Tuesday, June 12, 2018

ரஜினி,கமல் ,விஜய்

நடுநிலை என்பது மரக்கன்று நடுதலைக்குறிக்கும் எனில் நாம் எல்லோருமே நடுநிலை எடுப்பது மழைக்கு ,மக்களுக்கு,மண்ணுக்கு ,பூமிக்கு நல்லது
=========
2 பெட்ரோல் விலையும் ,பொண்ணுங்களோட மனசும் ஒண்ணு.டெய்லி நிலவரம் மாறிக்கிட்டே இருக்கும்.நம்ம கண்ட்ரோல்லயே இருக்காது
=============

3 உள் நீச்சல் நன்கு கற்றவர்களுக்கு தலைக்கு மேல வெள்ளம் போனாலும் கவலை இல்லை.
============

4 கூட்டத்திலும் தனியாக தெரிய எளிய வழி கூட்டத்தோட கூட்டமா அமராம தனியா அமர்வதே!
===========

5 குடியிருப்பு பகுதி


என்பது
டாஸ்மாக்
=========

6  ரயில்களில் பல சமயங்களில் ட்ராக் மாற்றிவிடும்போது இஞ்சினை பிரித்து வேற ஒரு டிராக் மூலம் சுற்றி வந்து பின்னால் இணைத்து பின் புறப்படுகின்றனர்.மினிமம் 20 நிமிசம் ஆகுது,இதைத்தவிர்க்க இது போல மாறும் ரயில்களில் மட்டும் முன்னால் ஒரு இஞ்சின் பின்னால் ஒரு இஞ்சின் பெட்டி இணைக்கமுடியாதா?


===========7 nசேலம் ,ஈரோடு"ரயில் பயணிகள் கவனத்துக்கு வ எ 66603 சேலம்−கோவை Memo சில தவிர்க்க இயலாத காரணங்களால் ஈரோடு−கோவை யாக மாற்றப்பட்டுள்ளது.3pm erode 4.30pm tirupur 6pm kovai (சேலம் கேன்சல்டு)


===========


உத்தம வில்லன் படத்துல தெரிஞ்சோ தெரியாமயோ வசனகர்த்தா கமல் ஒரு வில்லங்க வசனம் வெச்சு இப்ப மாட்டிக்கிட்டாரு
"கூத்தாடிக்கு எதுக்கு அரசியல்?அப்டியே வந்தாலும் ஜெயிக்கவா போறான்?" (இது ரஜினியை மனதில் வைத்து எழுதியதாக இருக்கலாம்,இப்போ இவரே அரசியலில்)

===========9 மீனராசி அன்பர்களே!இன்னைக்கு பணவரவு பிரமாதமா இருக்கும்.ஒரே லட்சுமிகடாட்சம்தான்.ராசியான நிறம் நீலம் ,வெள்ளை.(அதுக்காக ஆபீஸ் டைம்ல ப்ளூபிலிம் பாத்துட்டு இருக்காதீங்க)


=============10 நான் சாமி இல்ல பூதம் பன்ச் டயலாக்கை சென்சார்ல எப்டி விட்டாங்க?என்னதான் பினாமின்னாலும் எடப்பாடி பழனிச்"சாமி" யை நக்கல் பண்ணலாமா?தமிழக முதல்வர் இல்லையா?


==========


11 பொதுவா ரஜினி படங்கள் தோல்வி அடைந்தால் அதனால் ரஜினியின் மார்க்கெட் வேல்யூ பாதிக்கப்படுவதில்லை,ஆனால் பரபரப்பான அரசியல் சூழலில் வெளியாகும் காலா வெற்றி பெறவில்லை எனில் ரஜினிக்கு அது பெரிய பின்னடைவாக இருக்கும்


============


12 ரயில் பயணிகள் கவனத்துக்கு,ஓப்பன் டிக்கட் கவுண்ட்டரில் ட்யூட்டி மாறும் டைம் காலை 5.50 − 6.10 . இந்த 20 நிமிஷம் எல்லா கவுண்ட்டரையும் க்ளோஸ் பண்ணவேணாம்னு போராட்டம் பண்ண முடிஞ்சா பண்ணுங்க,முடியலைன்னா அந்த டைம்க்கு முன்போ பின்போ பிளான் பண்ணி வரவும்===============
13 +2 ,நீட் தேர்வு முடிவுகள் வரும் நாளில் பெற்றோர் சில நாட்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பிலேயே வைத்திருந்து வெற்றி தோல்வி ஒரு பொருட்டல்ல என கவுன்சிலிங்க் தர வேண்டும்===============14 விக்ரம் சாமி 2 விட்டதை இதுல புடிச்சுடுவாரு.குட்"ட்ரெய்லர் .துருவநட்சத்திரம்


=============15 கமல் ரசிகர்களுக்கு,கமல் ஒரு அறிவுஜீவி,சினிமா தொழில்நுட்பங்கள் கற்றவர்.அன்பே சிவம்,மகாநதி,மைமகாராஜன் மாதிரி பிரமாதமான படங்கள் தந்தவர்,யாரும் மறுக்கலை.ஆனா மக்கள் செல்வாக்கு,வாக்கு வங்கி 2ம் ரஜினி பெறுவதை விட 50% குறைவாகத்தான் பெறுவார்.


============


16 தனுஷ் மைண்ட் வாய்ஸ்

அ"காலா"க்கால் வச்ட்டமோ?


==============


17 சூர்யா ரசிகர்கள் அதிர்ஷ்டசாலிகள்.சிவகுமார் பெண்களைப்பற்றிப்பேசிய அந்த வீடியோ பெரிய அளவில் பரவவில்லை.பரவி இருந்தா ஆளாளுக்கு கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணி இருப்பாங்க


=============18 உடன்பிறப்பே!குடும்ப ஜோசியர் சொன்னதுக்காக ,ராசிக்காக மஞ்சள் துண்டு அணிந்ததை எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.இனி 1/1/2019 முதல் அனைவரும் பிளாஸ்டிக் பை க்கு மாற்றாக மஞ்சப்பையுடன்தான் உலா வருவார்கள்.மட்டற்ற மகிழ்ச்சி


================19 ரஜினி,கமல் ,விஜய் மூவரும்
சராசரி மனிதர்களே!தங்கள் பட ரிலீசில் சிக்கல் வரும்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவுகளில் ஹீரோயிசமோ,கெத்தோ இல்லை.கெஞ்சல் பாவனையே மேலோங்கி இருக்கு.இவற்றை தவிர்த்திருக்கலாம்.தோல்வி வரும் போதும் ,சோதனையான காலகட்டத்திலும் கம்பீரம் காட்டுபவனே தலைவன்


=============


20 தூத்துக்குடி போராட்டக்காரர்கள் ஊடே சமூகவிரோதிகள் கலந்துட்டாங்க,வன்முறை அவங்களாலதான் நிகழ்ந்ததுனுதான் ரஜினி சொன்னாரு,ஆனா அரசியல்வாதிகள்,மீடியாக்கள் அதை திரிச்சு தூத்துக்குடி ஜனங்களே சமூகவிரோதிகள்னு ரஜினி சொன்னதா கொந்தளிக்கறாங்க,இதுல வேடிக்கை என்னான்னா மெத்தப்படி்த்தவர்களே...இப்டி


===========

0 comments: