Tuesday, June 19, 2018

,"ஆயில்" குறைத்து உண்டால் "ஆயுள்" கூடிவிடும் என்பது உண்மையா?

கார்த்தி நடிச்ச கடைக்குட்டி சிங்கம் ஹிட் ஆகிடுச்சுன்னா அடுத்து என்ன நடக்கும்?


தெரியலையே?
இளையதளபதி யோட அடுத்த படத்தலைப்பு கடைக்குட்டி புலி ஆகிடும்=============2 தலைவரே!உங்க கனவு என்ன?


என்னோட 3 பசங்க , 2 பொண்ணுங்க ,13 பேரப்புள்ளைங்க எல்லாரும் ஆளுக்கு 5 வருசம் தமிழக முதல்வரா இருந்து துடைச்சு எடுத்துடனும்==============3 மத்தியானம் 1 மணிக்கு வந்த எங்க அம்மாவுக்கு 3.30 மணிக்கு சோறு போட்டிருக்கே?தக்காளி சாதம் சமைக்க 30 நிமிசம் போதாதா?

2 மணிக்கே சமைச்ட்டேன்.Fb ல சாப்பாடு ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் கவுண்ட் பண்ணீட்டு ,கமண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணிட்டு வர லேட் ஆகிடுச்சு==========


4 குருவே!மனைவி எவ்வளவு அருமையாக சமைப்பார் என்று நமக்கு தெரிய, நம் வீட்டுக்கு உறவினர் எவரும் வர வேண்டியிருக்கிறதாமே?

ஆமா,குறிப்பா மனைவியோட சொந்த பந்தம் வரனும்.தாளிச்சிடுவாங்க


============


5 சார்.விஜய் மேல கீர்த்தி சுரேஷ் பாதம் பட்டுடுச்சு,யாரும் எதிரக்கல?

போங்கப்பா.பொண்ணுங்க கை பட்டா குத்தம் ,கால் பட்டா குத்தம் சொல்லிட்டு.============6 காலா சரினா மாதிரி நோஸ் பின் போடணும்😍😍😍

அப்டியா?ரொம்ப சிரமப்பட்டு பஜார்ல தேட வேண்டாம்.1980 கள்ல ப்ரஸ் பட்டன்னு ஜாக்கெட்ல ,ஜீன்ஸ்பேண்ட்ல வச்சாங்களே ,அதுதான் அது==============


7 ஊரிலிருந்து
எனக்கு என்ன
வாங்கிட்டு வருவ????
ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றேன்
லூசாம்மா நீ?காஷ்மீர்ல இருந்து நீ நம்ம ஊருக்கு வர்றதுக்குள்ள வெறும் க்ரீம்தானே இருக்கும்?


============


8 கல்யாணமான பொண்ணுக்கு கால் விரல்ல மிஞ்சி மாட்றதே

"தனக்கு "மிஞ்சி"்தான் தானமும் தர்மமும் ஊருக்கு ங்கற அர்த்தத்துலதான்============


9 தலைவரே!பசுமை சாலைத்திட்டம் னா என்ன?

மரங்களை,செடி ,கொடிகளை வெட்டி கடாசிட்டு அந்த இடத்து ல ரோடு போடறதுதான் பசுமை சாலை============


10 குருவே!License இல்லாமல் வண்டி ஓட்டுறதுல தான் ஒரு கிக் இருக்காம். அது உண்மையா?

போதை யா இருந்தா நல்லது,உதை கிடைச்சா கெட்டது,எதுக்கும் சிங்கிள்ஸ் ஜாக்கிரதையாவே இருந்துக்கவும்


==============


11 பேசாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்

பண்ணிக்குங்க.கல்யாணம் பண்ணின பிறகும் எதிர் பேச்சு பேசாமதான் நாம இருக்கனும்===========12 குருவே!புள்ள குட்டி பெத்தவிங்க எல்லாம் சிங்கிள்னு சொல்லிக்கிட்டுத் திரியறாங்களே?அது ஏன்?

பெரும்பாலான நேரம் வீட்லயா இருக்கோம்?ஆபீஸ்/கம்பெனி ல தானே?அப்போ அங்கே சிங்கிளாத்தானே இருக்காங்க?


============


13 Dr ,ஒரு பேரசிடமால் போட்டா 12 மணிநேரம் தூக்கம் வருமாமே?

இதென்னமா புதுக்கதையா இருக்கு?அப்போ 10 மாத்திரை சாப்ட்டா 120 மணி நேரம் தூக்கம் வருமா?னு யாராவது செக் பண்ணி பாத்துடப்போறாங்க=============


11 குழம்பு கொதிக்கும்போது தேங்காய்ச் சிரட்டைய உடைச்சிப் போட்டா காய்கறி சீக்கிரம் வெந்துரும்ன்னு ஒரு YT வீடியோல பாத்தேன் .உண்மையா?

ஆமா,ஆனா அந்த தேங்கா சிரட்டை (கொட்டாங்குச்சி ஓடு) வேகாது,அதை தூக்கி போட்ரனும்


============


12 டாக்டர் ,டெய்லி நகம் கடிக்கற பழக்கம் 2 மாசமா இருக்கு

நம்ப முடியல.10 விரல் நகம் டெய்லி 1 நகம்னாக்கூட 10 நாள்ல கடிச்சு முடிச்சுடலாமே?


==========


13 மயிலிறகென்று நெருஞ்சிமுள்ளைத் தடவிக்கொண்டிருக்கிறேன்..

அப்டியா?முதல் தடவை தடவும்போதே முள் குத்தி ரத்தம் வந்திருக்குமே??==============


14 பேசாம பாதிரியார் ஆயிடலாம்னு இருக்கேன் 🚶🚶🚶 கவலையே இல்லாம jesus christ , god bless u my child னு எல்லாரையும் மனசார வாழ்த்திட்டு இருக்கலாம்

ஓஹோ,அப்ப வாழ்த்தும்போது பேசுவீங்களே?பேசாம எப்டி?


=============


15 மதியவேளைல ஜிம்வந்தா கூட்டமே இல்லாம இருக்கு.. ஏன்?

ஏன்னா எக்சசைஸ் னா காலை அல்லது மாலை தான் செய்யனும்,இது அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு


=============


16 மோடி எக்சசைஸ் பண்றதை கிண்டல் பண்ணி மீம்ஸ் போட்டுத்தள்ளிட்டேன்

பிரமாதம் சார்,உங்க வெய்ட் எவ்ளோ?
110 கிலோ பிபி,சுகர் இருக்கா?
ஆமா ஹை பிபி ,சுகர் 300 பாயிண்ட்ஸ்
போங்க,போய் அதே மீம்சை கண்ட்டினியூ பண்ணுங்க


=============


17 சார்,உங்க பொண்ணுக்கு ஏன் மியாவ் காலிபா னு பேரு வெச்சிருக்கீங்க?

லொள் லொள் காலிபானு 2 வது பொண்ணுக்கு வெச்சிடலாம்னு


]]]]]]]]]]]18 குருவே!
அரசியல்வாதிகளுக்கு அப்போலோ மருத்துவமனை ராசி இல்ல.னு ஒரு கருத்து உலா வருதே?
தியாகியா செத்தான்?திருடனுங்கதானே ?மக்களுக்கு இது நல்லதுதான?============


19 டாக்டர் ,"ஆயில்" குறைத்து
உண்டால்
"ஆயுள்" கூடிவிடும் என்பது உண்மையா?
செக்கில் இட்டு ஆட்டிய எண்ணெயில் வீட்டில் சமைப்பதை உண்டால் பிரச்னை இல்லை.ரோட்டோரக்கடைகளில் ,தள்ளு வண்டிகளில் உபயோகப்படுத்தும் மட்டமான ஆயில்/மீண்டும் மீண்டும் யூஸ் பண்ணுனஆயிலில் பொறிக்கப்பட்டதுதான் அபாயம்


=============


20 யுவர் ஆனர் ,தீர்ப்பு எத்தனை மணிக்கு?னு சொன்னீங்க?

காலை பத்தரை
ஏன் இன்னும் சொல்லலை?
மதியம் 1 மணிக்கு சொல்லலாம்னு
ஏன்?
அதுவரை ட்ரெண்டிங்க்ல இருப்பம் இல்ல?மீடியாக்கள் பூரா பில்டப் ஏத்தி விடுவாங்க இல்ல?


===========

0 comments: