Monday, June 11, 2018

சூரி,ஈரோடு மகேஷ் ,ஓபிஎஸ்!

எஸ்.வி சேகரை கைது செய்யத் தடையில்லை - உச்சநீதிமன்றம்
# துணை வாட்டாச்சியர் லீவுங்க,அவர் ஆணை இட்டாதான் போலீஸ் கேட்கும்


===========


2 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது - வைகோ #
இவர் நடக்கும்னா நடக்காது,நடக்காதுன்னா நடந்திடும் எதிர்மறை ராசிக்காரர் ஆச்சே


===========


3 கர்நாடகத்தில் காலா படம் வெளியாக கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் ஸ்டாலின் பேச வேண்டும் - பொன்னார் #
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான பிரச்னையான காவேரிக்கே அவரு பேசல,காலா வுக்கு பேசுனா என்ன?பேசாட்டி என்ன?


=========


4 தூத்துக்குடி சம்பவம்: முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை; சுப்பிரமணியன் சுவாமி # 2019 மே மாசம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர்றப்ப வருத்தம் தெரிவிச்சுக்கலாம்னு நினைச்ட்டார் போல


=============


5 எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. - எச். ராஜா# நீங்க ஜட்ஜா?. துணை வட்டாட்சியரா?


=============6 தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% தேர்ச்சி.

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா அகில இந்திய அளவில் 12வது இடம் 676 மதிப்பெண்
# இத்தனை இடர்களையும் தாண்டி தமிழர்கள் பெற்ற பெரும் வெற்றி இது===========


7 ➤உலகில் அதிக நேரம் உழைக்கும் மும்பைவாசிகள்!
➤ஸ்விட்சர்லாந்து ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!# தமிழக விவசாயிகள் காலை 6 டூ நைட் 9 உழைக்கறாங்க. 1 1/2 ஷிப்ட்.அதைவிடவா அதிகம் உழைச்சிட்டாங்க?


=================


8
8 முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு - வைகோ

தெரியுது
தமிழ்நாட்டுஜனங்களுக்குத்தெரியலயே?கடைசி வரை செயல்தலைவரை எதிர்க்கட்சித்தலைவராவே வெச்சிருக்காங்க

==============


9 நான் ஜல்லிக்கட்டு நாயகனா? காளையை அடக்க சொன்னால என்பாடு திண்டாட்டம்தான்.. காமெடி செய்த ஓபிஎஸ்! # சூரி,ஈரோடு மகேஷ் லெவலுக்கு காமடி வருதே!அடடே!


================10 | பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு | # சபாஷ் ,அடுத்த கேரளா ஆகும் முயற்சி


==============


11 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பொருட்களுக்கு : பேரவையில் முதல்வர் அறிவிப்பு ஒரு முதல்வரா நிறைவேற்றிய (நிறைவேற்ற இருக்கும்) உருப்படியான சட்டம்


====================12 திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க கூடாது: ஹைகோர்ட் # அரோகரா அரோகரா

===========13 ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பிஸினஸ் - நடிகர் சத்யராஜ் விமர்சனம்
,மார்க்கெட் இருக்கு,மார்க்கெட்டிங் திறமை இருக்கறவங்க யார் வேணாலும் பிஸ்னெஸ் பண்ணலாமே?


===========


14 தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா திடீர் நீக்கம்; புதிய பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமனம்
# நக்மா வும் ரோஸ் கலர்ல தானே இருக்காங்க?ஏன் நீக்கிட்டாங்க?இது லைட் ரோஸ் ,அது டார்க் ரோஸ்?


===========


15 காலா படத்தை கர்நாடகாவில் திரையிடாமல் இருப்பதே நல்லது முதல்வராக கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கண்டாயம் எங்களுக்கு உள்ளது-முதல்வர் குமாரசாமி
பற்றி கோர்ட் உத்தரவை மட்டும் மீறிடறமே அது எப்படி?


=============


16 காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
# நேத்து குமாரசாமி சந்திப்புல கமல்தான் இந்த ஐடியா குடுத்திருப்பாரோ?னு யாரும் இன்னும் கிளம்பலையா?


================17 ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது”... தேஜஸ்வி # இன்க்ரீமெண்ட் ,போனஸ்,ரொம்ப எதிர்பார்ப்பார் போல.ஊருக்கு ஊர் ஒரு இன்னோவா சம்பத்==============


18 என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் - ஓபிஎஸ் #
ஜல்லிக்கட்டு பட நாயகன் சத்யராஜ்தானே?


==============19 முஸ்லிம் வீடுகளில் பிரியாணி சாப்பிடுவோர் இந்துக்கள் கிடையாது - ஹெச்.ராஜா
அரபு நாட்டு பெட்ரோல் போட்டு வண்டி ஓட்றவங்க இந்துக்கள் கிடையாது னு சொல்லல,நல்ல வேளை,நாட்ல பூரா பயலும் மாட்டிக்குவான்


==============20 போட்டிசட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவிஇறக்காமல் சட்டமன்றத்தில் நுழையமாட்டேன் என்ற சவாலைக்கைவிட்டது ஏன்? − தமிழிசை தலைவரை செயல்படாத தலைவர்ங்கறீங்களா?வெளிநடப்பு பண்றாரு,சட்டையைக்கிழிச்சுக்கறாரு,இன்னும் என்ன எதிர்பார்க்கறீங்க?=========

0 comments: