Thursday, June 28, 2018

விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றமும்,கமல்நற்பணிஇயக்கமும்

ரோட்டோர பெட்டிக்கடை,பேக்கரி,மளிகைக்கடை,ஷாப்பிங்க் மால்னு திரும்புன பக்கம் எல்லாம பன்,பிரெட் கிடைக்குது,நெட் தமிழன் "இந்த பன் எங்கே கிடைக்கும்?"னு பொண்ணுங்க கிட்ட விசாரிச்ட்டு இருக்கான்


============


2 Why are people losing common sense to become famous on social media?
become famous


===========


3 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட பெரிய கமிஷன் கை மாறி இருக்கு போல.சேலம் −சென்னை 8 வழி சாலை எதிர்ப்பாளர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது சந்தேகத்துக்கு வழி வகுக்குது.இதுக்கு சம்பந்தமே இல்லாம பாஜக தலைவர்கள் ஆதரவு கருத்து சொல்வது சந்தேகத்தை உறுதிப்படுத்துது


============


4 பட்ஜெட் பற்றாக்குறையில் இருக்கும் தமிழக அரசுக்கு திடீர் என இவ்வளவு பேர் நிலத்துக்கு விலை கொடுத்து வாங்க பணம் ஏது?பாஜக அரசு ஏன் இதுக்கு ஆதரவு தருது?தமிழ்நாட்டுக்கு பாஜக வால இதுவரை நல்லது நடந்த மாதிரி தெரியலயே?


=============5 பேங்க் அக்கவுண்ட் நெம்பர் ,ஏடிஎம் பாஸ்வோர்டு இதை எல்லாம் போன்ல/லேப்டப்ல/சிஸ்டத்துல போட்டு சேவ் பண்ணி வைப்பது நல்லது.அதே போல் டைரியிலும் நோட் பண்ணி வெச்சுக்கனும்.பேங்க் பாஸ் புக்கோட முதல் பக்க போட்டோ வை கேலரில வைப்பதும் நல்லது


==============


6 ஜன்னல் மீதான ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.பஸ் ,ரயில் எனில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பது.அழகுப்பெண்ணின் ஜாக்கெட் ஜன்னல் எனில் ஜன்னலையே வேடிக்கை பார்ப்பது


==============


7 ஓவியா தனது காதலை ஆரவ் உடன் மீண்டும் புதுப்பித்துக்கொண்டதாக தகவல்கள்.ஒரு நம்பிக்கைத்துரோகியை மீண்டும் மீண்டும் நம்பி ஏமாறுவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே!


==============


8 அவன்கிட்ட அன்பா பேசனும்னு
அவசியம் இல்லை திமிரா பேசினாலே போதும் உண்மைதான்.பொண்ணுங்க திமிரா பேசுனாலும் அவங்க கிட்ட அன்பு காட்றது தான் ஆண்கள் குணம்.ஆம்பளைங்க அன்பு காட்னாலும் அவங்க கிட்ட திமிரா நடந்துக்குவதுதான்(பல) பெண்களின் குணம்


==============


9 கை கொடுக்கும் கை சினிமா ஹீரோ ரஜினி
"கை" கொடுத்த (ராகுல்)கை அரசியல் ஹீரோ கமல் னு யாரும் இன்னும் கம்பு சுத்தலையா?


==============


10 மழை வந்தாலும் வியாபாரம் பாதிக்காம நடக்குதுன்னா அது டீக்கடை/பஜ்ஜி,போண்டா வியாபாரம் தான்.சும்மா பறக்குது=================


11 டாக்டர்.அதிகமா தம் அடிக்கறவங்களுக்கு தலைமுடி சீக்கிரமா நரைச்சிடுமாமே?
ஆமா,ஆனா அதுக்கும் முன்னால அது நுரையீரலை சிதைச்சிடும்.பொண்ணுங்க பாக்கறப்ப ஸ்டைலா தம் அடிச்சவன் பூரா பொண்ணுங்களையே பாக்க முடியாத நிலை வரும்


============12 மருத்துவமனைக்கு செல்லாமல் இலவசமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத்தெரிந்து கொள்ள ஒரு வழி மழையில் நனைவதே!
ஆனா நோஎச இல்லைன்னா நனைந்த அடுத்த நாள் மருத்துவமனை போக வேண்டி வரும்


================


13 ஆபீஸ்/கம்பெனி மாறுவது என தீர்மானித்து பேப்பர் போட்டுவிட்டபிறகு இன்க்ரீமெண்ட்,சலுகைகள் என ஆசை காண்பித்தால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாதீர்கள்.அது எதிர்காலத்துக்கான பொறி.


=========14 ஒவ்வொரு ஆபீசுலும்/கம்பெனியிலும் உங்கள் இன்சென்ட்டிவ் மாதம் ரூ 10,000 வரை வந்தால் பிரச்சனை இல்லை,அதை தாண்டி ரூ 20,000 25000 என சீசன் டைமில் எகிறும்போது உங்கள் உயர் அதிகாரி (மேனேஜர்,எம்.டி) உங்களுக்கு ஆப்பு வைக்கும் வேலையில் ஈடுபடுவார்

===============


15 பிரிவு"வந்தாலும் தாங்கிக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள் பெண்கள்.தங்கள் மனதை வேறு சூழலுக்கு சீக்கிரம் பொருத்திக்கொள்கிறார்கள்.அவர்கள் அளவு மனோபலம் இல்லாதவர்கள் ஆண்கள்,அது தான் ஆண்களின் பலமும் கூட

==========16 ரஜினி,விஜய்யாருக்கு அதிக ரசிகர்கள்?யார் படம் அதிக வசூல் என்பது பெருமை இல்லை,யார் ரசிகர்களை நல்வழிப்படுத்துனாங்க?யாரோட ரசிகர்கள் மக்கள் நற்பணில ஈடுபட்டாங்க என்பதில்தான் பெருமை.அந்த வகையில் பெருமை சேர்த்தவர்கள் விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றமும்,கமல்நற்பணிஇயக்கமும்தான்


==============


17 நீ எப்பவும் எதுலயும் முந்திக்கொள்.நிலவில் முதல் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கை உலகமே தெரிஞ்சு வெச்சிருக்கு,ஆனா 2வது ,3 வது காலடி வெச்ச ஆளை கூகுள் கூட தெரிஞ்சு வெச்சுக்கல


==============


18 அரசியல்வாதிகளின் டைரியிலிருந்து− புறம்போக்கு நிலம் எங்கள் உரிமை.அதை வளைத்துப்போடுவது எம் கடமை


=============19 குருவே!கிராம வாழ்க்கைக்கு பழக கஷ்டம,் நகர வாழ்க்கைக்கு பழக சுலபம்னு சொல்றாங்களே ,அது உண்மையா?
ஆமா ,எளிமையா வாழ்வது எல்லோராலும் முடியாது,ஆடம்பரமா வாழ கத்துத்தரத்தேவையில்லை.அதும் இல்லாம கெட்டது சீக்கிரம் பரவும்,நல்லது லேட் ஆகும்


============


20 மரங்கள் ,விவசாயம் இவற்றை அழிக்கும் ,அழிக்க நினைக்கும் தீயசக்திகளுக்கு இயற்கை அன்னை ஏதாவது தண்டனை உடனடியாகத்தந்தால் நல்லது.எட்டு வழி சாலை விவசாய நிலங்களுக்கு அஷ்டமத்தில் சனி


=========

0 comments: