக- 6,06,110.- 1.49%
இயூமுலீ- 2,05,896 - 0.51%
மதிமுக- 14,17,535 - 3.50%
-------------------------------
மொத்தம்- 1,39,96,994 - 34.5%
--------------------------------

2016 தேர்தல் முடிவுகளின் படி.....
அதிமுக. -1,76,16,266 - 40.77%
பாமக- 23,00,558 - 5.32%
பாஜக- 12,28,704 - 2.84%
தேமுதிக- 10,34,384 - 2.39%
புத- 2,19,830 - 0.51%
தமாகா- 2,30,711 - 0.53%
--------------------------------
மொத்தம்- 2,26,30,453. - 52.54%
---------------------------------

திமுக- 1,36,69,116 - 31.64%
இதேகா- 27,74,075 - 6.42%
சிபிஐ- 3,40,290 - 0.79
சிபிஎம்- 3,07,303 - 0.71%
விசிக- 3,31,849 - 0.77%
இயூமுலீ- 3,13,808 - 0.73%
மதிமுக- 3,73,606 - 0.86%
கொமுதேக- 1,67,560. - 0.46%
ஐஜேகே- 36,125. - 0.08%
-------------------------------
மொத்தம்- 1,79,63,779 - 42.46%
--------------------------------

கிட்ட தட்ட 5% வாக்குகளை திமுக கூட்டணி ஸ்விங் செய்தால் மட்டுமே 1-5 தொகுதியிவாது கிட்டும்டியோவ்......
#ZeroMP_DMK_2019. தற்போதே உறுதியாகி விட்டது..===============

19 
உடன்பிறப்புகள் என்னை திட்டும்போது வெறுமனே செந்தில்,சென்னியார்,சிபி என பெயர் சொல்லி திட்டுகிறார்கள்.இனி யார் திட்டுவதாக இருந்தாலும் என் ட்விட்டர் ஐடி மென்ஷன் பண்ணி திட்டவும்.அடி வாங்கறது நானு,கப்பு எனக்குத்தான் மொமெண்ட்============
20 அரசுப்பள்ளி ஆசிரியர்களை தரம் பிரிக்கும்போது ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள்
சேராதவர்கள்
என இரு பிரிவுகளாகப்பிரிக்க வேண்டும்.


==============


Monday, April 22, 2019

நம்ம தானைத்தலைவர் கேரள முதல்வர் ஆகி இருந்தா God's own country னு போட்டிருக்க முடியாது,, எப்படி?

1  ஓபிஎஸ் மட்டும் தன் வாரிசை களம் இறக்கிட்டாரே?நாமளும் நம்ம சைடுல மனைவி,மகன்/மகள் னு வாரிசை இறக்கிடுவோமா அப்டினு EPS 2021 சட்டசபைத்தேர்தலில் நினைக்கக்கூடும்


===============


2 நெட் தமிழன் ஒரு வரிக்கி பாக்கெட் போட்டோ போட்டு இதன் ருசி எப்படி இருக்கும்? னு கருத்து கேட்கறாப்டி. பேஸ்புக்ல இதே அப்டேட் பண்ற டைம்ல பாக்கெட்டை ஓப்பன் பண்ணி டேஸ்ட் பாத்திருக்கலாமில்ல?


=============


3 பாஜக வுக்கு ஒரு ஐடியா − ராமராஜன் நடித்த இளையராஜா இசை அமைத்த எங்க"ஊரு காவக்காரன் படப்பாடலான "எங்க ஊரு காவக்காரன் அவன்"எல்லாத்துலயும்"கெட்டிக்காரன்" பாடலை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம்.அவரும் பசு நேசன்தான்.செட் ஆகுது


===============

4 இந்த லலிதா ஜூவல்லரி ஓனரு,விளம்பரத்துல "உங்களுக்காக உங்க முதல் தவணையை நாங்களே கட்றோம்"என்பது"அரசியல்வாதிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்னு சொல்ற மாதிரி
நம்பகத்தன்மை இல்லாதது


===============


5 தேர்தல் பிரச்சாரம் மூலம் வாக்காளர்களின் மனநிலையை மாற்றி தனக்கு வாக்களிக்க வைத்து விடலாம் என்பது ஒரு வகை மூட நம்பிக்கையே!


==============


6 தலைவரே!'தளபதி'யிடம் குணா தோற்றது வரலாறு! அப்டினு நம்ம கட்சிக்காரங்க சிலர் பிரச்சாரம் பண்றாங்களே?அது உண்மையா?

இதுல ஒரு ரகசியம் என்னான்னா எதிர்பார்ப்பு,ஓப்பனிங்க் பிரமாதமா இருந்தாலும் தளபதி யே ஒரு தோல்விப்படம்தான்,ஒப்பீட்டு அளவில் குணாவை விட வெற்றி,அவ்ளவ்தான்


===============


7 குஷ்பூ க்கு காங் ஏன் சீட் தர்லை?னு பலரும் விவாதிக்கறாங்க.நம்ம தானைத்தளபதி தான் ராகுல் கிட்ட பேசி சீட் குடுத்து பெரிய ஆள் ஆக்காதீங்க னு வேண்டுகோள் விடுத்திருப்பார்னு யூகிக்கிறேன்


==============


8 தனக்காகவும் ,தன் மனைவி,மகனுக்காகவும் பல முறை ஜாமீன் மனு தந்த வகையில் அரசாயல்வாதிகளிலேயே அதிகமுறை ஜாமீன் கேட்ட வகையில் ப.சிதம்பரம் சாதனை செய்திருக்கிறாராமே?இது உண்மையா?=================


9 தான் (நல்லா) ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
உதா
டி ராஜேந்தர் − சிம்பு
கே பாக்யராஜ் − சாந்தனு===================


10 நிலக்கடலை சட்னி எப்படி வைக்கிறது??

இது பெரிய கம்ப சூத்திரமா?உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னி வைக்கத்தெரியுமா?
தெரியும்
அதே பிராசஸ் தான் ,பொ.கடலைக்குப்பதிலா வறுத்த நிலக்கடலை + எண்ணெயில் வதக்கிய சின்ன வெங்காயம்=================

11 தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தந்த சொத்து விபரங்கள் தவிர வேறு சொத்து இருந்தால் அவை அரசு பறிமுதல் செய்யும்னு சட்டம் கொண்டு வந்துட்டா ஒரு பய போட்டி இடவே முடியாது


==================


12 ஏப்ரல்,மே, மாதங்களில் வெய்யில் கடுமையாக இருக்கும் என்பதால் ஆண்கள் கதர் சட்டை ,காட்டன் சட்டை வெள்ளை நிறத்தில் உடுத்துவது நல்லது.பெண்கள் கூல்"காட்டன் ,சுடி,சேலை அணியலாம்னு சொன்னா எப்படியும் அவங்க கேட்கப்போறதில்ல,அதனால ஆண்களுக்கு மட்டும் சொல்வோம்===================


13 பதிவு செய்யாத ஒரு கட்சிக்கு பொது சின்னமாக அவர்கள் கேட்கும் (விரும்பும்) சின்னம் தர சட்டத்தில் இடம் இல்லை,ஆனால் ஏதோ 3 சின்னம் தந்து அவற்றில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்து கொள்ள சட்டத்தில் இடம் உண்டு


================


14 கமல் தனது படங்களில் சமூக சீர்திருத்தங்கள் புரிந்திருக்கிறாரா?என சிலர் கேட்கிறார்கள்,அந்தப்பட பட்டியலை பின்னர் பார்ப்போம்,ஆனால்"பராசக்தி முதல் பாலைவனரோஜாக்கள்,பெண் சிங்கம் வரை பிரமாதமான வசனம்,சீர்திருத்தக்கருத்துக்கள் புகுத்தியவர்கள் திருடலையா?===============


15 தலைவி நயன்தாரா"நடித்து வெளிவரவுள்ள ஐரா ஒரு திகில்படம்.இயக்குநர் இதற்கு முன் லட்சுமி கில்மா குறும்படம் எடுத்தவர்,மற்றபடி"ஐரா வுக்கும் லட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை.வேறு"மாதிரி சீன்களை எதிர்பார்த்து யாரும் தியேட்டருக்கு வந்து ஏமாறாதீர்


==================16 தமிழினத்தலைவர் அமரர் டாக்டர் கலைஞர் தமிழக முதல்வரா ஆனது ஒரு வகைல நல்லது,கேரள முதல்வர் ஆகி இருந்தா God's own country னு போட்டிருக்க முடியாது,கடவுளே இல்ல ,மொத்த கன்ட்ரியும் என் குடும்பத்துக்குதான் மொத்தமா சுருட்டி இருப்பாரு


===============


17 டி ராஜேந்தர் ஒரு தீர்க்கதரிசி. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் திருப்புமுனை தரும் என்பதை யூகித்தே "உறவைக்காத்த கிளி" யில் பாடல் பல்லவியை இப்படி அமைத்தார்
"எந்தன் பாடல்களில் நீயும் நீலாம்பரி"
டகஜம் டகஜம சகஜம் சகஜம ஜம
அப்டி னு யாரும் இன்னும் கிளம்பலையா?


==================


18

உடன்பிறப்பே! 1996 ல் சூப்பர்ஸ்டார் நமக்காகக்குரல்"கொடுத்தார்,அவர் தயவில் வென்றோம்.2019 ல் லேடி சூப்பர்ஸ்டார்"நயன்தாரா நமது கட்சி ரவுடியை (தற்காலிகமாக) கட்சியை விட்டு விலக்கியதற்காக நன்றி தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் நம் பக்கம்.வாக்கு வங்கி 28% ல இருந்து 29.5% ஆக உயர்ந்துள்ளது,ஆக , ஆக வெற்றி உறுதி!


===============


19 நான்"பணிவாக தலைமையிடம் நடித்தபோது முதுகெலும்பில்லாதவன் என என்னை எள்ளல் செய்தனர்,இப்போ என் மகன் தெனாவெட்டாக மேடையில் பேசியதற்கு திமிர் என்கின்றனர்.பதவி வாங்கும் வரை பணிவு.பதவி வந்த பின் துணிவு,இதுவே நம் தாரக மந்திரம்

=============


20  நாளைய செய்தி − தேர்தல் முடிந்த பின்

ராதாரவி மன்னிப்புக்கடிதம் கொடுத்ததைத்தொடர்ந்து கழகத்தில் மீண்டும்"சேர்க்கப்பட்டார்.இனி 2021 மே"வரை அவர் யாரை வேணா எப்டி வேணா திட்டிக்கலாம். மே"மாதம் கட்சி அவர்"மீது"கடுமையாக நடவடிக்கை எடுக்கும்


=============

Sunday, April 21, 2019

.பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் @ கேரளா, அது ஏன்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி

 1 பூமர் ,MCR ,ராம்ராஜ் ஓட்டோ ,க்ரோக்கடைல் போன்ற பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 60% வரை சப் காண்ட்ராக்ட் மூலம் வெளியே குடுத்து தைக்கப்பட்டு வாங்குபவை.எனவே கன்ஸ்யூமர்கள் தயார் நிலையில் அதை அணுகவும்.


============2 தேர்தலின் போக்கை தீர்மானிக்கப்போவது படிப்பறிவு இல்லாத பாமர மக்களின் வாக்குகளே! எழுத்தாளர்கள் சொல்லி என்ன ஆகப்போகுது? இவுங்க புக்கே விற்கறதில்லைனு இவங்களே புலம்பறாங்க
=============3 அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு கை கொடுக்கும்போது மோதிரம்,பிரேஸ்லெட்,வளையல் பத்திரம்,நம்மாளுக நைசா உருவிடுவானுக
===============
4 சதுரங்கத்தில் ஓப்பனிங்கலயே ராஜாவுக்கு செக் & மேட் வெச்ட்டா சுவராஸ்யம் இல்லாம போய்டும்.மந்திரி,சிப்பாய்னு வரிசையா போட்டுத்தாக்கிட்டு கடைசியா நிர்க்கதியா ராஜாவை அரெஸ்ட் பண்ணனும்,அதுதான் கிக் − விஸ்வநாதன் ஆனந்த் டைரியிலிருந்து
==============
5 தூத்துக்குடி தொகுதியைச்சேர்ந்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா...==============
6 சிறுகதை எழுத்தாளர்கள் கவனத்துக்கு,கதைக்கு டைட்டில் வைக்கும்போது ஏற்கனவே வந்த சினிமாப்பட டைட்டிலை வைப்பது கேட்சிங்காக இருக்கும் என நினைப்பது தவறு.கற்பனை வறட்சி என வாசகர்கள் நினைக்கலாம்.மிக எளிமையாக மக்களைக்கவர்ந்திழுக்கும் வகையில் டைட்டில் இருக்கனும்================
7 என்னைய பத்தி உங்க மனசுல இருக்குறத ஒரே வார்த்தைல பளிச்சுனு சொல்லுங்க பார்ப்போம் னு ஆளாளுக்கு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறாங்க.உங்களைப்பத்தி உங்களுக்கோ ,உங்க குடும்பத்துக்கோ தெரியாததா இங்கே இருக்கறவங்களுக்கு தெரிஞ்சிடப்போகுது?🤔==============


தாலி"கட்டுன தன்னோட சொந்த) பொண்டாட்டி கிட்ட நல்ல பேர் எடுத்த புருசனும் கிடையாது.இதோ ஒரு நாள்ல தந்துடறேன் னு அவசரமா"கடன் வாங்கிட்டுப்போனவங்க சொன்னபடி திருப்பித்தந்ததும் கிடையாது


================


9 காலணி ஆதிக்கம் தொடங்கிய காலகட்டம் பேட்டா செருப்பு புகழின் உச்சிக்கு வந்த தினம்===============


10 உப்புமாவே ஒரு கொடூரம். அதுக்கு தொட்டுக்க தயிரா?

ஆமா,தயிர் ல லெமன் ஊறுகா யைப்போட்டு கலந்து அடிச்சுப்பாருங்க.தயிர்ல லைட்டா உப்பைத்தூவிடனும்

===============


11 ஜில்லுனு ஒரு காதல் என்பது கோடை காலத்தில் ஐஸ்க்ரீமை குறிக்கும்===============

12 திமுக தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய கட்சி.தன் பலத்துக்கு நிகரான அதிமுக வை எதிர்க்காமல் 2% , 4% வாக்கு வங்கி கூட இல்லாத கட்சிகளை எதிர்த்துக்கொண்டிருப்பது ஏனோ?சிங்கம்னா புலி,சிறுத்தை ,யானை யை எதிர்க்கனும்,சும்மா எலி,முயல் னு துரத்தறது எதுக்கு?==============


13 யாரோ ஒரு திருடன் பதவி பெற உங்கள் நேரத்தை வீணடித்து கொளுத்தும் வெய்யிலில் பிரச்சாரத்துக்கு போகாதீர்கள்.பணம் சம்பாதிக்க பல வழி உண்டு

================


14 வசனகர்த்தாக்கள் ,பாடல் ஆசிரியர்கள் சில சமயங்களில் அவர்களையும் அறியாமல் மாற்றுத்திறனாளிகளை மனம் புண்படும்படி எழுதி விடுகிறார்கள்.சில உதா + மாற்றுச்சொற்கள்
குருட்டு அதிர்ஷ்டம் = விழி ஒளி இழந்த அதிர்ஷ்டம்
நொண்டிச்சாக்கு = செயல்படா கால் சாக்கு
செவிட்டுப்பயலே = செவித்திறன் குறைந்த பயலே================


15 
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும். என்பது சாத்தியமே இல்லாத சட்டப்படி வழியே இல்லாதவை.டுபாக்கூர் கட்சி,டகால்டி வாக்குறுதி


================


16 சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆக தேர்ந்தெடுக்கும் நேரம் தீபாவளி (போனஸ் வாங்கிட்டு)
அதே முதலாளிகள் ,கம்பெனி எம்.டி கள் ,தொழிலாளர்களை கழட்டி விட தேர்ந்தெடுப்பது மார்ச் 31 ( பைனான்சியல் இயர் என்டிங்)===============


17 திறமையும் அதிரஷ்டமும் சேர்ந்தா சினி பீல்டுல கமர்ஷியலா ஜெயிச்சிடலாம் எனும் கருத்தை பொய்ப்பிக்க வந்த படம் சூப்பர்டீ"லக்ஸ்"

===========


18 சென்சாரில் பொத்தாம்பொதுவா ஏ 18+ னு குடுத்துடறாங்க.ஆனா
1 கில்மா காட்சிகள் உள்ளது
2 வன்முறைக்காட்சிகள் தெறிக்குது
3 குடும்பத்துடன் பார்க்க தகுதி அற்ற படம்
னு போஸ்டர்ல மென்ஷன்"பண்ணனும் னு சட்டம் வரனும்.எத்தனை பேர் பேமிலியோட வந்து சங்கடப்படப்போறாங்களோ?


=================


19 தலைவரே!பாவம் பண்றவங்க,ஊர் சொத்தை திருடறவங்க வசதியா வாழ்றாங்களே!அது எப்டி?

வசதி இருக்கு,ஆரோக்யம் இருக்கா?அதுதான் முக்கியம் ஒரு மனுசனுக்கு===============


20 மலையாளப்பெண்கள் தமிழ்ப்பெண்கள் போல் கூந்தலில் மல்லிகைச்சரம் சூடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை(யாம்) (கேள்வி அறிவு).பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் (என்று கூறுகிறார்கள்)


==================